திருமணத் திருப்பலி பாடல்கள்

திருமணத் திருப்பலி

வருகைப்பாடல்

திருக்குலமே எழுந்திடுக

அருள் பொழியும் பலியினிலே

ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்

உன்னதரைப் போற்றுவோம் (2)

ஆஹா சந்தோஷம் பெருகிடுதே

அவர் சந்நிதி காண்கையிலே (2)

1. ஆனந்தமுடனே அவர் திருமுன்னே

கூடிடுவோம் கூடிடுவோம்

ஆண்டவரே நம் கடவுள் என்று

பாடிடுவோம் பாடிடுவோம்

அவரே நம்மைப் படைத்தார்

அவருக்கே சொந்தம் நாம்

அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்

அவர் மந்தையின் ஆடுகள் நாம்

2. இன்னிசை முழங்க இறைவன் வாசல்

நுழைந்திடுவோம் நுழைந்திடுவோம்

பண்ணிசையோடு அவரது பீடம்

சூழ்ந்திடுவோம் சூழ்ந்திடுவோம்

அவரைப் புகழ்ந்திடுவோம்

அவர் பெயர் வாழ்த்திடுவோம்

அவர் நல்லவராம் அவர் வல்லவராம்

அவரன்பே வழிநடத்தும்

தூய ஆவி பாடல்

ஓ பரிசுத்த ஆவியே

என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கிறேன் – இறைவா

ஆராதனை செய்கிறேன் (2)

1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்

அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றிதுதி கூறி

பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

வானவர் கீதம்

உன்னதங்களிலே இறைவனுக்கு

மாட்சிமை உண்டாகுக

உலகினிலே நல்மனத்தவர்க்கு

அமைதியும் உண்டாகுக

புகழுகின்றோம் போற்றுகின்றோம்

பாடுகின்றோம் இறைவனே

வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்

வழிபடுகின்றோம் தெய்வமே

ஆராதனை ஆராதனை ஆராதனை புரிந்து

மகிமைப்படுத்துகின்றோம் யாம்

உமது மேலாம் மாட்சிமைக்காக

உமக்கு நன்றி நவில்கின்றோம்

ஆண்டவராம் எம் இறைவனே

இணையில்லாத விண்ணரசே

ஆற்றல்மிகு வல்லவரே தந்தையே இறைவனே

ஆண்டவரே இறைமகனே

செம்மறியே செம்மறியே செம்மறியே – இறைத்

தந்தையினின்று ஜெனித்தவர் நீர்

உலகின் பாவம் போக்குபவரே

நீர் எம்மீது இரங்குவீர்

உலகின் பாவம் போக்குபவரே

எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்

தந்தையிடம் வலப்புறத்தில்

வீற்றிருக்கும் மீட்பரே

இரங்குமய்யா எம்மீது

இயேசு கிறிஸ்து தெய்வமே

தூயவர் தூயவர் தூயவர் ஐயா

நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்

மாட்சியில் உள்ளவர் நீரே – ஆமென்.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிநடப்போர் பேறுபெற்றோர்! பேறுபெற்றோர்!!

Blessing Song

There shall be showers of blessing:

This is the promise of love;

There shall be seasons refreshing,

Sent from the Savior above.

Refrain: Showers of blessing,

Showers of blessing we need:

Mercy-drops round us are falling,

But for the showers we plead.

There shall be showers of blessing;

Send them upon us, O Lord;

Grant to us now a refreshing,

Come, and now honor Thy Word.

காணிக்கைப் பாடல்

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

நானும் உந்தன் கைவண்ணம்

குயில்கள் பாடும் கிளிகள் பேசும்

என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே (2)

1. இயற்கை உனது ஓவியம்

இணையில்லாத காவியம் – 2

அகிலம் என்னும் ஆலயம்

நானும் அதில் ஓர் ஆகமம் – 2

உள்ளம் எந்தன் உள்ளம்

அது எந்நாளும் உன் இல்லமே – 2

2. இதயம் என்னும் வீணையில்

அன்பை மீட்டும் வேளையில் – 2

வசந்த ராகம் கேட்கவே

ஏழை என்னில் வாருமே – 2

தந்தேன் என்னை தந்தேன் என்றும்

என் வாழ்வு உன்னோடுதான் – 2

திருவிருந்துப்பாடல்

இது மங்கல நேரம்

மன்னவன் எந்தன் உள்ளம்

வருகின்ற நேரம்.

மணவாளன் கண்டு

மணக்கோலம் கொண்டு மனம்

துள்ளித் துள்ளி ஆடும்

மேகம் திறந்து மின்னல் நுழைந்து

தூவும் மழையைப் போல

பாவம் துறந்து வானம் இருந்து

வந்த உணவிது அருந்தவே

இலைகள் சுமந்து மலர்கள் தவழ்ந்து

வீசும் தென்றலாக

உள்ளம் புகுந்து உயிரில் கலந்து

உறைய வந்தவா வருகவே.

1. இனிமையெல்லாம் தன்னுள்ளே

ஏந்தியே வந்த உணவு இது

இனிதாக நமக்காக

தந்தை காட்டும் உறவு இது

விண்ணோர் உண்ட உணவு இது – நம் முன்னோர் கண்ட கனவு இது

புதுவாழ்வைத் தந்திட வருகிறது

2. படைத்தவரே நமக்காக

படைத்திடும் அன்பு உணவு இது

உழைப்பேதும் இல்லாமல்

கொடையாய் வந்த உணவு இது

நிறைவைத் தருகின்ற உணவு இது – அவர்

நினைவாய் செய்யும் உறவு இது

இதை உண்போம் அவரில் வளர்வோமே

திருவிருந்துக்குப்பின்

கிறிஸ்துவின் ஆன்மாவே,

என்னை புனிதமாக்கும்.

கிறிஸ்துவின் திருவுடலே,

என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திரு இரத்தமே,

எனக்கு எழுச்சியூட்டும்.

கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே,

என்னை கழுவிடுமே

கிறிஸ்துவின் பாடுகளே, என்னை தேற்றிடுமே.

ஓ! நல்ல இயேசுவே, எனக்கு செவிசாயும்.

உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.

உம்மிடமிருந்து என்னை பிரிய விடாதேயும்.

தீய பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.

எனது இறப்பின் வேளையில்

என்னை அழைத்தருளும்.

உம்மிடம் வர எனக்கு கட்டளையிட்டருளும்.

புனிதர்களோடு எக்காலமும்

உம்மைப் புகழச் செய்யும்!    ஆமென்.

வாழ்த்துப்பாடல்

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மருவிய சோபன சுப வாழ்வு

1. மணமகன் செல்வன் மணமகள் ஜென்ஸி

பாசத்துணையுடன் வாழ்ந்திடவே

சான்றோர் போற்றும் நேயராய்த் திகழ

தேவா ஆசீர் அளித்திடுமே – நல்ல

2. அன்பின் விளக்காய் அருளின் சுடராய்

மணமக்கள் வாழ்ந்திட கிருபை செய்யும்

அன்னை மரியும் வளனும் போல

மண்ணில் விண்ணைக் கண்டடைவீர் – நல்ல

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy