திருப்பாடல்கள்

திருப்பாடல்கள்

01. அடைக்கலப் பாறையான இயேசுவே

அரணும் கோட்டையும் ஆன இயேசுவே  (2)

நீரே எனது வலிமை நீரே எனது பெருமை

நீரே எனது வாழ்வு இயேசையா    (2)

1. தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே – 2

பிறப்பிலும் வாழ்விலும் நீயே எனக்கு

ஆதாரம் நீயல்லவோ          (2) எந்தன் – 2

2. போகும் வழியை விசாலமாக்கி

என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)

உயரமான இடத்திலே என்னை நிறுத்தி

மாண்புறச் செய்கின்றீரே (2) என்னை – 2

02. திருப்பாடல் 13

ஆண்டவரே உம் பேரன்பில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் 2

1. ஆண்டவரே என்னைக் கண்ணோக்கி எனக்கு பதில்தாரும்

என் விழிகளுக்கு ஒளி ஊட்டும்

விழிகளுக்கு ஒளி ஊட்டும்

அப்பொழுது நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்

என் எதிரி நான் அவனை வீழ்த்தினேன் என்று சொல்ல மாட்டான்

நான் வீழ்ச்சி உற்றேன் என்று பகைவர் மகிழமாட்டார்

2. நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்

நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்

ஆண்டவரை நான் போற்றிப்பாடுவேன்  போற்றிப்பாடிடுவேன் 2

ஏனெனில் அவர் எனக்கு நன்மைகள் பல செய்தார்.

03. திருப்பாடல் 16

ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர் (2)

1. இறைவா என்னைக் காத்தருளும்

உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன் – நான்

ஆண்டவரிடம் நீரே என் தலைவா

வேறு செல்வம் எனக்கில்லை என்றே சொன்னேன்

ஆண்டவர் தாமே என் உரிமை சொத்து

அவரே என் கிண்ணம் எனக்குரிய பங்கை தருபவரும் அவரே

                                                               (ஆண்டவரே)

2. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரே

போற்றுகின்றேன் போற்றுகின்றேன்

இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது

ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்

அவர் என் வலப்பக்கம் உள்ளார் எனவே நான் ஆசையோடே

                                                               (ஆண்டவரே)

04. திருப்பாடல் 23

ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை – 2

1. ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை

பசும்புல் வெளிமீது எனை அவரே இளைப்பாற செய்கின்றார்

அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்

அவரே எனக்கு புத்துயிர் அளிப்பார்

ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை  – 2

2. தம் பெயர்க்கேற்ப என்னை நீதிவழி நடத்திடுவார்

சாவின் இருள்சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்

நீர் என்னோடு இருப்பதாலே எந்த தீங்கிற்கும் அஞ்சிடேன்

உமது கோலும் என்னை தேற்றும்

ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை  – 2

05. திருப்பாடல் 31

தந்தையே உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன் ஒப்படைக்கின்றேன்

1. ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்

ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும் (2)

உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்

வாக்குப் பிறளாத ஆண்டவரே

நீர் என்னை மீட்டு அருளினீரே (2)

2. பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்குள்ளானேன்;

அடுத்தவரின் இழிவுக்கு ஆளானேன் (2)

இரந்தோர்போல் நினைவில் நின்று அகற்றப்பட்டேன்

தெருவில் பார்த்தோர் விலகி ஓடினர்

உடைந்து போன மட்கலம் போலானேன்

06. திருப்பாடல் – 33

ஆண்டவரே உம் பேரன்பு எங்கள்மீது இருப்பதாக – 2

1. ஆண்டவர் வாக்கு நேர்மை-யானவை

அவரது செயல்கள் நம்பிக்கைக்கு உரியவை

நீதியை நேர்மையை விரும்புகிறார் – 2

அவரது  அன்பால் நிறைந்துள்ளது(உ)லகம்

ஆண்டவரே உம் பேரன்பு எங்கள்மீது இருப்பதாக – 2

2. தமக்கு அஞ்சி நடப்போரையும்

காத்திருப்போரையும்  கண்ணோக்குகின்றார்

அவர்கள் உயிரை காக்கின்றார் -2

அவர்களை பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்

ஆண்டவரே உம் பேரன்பு எங்கள்மீது இருப்பதாக – 2

07. திருப்பாடல் 42

கலைமான் போல கடவுளே

என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது (2)

1. என் நெஞ்சம் கடவுள்மீது.. உயிருள்ள இறைவன் மீது

தாகம் கொண்டுள்ளது.. (2)

எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில்

வந்து நிற்கப் போகின்றேன் (2)     (கலைமான் போல)

2. மக்களின் கூட்டத்தோடு.. சேர்ந்து பவனியாக

கடவுளின் இல்லம் சென்றேன்.. (2)

ஆர்ப்பரிப்பும் நன்றி பாடல்களும் முழங்க

விழாக் கூட்டத்தில் சென்றேன் (2) (கலைமான் போல)

08. திருப்பாடல் 45

கேளாய் மகளே கருத்தாய் கேளாய் 

காது கொடுத்துக் கேளாய் காது கொடுத்துக் கேளாய்

1. கேளாய் மகளே கருத்தாய் கேளாய் காது கொடுத்துக் கேளாய்; – 2

உன் இனத்தாரை மறந்துவிடு பிறந்தகம் மறந்துவிடு

உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்

உன் தலைவர் அவரே (அவரைப் பணிந்திடு) – 2

2. மன்னவரின் மாளிகையில் நுழையும் போது அவர்கள் – 2

மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்

உமது தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே இருப்பர்

அவர்களை நீர் உலகில் (இளவரசராக்கிடுமே) – 2

09. திருப்பாடல் –  69

கடவுளே உமது பேரன்பின் பெருக்கினால்

எனக்கு பதில் மொழி தாரும் – 2

1. ஏனெனில்  உம்பொருட்டே நான் இழிவை ஏற்றேன்

வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது – 2

என் சகோதரற்கு வேற்று மனிதனானேன்

(என் தாயின் மக்களுக்கு அயலான் ஆனேன்)  – 2

2. உமது இல்லத்தில் எனக்குள்ள ஆர்வம்

என்னை மிகுதியாய் எரித்திட்டது – 2

உம்மை  பழித்து  இழிவாய் பேசியவர்

 (பழிச்சொற்கள் என்மீது விழுந்தன) -2

10. திருப்பாடல் – 95

உங்கள் இதயங்களை கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்

ஆண்டவர் குரலை கேட்டிடுங்கள் இன்று கேட்டிடுங்கள் – 2

1. வாருங்கள் இறைவனை புகழ்ந்து பாடுங்கள்

மீட்பின் பாதையை ஆர்பரியுங்கள்

நன்றி உணர்வுடன் அவர்முன் செல்வோம்

அவர் புகழ் பாடியே ஆர்பரிப்போம்

2. வாருங்கள் தாழ்பணிந்து அவரை தொழுவோம்

ஆண்டவர் முன்னே முழந்தாளிடுவோம்

அவரே நம் கடவுள் அவர் மக்கள் நாம்

அவர் காக்கும் ஆடுகள் நாம் அன்றோ

11. திருப்பாடல் 104

இறைவா உமது ஆவியை அனுப்பி உலகை புதுப்பிப்பீர் – 2

1. அவரின் மாட்சி என்றென்றும் நிலைக்கும் அவர் தம் செயல் என்றும் பெரியன -2

அவரின் சிறந்த கைவண்ணங்கள் தான் எத்துணை எத்துணை உயர்ந்தவை -2

இவ்வையகம் படைப்பால் நிறைந்தன நெஞ்சே நீ தேவனை போற்றுவாய்

2. நெஞ்சே நீ இறைவனை புகழ்வாயாக ஏனெனில் ஆண்டவர் உயர்ந்தவர் -2

ஞானத்தால் உலகை படைத்த தேவன் எத்துணை எத்துணை உயர்ந்தவர் -2

இறையை புகழ்ந்து பாடுவேன் எனவே தேவனில் மகிழுவேன்

12. திருப்பாடல் 113

ஏழையை கைதூக்கும்

ஆண்டவரை போற்றிப் பாடி வாழ்த்துங்கள்  – 2

1. ஆண்டவரின் ஊழியரே அவரை என்றும் போற்றுங்கள்

அவருடைய திருப்பெயரை என்றென்றும் வாழ்த்துங்கள் – 2

ஆண்டவருடைய திருப்பெயர் வாழ்த்துப் பெறுவதாக

இப்பொழுதும் எப்பொழுதும் திருப்பெயர் வாழ்த்துப் பெறுவதாக

2. மக்களினம் அனைத்திற்கும் ஆண்டவரே மேலானவர்

வானை விட உயர்ந்துள்ளது ஆண்டவரின் மாட்சிமையே -2

கடவுளாகிய ஆண்டவர்க்கு நிகராய் இருப்பவர் யார்

ஆண்டவர் போல் வானளவு உயரத்தில் இருப்பவர் யார்

13. திருப்பாடல் 118

ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்

ஏனெனில் அவர் நல்லவர்

என்றென்றும் உள்ளது அவர் பேரன்பு – 2

1. என்றென்றும் உள்ளது அவர் பேரன்பு – என

இஸ்ராயேல் மக்கள் சாற்றுவாராக

என்றென்றும் உள்ளது அவர் பேரன்பு – என

ஆரோனின் குடும்பத்தார்; சாற்றுவாராக

என்றென்றும் உள்ளது அவர் பேரன்பு – என

ஆண்டவர்க்கு அஞ்சுவோர்; சாற்றுவாராக  (ஆண்டவர்க்கு)

2. ஆண்டவர் வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது

ஆண்டவர் வலக்கை வலிமையாய் உள்ளது

நான் இறந்தொழியேன் உயிர் வாழ்வேன்

ஆண்டவர் செயல்களை விழித்துரைப்பேன்

கண்டித்தார் ஆண்டவர் என்னைக் கண்டித்தார் – ஆனால்

சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை  (ஆண்டவர்க்கு)

14. திருப்பாடல் – 119

ஆண்டவர் தம் திருச்சட்டப்படி  நடப்போர் பேறுபெற்றோர்  -2

1. மாசற்ற வழியில் நடப்போர் அனைவரும் பேறுபெற்றோர் பேறுபெற்றோர்

ஆண்டவர் தம் திருச்சட்டப்படி  நடப்போர் அனைவரும் பேறுபெற்றோர் 

அவர் தந்த ஒழுங்குமுறைகளை கடைபிடிப்போர் பேறுபெற்றோர்

முழுமனத்தோடு அவரை தேடுவோர் அனைவருமே பேறுபெற்றோர்

ஆண்டவர் தம் திருச்சட்டப்படி  நடப்போர் பேறுபெற்றோர் 

2. ஆண்டவரே  நீர் உம்முடைய நியமங்களை தந்தீர்

 நாங்கள் அவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றீர்

உம்முடைய விதிமுறை எல்லாம் கடைபிடித்தால் நலமாகும்

எம் நடத்தை உறுதியாய் இருந்தால் எவ்வளவோ நலமாகும்

ஆண்டவர் தம் திருச்சட்டப்படி  நடப்போர் பேறுபெற்றோர்  -2

15. திருப்பாடல் 126

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்களை புரிந்துள்ளார்

அதனால் நாம் பெரு மகிழ்வடைகின்றோம் – 2

1. சீயோனின் அடிமைநிலை ஆண்டவர் மாற்றினபோது

கனவினைப் போல் அது நமக்கு புதிதாய் இருந்தது

நமது முகங்கள் மகிழ்ச்சி கொண்டது

நாவினிலே மகிழ்ச்சி கீதம் எழுந்தது – எழுந்தது

2. ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் அரிய செயல்களையே

செய்தாரென்று பிற இனத்தார் பேசிக்கொண்டனர்

ஆண்டவர் நமக்கு அரும் செயல் புரிந்தார்

அதனால் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் – அடைகின்றோம்

16. திருப்பாடல் – 130

ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது மீட்பும் உள்ளது – 2

1. ஆழ்ந்த துயரில் இருக்கும் நான் உம்மை வேண்டுகிறேன்

என் மன்றாட்டுக்கு செவி சாய்த்தருளும்

என் விண்ணப்ப குரலை கேட்டருளும் – 2

2. நீர் என் குற்றத்தை நினைத்தாலோ  உன் முன் யார் நிற்பார்

நீரே எம்மை  மன்னிப்பவர் மனிதர் உமக்கு அஞ்சிடுவர் -2

ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது மீட்பும் உள்ளது – 2

17. தியானப் பாடல் 131

என் நெஞ்சம் அமைதி பெற உம் திருமுன் வைத்து காத்தருளும்  – 2

1. ஆண்டவரே என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை

என் பார்வையில் செருக்கு இல்லை  – 2

எனக்கு மிஞ்சின செயல்களில்

நான் ஈடு படுவதில்லை  – 2 என் நெஞ்சம்

2. மாறாக என் நெஞ்சம் உம்மையே நாடி

மனநிறைவும் அமைதியும் கொண்டுள்ளது – 2

தாய்மடி தவழும் குழந்தை என

என் நெஞ்சம் அமைதியாய் உள்ளது  – 2 என் நெஞ்சம்

18. திருப்பாடல் 147

வாக்கு மனிதரானார் நம்மிலே வாழ்கின்றார் – 2  அல்லேலூயா – 3

1. சீயோனே விழித்திரு ஆண்டவரை போற்றிப் பாடு – 2

கால்களுக்கு வலிமையும் பிள்ளைகளுக்கு ஆசியும் – 2

வழங்க வருகின்றார்  – 2  அல்லேலூயா – 3

2. எருசலேமே மகிழ்ந்திடு இறைவனையே வாழ்த்திப் பாடு – 2

வாழ்வதற்கு உணவும் அன்பும் நீதியும் – 2

வழங்க வருகின்றார் – 2 அல்லேலூயா – 3

19. விடுதலைப்பயணம் 15:1

ஆண்டவருக்கு நான் புகழ்பாடுவேன்

ஏனெனில் மாட்சியுடன் வெற்றி பெற்றார்

ஆண்டவர் புகழைப் பாடுவேன் மாட்சியுடன் வெற்றி பெற்றார் – 2

குதிரையையும் வீரனையும் கடலில் அமிழ்த்திவிட்டார்

ஆண்டவரே என் ஆற்றல் ஆண்டவரே என் பாடல் – 2

ஆண்டவரே என் கடவுள் அவரைப் புகழ்ந்தேற்றுவேன் – 2

20. தானியேல் 1:29

என்றென்றும் அவரை போற்றுங்கள்

அவரை புகழ்ந்து போற்றுங்கள் -2

1. உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக

உயர் புகழ்ச்சிக்கும் மிக மாட்சிக்கும் நீர் உரியவர்

கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே

நீர் வாழ்த்த பெறுவீராக நீர் என்றென்றும் புகழப்படவும்

ஏற்றி போற்ற தகுதி உள்ளவர்

2. உமது ஆட்சியின் அரியணை மீது நீர் வாழ்த்த பெறுவீராக

என்றென்றும் நீர் புகழ்ந்தேற்ற பெறுவீராக

ஏற்றிப்போற்ற பெறுவீராக வானகத்தில் நீர் வாழ்த்தப்பெறவும்

என்றென்றும் நீர் பாடல் பெறவும் மாட்சியடையவும் தகுதி உள்ளவர்  மாட்சியடையவும் தகுதி உள்ளவர்

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy