நன்றிப் பாடல்கள்

நன்றிப் பாடல்கள்

01. இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ

இதயத்தில் நன்றி சொன்னால் இயேசுவுக்காகிடுமோ (2)

1. வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி – 2

மனத் தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி

2. உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து – 2

தன்னைப் பலியாக்கி தந்திடும் இறைவனுக்கு

3. சிலுவைக் கொடியேற்றி ஜெகத்தை மீட்டுயிர்த்து – 2

சிலுவைப் பலன் யாவும் நமக்கே ஈந்தவர்க்கு

02. இதுவரை செய்த செயல்களுக்காக

இறைவா உமக்கு நன்றி (2)

1. உவர்நிலமாக இருந்த என்னை

விளைநிலமாக மாற்றிய உன்னை (2)

அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் – 2

நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2

2. தனிமரமாக இருந்த என்னை கனிமரமாக மாற்றிய உன்னை

திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் – 2

இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2

03. இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்

திரும்பிப் பார்க்கமாட்டேன் – 2

சிலுவையே முன்னால் உலகமே பின்னால் – 2

இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே

1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை அடியேன் உள்ளத்திலே

ஆண்டவர் இயேசு அடைக்கலப் பாறை ஆதலின் குறையில்லை

ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால் – 2

அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே

2. தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம்

சேயர்கள் நம்மைச் செவ்வழி நடத்தும் தெய்வம் அவரன்றோ

ஆயனே முன்னால் அலகையே பின்னால் – 2

அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே

ஆறுதல் அடைந்தேனே

 04. இறைவன் படைத்த நாளிதே நன்றி நன்றி பாடுவோம்

இதயம் மகிழும் நாளிதே நன்றி நன்றி பாடுவோம்

நன்றி இறைவா – 4 -2

1. வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும்

வாழும் உயிர்கள் இயேசுவை வணங்கி மகிழட்டும் (2)

இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும் பாடட்டும் – 2

இறைவன் இயேசு என்றும் நம்மைக் காப்பதால்

நன்றி இறைவா 4 -2

2. கவலை யாவும் மறைந்தது கலக்கமில்லையே

காலமெல்லாம் கர்த்தர் இயேசு நம்மோடு உள்ளார் (2)

புதிய வானம் புதிய பூமி பூத்திட – 2

புதிய பயணம் புவியில் இன்று தொடங்குவோம்

நன்றி இறைவா – 4 -2

05. உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

துலங்கிடும் உமக்கே இறைவா

நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம் (2)

1. இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு

இணையில்லா பலியில் இறைவனை உண்டு (2)

சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ.. 2

நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்

2. உண்மை வழியை உலகுக்குக் காட்ட

உலகத்தை அன்பால் ஒன்றாய்த் திரட்ட (2)

அக இருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ.. 2

அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு

06. உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்

உலகாளும் தேவன் நெறி வாழும் இதயம் தெய்வம் தரிசனம்

மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்

நிறைவோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் – 4

1. அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் . . .

மெய்யாகி பொய்மை பழிநீக்கும் நெறியில் . . .

ஒளியாகி உலகில் இருள் போக்கும் பணியில் . . .

கனவாகி நீதி நெருப்பாகும் செயலில் . . .

தெய்வம் தரிசனம் – 4

2. மதம் யாவும் மனித இன பேதம் ஒழித்தால் . . .

சமதர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் . . .

உரிமைகள் காக்க உயிர்த் தியாகம் செய்தால் . . .

இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் . . .

தெய்வம் தரிசனம் – 4

07. எந்தன் நாவில் புதுப்பாடல் எந்தன் இயேசு தருகின்றார்(2)-2

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்

உயிருள்ள நாள் வரையில் – அல்லேலூயா (2)

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்

தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் (2)

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்

பாதைக் காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் (2)

3. சேற்றில் வீழ்ந்த என்னை அவர் தூக்கியெடுத்தார்

நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் (2)

4. தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாகினார்

நிந்தை தாங்கி எங்கும் அவர் மேன்மை சொல்லுவேன் (2)

08. என்ன சொல்லிப் பாடுவேன்

என்ன சொல்லிப் போற்றுவேன்

எனக்குச் செய்த நன்மை எண்ணியே – 2

என்ன சொல்லிப் பாடியும் என்ன சொல்லிப் போற்றியும்

ஈடு இணை உனக்கு இல்லையே (ஐயா) -2

நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே -2

1. கண்ணீர் துடைத்ததைச் சொல்லிப் பாடவா

கவலையில் அணைத்ததைச் சொல்லிப் பாடவா

வீழ்ந்தேன் தூக்கியதைச் சொல்லிப் பாடவா

சாய்ந்தேன் தாங்கியதைச் சொல்லிப் பாடவா

நன்றி தந்தையே நன்றி இயேசுவே…

2. வாழ்வு தந்ததைச் சொல்லிப் பாடவா

வளமை நிறைந்ததைச் சொல்லிப் பாடவா

ஊக்கம் தந்ததைச் சொல்லிப் பாடவா

உறுதி செய்ததைச் சொல்லிப் பாடவா

நன்றி தந்தையே நன்றி இயேசுவே…

09. என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

அன்பு ஆராதனை நன்றியுமென்றும் (2)

1. பரலோகவாசிகள் அருமையாய் உம்மைப்

புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த (2)

நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ

நேசமும் அதிசய இரக்கமுமல்லோ

2. மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து

நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென (2)

ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு

பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

10. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள்

எப்படி நான் மறந்திடுவேன்

கோடான கோடி நன்றி சொன்னாலும்

எப்படி நான் ஈடு செய்வேன்

1. கரடு முரடான பாதைகளில்

நான் நடக்க நேர்ந்த காலங்களில்

கருத்தாய் என்னைக் காத்தீரே – 2

நல் ஆயனாய் தோளில் சுமந்தீரே – 2

2. உமக்கு எதிரான பாவங்களில்

நான் இடறி விழுந்த நேரங்களில்

உம் கரத்தால் என்னை தூக்கினீர் – 2

உம் பிள்ளையாய் மார்பில் அணைத்தீரே – 2

3. கொடிய சோதனை வேள்வியில்

நான் சோர்ந்து வீழ்ந்த வேளைகளில்

மிகுந்த பலனை கொடுத்தீரே – 2

தகுந்த வாழ்வை அளித்தீரே – 2

11. ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்

பாமாலையாக நான் சூடுவேன்

உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்

புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு

விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)

அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து

கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

ஆதியும் நீயே அந்தமும் நீயே

பாடுகிறேன் உனை இயேசுவே

அன்னையும் நீயே தந்தையும் நீயே

போற்றுகிறேன் உனை இயேசுவே

2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்

மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)

என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்

எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

ஆதியும் நீயே அந்தமும் நீயே

பாடுகிறேன் உனை இயேசுவே

அன்னையும் நீயே தந்தையும் நீயே

போற்றுகிறேன் உனை இயேசுவே

12. ஒரு பாடல் நான் பாடுவேன் மன்னன் உந்தன் கருணையை

எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து

நன்றிப் பாடல் நான் பாடுவேன்

1. ஒரு நாளில் நீ செய்த நன்மைகளைச் சொல்ல நினைத்தால்

வாழ்நாளே போதாதய்யா சொல்லியும் தீராதய்யா

நன்றி சொல்வேன் நாளெல்லாம்

உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்

2. என் அன்புத் தாயாக தந்தையாக எந்தன் இறைவா

எந்நாளும் எனைப் பார்க்கின்றாய் கண்ணாகக் காத்தாள்கின்றாய்

நான் நினைப்பேன் நன்றி சொல்வேன்

நாளெல்லாம் பாடிப் புகழ்வேன்

13. ஒருவர்மீது ஒருவர் அன்பு கொண்டிருந்தால் தான்

என் சீடரென எல்லோரும் அறிந்து கொள்ளுவர் (2)

புதிய கட்டளை புனித கட்டளை – 2

அன்பு இல்லாமல் உலகில் ஏது வாழ்வின் கட்டளை

1. பாதம் கழுவி காட்டினேன் என் பாதையை நீ பார்த்து வா

பாவியை நான் மன்னித்தேன் உன் பாவம் நீங்க மன்னிப்பாய் (2)

உடலைத் தந்து வாழ்வித்தேன் உன்

உடைமையை நீ பகிர்ந்து தா (2)

என் உயிரைத் தந்து காத்திட்டேன் நீ

உலகைக் காக்க எழுந்து வா – புதிய கட்டளை….

2. நண்பன் என்று அழைத்திட்டேன் நீ நன்மை செய்ய நாடி வா

உன்னை நானே தேர்ந்திட்டேன் நீ உரிமையாய் என்பின்னே வா (2)

உலகம் உன்னை வெறுப்பினும் நீ

உவகையோடு மகிழ்ந்து வா (2)

என் உறவில் உனக்குப் பங்குண்டு நீ

உண்மைக்காக உழைக்க வா – புதிய கட்டளை….

14. ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்

1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன்

வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் (2)

அல்லல் படுபவன் என் நண்பன்

ஆபத்தில் இருப்பவன் சகோதரன் – காரணம் அவனும் மனிதன்

2. பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்

பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன் (2)

பிற மொழி பேசினாலும் என் நண்பன்

பிற மதம் சார்ந்தாலும் சகோதரன் – காரணம் அவனும் மனிதன்

3. அழகை இழந்தவன் என் நண்பன்

அறிவை இழந்தவன் சகோதரன் (2)

ஊனமாய் இருப்பவன் என் நண்பன்

ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன் – காரணம் அவனும் மனிதன்

15. தாயான தெய்வமே துணையான செல்வமே

தேன்தமிழில் கவிபுனைந்து தினமும் உன்னை வாழ்த்துவேன் (2)

தாயான தெய்வமே

1. பாடி உன்னைச் சரணடைந்தேன் பாச மழை பொழிந்தாய்

கோடி நலம் செய்தாய் என் குறைகளெல்லாம் தீர்த்தாய் (2)

கரை காணா உன் அன்பில் நான் வாழ்கிறேன்

கரம் கூப்பி உன் பாடல் நான் பாடுவேன்

2. தஞ்சம் என்று உன்னையே செந்தமிழில் பாடினேன்

பண்போடு வாழ்ந்திட நல்ல மனம் தந்தாய் (2)

உன் வழியில் உண்மையாய் நாளும் நடந்திட

உலகெங்கும் நீ வாழ்ந்து சக்தியாகிறாய்

16. நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே

மனிதனாய் படைத்து மாண்பினை கொடுத்து

என்னை இன்று வாழச்செய்யும் இறைவனை நான் பாடுவேன்- நன்றி யேசுவே

ஓராயிரம் வார்த்தைகளில் தீராது எங்கள் அன்பே – 2

1. கவலை கண்ணீர் போக்கி கண்ணின் மணிபோல காத்தீர் – 2

உருகுலைந்த என்னை உருமாற்றி

பலருக்கும் பயனளிக்கும் பகலவனாய் மாற்றினாய்

பயணங்கள் நிறைவேற பாதையாய் நீயாகினாய் – 2 நன்றி யேசுவே

2. பரந்து விரிந்த உலகில் பணிகள் செய்து வாழ்ந்திடுவேன் – 2

பதரான என்னைப் பயனாக்கி ஒரு கோடி ஓசைகளை

இசையோடு நான் பாடினேன் என்னையே நன்றியால் தருகின்றேன் இறைவா

17. நன்றி என்று பாடுவேன் என் இனிய தேவனே

நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே (2)

கோடி நன்றி பாட்டுப் பாடுவேன்

காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் (2)

1. உயிர்கள் யாவும் வாழ நல் உலகைப் படைத்ததால்

உறவு வாழ்வில் வளர நல் உள்ளம் உறைந்ததால்

நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்

நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்

2. பகிர்ந்து வாழ்வில் வளர நல் மனதைக் கொடுத்ததால்

பரமன் அன்பில் வாழ அருள் வரங்கள் பொழிந்ததால்

பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்

செபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்

3. நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்

துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்

உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்

உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால்

18. நன்றியால் துதிபாடு நம் இயேசுவை

நாவாலே என்றும் பாடு (2)

வல்லவர் நல்லவர் போதுமானவர்

வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

1. எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்

இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)

கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்து விழும் (2)

2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்

சிலுவையின் நிழலுண்டு (2)

பாடிடுவோம் துதித்திடுவோம் பாதைகள் கிடைத்துவிடும் – 2

19. நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள் -2

நீங்கள் என் சாட்சிகள் உலகினை வெல்லுங்கள் (2)

(அல்லேலூயா அல்லேலூயா – 4)

1. அன்பின் சாட்சியாய் விளங்கிடுவீர்

அருட்திரு ஆவியைப் பெற்றிடுவீர் (2)

நானிலம் சென்று பலன் தருவீர் – 2

நன்மைகள் உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட

2. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் (2)

தேடுங்கள் கிடைக்குமென்று – 2

நம்பிக்கை உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட

20. நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என்

நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா – 4 (2)

1. உண்டிட உணவும் உடையுமே கொடுத்து

ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) – ஓர்

அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து

அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் – 2

2. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி

மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்

உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்

களைகளை அகற்றிக் காத்திருந்தாய் – 2

21. நித்தம் நித்தம் உம்மை நான்

நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்

நீ செய்த நன்மை எண்ணி

ஓயாமல் துதிக்கிறேன் – 2

நன்றி நன்றி நன்றி நன்றி

1. தாயைப் போல தேற்றி என்னை

அரவணைத்து மகிழ்கிறீர் – 2

தந்தையைப் போல தோள்;களிலே

அனுதினமும் சுமக்கிறீர் – 2  நித்தம் நித்தம்

2. தாயின் கருவில் தோன்றுமுன்னே

முன் குறித்த தெய்வமே – 2

நினைப்பதற்கும் மேலாய் என்னை

ஆசீர்வதித்த நேசரே – 2  நித்தம் நித்தம்

3. நடந்த வந்த பாதைகளை

நினைத்து நினைத்துப் பார்க்கிறேன் – 2

கண்ணீரோடு நன்றி சொல்லி

ஓயாமல் துதிக்கிறேன் – 2 நித்தம் நித்தம்

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy