பொதுக்கால திருப்பலி செபங்கள்

ஆண்டின் பொதுக்காலம்

ஆண்டின் பொதுக் காலத்தில் 33 அல்லது 34 வாரங்கள் உள்ளன. ஜனவரி 6-ஆம் நாளுக்குப் பின்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த திங்கள்கிழமை அன்று இக்காலம் தொடங்கி, தவக்காலத்தின் தொடக்கம்வரை தொடரும்; மீண்டும் தூய ஆவியார் பெருவிழாவின் ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த திங்கள்கிழமை அன்று தொடங்கி, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு முன் வரும் சனிக்கிழமை அன்று முடிவுறும்.

2. பொதுக் காலத்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளும் வாரங்களும் கீழ்வருமாறு கணக்கிடப்படுகின்றன:

அ) ஆண்டவருடைய திருமுழுக்குத் திருவிழாவைக் கொண்டாடும் ஞாயிற்றுக்கிழமை ஆண்டின் பொதுக் காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையின் இடத்தைப் பெறுகின்றது; அதைக் தொடர்ந்து வரும் வாரம் ஆண்டின் பொதுக் காலத்தின் முதல் வாரம் ஆகும். இதிலிருந்து தவக் காலத்தின் தொடக்கம் வரை உள்ள ஞாயிற்றுக்கிழமைகளும் வாரங்களும் வரிசையாகக் கணக்கிடப்படும்.

ஆ) ஆண்டின் பொதுக்காலம் 34 வாரங்களைக் கொண்டிருந்தால், தவக்காலத்துக்கு முன் இறுதியாக வரும் வாரத்திலிருந்து தூய ஆவியார் பெருவிழாவுக்குப்பின் வரும் வாரங்கள் வரிசைப்படி தொடர்ந்து கணக்கிடப்படும்; ஆனால் தூய ஆவியார் பெருவிழாவும் மூவொரு கடவுள் பெருவிழாவும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுக் காலம் 33 வாரங்களைக் கொண்டிருந்தால், தூய ஆவியார் பெரு விழாவுக்குப்பின் வரவேண்டிய முதல் வாரம் விடப்படும்.

3. இவ்வாறு, திருப்பலி நூலில், ஆண்டின் பொதுக் கால ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வாரநாள்களுக்கும் ஆன 34 திருப்பலிகள் காணப்படுகின்றன. அவை பின்வரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன:

அ) ஆண்டவருடைய பெருவிழாவோ திருவிழாவோ ஞாயிற்றுக்கிழமையில் இடம் பெற்றாலொழிய, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டின் பொதுக் காலத்தில் உள்ள அந்தந்த ஞாயிற்றுக்கிழமைக்கான திருப்பலி பொதுவாகப் பயன்படுத்தப்படும்;

ஆ) வாரநாள்களில், நம்பிக்கையாளரின் அருள்பணி நலனைக் கருத்தில் கொண்டு 34 திருப்பலிகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.

4. ஞாயிற்றுக்கிழமைகளில் “உன்னதங்களிலே” யும் “நம்பிக்கை அறிக்கை யும் சொல்லப்படும்; இவை வாரநாள்களில் விட்டுவிடப்படும்.

5. அதற்கு உரிய தொடக்கவுரை கொண்ட நற்கருணை மன்றாட்டு பயன்படுத்தப்பட்டாலொழிய, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுக் கால ஞாயிற்றுக்கிழமைகளுக்கான தொடக்கவுரையும் (பக். 536 – 543) வார நாள்களில் பொதுவான தொடக்கவுரை ” (பக், 556 – 561) சொல்லப்படும்.

6. திருப்பாடல்களிலிருந்து ஒன்றும், பெரும்பான்மையாக நற்செய்தியால மற்றொன்றுமாக இரு திருவிருந்துப் பல்லவிகள் தரப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப இவற்றில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாம்; ஆனால் திருப்பலியின் நற்செய்தி வாசகத்தோடு ” பல்லவிக்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

=================

பொதுக் கால முதல் வாரம்

பொதுக் கால முதல் ஞாயிறு அன்று ஆண்டவரின் திருமுழுக்கு விழா நடைபெறும் (பக். 203 – 206).

வருகைப் பல்லவி

உயர்ந்த அரியணையில் வீற்றிருக்கும் ஒரு மனிதரைக் கண்டேன்; **அவருடைய ஆட்சியின் பெயர் என்றுமுளதாகும்” என எண்ணற்ற வானதூதர் ஒன்றாகப் பாடி, அவரை ஆராதிக்கின்றனர்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய மக்களின் தாழ்மையான வேண்டல்களுக்குப் பரிவிரக்கத்துடன் செவிசாய்க்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் தாங்கள் செய்ய வேண்டியதை அறியவும் அறிந்ததை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஆற்றல் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்கள் அளிக்கும் காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் இருக்க உம்மை வேண்டுகின்றோம்: அதன் வழியாக அவர்கள் புனிதம் அடைந்து இறைப்பற்றுதலோடு தாங்கள் வேண்டுவதைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.
திபா 35:10

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம் மிடமே உள்ளது ; உமது ஒளியில் யாமும் ஒளியைக் காண்போம்.
யோவா 10:10

அல்லது

அவர்கள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப்
பெறும் பொருட்டு வந்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் அருளடையாளங்களால் புத்துயிர் பெற்ற நாங்கள் உமக்கு ஏற்புடைய வாழ்வால் பணிபுரியக் கனிவுடன் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

=================

பொதுக் கால 2-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 65:4 கடவுளே, உலகம் அனைத்தும் உம்மை ஆராதிக்கும்; உம் புகம் பாடிடும்; உன்னதரே, உம் பெயருக்குப் பா ஒன்று இசைக்கும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ஆண்டு நடத்துகின்றவர் நீரே; உம் மக்களின் வேண்டல்களை இரக்கத்துடன் கேட்டு எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியை அளித்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 22:5 என் கண்முன்னே நீர் எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்தீர்; நிரம்பி வழிகின்ற எனது பாத்திரம் எத்துணை மேன்மையானது!

அல்லது

1 யோவா 4:16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம்; நம்புகிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு ஒரே விண்ணக உணவால் நிறைவு பெற்ற நாங்கள் ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

=================

பொதுக் கால 3-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

‘காண். திபா 95:1,6. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகம் அனைத்துமே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆற்றலும் எழிலும் அவர் திருமுன் உள்ளன; மாட்சியும் புகழ்ச்சியும் அவரது திருத்தலத்தில் உள்ளன.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் செயல்களை உமது திருவுளத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தியருளும்; இவ்வாறு உம் அன்புத் திருமகனின் பெயரால் நாங்கள் மிகுதியான நற்செயல்கள் புரிந்திடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவற்றைப் புனிதப்படுத்தி, இவை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்புரிவீராக. எங்கள்.
காண். திபா 33:6

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரை அணுகிச் செல்லுங்கள், அவரது ஒளியைப் பெறுவீர்கள்; உங்கள் முகங்கள் அவமானத்திற்கு உள்ளாகாது.
யோவா 8:12

அல்லது

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புத்துயிர் அளிக்கும் உமது அருளைப் பெற்றுள்ள நாங்கள் உமது கொடையை முன்னிட்டு என்றும் பெருமை கொள்வோமாக. எங்கள்.

=================

பொதுக் கால 4-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 105:47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும். அதனால் நாங்கள் உமது திருப்பெயரை அறிக்கையிடுவோம்; உம்மைப் புகழ்வதில் மாட்சியுறுவோம்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் முழு மனதுடன் உம்மை வழிபட வேண்டுகின்றோம்: அவ்வாறே எல்லா மக்களையும் நேரிய உள்ளத்துடன் அன்பு செய்யவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் பணிகளைக் காணிக்கையாக உமது பீடத்துக்குக் கொண்டுவருகின்றோம்; இவற்றைக் கனிவுடன் ஏற்று எங்களது மீட்பின் அருளடையாளமாக மாற்றுவீராக. எங்கள்.
காண். திபா 30:17-18

திருவிருந்துப் பல்லவி

உமது முகத்தின் ஒளி உம் அடியார் மீது ஒளிர்வதாக! உமது இரக்கத்தால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூவி அழைத்தேன்.
மத் 5:3,5

அல்லது

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரிய து ; கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடையால் வலுவூட்டப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் முடிவில்லா மீட்பின் இந்த உதவியால் உண்மையான நம்பிக்கை என்றும் வளர்ச்சியுறச் செய்வீராக. எ ங்கள்.

=================

பொதுக் கால 5-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 94:6-7 வாருங்கள்! கடவுளைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். ஏனெனில் அவரே நம்
ஆண்டவராகிய கடவுள்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, வலுக்குறைவுற்ற எங்களுக்கு உதவியாக இப்பொருள்களைப் படைத்திருக்கின்றீர்; அதனால் இவை எங்களுக்கு நிலைவாழ்வின் அருளடையாளமாக மாறிட அருள் புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 106:8-9 ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும், மானிடருக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்குப் புகழ் சாற்றுவார்களாக! ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.

அல்லது

மத் 5:4,6 துயருறுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர்
பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் நாங்கள் பங்கேற்கத் திருவுள மானீரே; அதனால் கிறிஸ்துவுக்குள் நாங்கள் ஒன்றிணைக்கப்பெற்று உலகின் மீட்புக்காக நற்கனி தந்து மகிழ்ந்து வாழ எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

=================

454 ஆண்டின் பொதுக்காலம்
பொதுக் கால 6-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

‘காண். திபா 30:3-4. ஆண்டவரே, நீர் என்னைக் காப்பாற்றுபவராகவும் புகலிடமாகவும் இரும்; அதனால் நீர் என்னை மீட்டீர்; ஏனெனில் நீர் என் காறையாகவும் அடைக்கலமாகவும் உள்ளீர்; உமது பெயரின் பொருட்டு நீர் எனக்குத் தலைவராகவும் இருப்பீர்; எனக்கு உணவு
அளிப்பீர்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உண்மையும் நேர்மையும் உள்ள நெஞ்சங்களில் நீர் குடி கொள்வதாக உறுதி அளித்துள்ளீரே; எங்கள் உள்ளங்களில் நீர் தங்குவதற்கு ஏற்றவாறு நாங்கள் வாழ எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இந்தக் காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அது நிலையான பயன் விளைவிப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 77:29-30 அவர்கள் உண்டு முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; ஆண்டவர் அவர்கள் விரும்பியவற்றையே அவர்களுக்கு அளித்தார்; அவர்களது விருப்பம் வீணாகவில்லை.

அல்லது

யோவா 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும்
அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உண்மை வாழ்வை அளிக்கும் உணவின் மீது நாங்கள் என்றும் ஆவல் கொள்ளச் செய்வீராக. எங்கள்.

=================

பொதுக் கால 7-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 12:6 ஆண்டவரே, நான் உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்தேன்; உமது மீட்பில் என் இதயம் அக்களித்தது ; எனக்கு நன்மை செய்த ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் என்றும் நேரியவற்றை எங்கள் உள்ளத்தில் இருத்திச் சிந்திக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு உகந்தவற்றையே சொல்லாலும் செயலாலும் நிறைவேற்ற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மறைநிகழ்வுகளை உரிய முறையில் கொண்டாடும் நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது மாட்சியின் மேன்மைக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலி எங்கள் மீட்புக்கும் பயன்படுவதாக. எங்கள்.
திபா 9:2-3

திருவிருந்துப் பல்லவி

வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்; உம்மில் அகமகிழ்ந்து அக்களிப்பேன். உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.
யோவா 11:27

அல்லது

ஆண்டவரே, நீரே உலகிற்கு வந்த வாழும் கடவுளின் மகனாகிய மெசியா என நம்புகிறேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, இம்மறைநிகழ்வுகளின் வழியாக கிறிஸ்துவினுடைய மீட்பின் பிணையைப் பெற்றுக்கொண்டுள்ளோம்; இதன் பயனாக நாங்கள் அவருடைய மீட்பின் பயனைத் துய்த்துணர அருள் புரிவீராக. எங்கள்.

=================

456 ஆண்டின் பொதுக்காலம்
பொதுக் கால 8-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 17:19-20 ஆண்டவர் என்னைக் காப்பாற்றுபவரானார்; நெருக்கடியிலிருந்து அவர் என்னை வெளிக் கொணர்ந்தார்; அவர் என்னை விரும்பியதால் அவர் என்னை விடுவித்தார்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வுலக நிகழ்வுகளை உமது அமைதியின் வழியில் நீர் நெறிப்படுத்து உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது திரு அவை அமைதியான இறைப்பற்றில் மகிழ்ந்திருக்க அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உமது பெயருக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இறைப்பற்றுள்ள பணியின் காணிக்கைகளை நீரே எங்களுக்கு அளித்துள்ளீர்; அதனால் இப்பலியிலிருந்து நாங்கள் உம் பேறுபயன்களை அடைவதோடு முடிவில்லாக் கைம்மாற்றையும் பெற்றிடக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 12:6 எனக்கு நன்மை செய்த ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ‘உன்னதரான ஆண்டவரது பெயரைப் போற்றிப் பாடுவேன்.
மத் 28:20

அல்லது

இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன்
இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது இரக்கத்தை இறைஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் இம்மை வாழ்வில் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் இந்த அருளடையாளத்தால் நாங்கள் முடிவில்லா வாழ்வில் பங்கேற்கக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

=================

பொதுக் கால் 9-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 24:16,18 ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும், என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஒர் ஆதரவற்றவன், ஏழை. என் தாழ்மையையும் சுமையையும் பாரும். என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும், என் இறைவா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது பராமரிப்பின் திட்டம் ஒருபோதும் தவறுவதில்லை; அதனால் தீயவை அனைத்தையும் எங்களிடமிருந்து அகற்றி எமக்குப் பயன் அளிக்கும் அனைத்தையும் கனிவுடன் தந்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே,
உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொண்டு காணிக்கைகளுடன் வணக்கத்துக்கு உரிய பீடத்துக்கு நாங்கள் கூடி வருகின்றோம்; அதனால் எங்களை உமது அருளால் தூய்மைப்படுத்தி நாங்கள் கொண்டாடும் இம்மறைநிகழ்வுகளால் எங்களைப் புனிதப்படுத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 16:6 இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும்.
மாற் 11:23-24

அல்லது

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்.
கேட்டபடியே உங்களுக்கு நடக்கும், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் உடலையும் இரத்தத்தையும் விருந்தாக உட்கொள்ளும் எங்களை உம் ஆவியார் வழிநடத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் வார்த்தையாலும் நாவாலும் மட்டுமல்லாமல் செயலா லும் உண்மையாலும் நாங்கள் உம்மை அறிக்கையிட்டு, விண்ணரசுக்கு வந்து சேரத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

=================

458 ஆண்டின் பொதுக் காலம்
பொதுக் கால் 10-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

‘ காண். திபா 26:1-2 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யார் முன் நான் அஞ்சி நடுங்க வேண்டும்? என் பகைவர்கள் என்னைப்
தாக்கும்போது அவர்களே இடறி விழுந்தார்கள்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நன்மையானவை அனைத்தும் உம்மிடமிருந்தே வருகின்றன; இவ்வாறு உமது ஏவுதலினால் நாங்கள் சரியானவற்றை உணரவும் உமது வழிநடத்துதலால் அவற்றையே நாங்கள் நிறைவேற்றவும் உம்மை வேண்டுவோருக்குக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இரக்கத்துடன் எங்கள் பணியைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாகி எங்கள் அன்பை வளர்ப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 17:3 ஆண்டவர் என் கற்பாறை; என் புகலிடம்; என் மீட்பர்; என் கடவுளே எனக்குத் துணைவர்.

அல்லது

1 யோவா 4:16 கடவுள் அன்பாய் இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நலம் அளிக்கும் உமது செயல் எங்களைத் தீய நாட்டங்களிலிருந்து விடுவிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்களை நேரிய வழியில் நடத்திச் செல்லக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

==================

பொதுக் கால 11-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் என் குரலைக் கேட்டருளும். நீரே எனக்குத் துணையாய் இருப்பீராக; என்னைத் தள்ளிவிடாதிரும்; என் மீட்பராகிய கடவுளே, என்னைக் கைவிடாதிரும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மை எதிர்நோக்கி இருப்போரின் ஆற்றலானவரே, உம்மால் அன்றி வலுவற்ற எங்களால் ஒன்றும் செய்ய இயலாது; எனவே உம் கட்டளைகளை நிறைவேற்றி எங்கள் விருப்பத்தாலும் செயலாலும் உமக்கு உகந்தவர்களாகிட உமது அருள் உதவியைக் கனிவுடன் எங்களுக்கு என்றும் அளிப்பீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, மக்களினத்தார் ஒப்புக்கொடுக்கும் இந்த அப்ப, இரச காணிக்கைகள் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் உணவாகவும் எங்களைப் புதுப்பிக்கும் அருளடையாளமாகவும் மாறச் செய்கின்றீர்; அதனால் இவற்றின் அருள் உதவி எங்கள் உடலுக்கும் மனதுக்கும் என்றும் குறைவுபடாமல் கிடைக்க அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

கயா 26 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன், அதையே நான் நாடித் தேடுவேன்; அதனால் ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருப்பேன்.

அல்லது

சோடா வா 17:11 தூய தந்தையே! நீர் எனக்கு அளித்த இவர்களை உம் பெயரால் காத்தருளும்; அதனால் அவர்கள் நம்மைப் போல் ஒன்றாய்
இருப்பார்களாக, என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட உமது இத்திரு உணவு நம்பிக்கையாளர் உம்மில் ஒன்றித்திருப்பதைக் குறித்துக்காட்டுகின்றது; அது போல உமது திரு அவையிலும் ஒற்றுமையை அது விளைவிப்பதாக, எங்கள்.

======================

460 ஆண்டின் பொதுக்காலம்
பொதுக் கால 12-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 27:8-9 ஆண்டவர்தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே மீட்பு தரும் பாதுகாப்பு. ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; என்றென்றும் அவர்களை ஆண்டு
நடத்திய ருளும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம்மையே நம்பி, உம்முடைய அன்பில் நிலைத்திருப்பவர்களை நீர் என்றும் கைவிடுவதில்லை ; இவ்வாறு நாங்கள் உமது திருப்பெயரை எக்காலத்திலும் போற்றவும் உம்மை அன்பு செய்யவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்புகழ்ச்சிப் பலியை ஏற்றருளும்; அதனால் நாங்கள் தூயோராக்கப்பட்டு, உம்மை மகிழ்விக்கும் எங்கள் மனங்களின் காணிக்கைகளை உமக்கு அளித்திட அருள்வீராக. எங்கள்.
1909

திருவிருந்துப் பல்லவி

திபா 144:15 ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நம்புகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.

அல்லது

யோவா 10:11,15 நல்ல ஆயன் நானே. என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் உயர்மதிப்புள்ள உடலாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெற்றுப் புதுப்பிக்கப்பட்ட நாங்கள் உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: இறைப்பற்றுடன் நாங்கள் அடிக்கடி நிறைவேற்றும் இப்பலியின் பயனாக எங்கள் மீட்பை உறுதியாய்க் கண்டடையச் செய்வீராக. எங்கள்.

======================

பொதுக் கால 13-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 46:2 மக்கள் அனைவருமே, களிப்புடன் கைகொட்டுங்கள்; மகிழ்ச்சிக்
குரலுடன் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது அருளால் உம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நாங்கள் ஒளியின் மக்களாக இருக்க விரும்பினீரே; அதனால் நாங்கள் தவறு எனும் இருளில் சிக்கிக்கொள்ளாமல் உண்மையின் பேரொளியில் என்றும் சிறந்து விளங்க அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நீரே அருள்கூர்ந்து ஏற்பாடு செய்யும் உம் மறைநிகழ்வுகள் எங்களுக்கு நற்பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் பணியின் புனிதக் காணிக்கைகள் உமக்கு ஏற்றவையாய் இருப்பனவாக. எங்கள்.
காண். திபா 102:1

திருவிருந்துப் பல்லவி

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு ! என்னுள் இருப்பதெல்லாம் அவரது திருப்பெயருக்கே!
யோவா 17:20-21

அல்லது

தந்தையே, அவர்கள் நம்மில் ஒன்றாய் இருப்பார்களாக என அவர்களுக்காக வேண்டுகிறேன். அதனால் நீரே என்னை
அனுப்பினீர் என்று உலகம் நம்புவதாக, என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுத்து உணவாக உட்கொண்ட இப்புனிதப் பலிப்பொருள் எங்களுக்கு வாழ்வு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் முடிவில்லா அன்பினால் உம்முடன் ஒன்றிணைக்கப்பட்டு என்றும் நிலைத்திருக்கும் கனி தர அருள்வீராக. எங்கள்.

======================

462 அன்டன் பால் காலம்
பொதுக் கால 14-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

கடவுளே! உமது கோவிலின் நடுவில் நாங்கள் உமது இரக்கக்கைப் பெற்றுக்கொண்டோம்; கடவுளே! உமது பெயருக்கு ஏற்ப, உமது புகழும் உலகின் எல்லைவரை எட்டுவதாக. உமது வலக்கை நீதியால் நிறைந்துள்ளது.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, வீழ்ச்சியுற்ற உலகை உம் திருமகனின் தாழ்ச்சியினால் மீண்டும் நிலைநிறுத்தினீரே; அதனால் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து நீர் விடுவித்த உம் நம்பிக்கையாளருக்குப் புனிதப் பேரின்பத்தைத் தந்து அவர்கள் என்றும் நிலையான மகிழ்ச்சி அடைந்திடச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் நேர்ந்தளிக்கும் இக்காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்துவதாக; விண்ணக வாழ்வுக்கு உரிய நற்செயல் புரிவதில் நாங்கள் நாளுக்குநாள் முன்னேறிச் செல்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

கியா 33:9 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் ; அவரில் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர்.

அல்லது

மத் 128
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புக்கு உரிய கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மீட்பு அளிக்கும் கொடைகளை நாங்கள் என்றும் பெற்றுக்கொள்ளவும் உம்மை இடையறாது புகழ்ந்தேத்தவும் அருள்வீராக. எங்கள்.

======================

பொதுக் கால 15-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

நான் நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; உமது மாட்சியை நீர் வெளிப்படுத்தும்போது நான் நிறைவு பெறுவேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, தவறி நடப்போர் நன்னெறிக்குத் திரும்பிவர அவர்களுக்கு உமது உண்மையின் ஒளியைக் காட்டுகின்றீர்; கிறிஸ்தவ நம்பிக்கையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தமது பெயருக்குப் பொருந்தாதவற்றை விலக்கவும் ஏற்றவற்றைச் செயல்படுத்தவும் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் திரு அவையின் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; உம் நம்பிக்கையாளர் புனிதத்தில் வளர உதவும் உணவாக இவற்றை மாற்றியருள்வீராக. எங்கள்.
காண். திடா 83:4-5 ‘

திருவிருந்துப் பல்லவி

படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே, உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக்குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
யோவா 6:56

அல்லது

எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார்; நானும் அவரோடு இணைந்திருப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய அருள்கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இம்மறைநிகழ்வுகளில் நாங்கள் அடிக்கடி பங்கேற்பதால் அவற்றின் மீட்பு அளிக்கும் பயன் எங்களில் வளரச் செய்வீராக. எங்கள்.

======================

பொதுக் கால 16-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 53:6,8 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் இருக்கின்றார்: தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன். ஆண்டவரே,
உமது பெயரைப் போற்றுவேன். ஏனெனில் அது நல்லது.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நீர் உளம் கனிந்து உம் அடியார்களாகிய எங்களில் உம் அருள்கொடைகளைப் பெருகச் செய்தருளும்; இவ்வாறு நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றால் நாங்கள் பற்றியெரிந்து உம் கட்டளைகளை விழிப்புடனும் ஆர்வத்துடனும் கடைப்பிடிக்கச் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, பழைய ஏற்பாட்டுப் பல்வேறு பலிகள் உம் திருமகனின் நிறைவான ஒரே பலியில் முழுமை பெறச் செய்தீர்; ஆபேலின் காணிக்கைகள் மீது ஆசி வழங்கிப் புனிதப்படுத்தியது போல, உமது மாட்சியின் மேன்மைக்காக இறைப்பற்றுள்ள உம் அடியார்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் பலியை ஏற்று, அது அனைவரின் மீட்புக்கும் பயன்படச் செய்தருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 110:4-5 இரக்கமும் அருளும் உடைய ஆண்டவர், தம் வியத்தகு செயல்களை நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளித்தார்.

அல்லது

திவெ 3:20
இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்; யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் அவரோடு உள்ளே சென்று அவரோடு உணவு அருந்து வேன்; அவரும் என்னோடு உணவு அருந்துவார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

======================

ஞாயிறும் வாரநாள்களும் 465
பொதுக் கால 17-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 67:6-7,36 கடவுள் தமது தூயகத்தில் உறைகின்றார்: தமது இல்லத்தில் மக்கள் ஒன்று பட்டு வாழச் செய் கின்ற கடவுளே அவர்களுக்கு
வலிமையையும் மனத்திடத்தையும் அளிப்பார்.

திருக்குழும மன்றாட்டு

உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர்தாமே வாரி வழங்கிய கொடைகளிலிருந்து நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் உமது அருளின் ஆற்றலால் செயல்படும் இப்புனிதமிக்க மறைநிகழ்வுகள் இவ்வுலகில் எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி நிலையான பேரின்பத்துக்கு இட்டுச் செல்வனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 102:2 என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு ! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!

அல்லது

மத் 5:7-8 இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்; தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய பாடுகளின் நிலையான நினைவாகிய இத்திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு சொல்லற்கரிய அன்பினால் அவரே எங்களுக்கு அளித்துள்ள இக்கொடை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்வீராக.

======================

பொதுக் கால 18-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

கடவுளே! எனக்குத் துணை யாக வாரும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை ; நீரே
என்னை விடுவிப்பவர். ஆண்டவரே! காலம் தாழ்த்தாதேயும்.

திருக்குழும மன்றாட்டு ஆண்டவரே,

உம்மை நோக்கி மன்றாடும் உம் அடியார்களாகிய எங்களுடன் இருந்து உமது கனிவிரக்கத்தை என்றும் எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு எங்களைப் படைத்து, வழிநடத்துகிறவர் நீரே எனப் பெருமை கொள்ளும் எங்களுக்காக நீர் படைத்தவற்றைப் புதுப்பித்து, புதுப்பித்தவற்றைப் பாதுகாத்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

சா.ஞா. 16:20 ஆண்டவரே, எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை வானத்திலிருந்து எங்களுக்கு அளித்தீர்.

அல்லது

யோவான் 6:35 வாழ்வு தரும் உணவு நானே, என்கிறார் ஆண்டவர். என்னிடம் வருபவருக்குப் பசியே இராது ; என்னிடம் நம்பிக்கை
கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகக் கொடையால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உமது முடிவில்லா உதவியையும் உடனிருப்பையும் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்; எங்களை என்றும் கனிவுடன் காக்கத் தவறாத நீர் நிலையான மீட்புக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவீராக. எங்கள்.

======================

பொதுக் கால 19-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

ஆண்டவரே, உமது உடன்படிக்கையை நினைத்தருளும் உம் ஏழையரின் ஆன்மாக்களை ஒரு போதும் கைவிடாதேயும். ஆண்டவரே! எழுந்து வாரும்! உமது வழக்கை நீரே நடத்தும். உம்மை
நாடும் குரலை மறவாதேயும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் தூய ஆவியார் எங்களுக்குக் கற்றுத்தந்தவாறு, உம்மைத் தந்தை என அழைக்க நாங்கள் துணிவு கொள்கின்றோம்; நீர் வாக்களித்த உரிமைப் பேறான விண்ணக வீட்டுக்கு நாங்கள் வந்து சேரும்படி நீர் தேர்ந்து கொண்ட மக்களுக்கு உரிய மனப்பான்மையை எங்கள் இதயங்களில் பொழிந்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருளும்; இரக்கத்தால் நீர் எங்களுக்கு அளித்த இக்காணிக்கைகள் உமது ஆற்றலால் எங்கள் மீட்பின் மறைநிகழ்வாக மாறச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்தப் பல்லவி

திபா 1472 எருசலேமே! உயர்தரக் கோதுமையினால் உன்னை நிறைவடையச் செய்யும் ஆண்டவரைப் போற்றுவாயாக!

நான் அளிக்கும் உணவு வழி மரபினர் வாழ்வதற்கான எனது சதை,
என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களை உம்மோடு ஒன்றிக்கச் செய்து எங்களுக்கு மீட்பு அளிப்பதாக; அது எங்களை உமது உண்மையின் ஒளியில் உறுதிப்படுத்துவதாக, எங்கள்.

======================

468 ஆண்டின் பொதுக் காலம்
பொதுக் கால 20-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 83:10-11
எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்; நீர் தி செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். – வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோலி, முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது.
பாக்கம்: நீர் திருப்பொழிவு வடன் பாரும்; ஏனெனில்

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மை அன்பு செய்வோருக்குக் கட்புலனாகாத பல்வேறு நன்மைகளை நீரே ஏற்பாடு செய்திருக்கின்றீர்; எங்கள் இதயங்களில் உமது அன்பின் நிறைவைப் பொழிவதால் நாங்கள் உம்மை அனைத்திலும், அனைத்துக்கும் மேலாகவும் அன்பு செய்து எல்லா வகை மனித எதிர்பார்ப்புகளையும் கடந்த உம் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 129:7 இரக்கம் ஆண்டவரிடமே உள்ளது ; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
யோவா 6:51-52

அல்லது

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே
என்கிறார் ஆண்டவர். இந்த உணவை எவராவது உண்டால் அவர்
என்றுமே வாழ்வார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வருளடையாளங்களால் கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்த நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருந்து விண்ணகத்தில் அவருடன் தோழமை கொள்ளத் தகுதி பெறுவோமாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

======================

பொதுக் கால 21-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

‘காண். திபா 85:1
ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்து, என் மன்றாட்டை. கேட்டருளும்; என் கடவுளே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ள உம் ஊழியனை மீட்டருளும்; ஆண்டவரே! என் மேல் இரக்கமாயிரும் ஏனெனில் நாள் முழுவதும் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டேன்.

திருக்குழும மன்றாட்டு

நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரே பலியினால் உமக்கென மக்களைச் சொந்தமாக்கிக்கொண்டீரே; உமது திரு அவையில் ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 103:13-15 ‘ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடை கின்றது; அதனால் பூவுலகினின்று உணவு அளிக்கின்றீர்; திராட்சை இரசம் மனித இதயத்தை மகிழ்விக்கின்றது.

அல்லது

யோவா 6:54 எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், என் கிறார் ஆண்டவர். நானும்
அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தின் விருந்து எங்களுக்கு முழுமையான நலம் தரும் மருந்தாய்ச் செயல்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது இரக்கத்தில் முழுமையாக நிலைபெற்றிருந்து அனைத்திலும் உமக்கு உகந்தவர்களாக இருக்கத் தகுதி பெறுவோமாக. எ ங்க ள்.

======================

பொதுக் கால 22-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

ஆண்டவரே, என் மேல் இரக்க மாயிரும். ஏனெனில் ம மவது ம் உம்மை நோக்கிக் கூக்குரலிட்
ஒடாக்கிக் கூக்குரலிட்டேன். ஏனெனில் ஆண்டவரே, நீர் இனிய வர், பரிவுள்ளவர்; உம்மை நோக்க
மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.

திருக்குழும மன்றாட்டு

ஆற்றல் வாய்ந்த இறைவா, சிறந்தவை அனைத்தும் நிறைந்தவரே, உம்மீது நாங்கள் உள்ளார்ந்த அன்புகொள்ளச் செய்தருளும்; அதனால் எங்களது சமயப்பற்றை வளர்த்து நன்மைகளைப் பெருகச் செய்து உம்மோடு. நீர் எங்களில் கருத்துடன் உருவாக்கியதைப் பராமரித்துக் காத்தருள்வீராக.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, என்றும் புனிதமான இக்காணிக்கை மீட்பு அளிக்கும் ஆசியை எங்கள் மீது பொழிவதாக; இவ்வாறு அருளடையாள முறையில் நிகழும் இப்பலி உமது ஆற்றலால் நிறைவு பெறுவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 30:20 உமது அருள் எத்துணை ஆண்டவரே, உமக்கு அஞ்சுவோருக்கு நீர் சேர்த்து வைத்திருக்கும்
மிகுதி.

அல்லது

மத் 5:9-10
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்; நீதியின் பொருட்டுத் அவர்களுக்கு உரியது.
துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இந்த அன்பின் உணவு எங்கள் இதயங்களை உறுதிப்படுத்தி எங்கள் சகோதரர் சகோதரிகளில் உமக்குப் பணிபுரிய எங்களைத் தூண்டியெழுப்புவதாக. எங்கள்.

======================

பொதுக் கால 23-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

ஆண்டவரே, நீர் நீதி உள்ளவர்; உமது தீர்ப்பு நேர்மையானது –
உமது இரக்கத்துக்கு ஏற்ப உம் ஊழியனை நடத்தியருளும்.

திருக்கும் மன்றாட்டு

எங்களுக்கு மீட்பும் பிள்ளைகளுக்கு உரிய உரிமையும் வழங்கும் இறைவா, உம் அன்புக்கு உரிய மக்களைக் கனிவுடன் கண்ணோக்கும்; அதனால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள உம் மக்களுக்கு உண்மையான விடுதலையையும் நிலையான உரிமைப் பேற்றையும் அளிப்பீராக. உம்மோடு.

காணிக்கை மன்றாட்டு

இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

கா, இபா -3 கலைமான் நீரோடைகளுக்காக ஏங்குவது போல, கடவுளே! என் ஆன் மா உமக்காக ஏங்குகின்றது. வல்லவரான வாழும் கடவுள் மீது என் ஆன் மா தாகம் கொண்டுள்ளது.

அல்லது

யோவா 8:12 உலகின் ஒளி நானே: என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது வார்த்தையாலும் விண்ணக விருந்தாலும் உம் நம்பிக்கையாளருக்கு நீர் உணவு அளித்து வாழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் அன்புத் திருமகன் அளிக்கும் மாபெரும் கொடைகளால் நாங்கள் வளம் பெற்று அவரது வாழ்வில் என்றும் பங்கேற்கும் தகுதி பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

======================

பொதுக் கால 24-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். சீஞா 36:18 ஆண்டவரே, உமக்காகக் காத்தி
உமக்காகக் காத்திருப்போருக்கு அது அளித்தருளும்; அதனால் உம் இறைவாக்கினர்கள் – தகுந்தவர்களாகக் காணப்படுவார்களாக. உம் ஊழியர்களின் ..
மக்களாகிய இஸ்ரயேலரின் மன்றாட்டுகளுக்குச் செவிசாயும்.

திருக்குழும மன்றாட்டு

அனைத்தையும் படைத்தவரும் ஆள்பவருமான இறைவா, எங்களைக் கண்ணோக்கியருளும்; அதனால் உமது பரிவிரக்கத்தின் செயலாற்றலை உய்த்துணர்ந்து உமக்கு முழு இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரிய அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கண்ணோக்கி இக்காணிக்கைகளை ஏற்றருளும்; இவ்வாறு உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் ஒவ்வொருவரும் ஒப்புக்கொடுக்கும் காணிக்கை அனைவருடைய மீட்புக்கும் பயன்படுவதாக. எங்கள்.
என

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 35:8
கடவுளே, உமது இரக்கம் எத்துணை உயர்மதிப்புள்ளது ! மானிடா உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.

அல்லது

காண். 1 கொரி 10:16 நாம் போற்றும் திருக்கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் ஆகும்; நாம் பிடும் அப்பம் கிறிஸ்துவின் உடலில்
பங்குகொள்ளுதல் ஆகும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட விண்ணகக் கொடைகளின் செயலாற்றல் எங்கள் மனதையும் உடலையும் ஆட்கொண்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாம இத்திருவிருந்தின் பயனுக்கு ஏற்ப வாழ்வோமாக. எங்கள்.

======================

பொதுக் கால 25-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

மக்களின் மீட்பர் நாமே, என்கிறார் ஆண்டவர். எத்தகைய இடுக்கண்களில் என்னைக் கூவி அழைத்தாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்ப்பேன்; நான் என்றும் அவர்களுக்கு ஆண்டவராய்
இருப்பேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மையும் பிறரையும் அன்பு செய்வதில் திருச்சட்டத்தின் எல்லாக் கட்டளைகளும் அடங்கியிருக்கச் செய்தீரே; உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் நாங்கள் முடி வில்லா வாழ்வுக்கு வந்து சேரும் தகுதி பெற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடு கின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.
திபா 118:4-5

திருவிருந்துப் பல்லவி

உம் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிக்க நீர் கட்டளையிட்டீர்; அதனால் உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க என் வழிகளை நிலைப்படுத்தும்.
யோவா 10:14

அல்லது

நல்ல ஆயன் நானே! என் கிறார் ஆண்டவர். நான் என் ஆடுகளை
அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
உம் அருளடையாளங்களால் புத்துயிர் பெற்ற எங்களுக்கு உமது இடையறாத உதவியைக் கனிவுடன் என்றும் அருள்வீராக; அதனால் மீட்பின் பயனை இம்மறைநிகழ்வுகளிலும் அன்றாட வாழ்விலும் பெற்றுக்கொள்வோமாக. எ ங்கள்.

======================

பொதுக் கால 26-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

ஆண்டவரே, நீர் எங்களுக்குச் செய்த யாவற்றையும் உண்மையான தீர்ப்போடு செய்திருக்கிறீர். ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராக பாவம் செய்தோம். உம் கட்டளைகளுக்குப் பணிந்தோமில்லை அனால் உம் பெயரை மாட்சிப்படுத்தும்; உமது இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப எங்களை நடத்தும்.

திருக்கும் மன்றாட்டு

இறைவா, எல்லாவற்றுக்கும் மேலாக மன்னிப்பு அளிப்பதிலும் இரக்கம் காட்டுவதிலும் நீர் எல்லாம் வல்லவர் என வெளிப்படுத்துகின்றீர்; இவ்வாறு உமது அருளை எங்கள் மீது நிறைவாகப் பொழிவதால் நாங்கள் உம் வாக்குறுதிகளை ஆர்வமுடன் நாடி விண்ணக நலன்களில் பங்குபெறச் செய்வீராக. உம்மோடு. காணிக்கைந்து மன்றாட்டு இரக்கமுள்ள இறைவா, நாங்கள் அளிக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாக மாறிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது ஆசி அனைத்தின் ஊற்று எங்களுக்குத் திறக்கப்படுவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண் திபா 89-50 ஆண்டவரே, உம் ஊ ழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவு கூரும்; அதில் நீர் எனக்கு நம்பிக்கை அளித்தீர். இது என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது.

அல்லது

யோவா 2:16 இதில் கடவுளின் அன்பை அறிந்து கொண்டோம். ஏனெனில் அவர் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நாம் நம் சகோதரர்
சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும்.

திருவிருந்துக்குப்பின் மன் நாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வு எங்கள் மனதையும் உடலையும் சீர்படுத்துவதாக, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பை அறிவிப்பதால் அவருடன் இணைந்து அவருடைய மாட்சியில் பங்கேற்பவர்களாக இருப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

======================

பொதுக் கால 27-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். எஸ் 4:17 ஆண்டவரே, அனைத்து ம் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன; உமது திருவுளத்தை எவராலும் எதிர்த்து நிற்க முடியாது. விண்ணையும் மண்ணையும் விண்ணின் கீழ் உள்ள அனைத்தையும் படைத்தவர்
நீரே. நீரே அனைத்துக்கும் ஆண்டவர்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் தகுதிக்கும் நாங்கள் விரும்பிக் கேட்பதற்கும் மேலாகவே உமது மிகுதியான பரிவிரக்கத்தால் எங்களுக்கு அருளுகின்றீர்; அதனால் எங்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிந்து மனச்சான்றுக்கு அச்சம் விளைவிப்பவற்றை மன்னித்து, நாங்கள் கேட்கத் தயங்கும் மன்றாட்டை நிறைவேற்றுவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் கட்டளைகளாலும் தூய மறைநிகழ்வுகளாலும் நிறுவப்பட்ட பலிகளை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: உமக்கு ஏற்ற ஊழியம் புரிந்து நாங்கள் கொண்டாடும் இப்பணியால் தூய்மையாக்கப்பட்டு, உமது மீட்பின் நிறைவைப் பெறத் தகுதி பெறுவோமாக. எங்கள்.
புல 3:25

திருவிருந்துப் பல்லவி

ஆண் டவரில் நம்பிக்கை வைப்போருக்கும் அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்!
காண். 1 கொரி 10:17

அல்லது

அப்பம் ஒன்றே. நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் பங்குகொள்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் பெற்றுக்கொண்ட கிறிஸ்துவின் அருளடையாளத்தால் புத்துணர்வும் ஊட்டமும் பெறுகின்றோம்; இவ்வாறு நாங்கள் அவராகவே மாறிட எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

======================

ஆண்டின் பொதுக்காலம்
பொதுக் கால 28-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 129:3-4
ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளே, உம்மிடமே மன்னிப்பு உள்ளது.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது அருள் என்றும் எங்கள் முன் செல்லவும் எங்களைத் தொடர்ந்து வரவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நற்செயல் புரிவதில் என்றும் கருத்தாய் இருக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 33:11 நன்மை செல்வர் வறுமையுற்றனர், பசியுற்றனர்; ஆண்டவரை நாடுவோருக்கு
ஏதும் குறைவுபடாது.

அல்லது

1 யோவா 3:2 ஆண்டவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பது போல் நாம் அவரைக் காண்போம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனிதமிக்க உடலாலும் இரத்தத்தாலும் எங்களுக்கு உணவு அளிப்பது போல எங் கள். எங்களை அவரது இறை இயல்பிலும் பங்குபெறச் செய்வீராக.

=================

பொதுக் கால 29-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 16:6,8 இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும். ஆண்டவரே, கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னைப்
பாதுகாத்தருளும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் எப்போதும் உமது திருவுளத்துக்கு ஏற்ப வாழச் செய்தருளும்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு நேர்மையான இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரியச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்த கொடைகளையே நாங்கள் உமக்கு மனம் உவந்து அளிக்க அருள்புரியுமாறு உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது அருள் எங்களைத் தூய்மையாக்கி, நாங்கள் நிறைவேற்றும் அதே மறைநிகழ்வுகள் வழியாக உமது புனிதப்படுத்தும் அருளைப் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 32:18-19 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன் பில் நம்பிக்கை கொள்வோரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்; அதனால் அவர்கள் ஆன்மாவைச் சாவினின்று காக்கின்றார்; பஞ்சத்தில் அவர்களுக்கு உணவளிக்கின்றார்.
மாற் 10:45

அல்லது

பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு மானிட மகன் வந்துள்ளார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகப் பலியில் நாங்கள் அடிக்கடி பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இவ்வுலக நலன்களின் உதவியால் மறுவுலக நலன்களை நாடக் கற்றுக்கொள்வோமாக. எ ங்கள்.

=================

ஆண்டின் பொதுக் காலம்
பொதுக் கால 30-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 104:3-4 எ ண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக. ஆண்டவரைக் தேடுங்கள், உறுதிபெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும்
நாடுங்கள்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்களில் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியன வளரச் செய்தருளும் அதனால் நீர் கட்டளையிடு வதை நாங்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை நாங்கள் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவோமாக உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிக்கு உரிய உமக்கு நாங்கள் அளிக்கும் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் நிறைவேற்றும் இத்திருப்பணி எங்களை உமது மாட்சிக்கு இட்டுச்செல்வதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 19: உமது வெற்றியைக் குறித்து மகிழ்வோமாக! நம் கடவுளின் பெயராக மாண்புறுவோமாக!

அல்லது

எபே 5:
கிறிஸ்து நமக்காகத் தம்மை நறு மணம் வீசும் பலியாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, நம்மை அன்பு செய்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அருளடையாளங்கள் தம்முள் கொண்டிருக்கும் அருள் எங்களில் நிறைவு பெறச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்போது அடையாள முறையில் கொண்டாடுவதை நாங்கள் உண்மையாகவே பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

=================

தாயம் வாரநாள்களும் 4
பொதுக் கால 31-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 37:22-2 ஆண்டவரே, என் கடவுளே, என்னைக் கைவிடாதேயும் என்னிடமிருந்து அகன்று விடாதேயும். ஆண்டவரே, என் மீட்பின்
ஆற்றலே, எனக்குத் துணை புரிய வாரும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உமது அருள்செயலால்தான் உம் நம்பிக்கையாளர் உமக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஊழியம் புரிகின்றனர்; இவ்வாறு நீர் வாக்களித்தவற்றைப் பெற்றுக்கொள்ளத் தடையின்றி விரைந்து செல்ல எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலி உமக்கு ஏற்ற, தூய காணிக்கையாக அமையச் செய்தருளும்; அது எங்களுக்கு உமது இரக்கத்தின் புனித கொடையாகவும் விளங்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 15:11 வாழ்வின் வழிகளை நான் அறியச் செய்தீர்; ஆண்டவரே, உம் திருமுன் மகிழ்ச்சியால் என்னை நிரப்புவீர்.

அல்லது

யோவா 6:58 வாழும் தந்தை என்னை அனுப்பினார்; நானும் அவரால் வாழ்கிறேன். என்னை உண்போரும் என்னால் வாழ்வர்,
என் கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஆற்றல்மிகு உமது செயல் எம்மில் பெருகச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு விண்ணக அருளடையாளங்களால் ஊட்டம் பெற்ற நாங்கள் உமது கொடையால் அவை அளிக்கும் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளத் தயார்செய்வோமாக. எ ங் கள்.

=================

ஆண்டின் பொதுக்காலம்
பொதுக் கால 32-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 87:3 ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, எங்களுக்கு எதிரானவற்றை எல்லாம் கனிவுடன் அகற்றியருளும்; அதனால் உள்ளத்திலும் உடலிலும் எழுகின்ற தடைகளை நீக்கி உவப்புடன் உமக்கு ஊழியம் புரிவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

100
ஆண்டவரே, இப்பலிப்பொருள்களை இரக்கமுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள் பற்றன்புடன் அதில் பங்குகொள்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 22:1-2 ஆண்டவர் என்னை ஆள்கின்றார்; எனக்கேதும் குறை இல்லை; பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்தார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் சென்றார்.

அல்லது

லூக் 24:35
அவர் அப்பத்தைப் பிடுகையில், சீடர்கள் ஆண்டவர் இயேசுவைக் கண்டுணர்ந்து கொண்டார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது புனித கொடையால் ஊட்டம் பெற்ற நாங்கள் கனிவுடன் உம்மை மன்றாடி நன்றி கூறுகின்றோம்; இவ்வாறு உம் ஆவியாரின் பொழிவால் நாங்கள் விண்ணக ஆற்றல் பெற்று உண்மையான அருள்வாழ்வில் நிலைத்து நிற்கச் செய்வீராக. எங் கள்.

=================

பொதுக் கால 33-ஆம் ஞாயிறு
உள்ள

வருகைப் பல்லவி

எரே 29:11-12,14 ஆண்டவர் கூறுகிறார்: நான் துன்பங்களின் எண்ணங்களை அல்ல, அமைதியின் எண்ணங்களை எண்ணுகிறேன். நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எல்லா இடங்களினின்றும் உங்களது அடிமைத்தனத்திலிருந்து
உங்களை மீண்டும் அழைத்து வருவேன்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மாண்புக்கு உரிய உமது திருமுன் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை இறைப்பற்றின் அருளையும் நிலையான பேரின்பத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தருவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 72:28
கடவுளின் அண்மையே எனக்கு நலம். ஆண்டவராகிய கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

அல்லது

மாற் 11:23-24
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்.
கேட்டபடியே உங்களுக்கு நடக்கும், என் கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.


=================

ஆண்டின் பொதுக் காலம்
பொதுக் கால 34-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 84:9 சும் மக்களுக்கும் தம் பற்று மிகு அடியாருக்கும் அவரிடம் மனம்
திரும்புவோருக்கும் ஆண்டவர் நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் விருப்பங்களைத் தூண்டியெழுப்ப உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் புனிதச் செயலின் பயனை மிகுந்த ஆர்வத்துடன் நாடி உமது பரிவிரக்கத்தின் பேருதவிகளைப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்கு ஒப்புக்கொடுக்குமாறு நீர் அளித்த புனிதக் கொடைகளை ஏற்றுக்கொள்ளும்; இவற்றின் வழியாக நாங்கள் உமது பரிவிரக்கத்துக்கு ஏற்றவர்களாகி உம் கட்டளைகளுக்கு என்றும் கீழ்ப்படிந்து வாழச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 116:1-2 மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங் கள். ஏனெனில் நம்மீது அவரது இரக்கம் நிலையாய் உள்ளது.

அல்லது

மத் 28:20
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, இப்புனித விருந்தில் நாங்கள் பங்குபெற்று மகிழச் செய்கின்றீர்; அதனால் நாங்கள் உம்மிடமிருந்து ஒருபோதும் பிரியாதிருக்க அருள்புரிவீராக. எங்கள்.

=======================

ஆண்டின் பொதுக் காலத்தில் வரும் ஆண்டவருடைய பெருவிழாக்கள்

பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்குப்பின் வரும் முதல் ஞாயிறு

தூய்மைமிகு மூவொரு கடவுள்

பெருவிழா

வருகைப் பல்லவி

தந்தையாகிய கடவுளும் கடவுளுடைய ஒரே திருமகனும் தூய ஆவியாரும் வாழ்த்தப்பெறுவாராக; ஏனெனில் அவர் நம்மீது தமது இரக்கத்தைப் பொழிந்தருளினார்.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு
தந்தையே இறைவா, உண்மையின் வார்த்தையையும் புனிதப்படுத்தும் தூய ஆவியாரையும் உலகுக்கு அனுப்பி உமது வியத்தகு மறைபொருளை மானிடருக்கு வெளிப்படுத்தினீர்; நாங்கள் உண்மையான நம்பிக்கையை அறிக்கையிடுவதன் வழியாக என்றுமுள்ள மூவொரு கடவுளின் மாட்சியை அறிந்து கொள்ளவும் உமது மாண்பின் பேராற்றலில் நீர் ஒருவராக இருக்கின்றீர் என ஏற்று வழிபடவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே எங்கள் இறைவா, உமது பெயரை மன்றாடி நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எங்கள் பணியின் காணிக்கைகளைத் தூய்மைப்படுத்தியருளும்; இதன் வழியாக எங்களையே உமக்கு உகந்த நிலையான காணிக்கையாக மாற்றுவீராக. எங்கள்.

தொடக்கவுரை: தூய்மைமிகு மூவொரு கடவுளின் மறைபொருள்.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம்முடைய ஒரே பேறான மகனோடும் தூய ஆவியாரோடும்
ஆள்வகையில் ஒருவராய் இராமல் மூவராய் இருந்தாலும்
இறைத்தன்மையில் ஒரே கடவுளாகவும் ஒரே ஆண்டவராகவும்
நீர் இருக்கின்றீர்.

ஏனெனில் நீரே வெளிப்படுத்தியதால்,
உமது மாட்சி பற்றி நாங்கள் நம்புவதையே உம் மகனைக் குறித்தும்
தூய ஆவியாரைக் குறித்தும் எத்தகைய வேறுபாடுமின்றி நம்புகின்றோம்.

இவ்வாறு உண்மையான, நிலையான
கடவுள் தன்மையை நாங்கள் அறிக்கையிடும்போது
வகையில் தனித்தன்மையையும் இறை இயல்பில் ஒருமையையும்
மாண்பில் சமத்துவத்தையும் போற்றுகின்றோம்.

ஆகவே வானதூதர்களும் முதன்மை வானதூதர்களும்
கெருபீன்களும் சேராபீன்களும்
உம்மைப் புகழ்ந்து நாள்தோறும் முடிவின்றி ஆர்ப்பரித்து
ஒரே குரலாய்ச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி
கலா 4: நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா. தந்தையே’ எனக் கூப்பிடுகிறது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் நிலையான தூய மூவொரு கடவுள்தன்மையையும் பாகுபாடற்ற ஒருமையையும் அறிக்கையிடுகின்றோம்; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு உடல், உள்ள நலனை அளிப்பதாக. எங்கள்.

==============9^ 8601 ^———–

தூய்மைமிகு மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப்பின் வரும் வியாழன்

கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும்

பெருவிழா

இப்பெருவிழா கடன் திருநாளாகக் கொண்டாடப்படாத இடங்களில், தூய்மைமிகு “மூவொரு கடவுள் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அதற்கு உரிய திருப்பலியாக இது கொண்டாடப்படும்.

வருகைப் பல்லவி
காண். திபா 80:17 கோதுமையின் கொழுமையால் அவர் அவர்களுக்கு உணவளித்தார்; மலைத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்தார்.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு
இறைவா, இந்த வியப்புக்கு உரிய அருளடையாளத்திலே உம்முடைய பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர்; உம் திரு உடல், திரு இரத்தம் ஆகியவற்றின் தூய மறைபொருளை வணங்கும் நாங்கள், உமது மீட்பின் பயனை இடைவிடாமல் துய்த்து உணர்ந்து மகிழ அருள்வீராக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமது மீட்பின் மறைபொருளைக் குறித்துக்காட்டுகின்றன; அதனால் உமது திரு அவைக்கு ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளைக் கனிவுடன் தந்தருள்வீராக. எங்கள்.

தொடக்கவுரை: தூய்மைமிகு நற்கருணையின் கனிகள்.

இசையில்லாப் பாடம்: தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து தம் திருத்தூதர்களுடன் இறுதி இரவு விருந்து அருந்துகையில்,
சிலுவையின் மீட்பு அளிக்கும் நினைவு எக்காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்தார்.
நிறைபுகழ்ச்சியின் ஏற்புடைய கொடையாகவும் மாசற்ற
செம்மறியாகவும் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்தார்.

இவ்வாறு, வணக்கத்துக்கு உரிய இந்த மறைபொருளை
நீர் உம் நம்பிக்கையாளருக்கு உணவாகத் தந்து, அவர்களைப் புனிதப்படுத்துகின்றீர்.
இதனால் ஒரே உலகில் வாழும் மனித இனம் ஒரே நம்பிக்கை ஒளி பெற்று,
ஒரே அன்பினால் பிணைக்கப்படுகின்றது;

எனவே உ ம து அருளின் இனிமையை நிறைவாகச் சுவைத்து நாங்கள்
விண்ணகச் சாயலைப் பெறுமாறு, இத்துணை வியப்புக்கு உரிய
அருளடையாளத்தின் விருந்தில் நாங்கள் பங்கு பெறுகின்றோம்.

ஆகவே விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும்
உம் மைத் தொழுது வணங்கி புதியதொரு பண்பாடுகின்றன;
வானதூதர்களின் அணிகள் அனைத்தோடு நாங்களும் சேர்ந்து
முடிவின்றிப் பறைசாற்றிச் சொல்வ தாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி
யோவா 6:57 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார். நானும் அவரோடு இணைந்திருப்பேன்,
என் கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உயர்மதிப்புள்ள உம் திரு உடலையும் திரு இரத்தத்தையும் நாங்கள் இவ்வுலகில் உட்கொள்வது உமது இறைத்தன்மையைச் சுவைத்து இன்புறுவதன் முன்னடையாள மாய்த் திகழ்கின்றது; அதனால் நாங்கள் அப்பேரின்பத்தில் என்றென்றும் மகிழ்ந்திருக்க அருள் புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.

திருப்பலிக்குப் பிறகு பவனி இடம் பெறுவது விரும்பத்தக்கது. அவ்வாறாயின் —-ணப் பவனியின்போது கொண்டு செல்லப்படும் அப்பம் அத்திருப்பலியிலேயே அர்ச்சிக்கப்பட வேண்டும். திருப்பலிக்குப் பின்பு பொதுவான, நீண்ட நற்கருணைச் சிறப்பு வழிபாடு நடைபெற்ற பிறகும் அப்பவனி நடைபெற எத்தடையும் இல்லை. திருப்பலிக்குப்பின் நற்கருணைப் பவனி இடம் பெற்றால், நம்பிக்கையாளரின் திருவிருந்துக்கு – அர்ச்சிக்கப்பட்ட அப்பம் வைக்கப்படும் நற்கருணைக் கதிர் பாத்திரம் பீடத்தின்மேல் வைக்கப்படும். திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு முடிவுற்ற பின்பு, முடிவுச் சடங்குகள் விடப்பட்டு, பவனிக்கு உரியவை தொடரும்.
==============13^ 8605 ^———–

பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்குப்பின் வரும் 2-ஆம் ஞாயிறுக்கு அடுத்த வெள்ளி

இயேசுவின் தூய்மைமிகு இதயம்

பெருவிழா

வருகைப் பல்லவி
திபா 32:11,19 அவருடைய இதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாய் உள்ளன; அதனால் அவர்களது உயிரைச் சாவினின்று விடுவித்து, அவர்களுக்குப் பஞ்சத்திலும் உணவு அளிக்கின்றார்.

“”உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, அன்பார்ந்த உம் திருமகனின் இதயத்தை எண்ணிப் பெருமைகொள்ளும் நாங்கள் தம் அன்பினால் அவர் எங்களுக்குப் புரிந்து வருகின்ற வியத்தகு நன்மைகளை நினைவுகூருகின்றோம்; இவ்வாறு விண்ணகக் கொடைகளின் ஊற்றாகிய அத்திரு இதயத்திலிருந்து பொங்கி வழியும் அருளை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, எங்கள் பாவங்களால் காயம் அடைந்த உம் திருமகனுடைய இதயத்தின் வழியாக உமது அன்பின் அளவற்ற செல்வங்களை எங்களுக்கு இரக்கத்துடன் வாரி வழங்கத் திருவுள மானீர்; அதனால் நாங்கள் அவரைப் பக்தியுடன் வழிபட்டுப் பாவக் கழுவாயின் கடமையை எங்கள் வாழ்வில் தகுந்த முறையில் நிறைவேற்ற அருள்புரிவீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, அன்பார்ந்த உம் திருமகனுடைய இதயத்தின் சொல்லற்கரிய அன்பைக் கண்ணோக்கியருளும்; அதனால் நாங்கள் ஒப்புக்கொடுப்பது உமக்கு உகந்ததாகி எங்கள் பாவங்களுக்குக் கழுவாயாக அமைய அருள்புரிவீராக. எங்கள்.

தொடக்கவுரை: கிறிஸ்துவின் அளவற்ற அன்பு:

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்து
வியப்புக்கு உரிய அன்பினால் தம்மையே எமக்காகக் கையளித்தார்.
குத்தித் திறக்கப்பட்ட விலாவிலிருந்து
இரத்தமும் தண்ணீரும் வழிந்தோடச் செய்தார்;
இதிலிருந்து திரு அவையின் அருளடையாளங்கள் வெளிப்பட்டன.
இவ்வாறு மீட்பரின் திறந்த இதயத்திடம் அனைவரும் ஈர்க்கப்பெறவும்
மீட்பு அளிக்கும் ஊற்றுகளிலிருந்து
மகிழ்ச்சியுடன் முகந்து கொள்ளவும் செய்தருளினார்.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி
காண். யோவா 7:37-38 ஆண்டவர் கூறுகிறார்: யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும், பருகட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்.

அல்லது

யோவா 19:34. படைவீரருள் ஒருவர் அவருடைய விலாவை ஈட்டி யால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இந்த அன்பின் அருளடையாளம் எங்களைப் புனித அன்புத் தீயால் பற்றியெரியச் செய்வதாக; இவ்வாறு நாங்கள் உம் திருமகனிடம் என்றும் ஈர்க்கப்பெற்று, எங்கள் சகோதரர் சகோதரிகளில் அவரையே கண்டு கொள்ளக் கற்றுக்கொள்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

==========================


“பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு

அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

பெருவிழா

வருகைப் பல்லவி
திவெ 5:12; 1:6 கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது.
இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, அனைத்துக்கும் அரசரான அன்பார்ந்த உம் திருமகனில் அனைத்தையும் புதுப்பிக்கத் திருவுளமானீர்; அடிமைநிலையிலிருந்து விடுதலை அடைந்த படைப்பு அனைத்தும் மாண்புக்கு உரிய உமக்குப் பணி புரியவும் உம்மை முடிவின்றிப் புகழ்ந்தேத்தவும் அருள்புரிவீராக. உம்மோடு .

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம்மோடு மனிதரை ஒப்புரவாக்கும் இப்பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை மக்களினத்தார் அனைவருக்கும் உம் திருமகனே கொடுத்தருள்வாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தொடக்கவுரை: அனைத்துக்கும் அரசராம் கிறிஸ்து.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நீர் உம்முடைய ஒரே பேறான திருமகன்
எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை
என்றென்றும் குருவாகவும் அனைத்துக்கும் அரசராகவும்
அக்களிப்பின் தைலத்தால் அருள்பொழிவு செய்தீர்.
இவ்வாறு அமைதியை வழங்கும் மாசற்ற பலிப்பொருளாகச்
சிலுவைப் பீடத்தில் தம்மையே அவர் ஒப்புக்கொடுத்து
மனிதருக்கு மீட்பு அளிக்கும் அருளடையாளங்களை நிறுவினார்.

படைப்புகள் அனைத்தையும் தமது ஆட்சிக்கு உட்படுத்தி
நிலையான, அனைத்துலக ஆட்சியை
அளவில்லா மாண்புடைய உமக்குக் கையளித்தார்.
அது உண்மையும் வாழ்வும் ஒங்கும் ஆட்சி;
புனிதமும் அருளும் நிறைந்த ஆட்சி;
அன்பும் அமைதியும் நிலவும் ஆட்சியும் ஆகும்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்களும் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி
திபா 28:10-11 ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருப்பார்: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியில் ஆசி வழங்குவார்.

திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு
ஆண்டவரே, சாகா வரம் தரும் உணவை உட்கொண்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அனைத்துக்கும் அரசராம் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் பெருமை கொள்ளும் நாங்கள் அவருடைய விண்ணக ஆட்சியில் அவரோடு என்றென்றும் வாழ ஆற்றல் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

=============↑ பக்கம் 498

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy