தவக்கால திருப்பலி செபங்கள்

தவக்கால தொடக்க, காணிக்கை, நன்றி மன்றாட்டுகள்

தவக்காலம்

1. மரபு வழிவந்த உரோமை வழக்கில் உள்ள “பொது வழிபாட்டுத் தலங்கள்” அமைப்பைப் போல, தலத் திரு அவைகளிலும் “பொது வழிபாட்டுத் தலங்களில்” வழிபாடு நடத்துவதைப் போற்றி வளர்ப்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது. இதைப் பெரிய ஊளர்களிலோ நகரங்களிலோ அந்தந்த இடத்துக்கு ஏற்றவாறு நடத்தலாம். இது தவத் காலத்தில் மிகவும் விரும்பத்தக்கது.

நம்பிக்கையாளரின் இத்தகைய கூட்டம் ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது வாரத்தின் மிக வசதியான வேறு நாள்களில், புனிதர்களின் கல்லறைத் தலங்களிலோ நகரத்தின் முக்கிய கோவில்களிலோ திருத்தலங்களிலோ மக்கள் வழக்கமாகப் பெருந்திரளாகச் செல்லும் மறைமாவட்டத்தின் திருப்பயணத் தலங்களிலோ நடத்தப்படலாம். இத்திருக்கூட்டத்துக்கு மறைமாவட்ட ஆயர் தலைமை தாங்குவது சிறப்பு ஆகும்.

இத்தகைய கூட்டத்துக்காகக் கொண்டாடப்படும் திருப்பலிக்குமுன் பவனி இருக்குமானால், சூழ்நிலைகளுக்கும் அந்தந்த இடத்தின் பழக்கவழக்கத்துக்கும் ஏற்றவாறு, பவனி எங்குச் சென்று அடைகின்றதோ அக்கோவில் தவிர, வேறு சிறிய கோவிலிலோ வேறு தகுந்த இடத்திலோ நம்பிக்கையாளர் ஒன்றுகூடி வருவர்.

மக்களை வாழ்த்திய பின் அருள்பணியாளர் திருச்சிலுவையின் மறைபொருள் (பக். 1155 – 1156) அல்லது பாவ மன்னிப்பு (பக். 1132 – 1133) அல்லது திரு அவை, குறிப்பாகத் தலத் திரு அவைக்கான (பக். 1071 – 107 2) திருக்குழும் மன்றாட்டுகளுள் ஒன்றையோ மக்கள் மீது மன்றாட்டுகளுள் ஒன்றையோ சொல்கின்றார். பின் திருப்பலி நடைபெறும் கோவில் நோக்கிப் பவனி செல்கின்றது. அப்பொழுது புனிதர்களின் மன்றாட்டுமாலை பாடப்படுகின்றது. பொருத்தமான இடத்தில் பாதுகாவலர் புனிதரையோ அவையை நிறுவிய புனிதரையோ தலத் திரு அவையின் புனிதரையோ மன்றாட்டு மாலையில் சேர்த்துக்கொள்ளலாம்.

பவனி கோவிலை அடைந்ததும், அருள்பணியாளர் பீடத்தை வணங்குகின்றார்; தேவைக்கு ஏற்பத் தூபம் இடுகின்றார். பின் திருப்பலியின் மற்ற தொடக்கச் சடங்குகளை – தேவைக்கு ஏற்ப “ஆண்டவரே, இரக்கமாயிரும்” – தவிர்த்துவிட்டுத் திருப்பலியின் திருக்கும் மன்றாட்டைச் சொல்கின்றார்; அதன்பின் வழக்கம் போலத் திருப்பலி தொடர்கின்றது.

1. திருப்பலிக்குப் பதிலாக, இத்தகைய திருக்கூட்டங்களில் ஏதாவது ஒரு வகையிலான இறைவார்த்தை வழிபாட்டுக் கொண்டாட்டம், குறிப்பாகத் தவக் காலத்துக்காக உரோமைத அருச்சடங்கு நூலில் தரப்பட்டுள்ள பாவத்துயர் வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் வடிவம் இடம் பெறலாம்.

தவக் காலத்தின் வாரநாள்களில், திருப்பலி முடிவில் இறுதி ஆசிக்குமுன், ஒவ்வொரு நாளுக்கும் குறிக்கப்பட்டுள்ள மக்கள்மீது மன்றாட்டு தேவைக்கு ஏற்பப் பய
மன்றாட்டு தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தப்படலாம். +. இக்காலத்தில் மலர்களால் பீடத்தை அணிசெய்ய அனுமதி இல்லை. 3 கருவிகளின் பயன்பாடும் பாடுவதற்குத் துணைபுரிய மட்டுமே அனுமதிக்கப்படும் எனினும், அகமகிழ ஞாயிறு (தவக் காலத்தின் 4-ஆம் ஞாயிறு), பெருவிழாக்கள்) 25 ஆகியன ஒழுங்குமுறையிலிருந்து விதிவிலக்குப் பெறுகின்றன.

==========

திருநீற்றுப் புதன்

கடந்த ஆண்டில் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சாம்பல் இன்றைய திருப்பலியில் புனிதப்படுத்தப்பட்டுப் பூசப்படுகின்றது.


தொடக்கச் சடங்குகளும் வார்த்தை வழிபாடும்

வருகைப் பல்லவி

காண். சாஞா 11:24,25,27 ஆண்டவரே, மனிதர் அனைவர் மீதும் நீர் இரக்கம் காட்டுகின்றீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. மக்கள் மனம் வருந்தும்போது அவர்களுடைய பாவங்களைப் பாராமல் இருக்கின்றீர்; நீர் அவர்களை மன்னிக்கின்றீர். ஏனெனில் நீரே எங்கள் இறைவனாகிய ஆண்டவர்.

பாவத்துயர்ச் செயல் விட்டுவிடப்படும்; அதற்குப் பதிலாகத் திருநீறு பூசுதல் இடம் பெறும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, புனித நோன்புகளின் வழியாகக் கிறிஸ்தவ வாழ்வின் போராட்டத்தைத் தொடங்க எங்களுக்கு உதவியருளும்; அதனால் ஆன்மீகத் தீமைகளுக்கு எதிராக நாங்கள் போரிட்டு, தன்னடக்கத்தின் உதவியால் காக்கப்படுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருநீற்றைப் புனிதப்படுத்துதலும் பூசுதலும்

மறையுரைக்குப்பின் அருள்பணியாளர் நின்றவாறு தம் கைகளைக் குவித்துச் சொல்கின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தந்தையாம் கடவுளை நோக்கிப் பணிவுடன் மன்றாடுவோம். தவத்தின் அடையாளமாக நம் தலைகளின் மீது இடப்படும் திருநீற்றைப் புனிதப்படுத்த அவர் இரக்கம் கொள்வாராக.

அமைதியாகச்சிறிது நேரம் மன்றாடியபின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

இறைவா, எங்கள் தாழ்ச்சியின் பொருட்டு நீர் மனம் இரங்குகின்றீர்; பரிகாரங்களினால் மகிழ்கின்றீர்; பக்தியுள்ள எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும்: திருநீற்றைப் பூசிக்கொள்ளும் உம் அடியார்கள் மீது உமது ஆசியின் X அருளைக் கனிவுடன் பொழிந்தருளும்; அதனால் நாங்கள் தவக் காலத்தின் தவ முயற்சிகளைப் பின்பற்றி உம் திருமகனின் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடவும் தூய்மைப்படுத்தப்பட்ட மனதுடன் வாழவும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

பதில் : ஆமென்.

அல்லது

இறைவா, பாவிகளின் இறப்பை அன்று, மாறாக அவர்களின் மன மாற்றத்தையே விரும்புகின்றீர். எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும். எங்கள் தலைகள் மீது பூசப்பட இருக்கின்ற இச்சாம்பலை உமது பரிவிரக்கத்துக்கு ஏற்பப் X புனிதப்படுத்தத் திருவுளம் கொள்வீராக. அதனால் நாங்கள் சாம்பலாக உள்ளோம் எனவும் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் எனவும் அறிந்துள்ள நாங்கள் ஆர்வமிக்க தவ முயற்சிகளின் பயனாகப் பாவங்களுக்கு மன்னிப்பையும் உயிர்த்தெழும் உம் திருமகனின் சாயலுக்கு ஏற்பப் புது வாழ்வையும் அடைந்திட வலிமை பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.

அருள்பணியாளர் அமைதியாகத் திருநீற்றின்மீது புனித நீரைத் தெளிக்கின்றார். பின்னர் அங்கு இருக்கும் அனைவரும் அவரிடம் வருகின்றனர். அவர் ஒவ்வொருவர் மீதும் திருநீற்றைப் பூசிச் சொல்வது:

மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.

அல்லது

நினைவில் கொள் மனிதா! நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய்.

இந்நேரத்தில் கீழுள்ள பல்லவிகளைப் பாடலாம்.

பல்லவி -1

நம் உடையை மாற்றி, சாம்பலைப் பூசி, கோணியை அணிந்து கொள்வோம். நோன்பிருந்து ஆண்டவர்முன் அழுவோம்; ஏனெனில் நம் இறைவன் மிகுந்த இரக்கத்துடன் நம் பாவங்களை மன்னிக்கின்றார்.

பல்லவி -2

காண். யோவே 2:17; எஸ் 4:17 ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுத வண்ணம் கூறுவார்களாக: “இரக்கம் கொள் ஆண்டவரே, உம் மக்கள் மீது இரக்கம் கொள்ளும்; ஆணடவரே, உம்மைப் புகழ்ந்தேத்தும் வ” ” அடைத்துவிடாதேயும்.”

பல்லவி -3

திபா 50:3 ஆண்டவரே, என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என ஒவ்வோர் அடிக்குப் பின்னும் இப்பல்லவியைப் பாடலாம்.

பதிலுரைப் பாடல் பதில்:

காண். பாரூ 3:2; திபா 78:9

நாம் அறியாமல் செய்த பாவங்களை விலக்கித் திருந்தித் கொள்வோம். ஏனெனில் சாவின் நாள் திடீரென நம்மை எதிர்கொண்டு வந்தால், மனந்திரும்ப நேரம் தேடினாலும் கிடைக்காமல் போகக்கூடும்.

*ஆண்டவரே, எங்களுக்குச் செவிசாய்த்து இரக்கம் காட்டும் ஏனெனில், உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

ம.மொ.. எங்களுக்கு மீட்பு அளிக்கும் இறைவா, எங்களுக்கு உதவி
செய்தருளும்; உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு, ஆண்டவரே, எங்களை விடுவித்தருளும். ஆண்டவரே. . .

பொருத்தமான வேறு பாடலையும் பாடலாம்.

திருநீறு பூசுதல் முடிந்ததும், அருள் பணியாளர் தம் கைகளைக் கழுவுகின்றார். பொது மன்றாட்டைச் சொன்னபின் வழக்கம் போலத் திருப்பலியைத் தொடர்கின்றார். “நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படுவதில்லை.


நற்கருணை வழிபாடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தவக் காலத் தொடக்கமாக அமையும் இப்பலியைச் சிறப்பாக உமக்கு ஒப்புக்கொடுக்க உம்மை வேண்டுகின்றோம்: தவச் செயல்களாலும் பிறரன்புச் செயல்களாலும் நாங்கள் தீய ஆசைகளை அடக்குவோமாக; இவ்வாறு பாவத்திலிருந்து தூய்மை பெற்று, உம் திருமகனின் பாடுகளை ஆர்வமுடன் கொண்டாடத் தகுதி உள்ளவர்களாகத் திகழ்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தவக் காலத்தின் தொடக்கவுரை II அல்லது IV (பக். 525 – 526).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 1:2-3 ஆண்டவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் உரிய காலத்தில் அதன் கனி தருவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, இத்திருவிருந்து எங்களுக்கு உதவ வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நோன்புகள் உமக்கு ஏற்புடையனவாகி நாங்கள் நலம் அடைய உதவுவனவாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு

பிரியாவிடையை முன்னிட்டு அருள்பணியாளர் மக்களை நோக்கி, தம் கைகளை இம்மன்றாட்டைச் சொல்கின்றார்:

இறைவா, மாண்புக்கு உரிய உம் திருமுன் தலைவணங்குபவர்களுக்கு, ஆழமான மனத்துயரைக் கனிவுடன் தந்தருளும்; தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பரிசுகளைத் தவம் புரிவோர் இரக்கத்துடன் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

திருப்பலிக்குப் புறம்பே திருநீற்றைப் புனிதப்படுத்திப் பூசலாம். வசதி போல, முதலில் வருகைப் பல்லவி, திருக்குழும மன்றாட்டு, வாசகங்கள், பொருத்தமான பாடல்கள் ஆகியவற்றைத் திருப்பலியில் உள்ளவாறு அதற்குப் பயன்படுத்தலாம். பின்னர் மறையுரையும் திருநீற்றைப் புனிதப்படுத்தி, அதைப் பூசுதலும் நடைபெறும். பொது மன்றாட்டு, ஆசி, நம்பிக்கையாளரின் பிரியாவிடை ஆகியவற்றோடு சடங்கு முடிவுறும்.

==========

திருநீற்றுப் புதனுக்குப்பின் வரும் வியாழன்

வருகைப் பல்லவி

காண். திபா 54:17-20,23 என்னை நெருக்குவோரிடையே நான் ஆண்டவரைக் கூவி அழைத்தபோது, அவர் என் குரலைக் கேட்டார், பாதுகாத்தார்; ஆண்டவர்மேல் உன்
கவலையைச் சுமத்திவிடு : அவர் உனக்கு உணவூட்டுவார்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, எங்கள் தவச் செயல்கள் உம்மை நோக்கிய வண்ணம் இருக்கவும் அவற்றை நாங்கள் தொடர்ந்து ஆற்றவும் எங்களுக்கு உதவியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எப்பொழுதும் உம்மிடமிருந்து தொடங்கும் எங்கள் செயல்கள் அனைத்தும் உம் வழியாகவே நிறைவு பெறுவனவாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனிதப் பீடத்தின்முன் நாங்கள் கொண்டு வந்துள்ள பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நீர் எங்களுக்கு இரக்கம் காட்டுவதன் வழியாக அவை உமது பெயருக்கு மேன்மை அளிப்பனவாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 50:12
கடவுளே, தூயதோர் உள்ளத்தை என்னில் படைத்தருளும்;
நேர்மையான உள்ளத்தை என்னுள்ளே புதுப்பித்தருளும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, விண்ணகக் கொடையின் ஆசியால் நிறைவு பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது ஆசி என்றும் எங்களுக்கு இரக்கம், மீட்பு ஆகியவற்றின் ஊற்றாய் இருப்பதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

எல்லாம் வல்ல இறைவா, உம் மக்களுக்கு நிலைவாழ்வின் வழிகளை அறிவித்தீரே; அதனால் அவற்றின் வழியாக நிறை ஒளியாகிய உம்மிடம் அவர்கள் வந்து சேர்ந்திட உம்மை வேண்டுகின்றோம். எங்கள்.

* இறுதி ஆசி வழங்குமுன் விருப்பமானால், மக்கள்மீது மன்றாட்டைச் சொல்லலாம்.

==========

திருநீற்றுப் புதனுக்குப்பின் வரும் வெள்ளி

வருகைப் பல்லவி

திபா 29:11 ஆண்டவர் செவிசாய்த்து, என் மீது இரக்கம் கொண்டார். ஆண்டவர் எனக்குத் துணையாளர் ஆனார்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, நாங்கள் தொடங்கி இருக்கும் தவ முயற்சிகளைத் தொடர்ந்து கடைப்பிடித்திடக் கனிவுடன் துணை புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உடலளவில் மேற்கொள்ளும் தவ முயற்சிகளை நேர்மையான மனதுடன் நிறைவேற்றுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தவக் காலத்தில் நாங்கள் மேற்கொள்ளும் தியாகத்தை உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மை வேண்டுகின்றோம்: அது எங்கள் மனங்களை உமக்கு ஏற்றவையாக மாற்றி மிகுந்த ஆர்வத்துடன் நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்தி வாழ எங்களுக்கு ஆற்றல் அளிப்பதாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

திபா 24:4 ஆண்டவரே, எங்களுக்கு உம் பாதைகளைக் காட்டும். உம் வழிகளை
எங்களுக்குக் கற்பித்தருளும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, இம்மறைநிகழ்வில் பங்கேற்பதன் வழியாக நாங்கள் குற்றங்கள் அனைத்திலிருந்தும் தூய்மை பெற உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பரிவிரக்கத்தின் பயன்களை அடைய நாங்கள் தகுதி பெறுவோமாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

இரக்கமுள்ள இறைவா, உம் அரும்பெரும் செயல்களுக்காக உம் மக்கள் உமக்குத் தொடர்ந்து நன்றி செலுத்துவார்களாக; பயணம் செய்யும் அவர்கள் வழக்கமான தவக் கால முயற்சிகளை நினைவுகூர்ந்து உமது முடிவில்லா விண்ணகக் காட்சியைக் காண வந்து சேர? தகுதி பெறுவார்களாக. எங்கள்.

==========

திருநீற்றுப் புதனுக்குப்பின் வரும் சனி

வருகைப் பல்லவி

ஆண்டவரே! எங்களுக்குச் செவிசாயும்; ஏனெனில், உமது இரக்கம்
காண். திபா 68:17 கனிவு மிக்கது : ஆண்டவரே, உமது இரக்கப் பெருக்கத்தை
முன்னிட்டு எங்களைக் கண்ணோக்கும்.

திருக்குழும மன்றாட்டு :

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் வலுவின்மையை இரக்கத்துடன் கண்ணோக்கியருளும்; மாட்சிக்கு உரிய உமது வலக் கையை நீட்டி எங்களைப் பாதுகாத்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்புகழ்ச்சிப் பலியை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தூய்மை அடைந்து உமக்கு மிகவும் ஏற்புடைய எங்கள் மனதைக் காணிக்கையாக்குவோமாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை (பக். 5 23 – 526).

திருவிருந்துப் பல்லவி :

மத் 9:13 பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன். ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்,
என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக வாழ்வின் கொடைகளால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இம்மையில் நாங்கள் கொண்டாடும் மறைநிகழ்வுகள் எங்கள் நிலைவாழ்வுக்கு உதவுவனவாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, தூய மறைநிகழ்வுகளை நெருங்கி வந்துள்ள உம் மக்களோடு கனிவுடன் இருந்தருளும்; இவ்வாறு உமது பராமரிப்பில் நம்பிக்கை வைப்போரை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக. எங்கள்.

==========

தவக்கால முதல் ஞாயிறு

பாஸ்கா திருவிழிப்பில் கிறிஸ்தவப் புகுமுக அருளடையாளங்களைப் பெற இருக்கின்ற புகுமுகநிலையினரின் “தேர்ந்தெடுப்பு அல்லது பெயர்ப் பதிவுத் திருச்சடங்கு அதற்கு உரிய மன்றாட்டுகளோடும் விண் ணப்பங்களோடும் இந்த ஞாயிறு கொண்டாடப்படலாம் (பக். 961 – 962).

வருகைப் பல்லவி

காண். திபா 90:15-16 : என்னைக் கூவி அழைப்பவருக்கு நான் செவிசாய்ப்பேன்; அவரை விடுவித்துப் பெருமைப் படுத்துவேன். நீடிய ஆயுளால் அவருக்கு
நிறைவளிப்பேன்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, ஆண்டுதோறும் நாங்கள் கடைப்பிடிக்கும் தவக் கால அருளடையாளச் செயல்களால் கிறிஸ்துவின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்வதில் முன்னேற எங்களுக்கு உதவியருளும்; அதனால் அவற்றின் பயன்களை எங்கள் நன்னடத்தையால் அடைவோமாக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்து புனிதமிக்க அருளடையாளக் கொண்டாட்டத்தைத் தொடங்குகின்றோம்; இவற்றைத் தகுந்த முறையில் ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

தொடக்கவுரை: ஆண்டவரின் சோதனை.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து நாற்பது நாள்கள் இவ்வுலக உணவைத் தவிர்த்து,
உண்ணா நோன்புக்கு உருக்கொடுத்து அதைப் புனிதப்படுத்தினார்;
மேலும் தொடக்கத்தில் தோன்றிய
பாம்பின் மாயக் கவர்ச்சிகள் அனைத்தையும் அவர் தோற்கடித்து,
தீமையின் ஆட்சி மீது வெற்றிகொள்ள எங்களுக்குக் கற்பித்தார்.
அதனால் பாஸ்கா மறைநிகழ்வைத் தகுதியான மனதோடு கொண்டாடி
இறுதியாக முடிவில்லாப் பாஸ்காவுக்குக் கடந்து செல்வோமாக.

ஆகவே வானதூதர் அணிகளோடும்
புனிதரின் பெருந்திரளோடும் நாங்கள் சேர்ந்து,
உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,
முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி :

மத் 4:4
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாயினின்று புறப்படும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்கிறார்.

அல்லது

காண். திபா 90:4
ஆண்டவர் தம் தோள் வலிமையினால் உம்மைப் பாதுகாப்பார்;
அவருடைய இறக்கைகளின்கீழ் நீர் தஞ்சம் அடைவீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, புத்துயிர் தரும் விண்ணக உணவினால் எங்கள் நம்பிக்கை ஊட்டம் பெறவும் எதிர்நோக்கு வளரவும் அன்பு உறுதி அடையவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உயிருள்ள, உண்மையான உணவாம் கிறிஸ்துவை நாங்கள் ஆர்வத்துடன் நாடக் கற்றுக்கொள்வதோடு உமது வாயினின்று புறப்படும் எல்லா வார்த்தைகளாலும் வாழ்ந்திட ஆற்றல் பெறுவோமாக.

எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் மக்கள் மீது நிறைவான ஆசி இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் துன்பத்தில் நம்பிக்கை வளர்வதாக; சோதனையில் நற்பண்பு உறுதி பெறுவதாக; நிலையான மீட்பு அருளப்படுவதாக. எங்கள்.

==========

தவக்கால முதல் வாரம் திங்கள்

வருகைப் பல்லவி

காண். திபா 122:2-3 ஊழியர்களின் கண்கள் தங்கள் தலைவர்களின் கைகளை நோட்டு இருப்பது போல, நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் எங்கள் – வளம் ஆண்டவருமான உம்மையே நோக்கி இருக்கும். எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, எங்கள் மீட்பரே, எங்களை மனந்திருப்பியருளும்; இவ்வாறு விண்ணக நெறியை நாங்கள் கற்றுக்கொள்வதால் தவ முயற்சி எங்களுக்குப் பயன் அளிப்பதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாய் இருப்பதாக; உமது ஆற்றலால் இது எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி எங்களுக்கு உமது இரக்கமுள்ள மன்னிப்பைப் பெற்றுத் தருவதாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை (பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

மத் 25:40, 34 “என் சின்னஞ் சிறியவர்களில் ஒருவருக்கு இதை நீங்கள் செய்தபோது எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்”, என்கிறார் ஆண்டவர். “என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங் களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.”

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது அருளடையாளத்தைப் பெற்றுக்கொண்டதால் எங்கள் மனதுக்கும் உடலுக்குமான உதவியைக் கண்டுணர் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனதிலும் உடலிலும் மீட்பு அடைந்து விணணக உதவியின் முழுமையால் மாட்சி அடைவோமாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் மக்களின் மனங்களை உமது மாட்சியின் சுடரால் ஒளிர்விக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் செய்ய வேண்டியவற்றைக் கண்டுணர்ந்து, சரியானவற்றைச் செய்ய வலிமை பெறுவார்களாக. எங்கள்.

==========

தவக்கால முதல் வாரம் செவ்வாய்

வருகைப் பல்லவி

ஆண்டவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம். ஊழி
காண். திபா 33:1-2 ஊழிக்காலமாய் உள்ளவர் நீரே.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது குடும்பத்தைக் கண்ணோக்கி அதற்கு உதவியருளும்; உடல் ஒறுத்தலால் எங்கள் மனங்கள் தூய்மை அடைந்து உம்மீது கொள்ளும் ஆவலால் சுடர்விடச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

அனைத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவா, உமது மிகுதியான நன்மையிலிருந்து நாங்கள் கொண்டுவருவதை ஏற்றருளும்; நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள இவ்வுலகக் கொடைகளை நிலைவாழ்வுக்கு ஏற்றவையாக மாற்றியருள்வீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை (பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 4:2 எனக்கு நீதி அருள் கின்ற கடவுளே, நான் கூவி அழைத்தபோது எனக்குச் செவிசாய்த்தீர். இடுக்கண் உற்றபோது, எனக்குத் துணை புரிந்தீர்: ஆண்டவரே, என்மேல் மனம் இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, இம்மறைநிகழ்வுகளில் பங்குபெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வுலக ஆசைகளை நாங்கள் கட்டுப்படுத்தி விண்ணுலகு சார்ந்தவற்றை அன்பு செய்யக் கற்றுக்கொள்வோமாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

இறைவா, உம்மீது நம்பிக்கை கொண்டோர் உமது ஆசியால் உறுதிப்படுத்தப்படுவார்களாக; துயரத்தில் ஆறுதலாகவும் துன்பத்தில் துணையாகவும் ஆபத்தில் உதவியாகவும் நீர் அவர்களுக்கு இருப்பீராக. எங்கள்.

==========

தவக்கால முதல் வாரம் புதன்

வருகைப் பல்லவி

காண். திபா 24:6,2,22 ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினைந்தருளும்; எங்கள் பகைவர்கள் எங்களை ஒருபோதும் அடக்கி ஆள விடாதேயும். இஸ்ரயேலின் கட எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உம் மக்களின் இறைப்பற்றைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: தவ முயற்சியால் தங்கள் உடலை அடக்கி ஆளும் அவர்கள் நற்செயலின் பயனால் தங்கள் மனதைப் புதுப்பித்துக் கொள்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திருப்பெயருக்கு ஒப்புக்கொடுக்குமாறு நீர் கொடுத்தவற்றையே நாங்கள் உமக்குக் காணிக்கையாக்குகின்றோம்; அதனால் நீர் இவற்றை எங்களுக்கு அருளடையாளமாக மாற்றுவது போல இவை எங்களுக்கு நிலையான அருமருந்தாக விளங்கிடவும் செய்வீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை (பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 5:12
ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் மகிழ்வுறுவார்களாக. எந்நாளும் அவர்கள் அக்களிப்பார்களாக. நீர் அவர்களிடையே குடி கொள்வீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இறைவா, உம் அருளடையாளங்களால் எங்களுக்கு ஊட்டம் அளிக்க நீர் தவறுவதில்லை; இவை அளிக்கும் புத்துணர்வு எங்களுக்கு நிலைவாழ்வை வழங்கிட அருள்புரிவீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் மக்களைக் காத்தருளும்; ஏனெனில் எத்தீங்கும் அவர்கள்மேல் ஆட்சி செலுத்தாதவாறும் எவ்வித இடரும் அவர்களைத் துன்புறுத்தாதவாறும் பாவங்கள் அனைத்திலிருந்தும் அவர்களைக் கனிவுடன் தூய்மையாக்குவீராக. எங்கள்.

==========

தவக்கால முதல் வாரம் வியாழன்

வருகைப் பல்லவி

ஆண்டவரே, என் விண்ணப்பங் களுக்குச் செவிசாய்த்தருளும்;
காண். திபா 5:2-3 என் புலம்பலைக் கவனித்தருளும். என் அரசரே, என் கடவுளே,
என் கூக்குரலைக் கேட்டருளும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, என்றும் நேர்மையானதையே நினைத்து அதையே உடனடியாகச் செயல்படுத்தும் உள்ளத்தை எங்களுக்குத் தந்தருள் உம்மை வேண்டுகின்றோம்: உம்மாலன்றி உயிர் வாழ இயலாத நாங்கள் உமக்கு ஏற்ப வாழ ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மைக் கெஞ்சி மன்றாடுவோர் மீது இரக்கமாயிரும்; உம் மக்களின் காணிக்கைகளையும் வேண்டல்களையும் ஏற்று, எங்கள் அனைவரின் உள்ளங்களையும் உம்மிடம் திருப்புவீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

மத் 7:8 கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடு வோர்
கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே எங்கள் இறைவா, எங்கள் மனந்திரும்புதலின் அரணாக புனிதமிக்க இம்மறைநிகழ்வுகள் விளங்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இக்காலத்திலும் வருங்காலத்திலும் இவற்றை எங்களுக்கு அருமருந்தாய் ஆக்குவீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம்மைக் கெஞ்சி மன்றாடுவோருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இரக்கம் வந்து சேர்வதாக; அவர்கள் விண்ணகச் செல்வங்களைப் பெற்றுக்கொள்வதால் சரியானதைக் கேட்கத் தெரிந்து கொள்ளவும் கேட்டதைப் பெற்றுக்கொள்ளவும் அருள்வீராக. எங்கள்.

==========

தவக்கால முதல் வாரம் வெள்ளி

வருகைப் பல்லவி

காண். திபா 24:17-18 ஆண்டவரே, என் கவலைகளிலிருந்து என்னைக் காத்தரும் என் காம்மையை யும் சுமையையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டோர் பாஸ்காவைத் தகுந்த முறையில் கொண்டாட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் ஆர்வமுடன் ஏற்றுக்கொண்ட உடலின் தன்னடக்கம் அனைவரின் ஆன்மாக்களுக்கும் பயன் அளிப்பதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிப்பொருள்களால் எங்களை உம்மோடு ஒப்புரவாக்கவும் உமது ஆற்றல்மிக்க பரிவிரக்கத்தால் எங்களுக்கு மீண்டும் மீட்பு அளிக்கவும் நீர் திருவுளமானீரே; அதனால் இவற்றை நீர் கனிவுடன் ஏற்றருள்வீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

எசே 33:11 நான் வாழ்கிறேன் என்கிறார் ஆண்டவர். பாவியின் சாவை நான்
விரும்பவில்லை; மாறாக அவர் மனம் திரும்பட்டும்; வாழட்டும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது அருளடையாளத்தின் புனிதமான உணவு எங்களுக்குப் புத்துயிர் அளிப்பதாக; பழைய பாவ நிலையிலிருந்து தூய்மை பெற்று மீட்பு அளிக்கும் மறைநிகழ்வின் பங்கேற்பாளர்களாக அது எங்களை மாற்றுவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் மக்களை இரக்கத்துடன் கண்ணோக்கியருளும்; அதனால் அவர்கள் கடைப்பிடிக்கும் தவ முயற்சிகள் புற வாழ்வுக்குப் பயன் அளிப்பது போல அவர்களின் அக வாழ்விலும் செயல்படுவனவாக. எங்கள்.

==========

தவக்கால முதல் வாரம்

வருகைப் பல்லவி

ஆண்டவரின் சட்டம் நேரிய து ; ஆன்மாக்களுக்கு மீட்பு அளிக்கும்.
காண். திபா 18:8 ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பகமானது ; சிறியோருக்கு அது
ஞானம் அளிப்பது.

திருக்குழும மன்றாட்டு :

என்றுமுள்ள தந்தையே, எங்கள் இதயங்களை உம்பால் திருப்பியருளும்; அதனால் நாங்கள் என்றும் தேவையான ஒன்றை மட்டுமே நாடி பிறரன்புச் செயல்களை ஆற்றி, உம்முடைய வழிபாட்டுக்கு எங்களையே அர்ப்பணித்தவர்களாய் வாழ அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்புனிதமான மறைநிகழ்வுகள் எங்களைப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை உமது கொடைக்கு எங்களைத் தகுதி உள்ளவர்களாய் மாற்றுவனவாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை (பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

மத் 5:48 உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல
நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது மறைநிகழ்வால் நீர் புதுப்பிக்கும் எங்களை முடிவில்லா ஆதரவால் தொடர்ந்து காத்தருள்வீராக; விண்ணகப் படிப்பினைகளால் நீரே நிரப்பியவர்களோடு உமது மீட்பு அளிக்கும் ஆதரவால் உடனிருப்பீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

இறைவா, உம்மீது நம்பிக்கை கொண்டோரை அவர்கள் விரும்பும் ஆசி உறுதிப்படுத்துவதாக; இவ்வாறு அது உமது திருவுளத்திலிருந்து அவர்களை என்றும் விலகிடாது காத்து உம் நற்கொடைகளால் அவர்கள் எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்கச் செய்வதாக. எங்கள்.

==========

தவக்கால 2-ஆம் ஞாயிறுவருகைப் பல்லவி

காண். திபா 26:8-9 வருகைப் பல்லவி என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; உமது
பார்க்க விரும்பினேன்; ஆண்டவரே, உமது முகத்தை முகத்தைப் பார்க்க விரும்பினேன்; அண்ட என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.

காண். திபா 24:6,2,22 அல்லது ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினை ந்தருளும்; எ ங் கள் பகைவர்கள் எ ங் களை ஒருபோதும் அடக்கி ஆள விடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே, எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, உம் அன்புத் திருமகனுக்கு நாங்கள் செவிசாய்க்க எங்களுக்குக் கட்டளையிட்டு உமது வார்த்தையினால் எங்கள் உள்ளத்துக்கு ஊட்டம் அளிக்கத் திருவுளம் கொண்டீரே; அகவொளியால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு உமது மாட்சியைக் கண்டு மகிழ்வோமாக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிப்போக்க உம்மை வேண்டுகின்றோம்: பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு, உம்மீது நம்பிக்கை கொண்டோரின் உடல்களையும் மனங்களையும் அது புனிதப்படுத்துவதாக. எங்கள்.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து தமது சாவைச் சீடர்களுக்கு முன்னறிவித்து,
புனித மலையில் தமது பேரொளியை வெளிப்படுத்தினார்.
அதனால் சட்டமும் இறைவாக்குகளும் சான்று பகர்ந்தவாறு
தம் பாடுகள் வழியாகவே உயிர்ப்பின் மாட்சிக்குத் தாம் வந்து சேர வேண்டும் என்பதை அவர் விளங்கச் செய்தார்.

ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி :

மத் 17:5 என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான்
பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் நாங்கள் ஏற்கெனவே விண்ணுலக வாழ்வில் பங்குபெற அருள்கூர்ந்தீர்; மாட்சிக்கு உரிய மறைநிகழ்வுகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமக்குச் செலுத்தும் நிறை நன்றியை ஏற்றுக்கொள்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோரை முடிவில்லா ஆசியால் புனிதப்படுத்தி உம் ஒரே திருமகனின் நற்செய்தியைக் கடைப்பிடிக்கச் செய்தருளும்; அதனால் அவர் தம் திருத்தூதர்களுக்குத் தம்மில் வெளிப்படுத்திய அந்த மாட்சிமீது அவர்கள் என்றும் ஆர்வம் கொள்ளவும் அதை மகிழ்வோடு வந்தடையவும் தகுதி பெறுவார்களாக, எங்கள்.

==========

தவக்கால இரண்டாம் வாரம் திங்கள்

வருகைப் பல்லவி

காண். திபா 25:1-12 ஆண்டவரே, என்னை மீட்டருளும், என்மேல் இரக்கமாயிரும்; எனெனில் என் கால்கள் நேர் வழியில் நிற்கின்றன; திரு அவையில்
ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, எங்கள் ஆன்மாக்களின் நலனுக்காக உடலை ஒறுக்கக் கற்பித்தீரே; அதனால் நாங்கள் பாவங்கள் அனைத்தையும் விட்டு விலகவும் பரிவிரக்கத்துடன் நீர் தந்த உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் எங்கள் இதயங்களுக்கு ஆற்றல் தருவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் ஏற்றருளும்; விண்ணக மறைநிகழ்வுகளுக்கு ஊழியம் புரிய நீர் அழைத்தவர்கள் இவ்வுலகக் கவர்ச்சியிலிருந்து விடுதலை பெறச் செய்வீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).
லூக் 6:36

திருவிருந்துப் பல்லவி :

உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நீங்களும்
இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே,
இத்திரு உணவு எங்களைப் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்துவதாக; அதனால் அது விண்ணக மகிழ்ச்சிக்கு எங்களை உரிமையாளர்கள் ஆக்குவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோரின் இதயங்களை உறுதிப்படுதல் உமது அருளின் ஆற்றலால் அவர்களை வலுப்படுத்தியருள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் உம்மை நோக்கி எழுப்பும் வேண்டல்களில் பற்றன்பு உடையோராகவும் பிறரன்பில் நேர்மையுள்ளோராகவும் இருப்பார்களாக. எங்கள்.

==========

தவக்கால இரண்டாம் வாரம் செவ்வாய்

வருகைப் பல்லவி

காண் . திபா 12:4-5 என் விழிகளுக்கு ஒளியூட்டு ம்; நான் சாவில் என்றும் உறங்காதிருப்பேனாக. அவனை மேற்கொண்டேன் என்று என் எதிரி
என்றும் சொல்லாதிருப்பானாக.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது திரு அவையை முடிவில்லாப் பேரிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் உம்மால் அன்றிச் சாவுக்கு உரிய மனித இனம் வீழ்ச்சியுறும்; அது என்றும் உம் உதவிகளால் தீமைகளிலிருந்து விடுவிக்கப்படவும் மீட்புக்கு உரியவற்றுக்கு இட்டுச்செல்லப்படவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இம்மறை நிகழ்வுகளின் வழியாக உமது தூய்மைப்படுத்தும் பணியை எங்களில் செயல்படுத்த நீர் திருவுளம் கொண்டீரே; இது எங்களை இவ்வுலகத் தவறுகளிலிருந்து விடுவித்து விண்ணகக் கொடைகளுக்கு இட்டுச்செல்வதாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

திபா 9:2-3
வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். உம்மில் அகமகிழ்ந்து அக்களிப்பேன். உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, புனித உணவு தரும் புத்துணர்வு எங்களுக்குப் பக்தியுள்ள நடத்தையில் முன்னேற்றத்தைத் தந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அது ஒப்புரவுக்கான உமது இடைவிடா உதவியையும் எங்களுக்கு அருள்வதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோரின் வேண்டல்களுக்குச் செவிசாய்த்து, அவர்களுடைய ஆன்மாக்களின் சோர்வுகளை நீக்கியருளும்; அதனால் அவர்கள் உமது மன்னிப்பைப் பெற்று என்றும் உமது அசியில் மகிழ்வார்களாக. எங்கள்.

==========

தவக்கால இரண்டாம் வாரம் புதன்

வருகைப் பல்லவி

காண். திபா 37:22-23 ஆண்வரே. என் கடவுளே, என னைக் கைவிடாதேயும்; ஆண்டவரே, என் கடவரே என்னிடமிருந்து அகன்று விடாதேயும். ஆண்டவரே! என் மீட்பின் ஆற்றலே எனக்குத் துணை புரிய வாரும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, நற்செயல்களால் என்றும் பயிற்சி பெற்ற உமது குடும்பத்தைக் காத்தருளும்; இவ்வாறு அன்றாட உதவிகளால் ஆறுதல் அளித்து விண்ணகக் கொடைகளுக்கு அவர்களைக் கனிவுடன் இட்டுச்செல்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இப்பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இப்புனிதப் பரிமாற்றத்தால் எங்களைப் பாவத் தளைகளிலிருந்து விடுவிப்பீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

மத் 20:28
மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும்பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, இத்திருவிருந்து எங்களுக்கு நிலைவாழ்வின் அச்சாரமாக இருக்கத் திருவுளமானீரே; அதனால் நாங்கள் நிலையான மீட்புக்கு வந்து சேர் எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் அடியார்களுக்குப் பாதுகாப்பையும் அருளையும் மிகுதியாகத் தந்து அவர்கள் மனதுக்கும் உடலுக்கும் மீட்பையும் சகோதரத்துவ அன்பில் நிறைவையும் வழங்கும்; இவ்வாறு அவர்கள் என்றும் உம்மீது பற்றன்பு உடையவர்களாய் இருக்கச் செய்வீராக. எங்கள்.

==========

தவக்கால இரண்டாம், வாரம் வியாழன்

வருகைப் பல்லவி

காண். திபா 138:23-24 இறைவா! என்னை ஆய்ந்து அறியும், என் எண்ணங்களைச் சோதித்துப் பாரும். தீய வழிகள் என்னிடம் உள்ளனவா எனப் பாரும்; என்றுமுள்ள வழியில் என்னை நடத்தியருளும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, மாசின்மையை மீண்டும் தருபவரும் அதை அன்பு செய்பவருமானவரே, உம் ஊழியர்களின் இதயங்களை உம்மிடம் திருப்பியருளும்: அதனால் அவர்கள் உம் ஆவியார் மீது உள்ள பற்றினால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கையில் உறுதி மிக்கவர்களாகவும் செயலில் ஆற்றல்மிக்கவர்களாகவும் திகழச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியினால் எங்கள் தவக் கால முயற்சியைப் புனிதப்படுத்தியருளும்; அதனால் நாங்கள் புற வாழ்வில் கடைப்பிடிக்கும் தவக் கால முயற்சிகள் எங்கள் அக வாழ்விலும் பயனுள்ள வகையில் செயல்படுவனவாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

திபா 118:1 ஆண்டவர் சட்டப்படி மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இறைவா, இத்தியாகப் பலி எங்களில் செயலாக்கத்துடன் நிலைத்திருப்பதாக; இது ஆற்றலுடன் எங்களை உறுதிப்படுத்த அருள்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உமது அருளின் உதவியைக் கெஞ்சி மன்றாடும் உம் அடியார்களுடன் தங்கியருளும்; அதனால் அவர்கள் உமது பாதுகாப்பின் ஆதரவையும் வழித்துணையையும் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

==========

தவக்கால இரண்டாம் வாரம் வெள்ளி
காண். தியா 30:25

வருகைப் பல்லவி

அண்டவரே, உம்மில் நம்பிக்கை கொண்டேன்; நான் வருமோ வெட்கம் அடைய விடாதேயும்; எனவே அவர்கள் வைக்க கண்ணியினின்று என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என்
அடைக்கலம்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் ஆர்வமுடன் கடைப்பிடிக்கும் தவ முயற்சிகள் எங்களைத் தூய்மையாக்கிப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் வரவிருக்கும் புனித நிகழ்வுகளுக்கு நேர்மையான மனதோடு நாங்கள் வந்து சேரச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இம்மறைநிகழ்வுகளைத் தகுதியுடன் கொண்டாட உம் அடியார்களை உமது இரக்கத்தால் தயாரிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இறைப்பற்றுள்ள வாழ்வினால் அவர்களை வழிநடத்துவீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

1யோவா 4:10
கடவுள் நம் மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையான மீட்பின் அச்சாரத்தைப் பெற்றுக்கொண்ட நாங்கள் அதைத் தகுந்த முறையில் நாடச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் அம்மீட்பைக் கண்டடையச் செய்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் மக்களின் மனதுக்கும் உடலுக்கும் மீட்பைத் தந்தருள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் நற்செயல்களில் ஈடுபாடு கொண்டு உமது பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள என்றும் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

==========

தவக்கால இரண்டாம் வாரம் சனி

வருகைப் பல்லவி

ஆண்டவர் இரக்கமும் பேரன்பும் உடையவர்; பொறுமையும்
திபா 144:8-9 பேரிரக்கமும் கொண்டவர்; ஆண்டவர் எல்லாருக்கும் இனிமையானவர்; தம் படைப்புகள் அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, மாட்சிமிக்க உதவியால் இதுவரை நீர் காத்துவரும் எங்களை விண்ணகக் கொடைகளின் உரிமையாளர்களாக இருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவ்வுலக வாழ்வில் நீர் எங்களை ஆண்டு நடத்தி ஒளியான உம்மிடமே அழைத்துச் செல்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிப்பொருள்கள் வழியாக மீட்பின் பயன் எங்களுக்குக் கிடைக்க உம்மை வேண்டுகின்றோம்: அளவுக்கு மீறிய மனித நாட்டங்களிலிருந்து அது எங்களை விடுவித்து மீட்பு அளிக்கும் கொடைகளுக்கு எங்களை இட்டுச்செல்வதாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

லூக் 15:32
மகனே, நீ மகிழ்ந்து இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.
காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட உமது புனித உணவு எங்கள் இதயத்தின் ஆழத்தை ஊடுருவி நிரப்புவதாக; நாங்கள் இந்த அருளடையாளத்தில் ஆற்றலுடன் பங்கேற்க அருள்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம்மை வேண்டுவோரின் மன்றாட்டுகளுக்கு நீர் இரக்கமுடன் செவிசாய்ப்பீராக: கேட்பவர்களுக்கு அவர்கள் விரும்புவதைத் தந்தருளும்; அதனால் அவர்கள் உமக்கு விருப்பமானதையே கேட்கச் செய்வீராக எங்கள்.

==========

தவக்கால 3-ஆம் ஞாயிறு


கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்நாளுக்கு உரிய மன்றாட்டுகளையும் பரிந்துரைகளையும் பயன் படுத்தி, பாஸ்கா திருவிழிப்பில் கிறிஸ்தவப் புகுமுக அருளடையாளங்களுக்கு அனுமதிக்கப்பட உள்ள புகுமுகநிலையினரின் திருமுழுக்கிற்கான தயாரிப்பின் முதல் அக். இந்த ஞாயிறு கொண்டாடப்படுகின்றது (பக். 963 – 964).

வருகைப் பல்லவி

காண். திபா 24:15-16 என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன, ஏனெனில் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஆதரவற்றவன்; ஏழை.

காண். எசே 36:23-26 அல்லது நான் உங்களில் என் தூய்மையை நிலை நாட்டும்போது பல நாடுகளிலிருந்து உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் நீங்கள் தூய்மையாவீர்கள். புதிய ஆவியை உங்களுக்குக்
கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, இரக்கப் பெருக்கத்துக்கும் முழுமையான நன்மைக்கும் காரணரே, பாவிகளின் உண்ணா நோன்புகள், இறைவேண்டல்கள், இரக்கச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்குகின்றீர்; எங்களது தாழ்ச்சிமிக்க பாவ அறிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கி மனச்சான்றினால் நொறுங்குண்ட எங்கள் உள்ளங்களை உமது இரக்கத்தால் என்றும் உயர்த்துவீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிகளால் மன நிறைவு அடைந்து எங்களுக்கு அருள்புரிவீராக; எங்கள் குற்றங்களிலிருந்து எங்களை மன்னிக்க வேண்டுகின்ற நாங்க பிறருடைய குற்றங்களை மன்னிக்க முயல்வோமாக. எங்கள்.

சமாரியப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படாதபோது, தவக்காலம் 1 அல்லது 11 (பக். 523 – 524) பயன்படுத்தப்படும்.

தொடக்கவுரை: சமாரியப் பெண்.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

தமக்குத் தண்ணீர் தருமாறு சமாரியப் பெண்ணிடம் கேட்ட நேரத்திலேயே
கிறிஸ்து அப்பெண்ணுக்கு நம்பிக்கை எனும் கொடையை வழங்கினார்.
அவ்வாறு அப்பெண்ணின் நம்பிக்கையின் மீது பெரிதும் ஆர்வம் கொண்டதால்
அவரில் இறையன்பின் நெருப்பைப் பற்றியெரியச் செய்தார்.

ஆகவே நாங்களும் உமக்கு நன்றி செலுத்தி
உமது வல்லமையை வானதூதர்களோடு
புகழ்ந்து ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி :

சமாரியப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

காண். யோவா 4:13-14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவர் நிலைவாழ்வு அடைய அவருக்குள் பொங்கும் நீரூற்று எழும், என்கிறார் ஆண்டவர்.

ஷஅல்லது வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:

காண். திபா 83:4-5 படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக் குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணகத்தில் உள்ள மறைபொருள்களின் அச்சாரத்தையும் இவ்வுலகில் ஏற்கெனவே விண்ணக உணவால் வளமையையும் பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் மறைபொருளாக எங்களில் திகழ்வது செயலளவிலும் நிறைவு பெறுவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் இதயங்களை ஆண்டருள உம்மை வேண்டுகின்றோம்: உம் ஊழியர்களுக்குக் கனிவுடன் இந்த அருளை வழங்குவதால் உம் அன்பிலும் பிறரன்பிலும் நிலைத்திருந்து அவர்கள் உம் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவார்களாக. எங்கள்.

==========

தவக்கால மூன்றாம் வாரம் திங்கள்

வருகைப் பல்லவி

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித்
திபா 83:3 தவிக்கின்றது. என் இதயமும் உடலும் வாழும் இறைவனில் அக்களிக்கின்றது.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, இடைவிடாத உமது இரக்கம் உமது திரு அவையைத் தூய்மைப்படுத்திக் காப்பதாக; ஏனெனில் உம்மால் அன்றித் திரு அவை பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதால் உமது கொடையினால் அது என்றும் ஆளப்படுவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் பணிகளின் காணிக்கையாக நாங்கள் இக்காணிக்கையை உமக்கு அளிக்கின்றோம்; இதை நீர் எங்களுக்கு மீட்பு அளிக்கும் அருளடையாளமாக நிறைவுறச் செய்வீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

திபா 116:1,2 மக்களினத்தாரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள்!
ஏனெனில் நம்மீது அவரது இரக்கம் நிலையாய் உள்ளது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: உமது திருவிருந்தில் நாங்கள் பங்கேற்பது எங்களுக்குத் தூய்மை அளித்து, ஒற்றுமையையும் வழங்குவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, மன்றாடும் மக்களை உமது வலக் கை காக்கவும் தூய்மை பெற்ற மக்களுக்குக் கனிவுடன் கற்பிக்கவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நிகழ்கால ஆறுதலோடு எதிர்கால நன்மைகளை நோக்கிச் செல்ல அது உதவுவதாக. எங்கள்.

==========

தவக்கால மூன்றாம் வாரம் செவ்வாய்

வருகைப் பல்லவி

காண். திபா 16:6,8இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் உம்மைக் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும். ஆண்டவரே, கண்ணின் மணியென என்னைத் காத்தருளும். உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னைப்
பாதுகாத்தருளும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது அருள் எம்மை என்றும் கைவிடாதிருக்க உம்மை வேண்டுகின்றோம்: உமது புனிதப் பணிக்கு அது எங்களை அர்ப்பணிக்கச் செய்து எங்களுக்கு உமது ஆற்றலை என்றும் பெற்றுத் தருவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இது உமது ஆற்றலின் பரிகாரப் பலியாக மாறிட நீரே அருள்வீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 14:1-2 ஆண்டவரே, உம் கூடாரத்தில் வாழ்பவர் யார்? உம் திருமலையில் இளைப்பாறுபவர் யார்? மாசற்றவராய் நடந்து நேரியவற்றைச்
செய்பவரே.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது புனித மறைநிகழ்வில் பங்குகொண்ட எங்களுக்கு வாழ்வு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதே போன்று எங்களுக்குப் பாவ மன்னிப்பையும் ஆதரவையும் அது அளிப்பதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

இறைவா, உம் மக்களைத் தோற்றுவிப்பவரும் ஆள்பவருமானவரே, அவர்களைத் தாக்கும் பாவங்களை விரட்டியருளும்; அதனால் அவர்கள் என்றும் உமக்கு ஏற்புடையவர்களாகி, உமது ஆதரவினால் பாதுகாப்பாய் இருப்பார்களாக. எங்கள்.

==========

தவக்கால மூன்றாம் வாரம், புதன்

வருகைப் பல்லவி

காண், திபா 118:133 உமது வாக்கின் படி என் நடத்தைகளை நெறிப்படுத்தும்; தீயது எதுவும் என்னை மேற்கொள்ள விடாதேயும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, தவக் கால முயற்சிகளால் பயிற்சியும் உமது வார்த்தையால் ஊட்டமும் பெறும் நாங்கள் புனித ஒறுத்தல் முயற்சிகளால் முழு இதயத்தோடு எங்களை உமக்கு அர்ப்பணித்து வாழ உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உம்மை நோக்கி மன்றாடு வதில் நாங்கள் என்றும் ஒன்றுபட்டிருக்கவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இப்பலிப்பொருள்களோடு உம் மக்களின் மன்றாட்டுகளையும் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: உம் மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் எங்களை ஆபத்துகள் அனைத்திலிருந்தும் காத்தருள்வீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 15:11 வாழ்வின் வழிகளை நான் அறியச் செய்தீர்; ஆண்டவரே, உம்
திருமுன் மகிழ்ச்சியால் என்னை நிரப்புவீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் விண்ணக விருந்து எங்களைப் புனிதப்படுத்துவதாக; தவறுகள் அனைத்திலிருந்தும் அது எங்களைத் தூய்மைப்படுத்தி மறு உலக வாக்குறுதிகளுக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

எங்கள் இறைவா, உமக்கு மகிழ்ச்சி தரும் உள்ளத்தை உம் மக்களுக்கு வழங்குவீராக; இவ்வாறு நலன்கள் அனைத்தையும் வழங்கி அவர்களை உம் படிப்பினைகளுக்குத் தகுதி உள்ளவர்கள் ஆக்குவீராக. எங்கள்.

==========

238 தவக்கால மூன்றாம் வாரம் வியாழன்

வருகைப் பல்லவி

மக்களின் மீட்பு நாமே, என் கிறார் ஆண்டவர்: எத்தகைய இடுக்கண் களில் எம்மைக் கூவி அழைத்தாலும், நாம் அவர்களுக்குச் செவிசாய்ப்போம்; நாம் என்றும் அவர்களுடைய ஆண்டவராய் இருப்போம்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: மீட்பு அளிக்கும் திருவிழா எவ்வளவுக்கு மிக நெருங்கி வருகின்றதோ அவ்வளவுக்குப் பாஸ்கா மறைநிகழ்வை இறைப்பற்றுடன் கொண்டாட நாங்கள் அணுகிச் செல்வோமாக. உம்மோடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் இருக்குமாறு அவர்களைப் பாவக் கறைகள் அனைத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: போலி இன்பங்களில் சிக்கிக் கொள்ளாமல் உம் மக்களைக் காப்பாற்றி உமது உண்மைக் கைம்மாற்றைப் பெற்றிட உறுதி அளிப்பீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

திபா 118:4-5 உம் நிய மங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிக்க நீர் கட்டளையிட்டீர்; அதனால் உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என்
வழிகளை நிலைப்படுத்தும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பட்டவர்களைக் கனிவுடன் உமது உதவியால் எழச் செய்தருளும்; அதனால் நாங்கள் மறைநிகழ்வுகளாலும் வாழ்வின் நெறிகளாலும் உமது மீட்பின் பயனை அடைவோமாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே,
உமது இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு உமது கனிவை வேண்டுகின்றோம்: அதனால் எங்களிடம் உள்ளவை அனைத்தையும் நாங்கள் உம்மிடமிருந்தே பெற்றுக்கொண்டது போல உமது அருளால் சரியானவற்றை விரும்பவும் விரும்பிய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் அருள்வீராக. எங்கள்.

==========

தவக்கால மூன்றாம் வாரம் வெள்ளி

வருகைப் பல்லவி

திபா 85:8,10) ஆண்டவரே, தெய் வ ங் களுள் உமக்கு நிகரான வர் எவரும் இல்லை; ஏனெனில் நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள்
புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, எங்கள் இதயங்களில் உமது அருளைக் கனிவுடன் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் வரம்பு மீறிய மண்ணக நாட்டங்களிலிருந்து நாங்கள் என்றும் விடுவிக்கப்பட்டு, விண்ணகப் படிப்பினைகளைப் பற்றிக்கொள்ள உமது வள்ளன்மையால் ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் அர்ப்பணிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவை உமக்கு ஏற்புடையவையாக மாறி என்றும் எங்களுக்கு மீட்பு அளிக்கச் செய்வீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை (பக். 523 – 5 26).

திருவிருந்துப் பல்லவி :

காண். மாற் 12:33 கடவுளை முழு இதயத்தோடு அன்பு செய்வதும் தன்னைப் போல அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எல்லாப் பலிகளையும்விட
மேலானது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது ஆற்றலின் செயல் எங்கள் மனதிலும் உடலிலும் பொழியப்பட உம்மை வேண்டுகின்றோம்: இத்திருவிருந்தில் பங்கேற்று நாங்கள் பெற்றுக்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு முழுமையான மீட்பைத் தருவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உமது இரக்கத்தை மன்றாடும் நம்பிக்கையாளரைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; அதனால் உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் அவர்கள் உமது அன்பின் கொடைகள் எங்கும் பரவச் செய்திட ஆற்றல் பெறுவார்களாக. எங்கள்.

==========

தவக்கால மூன்றாம் வாரம் சனி

வருகைப் பல்லவி

திபா 102:2-3என் ஆன்மாவே ஆண்டவரைப் போற்றிடு. அவருடைய நன்மைகள் அனைத்தையும் மறவாதே அவர் உன் குற்றங் களையெல்.
மன்னிக்கின்றார்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, ஆண்டுதோறும் கொண்டாடும் இத்தவ முயற்சிகளில் மகிழ்வுறும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்காவின் மறையுண்மைகளை நாங்கள் கடைப்பிடித்து அவற்றின் முழுமையான பயன்களால் பேரின்பம் அடைவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, தூய்மையான உணர்வுகளோடு உம் மறைநிகழ்வுகளை அணுகிவர உமது அருள் எங்களுக்கு வழங்கப்படுகின்றது; இறைப்பற்றுடன் இவற்றைத் தொடர்ந்து கொண்டாடுவதால் நாங்கள் உமக்குப் பணிந்து வாழ அருள்புரிவீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

லூக் 18:13 வரிதண்டுபவர் தொலைவில் நின்று தம் மார்பில் அடித்துக் கொண்டு,
“கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும்,” என்றார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இரக்கமுள்ள இறைவா, உம் அருள்கொடைகளால் இடைவிடாமல் எங்களை நிரப்பிட உம்மை வேண்டுகின்றோம்: உண்மையான வணக்கத்துடன் அவற்றைக் கொண்டாடவும் என்றும் பற்றுறுதி உள்ள மனதோடு அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் அருள்புரிவீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உமது வலக் கையை நீட்டி உம் நம்பிக்கையாளருக்கு விண்ணக உதவியை அளிப்பீராக; அதனால் அவர்கள் முழு இதயத்தோடு உம்மைத் தேடி, பணிவுடன் கேட்பதைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

==========

தவக்கால 4-ஆம் ஞாயிறு


ஊதா நிறம் அல்லது ரோசா நிறம் பயன்படுத்தப்படுகின்றது. இசைக் கருவிகளோடு இசை அனுமதிக்கப்படுகின்றது. பீடம் மலர்களாலும் அணிசெய்யப்படலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்நாளுக்கு உரிய மன்றாட்டுகளையும் பரிந்துரைகளையும் பயன் படுத்தி, பாஸ்கர் திருவிழிப் பில் கிறிஸ்தவப் புகுமுக அருளடையாளங்களுக்கு ‘அனுமதிக்கப்பட உள்ள புகுமுகநிலையினரின் திருமுழுக்கிற்கான தயாரிப்பின் இரண்டாவது ஆய்வு இந்த ஞாயிறு கொண்டாடப்படுகின்றது (பக். 965).

வருகைப் பல்லவி

காண். எசா 36:10-11
எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று கூடுங் கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள்; அதனால் ஆர்ப்பரியுங் கள்; நீங்கள் நிறைவாக ஆறுதல் பெற்று மகிழ்வடையுங் கள்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, மனிதரான உம் வாக்கின் வழியாக மனிதக் குலத்தின் ஒப்புரவை வியத்தகு முறையில் செயல்படுத்துகின்றீர்; அதனால் ஆர்வமிக்க இறைப்பற்றாலும் உயிர்த் துடிப்புள்ள நம்பிக்கையாலும் வரவிருக்கும் பெருவிழாவுக்குக் கிறிஸ்தவ மக்கள் விரைந்திட ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பணிவுடன் உம்மை வேண்டி, நிலையான உதவி அளிக்கும் காணிக்கைகளை பேரின்பத்துடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நாங்கள் இவற்றை உண்மையிலேயே போற்றவும் உலகின் மீட்புக்காக உமக்கு உகந்தவாறு ஒப்புக்கொடுக்கவும் செய்வீராக. எங்கள்.

பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படாதபோது, தவக் காலத்தின் தொடக்கவுரை 1 அல்லது 11 (பக். 523 – 524) பயன்படுத்தப்படும்.

தொடக்கவுரை :பிறவியிலேயே பார்வையற்றவர்

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து தாம் மனிதர் ஆனதன் மறைநிகழ்வு வழியாக
இருளில் நடக்கும் மனிதக் குலத்தை நம்பிக்கையின் ஒளிக்குக் கொண்டுவந்தார்.
பழைய பாவ நிலைக்கு உட்பட்டவர்களாகப் பிறந்தவர்களைப்
புதுப் பிறப்பின் கழுவுதலால் உரிமை மக்களாக ஏற்றுக்கொண்டார்.

ஆகவே விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும்
உம்மை ஆராதித்து வணங்கிப் புதியதொரு பண் பாடுகின்றன;
வானதூதர் அணிகள் அனைத்தோடும் நாங்கள் சேர்ந்து
முடிவின்றிப் பறைசாற்றிச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி :

பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

காண். யோவா 9:11,38 ஆண்டவர் என் கண்களில் பூசினார்; நான் சென்றேன்,

கழுவினேன், பார்த்தேன்; கடவுளை நம்பினேன். ஊதாரி மைந்தனைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

லூக் 15:32 மகனே, நீ மகிழ்ந்து இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்.

வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது

காண். திபா 121:3-4 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நக” ஆண்டவரே, உமது திருப்பெயரைப் போற்ற இறைக்குலத்தார் ஆங்கே ஏறிச் செல்வார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இறைவா, இவ்வுலகுக்கு வரும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்ற நீர் எங்கள் இதயங்களை உமது அருளின் சுடரால் ஒளிர்வித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது மாண்புக்குத் தகுதியானதையும் விருப்பமானதையும் என்றும் நினைவில் கொண்டு உம்மை நேர்மையாக அன்பு செய்ய வலிமை பெறுவோமாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, தாழ்மையுடன் உம்மை நோக்கி மன்றாடுவோரைக் காத்து வலுவற்றோரைத் தாங்கிக்கொள்ளும்; சாவின் நிழலில் நடப்போரை உமது நிலையான ஒளியால் உயிர் பெறச் செய்தருளும்: தீமை அனைத்திலிருந்தும் உமது இரக்கத்தால் அவர்களை விடுவித்து நிறைவான நன்மைக்கு அவர்கள் வந்து சேர அருள்புரிவீராக. எங்கள்.

==========

தவக்கால நான்காம் வாரம் திங்கள்
காண், திபா 30:7-8

வருகைப் பல்லவி

ஆண்டவர் மீது நான் நம்பிக்கை வைப்பேன்; அவரது வாட்
வாக்களிப்பேன், அகமகிழ்வேன்; ஏனெனில் நீர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினீர்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, விவரிக்க இயலாத மறையுண்மைகளால் உலகத்தைப் புதுப்பிக்கின்ற உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திரு அவை நிலையான படிப்பினைகளால் பயன் பெற்று இவ்வுலகில் உம் உதவிகளை இழந்துவிடாமல் இருப்பதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இக்காணிக்கையின் பயனை நாங்கள் பெற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவ்வுலகின் பழைய நிலையிலிருந்து மனந்திரும்பித் தூய்மை பெற்று விண்ணக வாழ்வு நோக்கிய எமது பயணத்தில் நாங்கள் புதுப்பிக்கப்படுவோமாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

எசே 36:27 என் ஆவியை உங்கள் நடுவில் வைப்பேன்; என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவன மாய்ச் செயல்
படுத்தவும் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உம் அருள்கொடைகளால் நாங்கள் புதுப்பிக்கப்பெற்று வாழ்வு பெற்றிட உம்மை வேண்டுகின்றோம்: அவை எங்களைப் புனிதப்படுத்தி நிலையானவற்றுக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் மக்களை உள்ளும் புறமும் புதுப்பித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உடலைச் சார்ந்த இச்சைகளால் தடைபடாது அருள்வாழ்வை நாடுவதில் அவர்கள் வலிமை பெறச் செய்வீராக. எங்க

==========

தவக்கால நான்காம் வாரம் செவ்வாய்

வருகைப் பல்லவி

காண். எசா 55:1
தாகமாய் இருப்பவர்களே, நீர் நிலைகளுக்கு வாருங்கள்; பணம் இல்லாதவர்களே, வந்து மகிழ்வுடன் குடியுங்கள் என்கிறார் ஆண்டவர்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, புனிதமான பற்றன்பு உள்ள முயற்சிகளைப் பெருமதிப்புடன் கடைப்பிடிப்பதால் உம் நம்பிக்கையாளரின் இதயங்களைச் செம்மைப்படுத்தியருளும்; அதனால் அவர்கள் தகுதியான மனதுடன் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்றுக்கொண்டு உமது மீட்பின் புகழைப் பறைசாற்றச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் அளித்த கொடைகளையே உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் அழிவுக்கு உரிய எங்களுக்கு இவை உமது பராமரிப்பின் அடையாளமாகவும் அழியா வாழ்வுக்கு உரிய அருமருந்தாகவும் செயல்படுவனவாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 22:1-2 ஆண்டவர் என்னை ஆள்கின்றார்; எனக்கேதும் குறை இல்லை. பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்தார்;
அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் சென்றார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, எங்கள் மனங்களைக் கனிவுடன் தூய்மைப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: விண்ணக அருளடையாளங்களால் எங்களைப் புதுப்பிப்பதன் வழியாகத் தொடர்ந்து இப்பொழுதும் வருங்காலத்திலும் எங்கள் உடலுக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்வோமாக எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

இரக்கமுள்ள இறைவா, மக்கள் என்றும் உம்மீது பற்றன்பு உள்ளவர்களாக விளங்கச் செய்வீராக; உமது கனிவால் அவர்கள் தங்களுக்குப் பயன் தருவனவற்றை இடைவிடாது பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

==========

தவக்கால நான்காம் வாரம் புதன்
திபா 68:14

வருகைப் பல்லவி

ஆண்டவரே, இறைவா, தக்க காலத்தில் உம்மை நோக்கியே உள்ளது என் மன்றாட்டு ; உறுதியான அருள்துணைக்கு ஏற்ப, உமது இரக்கப் பெருக்கினால் எனக்குச் செவிசாய்த்தருளும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, நேர்மையாளர்களுக்கு நற்செயல்களின் பரிசுகளையும் பாவிகளுக்கு மனம் திரும்புதலின் வழியாக மன்னிப்பையும் அளிக்கின்றீர்; உம்மை மன்றாடும் மக்கள் மீது நீர் இரக்கம் காட்டுவதால் எங்கள் பாவங்களுக்கான உமது மன்னிப்பைப் பெற எங்களது பாவ அறிக்கை ஆற்றல் பெறுவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் ஆற்றல் எங்கள் பழைய பாவ நிலையைக் கனிவுடன் போக்கிட உம்மை வேண்டுகின்றோம்: அது எங்களில் புத்துணர்வையும் மீட்பையும் வளர்ப்பதாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

யோவா 3:17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை
மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணகக் கொடைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தண்டனைத் தீர்ப்புப் பெற நீர் அனுமதியாதிருக்க உம்மை வேண்டுகின்றோம்: உம் நம்பிக்கையாளருக்கு உதவி அளிப்பீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் அடியார்கள் உமது பரிவிரக்கத்தின் ஆதரவால் பாதுகாக்கப்படுவார்களாக; அதனால் இவ்வுலகில் அவர்கள் நல்லதைச் செய்து நனமையின் முழுமையாகிய உம்மிடம் வந்து சேர்வார்களாக.

==========

தவக்கால நான்காம், வாரம் வியாழன்

வருகைப் பல்லவி

காண். திபா 104:3-4 ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக! ஆண்டவரைத்
தேடுங்கள், உறுதி பெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள்!

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, பணிவுமிக்க மன்றாட்டால் உமது கனிவை வேண்டுகின்றோம்: இவ்வாறு தவத்தினால் திருத்தப்பெற்று, நற்செயல்களில் தேர்ச்சி அடைந்த உம் அடியார்களாகிய எங்களை உம் கட்டளைகளில் நேர்மையுடன் நிலைத்து நிற்கச் செய்து பாஸ்கா விழாவுக்குத் தூய உள்ளத்துடன் வந்து சேரச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பலியாக உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் வலுவற்றவர்களாகிய எங்களைத் தீமை அனைத்திலிருந்தும் என்றும் தூய்மைப்படுத்திக் காப்பனவாக. எங்கள்.
தவக் காலத்தின் தொடக்கவுரை (பக். 523 – 5 26).

திருவிருந்துப் பல்லவி :

எரே 31:33 என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;
அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட அருளடையாளத் திரு உணவு எங்களைத் தூய்மைப்படுத்தவும் உம் அடியார்களைக் குற்றங்கள் அனைத்திலிருந்தும் விடுவிக்கவும் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு குற்றமுள்ள மனச்சான்றினால் கட்டுண்டவர்கள் விண்ணக உதவியின் நிறைவால் மாட்சி அடைவார்களாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம் மக்களுக்கு ஆசி வழங்கிக் காப்பாற்றும்; அவர்களைச் செம்மைப்படுத்தி மீட்டருளும். அதனால் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்பெற்று அவர்கள் உமது அன்பில் என்றும் நிலைத்திருப்பார்களாக. எங்கள்.

==========

தவக்கால நான்காம் வாரம் வெள்ளி

வருகைப் பல்லவி

காண். திபா 53:3-4 கடவுளே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும்; உமா ஆற்றலினால் என்னை விடுவித்தருளும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, எங்கள் வலுவின்மைக்கு ஏற்ற உதவிகளை நீரே செய்துள்ளீர்; அதனால் பாவக் கழுவாயின் விளைவை அக்களிப்போடு ஏற்றுக்கொண்டு மிகுந்த இறைப்பற்றுடன் மனம் திரும்பி அவ்வுதவிகளை நாங்கள் கண்டுணர அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, இப்பலியின் வலிமைமிக்க ஆற்றல் எங்களைத் தூய்மைப்படுத்துவதாக; இவ்வாறு மேன்மேலும் புனிதம் அடைந்தவர்களாய் நாங்கள் தூய்மையின் ஊற்றுக்கு வந்து சேரச் செய்வதாக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை (பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

எபே 1:7 கிறிஸ்து இரத்தம் சிந்தித் தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப்
பெறுகிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, எங்களுக்கு அருள் புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பழையவற்றிலிருந்து புதியவற்றுக்குக் கடந்து வந்தது போல, பாவங்களைக் களைந்துவிட்டுத் தூய்மை பெற்ற மனதினால் புதுப்பிக்கப்பட எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் அடியார்களைக் கண்ணோக்கியருளும்; உமது இரக்கத்தை அறிக்கையிடுவோரை விண்ணக உதவியால் கனிவுடன் காத்தருள்வீராக. எங்கள்.

==========

தவக்கால நான்காம் வாரம் சனி

வருகைப் பல்லவி

‘காண். திபா 17:5-7 சாவின் புலம்பல்கள் என்னைச் சூழ்ந்தன; பாதாளத்தின் துயர்கள் என்னைச் சுற்றி இறுக்கின; என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடி னேன்; தமது தூய கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உம்மால் அன்றி நாங்கள் உமக்கு மகிழ்ச்சி அளிக்க முடியாது; ஆகவே உமது இரக்கத்தின் செயல் எங்கள் இதயங்களை வழிநடத்த அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: கட்டுக்கடங்காத எங்கள் விருப்பங்களை உம் பக்கம் கனிவுடன் திருப்புவீராக. எங்கள்.

தவக் காலத்தின் தொடக்கவுரை(பக். 523 – 526).

திருவிருந்துப் பல்லவி :

காண். 1 பேது 1:18-19 மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டுள்ளோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உம் அருள்கொடைகள் எங்களைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அவற்றின் செயலால் நாங்கள் உமக்கு முற்றிலும் ஏற்றவர்களாய்த் திகழச் செய்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, வரவிருக்கும் புனித நிகழ்வுகளுக்கு விரைந்து செல்லும் உம் மக்களைக் காத்தருளும்; அவர்கள் விண்ணக அருளைத் தாராளமாகப் பெற்று, காணக்கூடிய ஆறுதல்களால் உதவி அடைந்து, காண இயலாத நன்மைகளை நோக்கி மிக விரைவாகச் செல்லத் தூண்டப்பெறுவார்களாக. எங்கள்.

==========

தவக்கால 5-ஆம் ஞாயிறு

ஆயர் பேரவை முடிவு செய்தால், இந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கோவிலில் பாவங்களையும் மறைக்கும் பழக்கத்தைக் கையாளலாம். புனித வார சிலுவைகளையும் திரு உருவங்களையும் மறைக்கும் பழக்கத்தைக் கை வெள்ளிக்கிழமை அன்று ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம் மா சிலுவைகள் மூடப்பட்டிருக்கும். ஆனால் திரு உருவங்கள் பாஸ்கர் திருவிழிப்புவன. மூடப்பட்டிருக்கும்.

இந்நாளுக்கு உரிய மன்றாட்டுகளும் பரிந்துரைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, பாஸ்கர் திருவிழிப்பில் கிறிஸ்தவப் புகுமுக அருளடையாளங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ள புகுமுகநிலையினரின் திருமுழுக்கிற்கான தயாரிப்பின் மூன்றாம் ஆய்வு இந்த ஞாயிறு கொண்டாடப்படுகின்றது (பக். 966).

வருகைப் பல்லவி

காண். திபா 42:1-2 கடவுளே, எனக்கு நீதி வழங்கும்; இறைப்பற்றில்லாப் பிற இனத்தாரோடு என் வழக்குக்காக வாதிடும். தீயவரும் வஞ்சகருமான மனிதரிடமிருந்து என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என்
கடவுள், என் ஆற்றல்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே எங்கள் இறைவா, உம் திருமகன் உலகை அன்பு செய்து சாவுக்குத் தம்மையே கையளித்தார்; உமது உதவியால் அதே அன்பில் நாங்களும் விரைந்து முன்னேறிச் செல்ல அருள்புரிவீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்தவ நம்பிக்கையின் படிப்பினையால் நீர் நிரப்பியுள்ள உம் அடியார்களுக்கும் எங்களுக்கும் செவிசாய்த்தருளும்; இப்பலியின் பயனாக இவர்களைப் புனிதப்படுத்துவீராக. எங்கள். இலாசர் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படாதபோது, தவக் காலத்தின் தொடக்கவுரை 1 அல்லது 11 (பக். 523 – 524) பயன் படுத்தப்படும்.

தொடக்கவுரை: இலாசர்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ. : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் மெய்யான மனிதராகிய அவர்
தம் நண்பர் இலாசருக்காகக் கண்ணீர்விட்டு அழுதார்;
என்றுமுள்ள கடவுளாகிய அவர் இலாசரைக் கல்லறையினின்று உயிர்பெற்றெழச் செய்தார்;
அவரே மனித இனத்தின்மேல் இரக்கம் கொண்டு
தூய மறைநிகழ்வுகளால் எங்களைப் புதிய வாழ்வுக்கு இட்டுச் சென்றார்.

அவர் வழியாக மாண்புக்கு உரிய உம்மை
வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன;
உம் திருமுன் எக்காலத்தும் அக்களிக்கின்றன;
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் தாழ்மையுடன் உம்மை இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி :

இலாசரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

காண். யோவா 11:26 உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார், என்கிறார் ஆண்டவர்.

விபசாரப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

யோவா 8:10-11 “அம்மா, நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” “ஒருவரும் இல்லை , ஆண்டவரே.” “நானும் உம்மைத் தீர்ப்பிட மாட்டேன். இனிப் பாவம் செய்யாதீர்.”

வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:

யோவா 12:24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படி யே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவர், எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்கின்ற நாங்கள் அவருடைய உறுப்பினர்களாக என்றும் விளங்குவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தின் கொடையை எதிர்பார்க்கும் உம் மக்களுக்கு ஆசி வழங்கியருளும்; உமது தூண்டுதலால் தாங்கள் விரும்புவதை உமது வள்ளன்மையால் அவர்கள் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

==========

தவக்கால ஜந்தாம் வாரம் திங்கள்

வருகைப் பல்லவி

காண். திபா 55:2 ஆண்டவரே, என் மீது இரக்கம் வையும். ஏனெனில் மனிதர் என்னை நசுக்குகின்றனர்; நாள் முழுவதும் சண்டையிட்டு என்னைத்
துன்புறுத்து கின்றனர்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, சொல்லற்கரிய உமது அருளாலும் எல்லா ஆசிகளாலும் நாங்கள் செல்வராக்கப்பட்டுள்ளோம்; இவ்வாறு பழமையிலிருந்து நாங்கள் புதுமைக்கு மாறுவதன் வழியாக விண்ணரசின் மாட்சிக்கு எங்களையே தயார் செய்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மறைநிகழ்வுகளைக் கொண்டாட இருக்கும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உடல் ஒறுத்தலின் பயனாக மகிழ்வைத் தரும் மனத்தூய்மையை நாங்கள் உமக்குக் காணிக்கையாக்குவோமாக. எங்கள். ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1 (பக். 527).

திருவிருந்துப் பல்லவி :

விபசாரப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது: யோவா 8:10-11

“அம்மா, நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” “ஒருவரும் இல்லை, ஆண்டவரே.” “நானும் உம்மைத் தீர்ப்பிட மாட்டேன். இனிப் பாவம் செய்யாதீர்.”

வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:

யோவா 8:12 உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உம் அருளடையாளங்களின் ஆசியால் வலிமை பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவற்றால் நாங்கள் எப்பொழுதும் குற்றங்களிலிருந்து கழுவப்பெற்றுக் கிறிஸ்துவைப் பின்பற்றி உம்மை நோக்கி முன்னேறி வருவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உன்னை என் நாடும் மக்களைப் பாவங்களிலிருந்து விடுவித்தருள் உம்மை வேண்டுகின்றோம். அதனால் அவர்கள் புனித நெறியில் வாழ்த்து எவ்வித இன்னல்களால் தாக்கப்படாமல் இருப்பார்களாக .

==========

தவக்கால வந்தாம் வாரம் செவ்வாய்

வருகைப் பல்லவி

திபா 26:14 ஆண்டவருக்காகக் காத்திரு; துணிவுடன் செயலாற்று; உன் இதயம் உறுதி கொள்வதாக. ஆண்டவரை எதிர்பார்த்திரு.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது விருப்பத்துக்கு ஏற்பப் பணிபுரிவதில் விடாமுயற்சியை எங்களுக்குத் தந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இக்காலத்தில் உமக்குப் பணிபுரியும் மக்கள் தகுதியிலும் எண்ணிக்கையிலும் பெருகுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருள்களை உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நீர் எங்கள் குற்றங்களைக் கனிவுடன் மன்னித்து, தடுமாறும் இதயங்களை வழிநடத்துவீராக. எங்கள்.
ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1(பக். 527).

திருவிருந்துப் பல்லவி :

யோவா 12:32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைத்தையும்
என் பால் ஈர்த்துக்கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு உரியவற்றைத் தொடர்ந்து நாடி விண்ணகக் கொடைகளை என்றும் அடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

இறைவா, உம்மில் நம்பிக்கை கொள்வோர் மீது சினத்தை அன்று, இரக்கம் காட்டுவதையே தேர்ந்து கொண்டீர்; தாங்கள் செய்த தீமைகளுக்காக உரிய முறையில் மனம் வருந்தி அழுகின்ற உம் மக்கள் உமது ஆறுதலின் அருளைக் கண்டடையத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

==========

தவக்கால ஐந்தாம் வாரம் புதன்

வருகைப் பல்லவி

காண். திபா 17:48-49 விடுவிப்பவர் ஆண்டவரே, சினந்தெழும் மக்களிடமிருந்து என்னை நீரே; என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்துவீர். என்னைக் கொடுமைப்படுத்துபவரிடமிருந்து நீர் என்னைக் காத்திடுவீர்.

திருக்குழும மன்றாட்டு :

பரிவுள்ள இறைவா, தவத்தால் புனிதம் அடைந்துள்ள உம் மக்களின் இதயங்களை ஒளிர்வித்தருளும்; இறைப்பற்றுடன் உம்மை மன்றாடுவோருக்குக் கனிவுடன் செவிசாய்த்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுப்பதற்காக நீர் எங்களுக்கு அளித்துள்ள இப்பலிப்பொருள்களைப் பெற்றுக்கொள்வீராக; உமது பெயரின் மாட்சிக்காகப் பலி ஒப்புக்கொடுக்கச் செய்த நீர் அதனை எங்களுக்கு அருமருந்தாகிடச் செய்வீராக. எங்கள். ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1 (பக். 527).

திருவிருந்துப் பல்லவி :

கொலோ 1:13-14 கடவுள் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு நம்மை உட்படுத்தினார்; அவருடைய இரத்தத்தால் நாம் மீட்பையும் பாவ மன்னிப்பையும்
பெறுகிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட மறைபொருள்கள் எங்களுக்கு விண்ணக மருந்தாய் அமைவனவாக; அதனால் இவை எங்கள் உள்ளங்களின் குற்றங்களைக் கழுவி முடிவில்லாப் பாதுகாப்பில் எங்களை உறுதிப்படுத்துவனவாக. “”-“

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

எல்லாம் வல்ல இறைவா, உம் மக்களின் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; எதிர்நோக்கும் பக்தியின் உறுதியை அவர்களுக்குத் தந்தருளும்; வழக்கமான உமது இரக்கத்தின் பயனையும் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

==========

தவக்கால ஐந்தாம் வாரம் வியாழன்

வருகைப் பல்லவி

எபி 3:15 கிறிஸ்து புதிய உடன் படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் வாக்களிக்கப்பட்ட நிலையான உரிமைப்
பேற்றைப் பெறுவார்கள். இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்து உம்மை மன்றாடும் மக்களோடு உடனிருந்து அவர்களைக் கனிவுடன் காத்தருளும்; அதனால் பாவ மாசுகளிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்ட அவர்கள் புனித வாழ்வில் நிலைத்திருந்து உமது வாக்குறுதியின் உரிமையாளர்களாய்த் திகழ்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இப்பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவை எங்கள் மன மாற்றத்துக்கும் உலகம் முழுவதன் மீட்புக்கும் பயன்படுவனவாக. எங்கள். ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1 (பக். 527).

திருவிருந்துப் பல்லவி :

உரோ 8:32 தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், அவரோடு அனைத்தையும் நமக்கு அருளினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது இரக்கத்தை இறைஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் இம்மை வாழ்வில் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் இந்த அருளடையாளத்தால் நாங்கள் முடிவில்லா வாழ்வில் பங்கேற்கச் செய்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, உம் மக்களுக்கு இரங்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் உமக்கு விருப்பமில்லாததை நாளுக்கு நாள் வெறுத்துவிட்டு உம் கட்டளைகளின்மீது கொண்டுள்ள பேராவலால் நிரப்பப்படுவார்களாக. எங்கள்.

==========

தவக்கால ஐந்தாம் வாரம் வெள்ளி

வருகைப் பல்லவி

திபா 30:10,16,18 ஆண்டவரே, எனக்கு இரங்கும். ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும் என்னை விடுவித்துக் காத்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மைத் கூவி அழைத்தேன்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உம் மக்களின் குற்றங்களை மன்னிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் வலுக்குறைவால் நாங்கள் செய்த பாவங்களிலிருந்து உமது கனிவிரக்கத்தால் விடுதலை பெறுவோமாக. உம்மோடு. அல்லது இறைவா, இக்காலத்தில் புனித கன்னி மரியாவைப் பின்பற்றி உமது திரு அவை இறைப்பற்றுடன் கிறிஸ்துவின் பாடுகளைத் தியானிக்கச் செய்தீரே; அதே கன்னி மரியாவின் மன்றாட்டால் உம் ஒரே திருமகனை அன்றாடம் உறுதியாகப் பற்றிக்கொண்டு, அவரது அருளின் நிறைவுக்கு இறுதியில் வந்து சேர எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு ஏற்றவாறு என்றும் உம் பலிப்பீடங்களில் பணிபுரியும் தகுதி பெற்று அவற்றில் முடிவில்லாமல் பங்கேற்பதால் மீட்கப்பெறுவோமாக. எங்கள். ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1 (பக். 527).

திருவிருந்துப் பல்லவி :

1 பேது 2:24 சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை இயேசு சுமந்தார்: அதனால் நாம் பாவங்களுக்காக இறந்து நீதிக்காக வாழ்வோமாக. அவர்தம் காயத்தால் நாம் குணம் அடைந்துள்ளோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட உமது பலியின் நிலையான பாதுகாப்பு எங்களை என்றும் கைவிடாதிருப்பதாக; எங்களிடமிருந்து தீமை அனைத்தையும் அது என்றும் அகற்றுவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாப்பின் அருளைத் தேடும் உம் அடியார்கள் தீமை அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு அமைதியான மனதுடன் உமக்குப் பணிபுரிவார்களாக. எங்கள்.

==========

தவக்கால ஐந்தாம் வாரம் சனி

வருகைப் பல்லவி

காண். திபா 21:20, 7 விட்டுத் தொகை ஆண்டவரே, உமது உதவி என்னை போய்விடச் செய்யாதேயும்; எனக்குத் துணை செய்ய வாரும்;
சில் நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கும்
மக்களின் இகழ்ச்சிக்கும் உள்ளானேன்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, கிறிஸ்துவில் புதுப் பிறப்பு அடைந்துள்ள அனைவரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினராகவும் அரச குருக்களின் கூட்டத்தினராகவும் விளங்கச் செய்தீரே; இவ்வாறு நிலைவாழ்வுக்கு அழைக்கப்பட்ட இம்மக்கள் நீர் கட்டளையிடுவதை விரும்பவும் நிறைவேற்றவும் தங்கள் இதயங்களில் ஒரே நம்பிக்கையும் செயல்களில் பரிவிரக்கமும் உடையவர்களாய்த் திகழவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் உண்ணா நோன்பின் காணிக்கைகள் உமக்கு ஏற்றவையாய் இருக்க உம்மை வேண்டுகின்றோம்: அவை எங்கள் பாவங்களைப் போக்கி உமது அருளுக்கு எங்களைத் தகுதியுடையவர்களாகச் செய்து நிலையான வாக்குறுதிகளுக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள். ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1 (பக். 527).

திருவிருந்துப் பல்லவி :

காண். யோவா 11:52 சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கும் நோக்குடன் கிறிஸ்து கையளிக்கப்பட்டார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனிதமிகு உடலாலும் இரத்தத்தாலும் எங்களுக்கு உணவு அளிப்பது போல உங்களை அவரது இறை இயல்பிலும் பங்குபெறச் செய்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே,
மன்றாடும் உமது திரு அவைக்கு இரங்கியருளும்; இதயங்களை உம் பக்கம் திருப்புகின்றவர்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு உம் ஒரே திருமகனின் இறப்பினால் மீட்கப்பட்டவர்களை பாவத்தினால் தாக்கப்படாமலும் இன்னல்களால் அலைக்கழிக்கப்படாமலும் காத்தருள்வீராக. எங்கள்.

=============↑ பக்கம் 260

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy