திரு இருதயப் பாடல்கள்

திருஇதயப் பாடல்கள்

01. இயேசுவின் மதுர திருஇருதயமே சிநேகத்தின் இருதயமே

தினமும் நீர் எங்கள் சிநேகமாய் இருப்பீர் தேவ தயாநிதியே

1. மனிதரை மோட்ச கதியினில் சேர்க்க மனுமகனாய் பிறந்தார்

மகிமை பிரதாப கடவுளால் உன் மாபலி நீ சுமந்தாய்

கள்ளனைப் போல கசடர்கள் கடுஞ்சிலுவையில் அறைந்தார்

கருணையால் உந்தன் இருதய அன்பின் தயவால் கண்டறிவார்

2. உன்திரு இரத்தம் ஒருதுளி முதலாய் உனக்கென வைத்தாயோ

ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய் ஓங்கிய இருதயமே

இன்று எம்மோடு இருந்தருள் ஈவாய் இனியநல் உணவாக

இவையெல்லாம் பாரா வீணர்கள் நாங்கள் இருந்துமே பழித்தோமே

நன்மைமேல் நன்மை என்றுமே செய்வாய் நாங்களுமே தீமை செய்தோம்

நன்றியில்லாமல் உன்தயை மறந்தோம் நானியே போதனைரோ

02. எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக – 2

1. எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் – 2

எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் – 2

உந்தன் அதிமிக மகிமைக்கே

2. ஒளியை நோக்கா மலரில்லை

நீரை நோக்கா வேரில்லை – 2

உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் – 2

வாழ்வில்லை அதில் பயனில்லை

Loading

© 2025 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy