அருங்கொடைப் பாடல்கள்

அருங்கொடைப் பாடல்கள்

01. அப்பா பிதாவே அன்பான தேவா

அருமை இரட்சகரே ஆவியானவரே (2)

1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்

என் நேசர் தேடி வந்தீர்

நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து

நிழலாய் மாறி விட்டீர் (2) – நன்றி உமக்கு நன்றி (ஐயா)-2

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்

தயவாய் நினைவு கூர்ந்தீர்

கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து

கரம் பற்றி நடத்துகிறீர் (2) – நன்றி உமக்கு நன்றி (ஐயா) -2

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னைத் தூக்கி எடுத்தீரே

கல்வாரி இரத்தம் எனக்காகச் சிந்தி கழுவி அணைத்தீரே (2)

நன்றி உமக்கு நன்றி (ஐயா) -2

02. அப்பா பிதாவே அனைத்தையும் நான்

உம்மிடம் ஒப்படைக்கின்றேன் (2)

1. என் உடலும் உள்ளமும் அனைத்தையுமே…

என் குடும்பம் குழந்தைகள் உறவினரை

2. என் படிப்பு பட்டங்கள் பதவிகளை

என் வெற்றிகள் தோல்விகள் அனைத்தையுமே…

3. என் கவலைகள் துயரங்கள் அனைத்தையுமே…

என் மகிழ்ச்சிகள் இன்பங்கள் அனைத்தையுமே…

03. ஆக்கும் வரமே ஆவியே வருவாய்

காக்கும் கரமே மேவியே தருவாய்.

1. இணைப்பாய் அன்பால் இரு பால் உளமும்

பிணைப்பாய் பிரியா இறப்பே வரினும்

2. மஞ்சள் கொடியும் பூவும் பொட்டும்

நெஞ்சத்துறையும் அன்பும் பண்பும்

3. விஞ்சிப் பெருகும் தியாகச் சுடரும்

தஞ்சம் பெற்றே தயவாய் வளர

04. ஆட்கொள்ள வந்திடுவாய் – தூய

ஆவியே எழுந்திடுவாய் (2)

ஆவலுடன் நான் காத்திருந்தேன் – 2 என்

ஆசைகள் மலர்ந்திட விரைந்திடுவாய் – 2

1. அக்கினிப் பிழம்பாய்க் கணண்றெழுந்து

தீமையை எதிர்த்திட வந்திடுவாய்

இடியாய் மீண்டும் உருவெடுத்து

அடிமை வாழ்வினை அழித்திடுவாய்

இருளால் உலகம் தவிக்கின்றதே

உன் வரவால் விடியலும் தந்திடவா

வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை – 2

2. புயலாய் சீறி சுழன்றெழுந்து

தாழ்வினைப் போக்கிட வந்திடுவாய்

அலையாய் தொடர்ந்து வந்திங்கு

மனிதம் மலர்ந்திடச் செய்திடுவாய்

மலையாய் துன்பம் எழுந்தாலும்

உன் வரவால் யாவும் நொறுங்கிடுமே

வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை – 2

05. ஆதிமுதல் அனைத்தையும் ஆளும்

பரமனின் ஆவியே வருக

ஆண்டவன் பாருக்கு வாக்களித்திட்ட

பரிசுத்த ஆவியே வருக – 2

1. தவறிடும் உலகினில் தாய்த்திருச்சபைதனை

தவறாமல் காத்திட வருக

தேவனின் பிரதிநிதி திருமறை ஆளத்

தங்குவரம் தர வருக.

2. பொய்மிகு போதகம் மலிந்திடும் உலகினைப்

பிழைநீக்கிக் காத்திட வருக

பரமனின் வார்த்தைக்கு பிழையாய் பொருள்தரும்

பாரினைக் காத்திட வருக.

3. புலன்களால் புரியா பரமனின் வார்த்தையை

புரிந்திடச் செய்யவே வருக – 2

புவியினில் புரியா மறை பொருள் ஏற்றிட

அருள் துணை ஈந்திட வருக

4. பாவிகள் எங்களைப் பரகதி சேர்த்திட

பரிசுத்த ஆவியே வருக – 2

பரமனின் வீட்டினில் பாரினை இணைத்திட

பரிசுத்த ஆவியே வருக

06. ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே -2

1. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே

ஆத்மதாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

2. உமது வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே

எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

3. ஆண்டவன் ஆவி என்மேல் எழுந்து வந்துள்ளார்

அபிசேகம் செய்து இறைவனின் சாயலை

எனக்கு வழங்கியுள்ளார்

07. ஆற்றலாலும் அல்ல அல்ல சக்தியாலுமல்ல அல்ல

ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே ஆகுமே – 2 (2)

1. மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே

குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே

தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா? ஆகுமே

திராட்சைரசம் திருரத்தம் ஆகுமா? ஆகுமே

2. செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே

செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா? ஆகுமே

சிங்கமாடு நட்புறவு ஆகுமா? ஆகுமே

சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே

08. என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

இந்நாளும் எந்நாளும் இயேசுதான்

என் முன்னும் என் பின்னும் இயேசுதான்

என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான்

1. விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்

என்னை மீட்கத் தன்னைத் தந்தவர் இயேசுதான் (2)

அவர் நாமம் நாம் பாட -2

அன்பு காட்டி ஆற்றல் தந்தவர் இயேசுதான்

2. ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தவர் இயேசுதான்

ஆளவைத்துக் காத்து நிற்பதும் இயேசுதான் (2)

அன்புத் தாயாய் என்னைச் சேயாய் -2

காலமெல்லாம் காத்து நிற்பவர் இயேசுதான்

3. வானம் பூமி வாழ வந்தது இயேசுவில்

வாழும் யாவும் வாழ்ந்திருப்பது இயேசுவில் (2)

ஒரு நாளில் இவை யாவும் -2

சங்கமிக்கும் சங்கமிக்கும் இயேசுவில்

09. ஒரு தாய் தேற்றுவது போல்

என் நேசர் தேற்றுவார் (2) அல்லேலூயா

1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே

கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார்

2. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே

ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார்

10. ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கிறேன் – இறைவா

ஆராதனை செய்கிறேன் (2)

1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்

அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றிதுதி கூறி பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

11. தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ

தனது பிள்ளை அவள் மறப்பாளோ

தாய் மறந்தாலும் நான் மறவேனே

தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே

1. குன்று கூட அசைந்து போகலாம்

குகைகள் கூட பெயர்ந்து போகலாம் (2)

அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே

அசைவதில்லை பெயர்வதில்லையே (2)

2. தீ நடுவே நீ நடந்தாலும் ஆழ்கடலைத் தான் கடந்தாலும் -2

தீமை ஏதும் நிகழ்வதில்லையே தீதின்றியே காத்திடுவேன் நான் -2

12. தூய ஆவியே உம்மைக் கூவியழைக்கின்றேன்

வருவாய் வரமே அருள்வாயே

1. இறைவனின் ஞானத்தில் நிறைவு பெற்றே

மறை போதகத்தில் தூண்டலுற்றே

நல்லவை செய்தெமை காப்பாயே

வல்ல ஆவியே வருவாய்

2. அன்பின் மகிழ்ச்சியில் அமைதி பெற்றே

அமையும் பொதுமையில் பொலிவு பெற்றே

நம்பிக்கை நட்பும் வளர்ந்திடவே

அன்பின் ஆவியே வருவாயே

13. தூய ஆவியே துணையாக வருவீர்

இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர்

1. மனதின் தீமைகளை மன்னிக்க வருவீர்

மனதின் கீறல்களை ஆற்றிட வருவீர்

2. மனதின் பாரங்களைப் போக்கிட வருவீர்

மனதின் காயங்களை ஆற்றிட வருவீர்

3. தாழ்வு மனம் நீங்கித் தேற்றிட வருவீர்

தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர்

14. தொடும் என் கண்களையே

உம்மை நான் காண வேண்டுமே

இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே (2)

1. தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே

இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

2. தொடும் என் நாவினையே உம் புகழ் பாட வேண்டுமே

இயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமே

3. தொடும் என் கைகளையே உம் பணி செய்ய வேண்டுமே

இயேசுவே உம் பணி நான் செய்ய வேண்டுமே

4. தொடும் என் மனதினையே மனப் புண்கள் ஆற்ற வேண்டுமே

இயேசுவே மனப்புண்கள் ஆற்ற வேண்டுமே

5. தொடும் என் உடலினையே நோய்கள் தீர வேண்டுமே

இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே

6. தொடும் என் ஆன்மாவையே என் பாவம் போக்க வேண்டுமே

இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே

7. தொடும் என் இதயத்தையே உம் அன்பு பெருக வேண்டுமே

இயேசுவே உம் அன்பு பெருக வேண்டுமே

15. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்

பரம்பொருள் தெய்வமே வாரும் (2)

மூவொரு தேவனே வாரும் அன்பின் மூலப்பரமே வாரும் -2

தேவாதி தேவனே வாரும் எங்கள் திரித்துவ தெய்வமே வாரும் -2

என்றும் எந்தன் நடுவினிலே வாரும் என்னிறை ஏந்தலே வாரும்-2

1. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்-2

உன்னத தெய்வமே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்-2

நித்திய ஜீவனே வாரும் நெஞ்சில் நீங்கிடா நேசனே வாரும் -2

ஆதிபரமே வாரும் என்றும் ஆட்சி செலுத்திட வாரும் -2

2. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்-2

உண்மையின் உருவே வாரும் எங்கள்

உலகத்தின் உதயமே வாரும் (2)

சத்திய தெய்வமே வாரும் அன்பின் சரித்திர நாயகா வாரும் -2

எல்லாம் வல்ல திரித்துவமே வாரும் எங்கும் நிறைந்தவா வாரும்-2

3. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்-2

ஆக்கமே ஊக்கமே வாரும் நெஞ்சின் ஆவலே ஏவலே வாரும் -2

ஈசனே நேசனே வாரும் என்றும் ஈடில்லா இறைவனே வாரும் -2

எத்திசையும் வாழ் இறையருளே இன்று எங்கள் நடுவிலே வாரும்-2

16. புதியதோர் படைப்பாய் புவியினை மாற்றும்

புனிதத்தின் ஆவியே

வரங்களைப் பொழியும் வளம்நிறை ஊற்றே பரிசுத்த ஆவியே(2)

மண்ணின் முகத்தைப் புதுப்பிக்க வருவீர் – நிறை

மகிழ்ச்சியை நிரப்பிட வருவீர் (2)

1. ஞானம் நிறைந்த சொல்வளமே

நலம் தரும் நம்பிக்கை அருட்கொடையே (2)

பிணிகளைத் தீர்க்கும் அருமருந்தே

தேவ கனிகளால் தேற்றும் அதிசயமே – மண்ணின்…

2. வானம் திறந்த தீச்சுடரே அருட்கொடை தந்திடும் அருட்சுகமே -2

குளிரினைப் போக்கும் அனல்காற்றே – வாழ்வின்

குறைகளைத் தீர்க்கும் நிறையருளே (2)- மண்ணின்…

17. வானத்தில் இருந்து வையகம் எழுந்து

புனித ஆவியே வருக

ஞானத்தின் ஒளியை மனதினில் ஏற்றும்

மாசற்ற அன்பே வருக

1. உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே

உண்மையின் வடிவே வருக

பயிருக்கு மழையே பார்வையின் ஒளியே

பரமனின் அருளே வருக

2. கீழ்த்திசை வானில் வாழ்த்திசை பாடும்

காலைக் கதிரே வருக

ஆழ்கடல் மீதினில் அலையுடன் ஆடும்

ஆனந்த நிலவே வருக – 2

3. மனிதனின் மனதில் மணியெனத் துலங்கும்

மாணிக்க விளக்கே வருக

இனிய நல் வாழ்வை உவப்புடன் வழங்கும்

இன்னருட் பெருக்கே வருக – 2

18. விண்ணப்பத்தைக் கேட்பவரே

என் கண்ணீரைக் காண்பவரே

சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்

ஒருவார்த்தை சொன்னால் போதும் – 2 (ஐயா)

2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே -2

ஐயா அதிசயம் செய்பவரே

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy