ஆராதனைப் பாடல்கள்

ஆராதனைப் பாடல்கள்

01. அடைக்கலம் தருகின்ற நாயகனே

அருள்மழை பொழிகின்ற தூயவனே

அடைக்கலம் எனக்கு நீயல்லவோ

அன்புக்கு நீயொரு தாயல்லவோ – 2 (2)

தெய்வீக நீதியின் கதிரவனே

தீமைகள் போக்கும் காவலனே (2)

ஏழையின் கண்களைப் பாராயோ

என்னென்ன கவலைகள் தீராயோ

1. அருள்ஒளி உண்டு உன் விழியினிலே

ஆறுதல் உண்டு உன் மொழியினிலே (2)

பெருந்துயர் காப்பதுன் கரமல்லவோ

பிறந்தே நான் வாழ்வதுன் வரமல்லவோ

2. அணையாத விளக்கு எரிவதனால்

அன்பரின் உள்ளம் தெரிவதனால் (2)

இறைவனே உனது துணை என்று

இதயத்தில் நினைத்தேன் நான் இன்று

 02. அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அர்ப்பணித்தேன் என்னையே

ஆராதனை துதி தோத்திரங்கள்

அப்பனே உமக்குத் தந்தேன் (2)- அன்பு நேசரே உம்…

ஆராதனை ஆராதனை (2)

அன்பர் இயேசு ஆண்டவர்க்கே ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளில் ஒவ்வொரு நிமிடமும்

உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் (2)

என் வாயின் வார்த்தை எல்லாம்

பிறர் காயம் ஆற்ற வேண்டும் (2) ஆராதனை…

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்

என் இதயத் துடிப்பாக மாற்றும் (2)

என் ஜீவ நாட்கள் எல்லாம்

செப வீரன் என்று எழுதும் -2 ஆராதனை…

03. அருள் திரு தேவ தேவன் போற்றி

அவர் தம் திரு நாமம் போற்றி

அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி

அவர் தம் திரு அன்பே போற்றி

அருள் நிறை தூய ஆவி போற்றி

அவர் தம் திரு ஞானம் போற்றி

அருள் நிறை அன்னை மரியாள் போற்றி

அவர் தம் திரு தூய்மை போற்றி

அருள் நிறை சூசை முனியும் போற்றி

அவர் தம் திரு வாய்மை போற்றி

அருள் நிறை தூதர் அமரர் போற்றி

அவர் தம் திரு சேவை போற்றி

அருள் திரு தேவ தேவன் போற்றி

அவர் தம் திரு நாமம் போற்றி

04. அன்பின் தேவநற்கருணையிலே

அழியாப் புகழோடு வாழ்பவரே

அன்புப் பாதையில் வழிநடந்தே

அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்

தற்பரன் நீரே எமை மீட்டீர்

பொற்புடன் அப்பரச குணத்தில்

எப்பொழுதும் வாழ் இறைவனானீர்

எத்தனை வழிகளில் உமதன்பை

எண்பித்தெமை நீ ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்

கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்

நற்கருணை விசுவாசமதில்

நம்பிக்கையூட்டி வளத்திடுவீர்

இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்

யாவரும் வாழத் தயை புரிவீர்

 06. ஆராதனை ஆராதனை இதய வேந்தே ஆராதனை

அப்பத்தின் வடிவில் நெஞ்சத்தைத் திறக்கும்

ஆண்டவா உமக்கே ஆராதனை (2)

1. நதிகள் கடலில் கலக்கும் நேரம்

அமைதி பிறக்கும் நேரம் – எங்கள்

இதயம் உறவில் நிலைக்கும் நேரம்

உம்மில் நிலைக்கும் நேரம்

இயேசுவே உம்மை வணங்கும் நேரம்

எம்மனம் இறைமயமாகும் (2)

வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்

காதில் ஒலித்திடுமே கருத்தில் நிலைத்திடுமே

2. நீதி உறங்க உண்மை உறங்க

மனிதர் தவிக்கும் நேரம் – மண்ணில்

பகைமை போர்கள் போதை நோய்கள்

இருளை பரப்பும் நேரம்

இயேசுவே தேவனே இறங்கி வாரும்

நன்மைகள் ஓங்கிட வாரும் (2)

வானமுதே வாழ்பவரே

வாழ்வு தாருமையா வலிமை தாருமையா

06. ஆராதிக்கின்றோம் நாங்கள் ஆராதிக்கின்றோம்

ஆத்ம நேசர் இயேசுவையே ஆராதிக்கின்றோம் (2)

ஆராதிக்கின்றோம் நாங்கள் ஆராதிக்கின்றோம்

உண்மையிலும் ஆவியிலும் ஆராதிக்கின்றோம் (2)

1. அல்லேலூயா அல்லேலூயா கீதம் பாடியே

அல்லேலூயா கீதம் பாடி ஆராதிப்போமே (2)

இன்று இங்கு விசுவாசத்தால் ஆராதிக்கின்றோம்

அன்று உம்மை நேரில் கண்டு ஆராதிப்போமே (2)

2. வானோரெல்லாம் ஆராதிக்கும் பரிசுத்தரே

ஆனந்தமாய் உந்தன் மக்கள் ஆராதிக்கின்றோம் (2)

எங்களுடைய பாவங்கள் தீரும் ஆராதனையாலே

கோட்டைகள் தரும் கொடுமைகள் தீரும் ஆராதனையாலே (2)

07. மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை

தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

பழைய நியம முறைகள் அனைத்தும் மறைந்து முடிவு பெறுக

புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை

அறிய இயலாக் குறையை நீக்க விசுவாசத்தின் உதவி பெறுக

பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்

புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்

மீட்பின் பெருமை மகிமையோடு

வலிமை வாழ்த்து யாவும் ஆக

இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும்

அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக. ஆமென்.

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy