பாஸ்கா கால திருப்பலி செபங்கள்

தொடக்க, காணிக்கை, நன்றி மன்றாட்டுகள் – பாஸ்கா காலம்

பாஸ்கா எண்கிழமையில் திங்கள்

வருகைப் பல்லவி

விய 13:59 பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு ஆண்டவர் உங்களைக் சென்றார்; அதனால் ஆண்டவரின் சட்டம் என்றும் உங்கள் – இருக்கட்டும், அல்லேலூயா.

அல்லது

தாம் உரைத்தவாறே ஆண்டவர் இறந்தோரிடமிருந்து தெழுந்தார்; அனைவரும் அகமகிழ்ந்து அக்களிப்போம்; ஏனெனில் அவரே என்றென்றும் ஆள்கிறார், அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது திரு அவை புதிய மக்களைப் பெற்றெடுத்துத் தொடர்ந்து வளரச் செய்கின்றீர்; உம் அடியார்கள் நம்பிக்கையால் பெற்றுக்கொண்ட அருளடையாளத்தை வாழ்ந்து காட்டுவதில் நிலைத்து நிற்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைப் பரிவுடன் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பெயரை அறிக்கையிடு வதாலும் திருமுழுக்கினாலும் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்), பக். 529. உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் . . .” எனும் மன்றாட்டும் “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய . . .” எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

உரோ 6:9 இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்;
இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
பாஸ்கா மறைநிகழ்வின் அருள் எங்கள் மனங்களில் பொங்கி வழிய உம்மை வேண்டுகின்றோம்: முடிவில்லா மீட்பின் வழியில் பயணம் தொடங்கிய இவர்கள் உம் கொடைகளுக்குத் தகுதியுள்ளவர்களாகுமாறு நீர் அருள்வீராக. எங்கள்:

====================

பாஸ்கா எண்கிழமையில் செவ்வாய்

வருகைப் பல்லவி

காண். சீஞா 15:3-4 ஞான மாகிய நீரைப் பருக அவர்களுக்கு அளித்தார்; அவர்களில் அது தளர்வுறாமல் நிலைத்திருக்கும். அது அவர்களை எக்காலத்திலும்
மேம்படுத்தும், அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

பாஸ்கா மறைபொருளின் பயன்களை எங்களுக்கு அளித்த இறைவா, உம்முடைய மக்களை விண்ணகக் கொடைகளால் நிரப்பியருளும்; அதனால் முழுமையான விடு தலையைப் பெற்றுக்கொண்ட அவர்கள், இப்போது மண்ணுலகில் துய்க்கும் மகிழ்ச்சியை விண்ணுலகில் நிறைவாகப் பெற்றுக்கொள்ள அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடு ம்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்),
உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் . . .” எனும் மன்றாட்டும் “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய …” எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

‘கொலோ 3:1-2நீங்கள் கிறிஸ்து வோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றையே நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். மே லு லகு சார்ந்தவற்றையே எண்ணுங்கள். அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்குச் செவிசாய்த்து திருமுழுக்கின் நிறைவான அருளை உமது குடும்பத்தினரின் இதயங்களில் நீர் பொழிந்துள்ளீர்; அவர்கள் நிலையான பேற்றினை அடையத் தகுதி பெறச் செய்வீராக. எங்கள்.

====================
பாஸ்கா எண்கிழமையில் புதன்

வருகைப் பல்லவி

காண். மத் 25:34 என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உ தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டி
ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள், அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆண்டவருடைய உயிர்ப்புப் பெருவிழாவால் ஆண்டுதோறும் எங்களை மகிழ்விக்கின்றீர்; அதனால் நாங்கள் கொண்டாடும் இக்காலத் திருவிழாக்கள் வழியாக நிலையான மகிழ்ச்சிக்கு வந்து சேரத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மனிதருக்கு மீட்பு அளிக்கும் பலிப்பொருள்களை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் மனதிலும் உடலிலும் நலம் பெற்றுச் செயலாற்ற அருள்வீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்), பக். 529.
உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் . . .” எனும் மன்றாட்டும் “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய …” எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 24:35 அவர் அப்பத்தைப் பிடும்போது சீடர்கள் ஆண்டவர் இயேசுவைக்
கண்டுணர்ந்து கொண்டார்கள், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் அருளடையாளத்தை வணக்கத்தோடு பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: பழைய பாவங்களிலிருந்து எங்களைக் கழுவித் தூய்மைப்படுத்தி, புதுப் படைப்பாக மாற்றுவீராக. எங்கள்.

====================

பாஸ்கா எண்கிழமையில் வியாழன்

வருகைப் பல்லவி

சாஞா 10:20-21 ஆண்டவரே, வெற்றி அளிக்கும் உமது கைவன்மையை ஒருமிக்கப் போற்றினார்கள். ஏனெனில் பேச முடியாதவர்களின் நாவை ஞானம் திறந்தது. குழந்தைகளின் நாவைத் தெளிவாக்கியது.
அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது பெயரை அறிக்கையிடுவதில் பல மக்களினங்களை ஒன்றுசேர்த்தருளினீரே; திருமுழுக்குத் தண்ணீரால் புதுப் பிறப்பு அடைந்தவர்கள் மனங்களில் ஒரே நம்பிக்கையும் செயல்களில் ஒரே பரிவிரக்கமும் கொண்டிருக்க அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் மகிழ்வுடன் கொண்டுவரும் பலிப்பொருள்களைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: புதுப் பிறப்பு அடைந்தவர்கள் உமது விண்ண க அருள் உதவிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்), பக். 529.
உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் . . .” எனும் மன்றாட்டும் ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய …” எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மை மிக்க செயல்களை அறிவியுங்கள். அவர் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக. எங்கள்.

====================பாஸ்கா எண்கிழமையில் வெள்ளி

வருகைப் பல்லவி

காண். திபா 77:53 ஆண்டவர் தம் மக்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றார்: அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூடிக்கொண்டது, அல்லே

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, மனிதக் குலத்தை ஒப்புரவாக்குவதற்காக நீர் நிறுவிய உடன்படிக்கையில் பாஸ்கா மறைபொருளை எங்களுக்குத் தந்தீரே; நாங்கள் அறிக்கையிட்டுக் கொண்டாடுவதைச் செயல்களில் வெளிப்படுத்த எங்கள் உள்ளங்களைத் தூண்டியெழுப்புவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இந்தப் பாஸ்கா காணிக்கைகளால் நிகழ்ந்த உறவுப் பரிமாற்றத்தைக் கனிவுடன் எங்களில் நிறைவுக்குக் கொண்டுவர உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மண்ணக நாட்டங்களிலிருந்து விடுபட்டு விண்ணகத்தின் மீது விருப்பம் கொள்ளச் செய்வீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்), பக். 529.
உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் . . .” எனும் மன்றாட்டும் “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய … எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 21:12-13 இயேசு தம் சீடர்களிடம், “உணவருந்த வாருங்கள்”, என்றார். அப்பத்தை எடுத்து, அவர்களிடம் கொடுத்தார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடு கின்றோம்.

=====================

பாஸ்கா எண்கிழமையில் சனி

வருகைப் பல்லவி

திபா 104:43 ஆண்டவர் தம் மக்களை அக்களிப்போடும் தாம் தெரிந்தெடுத்தவர்களை மகிழ்ச்சியோடும் வெளிக்கொணர்ந்தார், அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது அருள்பெருக்கால் உம்மில் நம்பிக்கை கொள்ளும் மக்களைப் பெருகச் செய்கின்றீர்; நீர் தேர்ந்தெடுத்தவர்களைக் கனிவோடு கண்ணோக்கி, திருமுழுக்கு என்னும் அருளடையாளத்தின் வாயிலாகப் புதுப் பிறப்பு அடைந்தவர்களைச் சாகாத்தன்மை எனும் பேற்றினால் அணிசெய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக.

எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்), பக். 529.
உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உமமுடைய புனிதர் அனைவருடனும் . . .” எனும் மன்றாட்டும் “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய …” எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.
கலா 3:27

திருவிருந்துப் பல்லவி

கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.

====================பாஸ்கா கால 2-ஆம் ஞாயிறு
அல்லது இறை இரக்கத்தின் ஞாயிறு

வருகைப் பல்லவி

1 பேதுரு 2:2 புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல வஞ்சகமற்ற ஞானப்
அருந்த ஆர்வம் உள்ளவராய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளர்வீர்கள், அல்லேலூயா.

அல்லது4 எஸ் 2:36-37 உங்கள் மாட்சியில் பெருமகிழ்ச்சி கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் உங்களை விண்ணரசுக்கு அழைத்துள்ளார், அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள இரக்கத்தின் இறைவா, மீண்டும் மீண்டும் நாங்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவிலே உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை நீர் தூண்டுகின்றீர்; நீர் வழங்கிய இவ்வருளைப் பெருக்குகின்றீர்: இவ்வாறு திருமுழுக்கினால் நாங்கள் கழுவப்பட்டுள்ளதையும் தூய ஆவியாரால் நாங்கள் புதுப் பிறப்பு அடைந்துள்ளதையும் இரத்தத்தால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளதையும் நாங்கள் சரியான முறையில் அறிந்து, புரிந்து கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புதுப் பிறப்பு அடைந்த உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பெயரை அறிக்கையிடுவதாலும் திருமுழுக்கினாலும் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்), பக். 523
உமராமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நா” “உம்முடைய புனிதர் அனைவருடனும் • • • • ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய …” எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

” அனைவருடனும் . . .” எனும் மன்றாட்டும் “ஆகவே அதும்போது, இந்நாளுக்கு உரிய
“உம்முடைய புனிதர் அனைவருடனும்…” எனும் மன்றாட்டும் “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய…” எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 20:27
உன் கையை இடு, ஆணிகள் இருந்த இடத்தைக் கண்டறிவாய்: ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருளடையாளத்தை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்; அதனால் அதன் ஆற்றல் எங்களுடைய உள்ளங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 372). மக்களின் பிரியாவிடைக்காகக் கீழ்வருபவை பாடப்படும்

அல்லதுசொல்லப்படும்: சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லதுஅமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா. எல்லாரும் பதிலுரைக்கின்றனர்: இறைவனுக்கு நன்றி. அல்லேலூயா, அல்லேலூயா.

====================384 பாஸ்கா காலம்
திங்கள்

வருகைப் பல்லவி

உரோ 6:9 இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல, அல்லேல

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருள் உதவிகளால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் மண்ணகப் பெற்றோரின் சாயலை நாங்கள் கடந்து சென்று விண்ணகத் தந்தையின் உருவில் வளர்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால், அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 20:19 இயேசு தம் சீடர்களின் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி
உரித்தாகுக” என்றார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.

====================

பாஸ்கா இரண்டாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் :
செவ்வாய்

வருகைப் பல்லவி

திவெ 19:7,8 மகிழ்வோம், பேருவகையுடன் அக்களிப்போம்; கடவுளுக்கே மாட்சி செலுத்துவோம். ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய
ஆண்டவர் ஆட்சி செலுத்து கின்றார், அல்லே லூயா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஆற்றலை அறிவிக்க எங்களுக்கு அருள் புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது கொடையின் பிணையை அவரில் பெற்றுக்கொண்ட நாங்கள், அதன் முழுமையான வெளிப்பாட்டினைக் கண்டுகொள்ளும் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 24:46,26
கிறிஸ்து பாடுபட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழ வேண்டும்.
அவ்வாறு அவர் மாட்சியில் நுழைய வேண்டும், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக. எங்கள்.

====================

386 பாஸ்கா காலம்
புதன்

வருகைப் பல்லவி

காண். திபா 17:50; 21:23 ஆவண்டவரே, உமது
உம் மக்களிடையே உம்மைப் போற்றுவேன். ஆண்டவரே
பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஆண்டுதோறும் நினைவுகூரும் மறைநிகழ்வுகளால் தொடக்கத்திலிருந்த மனித இயல்பின் மேன்மை புதுப்பிக்கப்பட்டு உயிர்த்தெழுதலின் எதிர்நோக்கைப் பெற்றுள்ளது; அதனால் நாங்கள் நம்பிக்கையில் கொண்டாடுவதை முடிவில்லா அன்பில் பெற்றுக்கொள்ள உமது கனிவை அருள வேண்டுகின்றோம். உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:16,19 நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன்; நீங்கள் சென்று கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை
ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

====================

பாஸ்பகா இரண்டாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
வியாழன்

வருகைப் பல்லவி

காண். திபா 67:8-9,20
கடவுளே! நீர் புறப்பட்டு உம்முடைய மக்கள் முன் நடந்து சென்று, அவர்களோடு தங் குகையில் பூவுலகு அதிர்ந்தது; வானம் மழையைப்
பொழிந்தது, அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உலக மீட்புக்காகப் பாஸ்கா பலியை ஏற்படுத்திய நீர், உம் மக்களின் வேண்டல்களுக்குக் கனிவுடன் செவிசாய்ப்பீராக; அதனால் எங்கள் தலைமைக் குருவாம் கிறிஸ்து எங்களுக்காகப் பரிந்துபேசி, அவர் எங்களைப் போன்று இருப்பதால் எங்களை ஒப்புரவாக்கி, உமக்கு இணையாக இருப்பதால் எங்களை மன்னிப்பாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள். –

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

மத் 28:20
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்,
அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருளும். எங்கள்.

====================388 பாஸ்கர் காலம்
வெள்ளி

வருகைப் பல்லவி

திவெ 5:8-10 ஆண்டவரே, உமது இரத்தத்தால் குலம், மொழி, மக்களினம், நாம் ஆகிய அனைத்தினின்றும் எங் களை மீட்டுக்கொண் டீர்; எங்க ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் எங்க கடவுளுக்காக ஏற்படுத்தினீர், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நேர்மையான மனத்தினரின் ஒளியும் எதிர்நோக்குமாக இருப்பவரே, உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: எங்கள் இதயங்கள் உமக்கு ஏற்ற மன்றாட்டைப் புரிவதாலும் என்றும் உமது புகழைக் கடமை உணர்வோடு பறைசாற்றுவதாலும் உம்மை என்றும் மேன்மைப்படுத்துவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

உரோ 4:25
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காகக் கையளிக்கப்பட்டார்; நாம் ஏற்புடையவராகும்படி உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனின் பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

====================

பாஸ்கா இரண்டாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
சனி

வருகைப் பல்லவி

காண். 1 பேது 2:3 உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மைமிக்க செயல்களை அறிவியுங் கள். அவர் இருளிலிருந்து தமது வியத்தகு
ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார், அல்லே லூயா.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, பாவத்தின் சட்டத்தால் எழுதப்பட்ட கடன் சீட்டை உம் திருமகன் கிறிஸ்துவின் உயிர்ப்பு எனும் பாஸ்கா மறைநிகழ்வால் அழித்தீரே; எங்கள் உள்ளத்திலிருந்தும் நீரே அதை அகற்றுவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லதுஇறைவா, உம் நம்பிக்கையாளருக்குப் பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக, இரக்கத்தின் கதவைத் திறக்கத் திருவுள மானீர்; அதனால் நீர் காட்டிய உமது திருவுளத்தின் வழியை நாங்கள் பின்பற்றி வாழ்வின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாமல் இருக்க இரக்கத்துடன் எங்களைக் கண்ணோக்குவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:24 தந்தையே, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; அதனால் நீர் எனக்கு அளித்த மாட்சியை அவர்கள்
காண்பார்களாக, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமமைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டு செல்வனவாக. எங்கள்.

====================பாஸ்கா கால 3-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 65:1,2 அனைத்து லகோரே, கடவுளைப் போற்றி ஆர்ப்பரியு ங் கள்,
இசை பாடுவீர்; அவரது புகழை அவரது பெயருக்கு இசை பாடுவீர்; மாட்சிப் படுத்து ங் கள், அல்லேலூயா.
வேல் வரலாறு…

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புதுப்பிக்கப்பெற்ற இளமை உணர்வுடன் உம் மக்கள் என்றும் அக்களிப்பார்களாக; அதனால் உம் சொந்த மக்கள் என்ற மாட்சியை மீண்டும் பெற்றுள்ள நாங்கள் உயிர்ப்பின் நாளுக்காகப் பேரின்பத்துடனும் உறுதியான எதிர்நோக்குடனும் காத்திருக்கச் செய்வீராக. உம்மோடு. “நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால் அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

முதல் ஆண்டில்
லூக் 24:35 அவர் அப்பத்தைப் பிடும்போது சீடர்கள் ஆண்டவர் இயேசுவைக்
கண்டுணர்ந்து கொண்டார்கள், அல்லேலூயா. இரண்டாம் ஆண்டில்
லூக் 24:46-47 கிறிஸ்து பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து மூன்றாம் நாள் உயர்த்தெழ வேண்டும்; அவருடைய பெயரால் மனந்திரும்புது – பாவ மன்னிப்பும் அனைத்து நாடுகளிலும் பறைசாற்று—
வேண்டும், அல்லேலூயா. மூன்றாம் ஆண்டில்
காண். யோவா 21:12-13 இயேசு தம் சீடர்களிடம், ”உணவருந்த வாருங்கள் . எல் அப்பத்தை எடுத்து, அவர்களிடம் கொடுத்தார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறைநிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.
சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 6 24).

====================பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறுக்கு பின்
திங்கள்

வருகைப் பல்லவி

தம் ஆடுகளுக்காக உயிரைக் கொடுத்த, தமது மந்தைக்காக ) கனிந்து உயிரைக் கொடுத்த நல்லாயன் உயிர்த்தெய அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருள் உதவிகளால் கிறிஸ்துவின் இயல்புக்கு ஏற்ப எங்களை மாற்றியருள உம்மை வேண்டுகின்றோம்: ஆதலால் பழைய மனிதனுக்கு உரிய இயல்பைக் களைந்துவிட்டு அவருடைய வழிகளில் வாழ எங்களுக்கு வரம் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங் களுக்கு அளிக்கிறேன். நான் உங் களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல, என்கிறார் ஆண்டவர், அல்லே லூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்.

====================

பாஸ்கா மூன்றாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
செவ்வாய்

வருகைப் பல்லவி

திவெ 19:5; 12:10
கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங் கள். ஏனெ னில் இதோ மீட்பும் வல்லமையும் நம் கடவுளின் ஆட்சியும் மெசியாவின் அதிகாரமும் வந்துவிட்டன, அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, தண்ணீராலும் தூய ஆவியாராலும் மறு பிறப்பு அடைந்தவர்களுக்கு விண்ணக ஆட்சியின் நுழைவாயிலைத் திறந்துவிடுகின்றீர்; உம் அடியார்கள் மீது நீர் பொழிந்துள்ள அருளைப் பெருகச் செய்தருளும்: அதனால் அவர்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மைபெற்று உமது பரிவிரக்கத்தால் எவ்வித வாக்குறுதிகளையும் இழக்காதிருப்பார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால் அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).
உரோ 6:8

திருவிருந்துப் பல்லவி

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், கிறிஸ்துவோடு வாழ்வோம்
என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.

====================பாஸ்கா மூன்றாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
புதன்

வருகைப் பல்லவி

காண். திபா 70:8,23 உமது புகழால் என் வாய் நிரம்புவதாக; அதனால் நான் உமக்குப் புகழ் பாட இயலும்; நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் உதடுகள் மகிழ்வுறும், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தில் நீர் தங்கியிருந்து கனிவுடன் அதை வளரச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது நம்பிக்கையின் அருளைப் பெற்றவர்கள் உம் ஒரே திருமகனாய் உதித்தவரின் உயிர்ப்பில் நிலையான பங்குபெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார்; தமது திரு இரத்தத்தால் மீட்கப்பட்ட நம் மீது ஒளி வீசினார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்கப் பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக. எங்கள்.

====================

பாஸ்கா மூன்றாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
வியாழன்

வருகைப் பல்லவி

காண். விப 15:1-2 ஆண்டவருக்கு நாம் புகழ் பாடுவோம்; ஏனெனில் அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல், அவரே என் விடு தலை, அல்லேலூயா.
OOI

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இந்நாள்களில் உமது பரிவிரக்கத்தை நாங்கள் விரைவாகப் பெற்று அதை முழுமையாய் உணர்ந்து கொள்வோமாக; அதனால் பொய்ம்மையின் இருளிலிருந்து நீர் எங்களை விடுவித்து உமது உண்மையின் படிப்பினைகளை நாங்கள் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

2 கொரி 5:15
வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

====================பாஸ்கா மூன்றாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
வெள்ளி

வருகைப் பல்லவி

திவெ 5:12 கொல்லப்பட்ட, ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞா ஆற்ற லும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெற பெற்றது, அல்லே லூயா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, ஆண்டவருடைய உயிர்ப்பின் அருளை நாங்கள் அறிந்துகொள்ள எங்களுக்கு அருளுமாறு உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தூய ஆவியாருடைய அன்பால் புது வாழ்வுக்கு உயிர்த்தெழுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

சிலுவையில் அறையப்பட்டவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்; நம்மை மீட்டார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.

========———
பாஸ்கா மூன்றாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 397
சனி

வருகைப் பல்லவி

கொலோ 2:12 நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்து கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மை நம்புவோரைத் திருமுழுக்குத் தண்ணீரால் புதுப்பித்தீரே; கிறிஸ்துவில் புதுப் பிறப்பு அடைந்தவர்களுக்கு நீர் பாதுகாப்பை அளித்தருளும்; அதனால் அவர்கள் பொய்ம்மையின் எல்லாத் தாக்குதலையும் முறியடித்து உமது ஆசியின் அருளை உண்மையுடன் காத்துக்கொள்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடு ம்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:20-21
தந்தையே, அவர்களுக்காக வேண்டுகிறேன்: அவர்களும் நம்மில் ஒன்றாய் இருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும், என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

====================பாஸ்கா கால 4-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 32:5-6 ஆண்டவரது இரக்கத்தால் பூவுலகு நிறைந்துள்ளது ; ஆண்ட வாக்கினால் வானங்கள் நிலைபெற்றுள்ளன, அல்லே லூயா

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணவரின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்ள எங்களை அழைத்துச் செல்கின்றீர்; அதனால் நல்ல ஆயராகிய கிறிஸ்து துணிவோடு முன்னரே சென்றுள்ள இடத்துக்குப் பணிவுள்ள மந்தையாகிய நாங்களும் வந்து சேர்வோமாக. உம்மோடு. “நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாக அமைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

தம் ஆடு களுக்காக உயிரைக் கொடுத்து, தமது மந்தைக்காக உளம் கனிந்து உயிரைக் கொடுத்த நல்லாயன் உயிர்த்தெழுந்தார்,
அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

நல்ல ஆயரே, உமது மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; உம் திருமகனின் உயர் மதிப்புள்ள இரத்தத்தால் மீட்ட உம் ஆடுகளை நிலையான பசும்புல் வெளியில் கூட்டிச் சேர்க்க அருள்வீராக. எங்கம் சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 624).

====================

பாஸ்கா நான்காம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
திங்கள்

வருகைப் பல்லவி

உரோ 8:9 இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல, அல்லே லூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, பேறுபெற்றோரின் முழுநிறை ஒளியே, பாஸ்கா மறைநிகழ்வுகளை இவ்வுலகில் நாங்கள் கொண்டாட அருள்கூர்ந்தீர்; இவ்வாறு உமது அருளின் முழுமையை நாங்கள் என்றென்றும் கொண்டாடி மகிழ்வுறச் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால், அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 20:19 இயேசு தம் சீடர்களின் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்றார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.

====================பாஸ்கா நான்காம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
செவ்வாய்

வருகைப் பல்லவி

திவெ 19:7,6 மகிழ்வோம், பேருவகையுடன் அக்களிப்போம், கடவ மாட்சி செலுத்து வோம்; ஏனெனில் எல்லாம் வல்ல கடவ ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்றார், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, ஆண்டவருடைய உயிர்ப்பின் மறைநிகழ்வுகளைக் கொண்டாடிய நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் மீட்பின் மகிழ்ச்சியை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறச் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 24:46,26 கிறிஸ்து பாடுபட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழ வேண்டும்.
அவ்வாறு அவர் மாட்சியில் நுழைய வேண்டும், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக. எங்கள்.

====================

பாஸ்கா நான்காம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
புதன்

வருகைப் பல்லவி

காண். திபா 17:50; 21:23 உம் மக்களிடையே உம்மைப் போற்றுவேன். ஆண்டவரே, உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன், அல்லேலூயா.


திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையாளரின் வாழ்வும், மனத்தாழ்மை உள்ளோரின் மாட்சியும், நேர்மையாளர்களின் பேறுமானவரே, உம்மைக் கெஞ்சி மன்றாடும் எம் வேண்டல்களைக் கனிவுடன் கேட்டருளும்: தாராளமாய் நீர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற ஆவல் கொண்டிருக்கும் எங்களை என்றும் உமது மிகுதியான கொடைகளால் நிரப்புவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்துகொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:16,19 நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன்; நீங்கள் சென்று கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

====================பாஸ்கா நான்காம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
வியாழன்

வருகைப் பல்லவி

கடவுளேகாண். திபா 67:8-9,20 நீர் புறப்பட்டு, உம்முடைய மக்கள் முன் நடந்து சென்று. அவர்களோடு தங்குகையில் பூவுலகு அதிர்ந்தது; வானம் மழையைப்
பொழிந்தது, அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது பரிவிரக்கத்தின் வியத்தகு அருளடையாளத்தால் மனித இயல்பைச் சீர்படுத்தி, தொடக்கத்தில் இருந்ததைவிட மேலான மேன்மையை மனிதருக்கு வழங்கியுள்ளீர்; இவ்வாறு மறு பிறப்பின் மறைநிகழ்வால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான அவர்களில் உமது முடிவில்லா அருளின் கொடையும் ஆசியும் நிலைபெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

மத் 28:20
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்

====================

பாஸ்கா நான்காம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
வெள்ளி

வருகைப் பல்லவி

திவெ 5:9-10 ஆண்டவரே, உமது இரத்தத்தால் குலம், மொழி, மக்களினம், நாடு ஆகிய அனைத்தினின்றும் எ ங் களை மீட்டுக்கொண் டீர்; எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் எ ங் கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

எங்கள் விடுதலைக்கும் மீட்புக்கும் காரணரான இறைவா, உம்மை வேண்டுவோரின் குரலைக் கேட்டருளும்; உம் திருமகன் சிந்திய இரத்தத்தால் நீர் மீட்டுக்கொண்ட உம் மக்கள் உம்மால் வாழவும் உமது முடிவில்லாப் பாதுகாப்பில் மகிழவும் செய்வீராக. உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).
D6TD

திருவிருந்துப் பல்லவி

உரோ 4:25 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காகக் கையளிக்கப்பட்டார்; நாம் ஏற்புடையவராகும்படி உயிர்த்தெழுந்தார்,
‘அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

====================பாஸ்கா நான்காம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
சனி

வருகைப் பல்லவி

காண். 1பேது 2:9 உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மைமிக்க செயல்களை அறிவியுங் கள். அவர் இருளிலிருந்து தமது வியக்க ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார், அல்லே லூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, பாஸ்கா பெருவிழாவால் உலகுக்கு விண்ணக நலன்களையும் உமது திரு அவைக்கு மன்னிப்பையும் கனிவுடன் அருளுகின்றீர்; இன்றைய வாழ்வில் நாங்கள் கடைப்பிடிப்பவை நிலைவாழ்வுக்கு எங்களை இட்டுச்செல்வனவாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:24 தந்தையே, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; அதனால் நீர் எனக்கு அளித்த மாட்சியை அவர்கள் காண்பார்களாக, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்:

====================

பாஸ்கா கால 5-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 97:1-2
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடு ங் கள், ஏனெனில் ஆண்டவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார், அல்லே லூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா மறைபொருளை எப்பொழுதும் எங்களில் நிறைவு பெறச் செய்தருளும்; இவ்வாறு புனிதத் திருமுழுக்கினால் நீர் புதுப்பிக்கத் திருவுளம் கொண்ட நாங்கள் உமது பாதுகாப்பின் உதவியால் மிகுந்த பயன் தந்து நிலைவாழ்வின் மகிழ்ச்சிக்கு வந்து சேர அருள்வீராக. உம்மோடு.
“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).
காண். யோவா 15:1,5

திருவிருந்துப் பல்லவி

உண்மையான திராட்சைச் செடி நானே. நீங்கள் கொடிகள், என்கிறார் ஆண்டவர். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும்
இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 624).

====================பாஸ்கா ஜந்தாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
திங்கள்

வருகைப் பல்லவி

தம் ஆடுகளுக்காக உயிரைக் கொடுத்த, தமது மந்தைக்காக உளம் கனிந்து உயிரைக் கொடுத்த நல்லாயன் உயிர்த்தெ அல்லேலூயா.


திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய வலக் கையின் முடிவில்லா ஆதரவால் உமது குடும்பத்தை அரவணைத்துக் காத்தருள் உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு உம் ஒரே திருமகனின் உயிர்ப்பினால் தீமைகள் அனைத்திலிருந்தும் நாங்கள் பாதுகாக்கப்பெற்று, விண்ணகக் கொடைகளால் உம்மை நோக்கி முன்னேறிச் செல்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல, என்கிறார் ஆண்டவா,
அல்லே லூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்:

====================

பாஸ்கா ஐந்தாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
செவ்வாய்

வருகைப் பல்லவி

திவெ 19:5; 12:10 கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள். ஏனெனில் இதோ மீட்பும் வல்லமையும் நம் கடவுளின் ஆட்சியும் மெசியாவின்
அதிகாரமும் வந்துவிட்டன, அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; உம் மக்களாகிய எங்கள் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் உறுதிப்படுத்தும்; அதனால் உம் வாக்குறுதிகள் உண்மையாக நிறைவேறும் என அறிந்திருக்கும் நாங்கள் அவற்றை மகிழ்வுடன் எதிர்பார்த்திருக்கச் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால், அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

உரோ 6:8
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், கிறிஸ்துவோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறைநிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.

====================பாஸ்கா ஐந்தாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
புதன்

வருகைப் பல்லவி

காண். திபா 70:8, 28
உமது புகழால் என் வாய் நிரம்புவதாக; அதனால் நான் உ. புகழ் பாட இயலும்; நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் உ
பெயரில் என் உதடுகள் மகிழ்வுறு ம், அல்லே லூயா.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, மாசின்மையை மீண்டும் தருபவரும் அதை அன்பு செய்பவருமானவரே. உம் அடியார்களின் இதயங்களை உம்மை நோக்கித் திருப்புவீராக; அதனால் அவநம்பிக்கை எனும் இருளிலிருந்து நீர் விடுவித்த அவர்கள் உமது உண்மை எனும் ஒளியிலிருந்து ஒருபோதும் விலகிவிடாமல் இருப்பார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக. எங்கள்.
0601

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533.

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார்; தமது திரு இரத்தத்தால் மீட்கப்பட்ட
நம் மீது ஒளி வீசினார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து எனறென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக. எங்கள்

====================

பாஸ்கா ஐந்தாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 409
வியாழன்

வருகைப் பல்லவி

காண். விப 15:1-2 ஆண்டவருக்கு நாம் புகழ் பாடுவோம்; ஏனெனில் அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல், அவரே என் விடு தலை, அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இறைப்பற்று இல்லாத எங்களை உமது அருளால் நேர்மையாளர்களாகவும் இரங்குதற்கு உரிய எங்களைப் பேறுபெற்றவர்களாகவும் மாற்றுகின்றீர்; இவ்வாறு உம் செயலாலும் கொடைகளாலும் நீர் உடனிருப்பதால் நம்பிக்கையினால் ஏற்புடையோராக்கப்பட்டவர்கள் அதில் இறுதிவரை நிலைத்து நிற்கும் ஆற்றல் பெறுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

2 கொரி 5:15வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு பெறச் செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

====================பாஸ்கா ஐந்தாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள்
வெள்ளி

வருகைப் பல்லவி

திவெ 512 கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞா
“மும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது, அல்லே லூயா.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பாஸ்கா மறைநிகழ்வுகளுக்கு ஏற்ப எங்கள் வாழ்வு அமைந்திட அருள்புரியுமாறு உம்மை வேண்டுகின்றோம்: என்றும் நிலைத்திருக்கும் உமது ஆற்றலால் எங்களைக் காத்து மீட்டருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

சிலுவையில் அறையப்பட்டவர்
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்; நம்மை மீட்டார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.

====================

பாஸ்கா ஐந்தாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 411
சனி

வருகைப் பல்லவி

கொலோ 2:12 நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய் யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள், அல்லேலூயா.

திருக்குழும் மன்றாட்டு

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, திருமுழுக்கின் புதுப் பிறப்பால் விண்ணக வாழ்வை எங்களுக்கு அளிக்கத் திருவுளமானீர்; அழியாத் தன்மைக்குத் தகுதியுடையவர்கள் என நீர் ஏற்றுக்கொண்ட நாங்கள் உமது உதவியால் உமது மாட்சியின் நிறைவுக்கு வந்து சேர அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).
யோவா 17:20-21

திருவிருந்துப் பல்லவி

தந்தையே, அவர்களுக்காக வேண்டுகிறேன்: அவர்களும் நம்மில் ஒன்றாய் இருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும், என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

====================பாஸ்கா கால 6-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண், எசா 48:20 ஆரவாரக் குரலெழுப்பி, முழங் கி அறிவியுங்கள் : 2 எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள். ஆண்டவர் தம் மத்
மீட்டு விட்டார், அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உயிர்த்தெழுந்த ஆண்டவரது மாட்சியின் பொருட்டு பேரின்பத்தின் இந்நாள்களைப் பொருளுணர்ந்து ஈடுபாட்டுடன் கொண்டாட எங்களுக்கு அருள் புரியும்; அதனால் நாங்கள் நினைவுகூர்ந்து கொண்டாடுவதை என்றும் செயலில் கடைப்பிடிப்போமாக. உம்மோடு. “நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:15-16 நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான்
தந்தையிடம் கேட்பேன், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக்.6 24).

======================

பாஸ்கா ஆறாம் ஞாயிற்றுக்குப்பின் வரும் வாரநாள்கள் 413
திங்கள்

வருகைப் பல்லவி

உரோ 6:9 இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல, அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, பாஸ்கா விழாவைக் கொண்டாடிய நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா கொண்டாட்டத்தின் பயன்களை நாங்கள் எல்லாக் காலங்களிலும் துய்த்திடச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால், அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

யோவா 20:19 இயேசு தம் சீடர்களின் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்றார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.

====================பாஸ்கா ஆறாம் ஞாயிற்றுக்குப்பின் வரும் வாரநாள்கள் 413
செவ்வாய்

வருகைப் பல்லவி

திவெ 19:7,6 மகிழ்வோம், பேருவகையுடன் அக்களிப்போம்; கட மாட்சி செலுத்துவோம். ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளா ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்றார், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, எங்களுக்கு உதவியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகன் கிறிஸ்துவின் உயிர்ப்பில் நாங்கள் உண்மையாகவே பங்குபெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 24:46,26
கிறிஸ்து பாடுபட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழ வேண்டும்.
அவ்வாறு அவர் மாட்சி அடைய வேண்டும், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக. எங்கள்.

====================

பாஸ்கா ஆறாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 415
புதன்

காலைத் திருப்பலி

பின்வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா கொண்டாடப்படும் இடங்களில் இத்திருப்பலி அதற்கு முந்திய நாள் மாலைத் திருப்பலியாகவும் கொண்டாடப்படலாம்.

வருகைப் பல்லவி

காண். திபா 17:50; 21:23 உம் மக்களிடையே உம்மைப் போற்றுவேன். ஆண்டவரே, உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு உதவியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய உயிர்த்தெழுதல் மறைநிகழ்வைப் பெருவிழாவாகக் கொண்டாடியது போல அவரது வருகையின்போது புனிதர்கள் அனைவரோடும் மகிழ்ந்திருக்க நாங்கள் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:16,19 நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன்; நீங்கள் சென்று கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை
ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு பெறச் செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

====================

விண்ணேற்றப் பெருவிழா கடன் திருநாளாகக் கொண்டாடப்படாத இடங்களி. பாஸ்கா 7-ஆம் ஞாயிறு அன்று அதற்கு உரிய நாளாகக் கொண்டாடப்படும்.

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா – திருவிழிப்புத் திருப்பலி

விண்ணேற்றப் பெருவிழாவுக்கு முந்திய நாளில் மாலைத் திருப்புகழ் 1-க்கும் பின்போ இத்திருப்பலி பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

திபா 67:33,35 உலகிலுள்ள அரசர்களே, கடவுளைப் புகழ்ந்தேத்து ங் கள். வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல் ஏறி வரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவரது மாண்பும் வலிமையும் மேக மண்டலங்களில் உள்ளன, அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்கும் மன்றாட்டு இறைவா,

திருத்தூதர்கள் காண உம் திருமகன் இன்று விண்ணகத்துக்கு ஏறிச் சென்றார்; அதனால் தமது வாக்குறுதிக்கு ஏற்ப அவர் எங்களோடு என்றும் இவ்வுலகில் வாழ்வது போல நாங்களும் அவரோடு விண்ணகத்தில் வாழத் தகுதி பெற்றிட எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். “நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, என்றும் வாழும் எங்கள் தலைமைக் குருவாகிய உம் ஒரே திருமகன் எங்களுக்காகப் பரிந்து பேச உமது வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றார்; அதனால் நாங்கள் நம்பிக்கையோடு அருள் நிறைந்த இறை அரியணையை அணுகி உமது இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள்வீராக. எங்கள்:
விண்ணேற்றத்தின்

தொடக்கவுரை 1, II (பக். 534 – 535).
(முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இநநாளுக்கு – புனதா அனைவருடனும் …” எனும் மன்றாட்டு சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

காண், எபி 10:12 இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் செ லுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது பீடத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட கொடைகள் விண்ணக வீட்டுக்கான ஏக்கத்தை எங்கள் இதயங்களில் தூண்டியெழுப்புவனவாக; எங்கள் மீட்பரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர் முன்னரே சென்ற இடத்துக்கு நாங்களும் விரைந்து செல்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 625).

====================ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா
பகல் திருப்பலி

வருகைப் பல்லவி

திப 1:11 கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயே சு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண் டீர்கள் அல்லவா? அவ் அவர் மீண்டும் வருவார், அல்லேலூயா.
“உன்னதங்களிலே சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகன் கிறிஸ்துவின் விண்ணேற்றம் எங்களுக்கு ஒரு முன்னடையாளமாக இருக்கின்றது; தலையாகிய அவர் பெற்ற மாட்சிக்கே அவரது உடலாகிய நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம் எனும் எதிர்நோக்கை எங்களுக்குத் தருகின்றது; எனவே நாங்கள் உமக்கு அன்புடன் நன்றி கூறிப் புனிதமான மகிழ்ச்சியுடன் அக்களிக்கச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

எல்லாம் வல்ல இறைவா, இந்நாளில் உம் ஒரே திருமகனும் எம் மீட்பருமான கிறிஸ்து விண்ணகத்துக்கு ஏறிச் சென்றதை நம்புகின்றோம்; அதனால் நாங்கள் இப்பொழுதே மனத்தளவில் விண்ணகத்தில் வாழ்ந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் வணக்கத்துக்கு உரிய விண்ணேற்றத்தை முன்னிட்டு நாங்கள் தாழ்மையுடன் இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வருகின்றோம்; இவ்வாறு இப்புனிதமிக்க பரிமாற்றத்தினால் நாங்களும் விண்ணகத்துக்கு உரியவற்றையே நாட அருள்புரிவாராக. எங்கள்.

‘ஆண்டவருடைய விண்ணேற்றம் 411

தொடக்கவுரை: விண்ணேற்றத்தின் மறைநிகழ்வு.

இசையில்லாப் பாடம்: விண்ணேற்றத்தின் தொடக்கவுரை I, II (பக். 534 – 535).

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


ஏ னெ னில் ஆண்டவராகிய இயேசு மாட் சி யின் மன்னர்,
பாவத்தின்மீதும் சாவின்மீதும் வெற்றி கொண்டவர்.
வானதூதர் வியப்புற (இன்று) வானங்களின் உச்சிக்கு ஏ றிச் சென்றார்.
கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும்
உலகுக்குத் தீர்ப்பிடுகின்றவரும் ஆற்றல்மிகு அணிகளின் ஆண்டவரும் அவரே.

இவ்வாறு அவர் சென்றது எங் கள் தாழ்நிலையிலிருந்து விலகிச் செல்வதற்காக அன்று;
மாறாக, எங்கள் தலைவரும் மு தல் வருமாகிய அவர் முன் சென்றஅவ்விடத்துக்கு
அவர்தம் உறுப்பினர்களாகிய நாங்களும் அவரைப் பின்தொடர்வோம்
எனும் நம் பிக் கையைத் த ரு வதற்காகவே.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க அனைத்துலகின் மாந்தர் அனைவரும்
அக்களிக்கின்றனர்; அவ்வாறே ஆற்றல் மிக்கோரும் அதிகாரம்
கொண்ட தூதர்களும், உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின் றிச் சொல் வ தாவது: தூயவர்.


உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் . . .” எனும் மன்றாட்டு சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

மத் 28:20 இதோ! உலக முடி வுவரை எந்நாளும் நான் உங்களுடன்
இருக்கிறேன், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இவ்வுலகில் இருக்கும் நாங்கள் விண்ணக மறைநிகழ்வுகளைக் கொண்டாட அருளுகின்றீர்; எங்கள் இயல்பு உம்மோடு இணைக்கப்பட்டுள்ள இடத்துக்கே எமது கிறிஸ்தவ பற்றன்பு எம்மை இட்டுச்செல்ல அருள்வீராக. எங்கள்:

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 625).

====================

விண்ணேற்றத்துக்குப்பின் வரும் வாரநாள்கள்
வியாழன்

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணேற்றப் பெருவிழா கொண்டாடப்படும் பகுதிகளில்

வருகைப் பல்லவி

காண். திபா 67:8-9,20 கடவுளே! நீர் புறப்பட்டு உம்முடைய மக்கள் முன் நடந்து சென்று, அவர்களோடு தங்குகையில் பூவுலகு அதிர்ந்தது; வானம் மழையைப் பொழிந்தது, அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் மக்களை உமது மீட்பில் பங்குபெறச் செய்த நீர் எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் ஆண்டவருடைய உயிர்ப்பினை முன்னிட்டு நாங்கள் என்றும் மகிழ்ந்திருக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

பாஸ்காவின் தொடக்கவுரை (பக். 529 – 533).

திருவிருந்துப் பல்லவி

மத் 28:20
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன்
இருக்கிறேன், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்.

====================விண்ணேற்றத்துக்குப்பின் வரும் வாரநாள்கள்
வெள்ளி

வருகைப் பல்லவி

திவெ 5:9-10 ஆண்டவரே, உமது இரத்தத்தால் குலம், மொழி, மக்களினம், ஆகிய அனைத்தினின்றும் எங்களை மீட்டுக்கொண்டீர்; எங். ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்; அல்லேலூயா.
கொண் டீர்; எங்களை

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்து, உமது வலப் பக்கத்தில் அமர்ந்திருப்பவரும் எமது மீட்பின் ஊற்று மானவரிடம் எம்மை அழைத்துச் செல்வீராக; இவ்வாறு திருமுழுக்கினால் புதுப் பிறப்பு அடைந்த நாங்கள் எங்கள் மீட்பர் தமது மாட்சியில் வரும்போது பேறுபெற்ற சாகாத்தன்மையால் அணிசெய்யப்படுவோமாக. உம்மோடு.
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணேற்றப் பெருவிழா கொண்டாடப்படும் பகுதிகளில்:
ஆண்டவரே, உம் வார்த்தையான கிறிஸ்து வழியாக நீர் வாக்களித்த மீட்பு, நற்செய்திப் படிப்பினையால் எங்கும் நிறைவேறிட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவர் உண்மைக்குச் சான்று பகர்ந்து முன்னறிவித்த மீட்பை உரிமைப் பேறுடைய மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக. எங்கள்.

விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 5.35).

திருவிருந்துப் பல்லவி

உரோ 4:25 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காகக் கையளிக்கப்பட்டார்; நாம் ஏற்புடையவராகும்படி உயிர்த்தெழுந்தார்,
அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

====================விண்ணேற்றத்துக்குப்பின் வரும் வாரநாள்கள்
சனி

வருகைப் பல்லவி

காண். 1பேது 2:9 உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மைமிக்க செயல்களை அறிவியுங் கள். அவர் இருளிலிருந்து தமது வியத்தகு
ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, விண்ணகத்துக்கு ஏறிச் சென்ற உம் திருமகன் தம் திருத்தூதர்களுக்குத் தூய ஆவியாரை வாக்களிக்கத் திருவுளம் கொண்டார்: அதனால் அவர்கள் விண்ணகப் படிப்பினையின் பல்வேறு கொடைகளைப் பெற்றுக்கொண்டது போல நாங்களும் அருள்வாழ்வுக்கான கொடைகளைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணேற்றப் பெருவிழா கொண்டாடப்படும் பகுதிகளில்:

ஆண்டவரே, நற்செயல்களால் எங்கள் மனங்களை என்றும் புதுப்பித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மேலானவற்றையே நாங்கள் என்றும் நாடி, பாஸ்கா மறைநிகழ்வை என்றும் கருத்தில் கொண்டிருப்போமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.

பாஸ்காவின் அல்லது விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 535).

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:24
தந்தையே, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; அதனால் நீர் எனக்கு அளித்த மாட்சியை அவர்கள்
காண்பார்களாக, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நா ங் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.

====================

பாஸ்கா கால 7-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 26:7-9 ‘ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் என் குரலைக் கேட்டருளும்; என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; ஆண்டவரே, உமது முகத்தைப் பார்க்க விரும்பினேன். உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும். அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் கெஞ்சி மன்றாடுவதைக் கனிவுடன் எங்களுக்குத் தந்தருள்வீராக; அதனால் மனிதக் குல மீட்பர் உமது மாட்சியில் உம்மோடு இருக்கின்றார் என நம்பும் நாங்கள் அவர் வாக்களித்தபடி உலக முடிவுவரை எங்களோடும் இருக்கின்றார் எனக் கண்டுணரச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியினால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.

பாஸ்காவின் அல்லது விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 535).

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:22
தந்தையே, நாம் ஒன்றாய் இருப்பது போல, அவர்களும் ஒன்றாய்
இருக்குமாறு வேண்டுகிறேன், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, எங்கள் மீட்பரே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் தலையாகிய கிறிஸ்துவோடு அவரது உடலாகிய முழுத் திரு அவையும் புனிதமிக்க மறைநிகழ்வுகள் வழியாக இணைந்திருக்கின்றது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள அருள்வீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 624).

====================பாஸ்கா ஏழாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 429
திங்கள்

வருகைப் பல்லவி

திப 1:8 மேலிருந்து வரும் தூய ஆவியாரின் வல்லமையை உங் களிட பெறுவீர்கள்; உலகின் கடையெல்லைவரை எனக்குச் சாட்சியாய் இருப்பீர்கள், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய ஆவியாரின் ஆற்றலை எங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை உண்மையான மனதுடன் பற்றிக்கொண்டு, அதை எங்கள் நன்னடத்தையில் வெளிப்படுத்தி வாழ்ந்திட ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இம்மாசற்ற பலி எங்களைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: இது எங்கள் உள்ளங்களில் விண்ணக அருளின் ஆற்றலைப் பொழிவதாக. எங்கள்.

பாஸ்காவின் அல்லது விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 535).

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:18; 16:22
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன் என்கிறார் ஆண்டவர்; உங்களிடம் திரும்பி வருவேன்; உங்கள் இதயம் மகிழ்ச்சி அடையும், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

====================

பாஸ்கா ஏழாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 429
செவ்வாய்

வருகைப் பல்லவி

திவெ 1:17-18 நானே முதலும் முடி வுமாய் இருக்கின்றேன்; வாழ்பவருமான நான் இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கிறேன், அல்லே லூ ய ா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, வரவிருக்கும் தூய ஆவியார் எங்களிடத்தில் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் அவரது மாட்சியின் கோவிலாக மாறும் தகுதி பெற அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.

பாஸ்காவின் அல்லது விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 535).

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:26 என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார், என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.

====================பாஸ்கா ஏழாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 429
புதன்

வருகைப் பல்லவி

திபா 46:2 னவருமே, களிப்புடன் கைகொட்டுங்கள் ; மகிழ்ச்சி: குரலுடன் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள், அல்லேலூயா

திருக்குழும மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, தூய ஆவியாரால் ஒன்றுசேர்க்கப்பட்ட உமது திரு அவை முழு இதயத்தோடு உம்மீது பற்றுதல் கொண்டிருக்கச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அத்திரு அவை தூய இதயத்துடன் உம்மோடு ஒன்றித்திருக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் கட்டளைகளாலும் தூய மறைநிகழ்வுகளாலும் நிறுவப்பட்ட பலிகளை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் உமக்கு ஏற்ற ஊழியம் புரிந்து, கொண்டாடப்படும் இப்பணியால் தூய்மையாக்கப்பட்டு, உமது மீட்பின் நிறைவைப் பெறத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

பாஸ்காவின் அல்லது விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 535).

திருவிருந்துப் பல்லவி

யோவா 15:26-27 நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வரும்பொழுது தந்தையிடமிருந்து புறப்படும் உண்மையை வெளிப்படுத்தும் ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார்; நீங்களும் சான்று பகர்வீர்கள்,
என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பங்குகொள்ளும் இத்திருவிருந்து உமது அருளை எம்மீது நிறைவாய்ப் பொழிந்தருள வேண்டுகின்றோம்: இத்திருவிருந்து தன் ஆற்றலால் எங்களைத் தூய்மைப்படுத்துவதால் அந்த மாபெரும் கொடைக்கு நாங்கள் என்றும் தகுதி பெறச் செய்வதால் எங்கள்.

====================

பாஸ்கா ஏழாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 431
வியாழன்

வருகைப் பல்லவி

எபி 4:16 அருளின் அரியணை யை நம்பிக்கையுடன் அணுகுவோமாக. அதனால் நாம் இரக்கத்தைப் பெறுவோம்; ஏற்ற வேளையில் உதவும்
அருளைக் கண்டடைவோம். அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய ஆவியார் தமது ஆற்றலால் அருள்வாழ்வுக்கான உம் கொடைகளை எம்முள் பொழிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு உகந்த நன்மனதை அவர் எங்களுக்குத் தந்து நாங்கள் உமது திருவுளத்தை நிறைவேற்றச் செய்வாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.

பாஸ்காவின் அல்லது விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 535).

திருவிருந்துப் பல்லவி

யோவா 16:7
நான் உங்களிடம் சொல்வது: உண்மையைச் சொல்கிறேன். நான் போவதே உங்களுக்கு நலம்; நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார், என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பங்குகொண்ட மறைநிகழ்வுகள் தங்கள் படிப்பினையால் நல்லறிவையும் திரு உணவால் புத்துயிரையும் எங்களுக்கு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அருள்கொடைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

====================பாஸ்கா ஏழாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 429
வெள்ளி

வருகைப் பல்லவி

திவெ 1:5-6 கிறிஸ்து நம்மீது அன்புகூர்ந்தார்; தமது இரத்தத்தினால் நம் பாவங்களிலிருந்து நம்மைக் கழுவினார்; ஆட்சியுரினை. பெற்றவர்களாகவும் குருக்களாகவும் கடவுளும் அவரது தந்தையுமானவருக்கு நம்மை ஏற்படுத்தினார், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் கிறிஸ்துவின் மாட்சிப்படுத்துதலாலும் தூய ஆவியாரின் ஒளிர்வித்தலாலும் நிலைவாழ்வின் கதவை எங்களுக்குத் திறந்துவிட்டீர்; இத்தகைய பெரும் கொடையில் பங்கேற்பதால் நாங்கள் இறைப்பற்றில் முன்னேறவும் நம்பிக்கையில் வளரவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய மக்களின் பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமக்கு ஏற்புடையோராகுமாறு தூய ஆவியாரின் வருகை எங்கள் உள்ளங்களைப் புனிதப்படுத்துவதாக. எங்கள்.

பாஸ்காவின் அல்லது விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 535).

திருவிருந்துப் பல்லவி

யோவா 16:13
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார், என்கிறார் ஆண்டவர்,
அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம் மறைநிகழ்வுகளால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு ஊட்டம் பெற்றிட உம்மை வேண்டுகின்றோம்: இத்திருவிருந்து எங்களுக்கு அளிக்கும் ஆற்றலால் நாங்கள் நிலைவாழ்வைப் பெறச் செய்வீராக. எங்கள்.

====================

பாஸ்கா ஏழாம் ஞாயிறுக்குப்பின் வரும் வாரநாள்கள் 433
சனிக்கிழமை காலைத் திருப்பலி

வருகைப் பல்லவி

திப 1:14 பெண்களோடும் இயேசுவின் தாய் மரியாவோடும், அவருடைய சகோதரர்களோடும் சீடர்கள் ஒரே மனதோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா விழாக்களைக் கொண்டாடிய நாங்கள் உமது அருளால் அவற்றை எங்கள் வாழ்விலும் செயலிலும் கடைப்பிடிக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்புனித அருளடையாளங்களைக் கொண்டாட பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பாக விளங்கும் தூய ஆவியார் இறங்கி வருவதால், அவரே எங்கள் மனங்களைத் தயார் செய்வாராக. எங்க ள்.

பாஸ்காவின் அல்லது விண்ணேற்றத்தின் தொடக்கவுரை (பக். 529 – 535).

திருவிருந்துப் பல்லவி

யோவா 16:14 தூய ஆவியார் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார்; இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார், என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நீர் கனிவுடன் எங்கள் வேண்டல்களைக் கேட்டருள்வீராக; அதனால் பழையனவற்றிலிருந்து புதிய மறைபொருள்களுக்கு நீர் எங்களை வழிநடத்தியது போல பழைய நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தூய்மை பெற்ற மனங்களால் நாங்கள் புதுப்பிக்கப்படுவோமாக. எங்கள்.

====================

பெந்தக்கோஸ்து திருவிழிப்புத் திருப்பலி

விரிவான பாடம்

1. விரிவான பாடத்தைப் பயன் படுத்தி திருவிழிப்புத் திருப்பலி நடைபெறும் கோவில்களில் கீழுள்ளவாறு இத்திருப்பலி கொண்டாடப்படும்.

2. அ) திருப்பலிக்குச் சற்றுமுன் பாடகர் குழுவிலோ பொதுவிலோ மாலைத் திருப்புகழ் 1 இடம் பெற்றால், அதைத் தொடக்கப் பல்லவியுடன் “தூய ஆவியாரே வாரும்” எனும் ‘பாடலோடோ, பவனியோடு வருகைப் பல்லவியைப் பாடி (அவருடைய அவி), அருள்பணியாளரின் வாழ்த்துரையோடோ தொடங்கலாம். அப்பொழுது பாவத்துயர்ச் செயல் விட்டுவிடப்படும் (காண். திருப்புகழ்மாலை வழிபாட்டின் பொதுப் படிப்பினை, எண்.94, 96).

பின்பு மாலைத் திருப்புகழில் உள்ள அருள்வாக்குப் பகுதிக்கு முன்வரை உள்ள திருப்பாடல்கள் தொடரும்.

திருப்பாடல்களுக்குப் பின், பாவத்துயர்ச் செயலையும் தேவைக்கு ஏற்ப, “ஆண்டவரே, இரக்கமாயிரும்” எனும் பகுதியையும் விடுத்துத் திருவிழிப்புத் திருப்பலியில் உள்ளவாறு “எல்லாம் வல்ல இறைவா, உமது மாட்சியின் பேரொளி…” எனும் மன்றாட்டையும் அருள்பணியாளர் சொல்கின்றார் (பக். 441). 3. ஆ) வழக்கமான முறையில் திருப்பலி தொடங்கப்பட்டால், “ஆண்டவரே, இரக்கமாயிரும்” எனும் வேண்டலுக்குப் பிறகு, திருவிழிப்புத் திருப்பலியில் உள்ளவாறு “எல்லாம் வல்ல இறைவா, உமது மாட்சியின் பேரொளி…” எனும் மன்றாட்டைச் சொல்கின்றார் (பக். 441).

தொடர்ந்து அருள்பணியாளர் பின்வரும் அல்லது இவை போன்ற சொற்களை மக்களை நோக்கிக் கூறுகின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, இயேசுவின் தாய் மரியாவோடு இறைவேண்டலில் நிலைத்து நின்று, ஆண்டவரால் வாக்களிக்கப்பட்ட தூய ஆவியாருக்காகக் காத்திருந்த திருத்தூதர்கள், சீடர்கள் ஆகியோரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, பெந்தக்கோஸ்து பெருவிழாவின் திருவிழிப்பை நாம் இப்போது தொடங்கியுள்ளோம். அவர்களைப் போன்று நாமும் இப்பொழுது அமைதியான இதயத்தோடு இறைவார்த்தைக்குச் செவிசாய்ப்போம். கடவுள் தம் மக்களுக்காகச் செயல் மாபெரும் செயல்களைச் சிந்தித்துப் பார்ப்போம். நம்பிக்கை கொண்டோர் மீது முதன்முதலில் விண்ணகத் தந்தை அனுப்பிய தூய ஆவியார் இவ்வுலகில் தம் பணியை நிறைவுக்குக் கொண்டுவர நாம் மன்றாடுவோம்.

பின்பு வாசகங்கள் தொடங்குகின்றன. வாசக நூலில் உள்ள வற்றிலிருந்து வாசகங்களைத் தேர்ந்தெடுக்கவும். வாசகர் வாசகமேடைக்குச் சென்று வாசகத்தை வாசிக்கின்றார். பின்பு திருப்பாடல் முதல்வர் அல்லது பாடகர் ஒருவர் திருப்பாடலைச் சொல்ல மக்கள் அதற்குப் பதிலுரைக்கின்றனர். பின்பு அனைவரும் எழுந்து நிற்க, அருள் பணியாளர் “மன்றாடுவோமாக” எனச் சொல்கின்றார். அனைவரும் சிறிது °நரம் அமைதியாக மன்றாடிய பின், வாசகத்துக்கு ஏற்ற மன்றாட்டைச் சொல்கின்றார். பதிலுரைத் திருப்பாடலுக்குப் பதிலாகச் சிறிது நேரத் திரு அமைதி இடம் பெறலாம். அவ்வாறாயின் “மன்றாடுவோமாக” எனச் சொன்ன பிறகு வரும் சிறிது நேர அமைதி விடப்படும்.


வாசகங்களுக்குப் பிறகு மன்றாட்டுகள்


5. முதல் வாசகத்துக்குப் பிறகு (பாபேல் பற்றி: தொநூ 11:1-9; திபா 32:10. 13- 13, 14- 15; பதிலுரை 12ஆ: ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட வ. பேறுபெற்றது).


மன்றாடுவோமாக.

எல்லாம் வல்ல இறைவா, தூய்மை, ஒற்றுமை ஆகியவற்றின் அருளடையாளமாக உமது திரு அவை இவ்வுலகுக்கு வெளிப்பட்டு உமது அன்புப் பணியை நிறைவுக்கு இட்டுச்செல்கின்றது; இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவியாரின் பிணைப்பால் ஒன்றுசேர்க்கப்பட்ட அத்திரு அவை புனித மக்களினமாக என்றும் நிலைத்திருக்கச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

6. இரண்டாம் வாசகத்துக்குப் பிறகு (சீனாய் மலையில் ஆண்டவர் இறங்கியதைப் பற்றி: விப 19:3-8, 16- 20 ஆ; சிறுபாடல்: தானி 3:52, 53, 54, 55, 56; பதிலுரை 52ஆ: என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்) அல்லது (திபா 18:8, 9, 10, 11; பதிலுரை: யோவா 6:6 8இ) : நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன).

மன்றாடுவோமாக.

இறைவா, சீனாய் மலையில் நெருப்பும் மின்னலும் சூழ மோசேக்குப் பழைய சட்டத்தை வழங்கியவரும் தூய ஆவி எனும் நெருப்பில் புதிய உடன்படிக்கையை இன்று வெளிப்படுத்தியவரும் நீரே; உம் திருத்தூதர்கள் மீது சொல்லற்கரிய முறையில் பொழியப்பட்ட அதே தூய ஆவியால் நாங்களும் என்றும் பற்றியெரியவும் கூடியிருந்த மக்களினங்கள் அனைத்திலிருந்து உருவான புதிய இஸ்ரயேல், உமது அன்பின் நிலையான கட்டளையை மகிழ்வோடு பெற்றுக்கொள்ளவும் அருள்புரிவீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

7. மூன்றாம் வாசகத்துக்குப் பிறகு (உலர்ந்த எலும்புகள், கடவுளின் ஆவி பற்ற” 37:1-14; திபா 106:2-3, 4-5, 6-7, 8-9; பதிலுரை ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு! அல்லது அல்லேலூயா).

மன்றாடுவோமாக.

ஆண்டவரே, ஆற்றல் வாய்ந்த இறைவா, வீழ்ந்ததைப் புதுப்பிக்கிறவரும், புதுப்பித்ததை நிலைபெறச் செய்கிறவரும் நீரே; உம் பெயரின் தூய்மையால் புதுப்பிக்கப்பெற்ற மக்களைப் பெருகச் செய்து, புனிதத் திருமுழுக்கினால் தூய்மையாக்கப்பெற்ற அனைவரும் உம் தூண்டுதலால் என்றும் வழிநடத்தப்பெறவும் அருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

அல்லது

வாழ்வுதரும் வார்த்தையால் எங்களுக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ள இறைவா, உம் தூய ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு நாங்கள் ஒரே நம்பிக்கையில் வழிநடந்து எங்கள் உடல், உயிர்ப்பின் அழியா மாட்சிக்கு வந்து சேரத் தகுதி பெறுவோமாக. எங்கள். பதில்: ஆமென்

அல்லது

இறைவா, உம் தூய ஆவியால் புதுப்பிக்கப்பெற்று இளமை உணர்வுடன் உம் மக்கள் என்றும் அக்களிப்பார்களாக; அதனால் உம் சொந்த மக்கள் என்ற மாட்சியை மீண்டும் பெற்றுள்ள நாங்கள் உயிர்ப்பின் நாளுக்காகப் பேரின்பத்துடனும் உறுதியான எதிர்நோக்குடனும் காத்திருக்கச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

நான்காம் வாசகத்துக்குப் பிறகு (தூய ஆவியின் அருள்பொழிவு பற்றி: யோவே 3:1-5; திருப்பாடல் 103: 1- 2 அ, 24, 35, 37-38, 39 ஆஇ-30; பதிலுரை 30: ஆண்டவரே, உமது ஆவியை நீர் அனுப்புவீர்; மண்ணகத்தின் முகத்தை நீர் புதுப்பித்தருளும் அல்லது அல்லேலூயா).

மன்றாடுவோமாக.

‘ஆண்டவரே, எங்கள் மீது இரக்கம் கொண்டு உமது வாக்குறுதியை நிறைவேற்ற உம்மை வேண்டுகின்றோம். அதனால் தூய ஆவியார் தம் வருகையால் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு நாங்கள் உலகினர்முன் சாட்சிகளாய்த் திகழச் செய்வாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

9. பின்பு அருள்பணியாளர் “உன்னதங்களிலே” எனும் பாடலைத் தொடங்குகின்றார்

10. இப்பாடல் முடிந்ததும், அருள் பணியாளர் திருக்குழும மன்றாட்டை வழக்கம் போலச் சொல்கின்றார்.

திருவிழிப்புத் திருப்பலியில் உள்ள வாறு (பக். 441) “என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருளடையாளத்தை ….”

11. பின்பு வாசகர் திருத்தூதரின் திருமுகத்திலிருந்து வாசகத்தை வாசிக்கின்றார் (உரோ 8:23-27); திருப்பலி வழக்கம் போலத் தொடர்கின்றது.

12. திருப்பலியோடு மாலைத் திருப்புகழ் இணைக்கப்பட்டால் “திருவிழாவின் இறுதிநாளில்” எனும் திருவிருந்துப் பல்லவி சொல்லப்படும். திருவிருந்துக்குப் பின் “தூய ஆவியாரே, வாரும்” எனும் முன்மொழியோடு மரியாவின் பாடல் பாடப்படும். பின்பு திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு சொல்லப்படும். மற்றவை வழக்கம் போல இடம் பெறும்.

13. தேவைக்கு ஏற்ப, சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 625 – 6 26) மக்களை வழியனுப்பத் திருத்தொண்டர் -அவர் இல்லை எனில் – அருள்பணியாளர் பாடுகின்றார் அல்லது சொல்கின்றார்:

அ.ப. : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது

அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:

இறைவனுக்கு நன்றி. அல்லேலூயா, அல்லேலூயா.பக். 618, எண் 144 பயன்படுத்தப்படலாம்.)

====================

பெந்தக்கோஸ்து ஞாயிறு 441
திருவிழிப்புத் திருப்பலி

தூய ஆவியார் பெருவிழாவின் மாலைத் திருப்புகழ் 1-க்கு முன்போ பின்போ இத்திருப்பலி கொண்டாடப்படலாம்.
திருவிழிப்புத் திருப்பலி சிறப்பான வகையில் கொண்டாடப்படும் கோவில்களில் முன் உள்ளவாறு பயன்படுத்தலாம் (பக். 437).

வருகைப் பல்லவி

உரோ 5:5; காண். 3:11 அவருடைய ஆவி நம்முள் குடிகொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின்
அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது, அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருளடையாளத்தை நாங்கள் ஐம்பது நாள் மறைநிகழ்வாகத் தொடர்ந்து கொண்டாடத் திருவுளமானீர்; பல்வேறு மொழி பேசுபவர்களாய் உம் மக்கள் சிதறுண்டிருந்தாலும் ஒரே மனத்தவராய் உமது பெயரை அறிக்கையிட விண்ணகக் கொடையால் ஒன்றுசேர்க்கப்படுவார்களாக. உம்மோடு.

அல்லது

எல்லாம் வல்ல இறைவா, உமது மாட்சியின் பேரொளி எம்மீது ஒளிர்ந்திட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது அருளால் புதுப் பிறப்பு அடைந்தோரின் இதயங்களைத் தூய ஆவியாரின் ஒளிக் கதிர்கள் வாயிலாக உமது ஒளியின் ஒளி உறுதிப்படுத்துவதாக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் மீது உம் தூய ஆவியாரின் ஆசியைப் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவை உமது அன்பைத் திரு அவைக்கு அளிப்பதன் வழியாக மீட்பு அளிக்கும் மறைநிகழ்வின் உண்மை உலக முழுவதும் ஒளிரச் செய்வீராக. எங்கள்.

தூய ஆவியார் பெருவிழாவின் தொடக்கவுரை – பின்வரும் திருப்பலியில் உள்ளது போல் (பக். 443-445).

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உமமுடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டு சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 7:37திருவிழாவின் இறுதி நாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில் “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும், பருகட்டும் என்றார், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட கொடை எங்களுக்குப் பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருத்தூதர்கள் மீது நீர் வியத்தகு முறையில் பொழிந்தா அதே தூய ஆவியால் நாங்கள் என்றும் பற்றியெரியச் செய்வீராக எங்கள்.
தேருளிய
சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 625 – 626).

திருத்தொண்டரோ அவர் இல்லாதபோது அருள்பணியாளரோ பாடி

அ.ப. : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது

அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:

இறைவனுக்கு நன்றி. அல்லேலூயா, அல்லேலூயா.

====================

பெந்தக்கோஸ்து ஞாயிறு
பகல் திருப்பலி

வருகைப் பல்லவி

சாஞா 1:7
ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது, அல்லேலூயா.

அல்லது

உரோ 5:5; காண். 8:11
அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது, அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இன்றைய பெருவிழாவின் மறைபொருளால் எல்லா மக்களிலும் நாடுகளிலும் உள்ள உமது அனைத்துலகத் திரு அவையைப் புனிதப்படுத்துகின்றீர்; உலகின் எத்திக்கிலும் தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்து, நற்செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட காலத்தில் நீர் செய்தது போல இக்காலத்திலும் தூய ஆவியாரின் அருளால் நம்பிக்கையாளரின் இதயங்களை நிரப்புவீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் வாக்குறுதிக்கு ஏற்ப தூய ஆவியார் இப்பலியின் மறையுண்மைகளை எங்களுக்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவரே எங்களை நிறையுண்மையை நோக்கி வழிநடத்துவாராக. எங்கள்.

தொடக்கவுரை: பெந்தக்கோஸ்து பெருவிழாவின் மறைபொருள்.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் நீர் பாஸ்கா மறைபொருளை நிறைவுறச் செய்கின்றீர்.
உம் ஒரே திருமகனோடு உறவு கொள்வதால்
உரிமைப்பேறான மக்களாக நீர் ஏற்றுக்கொண்டவர்களுக்கு
இன்று தூய ஆவியாரை வழங்கினீர்.
திரு அவை பிறந்த அந்த நாளிலேயே
அதே ஆவியார் எல்லா மக்களுக்கும் இறை அறிவை ஊட்டினார்;
பல்வேறு மொழி பேசும் மக்களை ஒன்றுசேர்த்து
ஒரே நம்பிக்கையை அவரே அறிக்கையிடச் செய்தார்.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலக மனிதர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உம்முடைய புனிதர் அனைவருடனும்…” எனும் மன்றாட்டு சொல்லப்படும்.

திருவிருந்துப் பல்லவி

திப 2:4,11
காள்ளப்பட்டனர்; கடவுளின் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்,
மாபெரும் செயல்களைப் பேசினர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

விண்ணகக் கொடைகளை உமது திரு அவைக்கு தாராளமாய் வழங்கும் இறைவா, நீர் எமக்கு அளித்துள்ள அருளை எம்மில் பாதுகாத்தருளும்; இவ்வாறு தூய ஆவியார் பொழிந்துள்ள கொடை என்றும் வலிமை பெறுவதாக; இந்த ஆன்மீக உணவால் நிலையான மீட்பு எங்களில் வளர்வதாக. எங்கள் சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 625 – 626). திருத்தொண்டரோ அவர் இல்லாதபோது அருள்பணியாளரோ பாடி

அ.ப. : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது

அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:

இறைவனுக்கு நன்றி. அல்லேலூயா, அல்லேலூயா.

பாஸ்கா காலம் முடிந்தபின் பாஸ்கா திரி அணைக்கப்படும். திருச் கொடுக்கப்படும் இடத்தில் தகுந்த வணக்கத்துடன் இதை வைத்திருப்ப
கெகத்துடன் இதை வைத்திருப்பது விரும்பத்தக்கது. அது திருமுழுக்குச் சடங்கின்போது இத்திரியை ஏற்றவும் அதிலிருந்து திருமுழுக்கு பெறுபவரின் திரிகளைப் பற்றவைத்துக் கொள்ளவும் முடியும்.

இவ்விழாவை அடுத்து வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் பெருமளவில் திருப்பல்லிக்கு வருவது கட்டாயமான அல்லது வழக்கமான இடங்கள்ல விழாத் திருப்பலியைப் பயன்படுத்தலாம். அல்லது தூய ஆவியாரின் நேர்ச்சித் திருப்பலியைப் (பக். 1165 – 111″)
பயன்படுத்தலாம்.

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy