திருவருகைக்கால திருப்பலி செபங்கள்

திருவருகைக் கால தொடக்க, காணிக்கை, நன்றி மன்றாட்டுகள்

திருவருகைக் கால முதல் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 24:1-3 என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மை எதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு மன உறுதியை அளித்தருளும்; அதனால் வரவிருக்கும் உம் கிறிஸ்துவை அவர்கள் நீதிச் செயல்களுடன் எதிர்கொள்ளவும் அவரது வலப் பக்கத்தில் சேர்க்கப்பட்டு விண்ணக அரசைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி :

திபா 84:13 ஆண்டவர் இரக்கம் அருள்வார்; நமது நிலமும் தனது பலனைத் தரும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவை மீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம்

=============↑ பக்கம் 139

==========

திருவருகைக் கால முதல் வாரம் திங்கள்

வருகைப் பல்லவி

காண். எரே 31:10; எசா 35:4 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லைவரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார். இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே எங்கள் இறைவா, உம் திருமகன் கிறிஸ்துவின் வருகையை நாங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கச் செய்தருளும்; அவர் வந்து தட்டும்போது நாங்கள் வேண்டலில் விழித்திருப்பதையும் மகிழ்வோடு அவரது புகழ் பாடுவதையும் அவர் காண்பாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 105:4-5; எசா 38:3 ஆண்டவரே, எங்களை அமைதியில் சந்திக்க வாரும். அதனால் முழுமையான இதயத்துடன் உம் முன் மகிழ்வோமாக.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவை மீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால முதல் வாரம் செவ்வாய்

வருகைப் பல்லவி

காண். செக் 14:5,7 இதோ! ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்;
அந்நாளில் பேரொளி தோன்றும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே இறைவா, எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; எங்கள் துன்பத்தில் உமது பரிவிரக்கத்தின் உதவியைத் தந்தருள வேண்டுகின்றோம்: வரவிருக்கும் உம் திருமகனின் உடனிருப்பால் நாங்கள் ஆறுதல் பெற்று, எங்களைத் தொற்றிக்கொண்டிருக்கும் பழைய பாவப் பழக்கங்களால் மீண்டும் பாதிக்கப்படாமல் இருப்போமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

காண். 2 திமொ 4:8 தம் வருகைக்காக விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்கும் நீதியுள்ள
நடுவர் நீதியின் வெற்றி வாகையைத் தருவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறைநிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங்கள்,

==========

திருவருகைக் கால முதல் வாரம் புதன்

வருகைப் பல்லவி

காண். அப் 2:3; 1 கொரி 4:5 ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே எங்கள் இறைவா, உமது இறைத்தன்மையின் ஆற்றலால் எங்கள் இதயங்களைத் தயாரிப்பீராக; அதனால் உம் திருமகன் கிறிஸ்து வருகின்றபோது நிலைவாழ்வின் விருந்துக்கு நாங்கள் தகுதி உள்ளவர்களாகக் காணப்படவும் அவரே அளிக்கும் விண்ணக உணவைப் பெற்றுக்கொள்ளவும் உரிமைப் பேற்றை அடைவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி :

காண். எசா 40:10; 35:5 இதோ, நம் ஆண்டவர் ஆற்றலுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளியூட்டுவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால முதல் வாரம் வியாழன்

வருகைப் பல்லவி

காண். திபா 118:151-152 ஆண்டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால், தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது வல்லமையை எம்முள் தூண்டியெழுப்பிப் பேராற்றலுடன் எங்களுக்கு உதவியருளும்; அதனால் எங்கள் பாவங்கள் தடைசெய்பவற்றை உமது மன்னிக்கும் அருளால் நாங்கள் விரைவாய்ப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை 1

திருவிருந்துப் பல்லவி :

தீத் 2:12-13 தூய நம்பிக்கையையும் மாபெரும் கடவுளின் மாட்சிமிக்க வருகையையும் எதிர்நோக்கி, நாம் நீதியுடனும் பக்தியுடனும் இவ்வுலகில் வாழ்வோமாக.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால முதல் வாரம் வெள்ளி

வருகைப் பல்லவி

தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை வழங்கவும் ஆண்டவர் இதோ! மாட்சியுடன்
ம் ஆண்டவர் இதோ! மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது வல்லமையோடு விரைந்து வாரும்; எங்கள் பாவங்களை முன்னிட்டு நெருங்கி வரும் ஆபத்துகளிலிருந்து உமது அருள்காவலால் பாதுகாக்கப்பெற்று, நீர் அருளும் விடுதலையால் நாங்கள் மீட்பைக் காண்போமாக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக்.517).

திருவிருந்துப் பல்லவி :

காண். பிலி 3:20-21 தாழ்வுக்கு உரிய நம் உடலை மாட்சிக்கு உரிய தமது உடலின் சாயலாக உருமாற்றும் மீட்பரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை நாம் எதிர்நோக்குவோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங்கள்.

==========

திருவருகைக் கால முதல்வாரம் சனி

வருகைப் பல்லவி

காண். திபா 79:42 கெருபுகளின் மீது வீற்றிருக்கும் ஆண்டவரே, வாரும்; உமது முகத்தை எங் களுக்குக் காட்டும்; நாங்கள் மீட்படைவோம்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, பழைய அடிமை நிலையிலிருந்து மனிதக் குலத்தை விடுவிப்பதற்காக உம் ஒரே திருமகனை நீர் இவ்வுலகுக்கு அனுப்பினீர்; இறைப்பற்றுடன் அவரை எதிர்பார்த்திருப்போருக்கு உமது விண்ணகப் பரிவிரக்கத்தின் அருளை அளித்தருளும்: அதனால் நாங்கள் உண்மையான விடுதலையின் கைம்மாற்றைப் பெற்றுக்கொள்வோமாக, உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை 1 (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

காண். திவெ 22:12 “இதோ நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கேற்ப அளிக்கக் கைம்மாறு என்னிடம் உள்ளது” என்கிறார் ஆண்டவர்

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால 2-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். எசா 30:19,30 யேயான்வாழ் மக்களே, இதோ மக்களினத்தாரை மீட்பதற்காக அவர் வருவார். உங்கள் இதயங்களின் மகிழ்வில் ஆண்டவர் தமது குரலைக் கேட்கச் செய்வார்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் திருமகனை எதிர்கொள்ள விரைந்து செல்வோரை உலகம் சார்ந்த செயல்கள் எவையும் தடைசெய்யாதிருப்பனவாக; விண்ணக ஞானத்தின் படிப்பினையோ எங்களை அவருடன் தோழமை கொள்ளச் செய்வதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

பாரூ 5:5; 4:36 எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில்; உன் கடவுளிடமிருந்து உனக்கு வரும் மகிழ்ச்சியைப் பார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 6 20).

==========

திருவருகைக் கால இரண்டாம் வாரம் திங்கள்

வருகைப் பல்லவி

காண். எரே 31:10; எசா 35:4 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லைவரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார். இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, எங்கள் விண்ணப்ப மன்றாட்டுகள் உம்மை நோக்கி எழுந்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் ஊழியர் நாங்கள் மாசற்ற தூய்மையோடு எழுப்பும் இறைவேண்டல்கள் உம் ஒரே திருமகன் மனிதர் ஆன மாபெரும் மறைநிகழ்வுக்கு வந்து சேர்வனவாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

‘காண். திபா 105:4-5; எசா 38:3
ஆண்டவரே, எங்களை அமைதியில் சந்திக்க வாரும். அதனால் முழுமையான இதயத்துடன் உம் முன் மகிழ்வோமாக.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால இரண்டாம் வாரம் செவ்வாய்

வருகைப் பல்லவி

காண், செக் 145,7 ; இதோ ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்; அந்நாளில் பேரொளி தோன்றும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, உமது மீட்பைப் பூவுலகின் கடை எல்லைவரைக்கும் அறிவித்தீரே; அதனால் கிறிஸ்து பிறப்பு விழாவின் மாட்சியை நாங்கள் மகிழ்வுடன் எதிர்நோக்கிட எங்களுக்கு அருள் புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக்.517).

திருவிருந்துப் பல்லவி :

காண். 2 திமொ 4:8 : தம் வருகைக்காக விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்கும் நீதியுள்ள நடுவர் நீதியின் வெற்றி வாகையைத் தருவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறைநிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்ய 4விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங்கள்.

==========

திருவருகைக் கால இரண்டாம் வாரம் புதன்

வருகைப் பல்லவி

காண். அப் 2:3; 1 கொரி 4:5 ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியைத் தயாரிக்க எங்களுக்குக் கற்பிக்கின்றீர்; எவ்வகை நோய்களாலும் தளர்வுறாமல் இருக்க விண்ணக மருத்துவரின் ஆறுதல் அளிக்கும் உடனிருப்பில் நாங்கள் நிலைத்திருப்போமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

காண். எசா 40:10; 35:5 இதோ, நம் ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளியூட்டுவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால இரண்டாம் வாரம் வியாழன்

வருகைப் பல்லவி

காண். திபா 118:151-152 : ஆண்டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால்,
தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் வழிகளைத் தயாரிக்க எங்கள் இதயங்களைத் தூண்டியெழுப்பியருளும்; அவரது வருகையால் நாங்கள் தூய்மையாக்கப்பட்ட மனதுடன் உமக்கு ஊழியம் செய்யத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

தீத் 2:12-13 தூய நம்பிக்கையையும் மாபெரும் கடவுளின் மாட்சிமிக்க வருகையையும் எதிர்நோக்கி, நாம் நீதியுடனும் பக்தியுடனும்
இவ்வுலகில் வாழ்வோமாக.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள் .

==========

திருவருகைக் கால இரண்டாம் வாரம் வெள்ளி

வருகைப் பல்லவி

தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை
வழங்கவும் ஆண்டவர் இதோ மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகனின் வருகையை மிகுந்த விழிப்புடன் எதிர்பார்த்திருக்க உம் மக்களுக்கு அருள் தாரும்; அதனால் எங்கள் மீட்பின் ஊற்றாகிய அவரே கற்றுக் கொடுத்தது போல எரிகின்ற விளக்குகளுடன் அவரை எதிர்கொள்ள விழித்திருந்து விரைந்து செல்வோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

காண். பிலி 3:20-21 தாழ்வுக்கு உரிய நம் உடலை மாட்சிக்கு உரிய தமது உடலின் சாயலாக உருமாற்றும் மீட்பரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை நாம் எதிர்நோக்குவோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறைநிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங்கள்.

==========

திருவருகைக் கால இரண்டாம் வாரம் சனி

வருகைப் பல்லவி

காண். திபா 794,2 கெருபுகளின் மீது வீற்றிருக்கும் ஆண்டவரே, வாரும்; உமது ஒளியை எங் களுக்குக் காட்டும்; நாங்கள் மீட்படைவோம்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, உமது மாட்சியின் பேரொளி எங்கள் உள்ளங்களில் உதித்தெழுவதாக; அதனால் இரவின் ஆட்சி அனைத்தும் நீக்கப்பட்டு, உம் ஒரே திருமகனின் வருகை எங்களை ஒளியின் மக்களாக வெளிப்படுத்துவதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

“இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கேற்ப அளிக்கக் கைம்மாறு என்னிடம் உள்ளது” என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்:
கொடைகள் அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடை வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால 3-ஆம் ஞாயிறு

(இத்திருப்பலியில் ஊதா அல்லது ரோசா நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.)

வருகைப் பல்லவி

காண். பிலி 4:4-5 – ஆண்டவரில் என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன்,
– அகமகிழுங்கள்; ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, இயேசுவின் பிறப்புப் பெருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உம் மக்களை நீர் கண்ணோக்குகின்றீர்; அதனால் இத்தகைய மாபெரும் மீட்பின் மகிழ்வுக்கு நாங்கள் வந்து சேரவும் இதைப் பெருமகிழ்வோடும் மேலான வேண்டலோடும் என்றுமே கொண்டாடவும் ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை அல்லது II (பக். 517 – 518).

திருவிருந்துப் பல்லவி :

காண். எசா 35:4 உள்ளத்தில் உறுதியற்றோரே! திடன் கொள்ளுங்கள்; அஞ்சாதிருங்கள்; இதோ! நம் கடவுள் வருவார்; நம்மை விடுவிப்பார் எனக் கூறுங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 620).

==========

1984 திருவருகைக் கால மூன்றாம் வாரம்
ல் 24 வரை உள்ள திருவருகைக் கால வாரநாள்களில் வரும் நாள் – டி சம்பர் 17 முதல் 24 வரை உள்ள திருவருகை
மருநாள் திருப்பலி நிறைவேற்றப்படும்போது கீழே சுவிர, வார நாள்களில் வாரநாள் திருப்பலி நிறைவேற்ற கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் பயன்படுத்தப்படும்.

திருவருகைக் கால மூன்றாம் வாரம் திங்கள்

வருகைப் பல்லவி

காண். எரே 31:10; எசா 35:4 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லைவரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார்; இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, எங்கள் குரலுக்குப் பரிவிரக்கமுடன் செவிசாய்க்க உம்மை வேண்டுகின்றோம்: எங்களைச் சந்திக்க வருகின்ற உம் திருமகனின் அருள் இருளடர்ந்த எங்கள் இதயங்களை ஒளிர்விப்பதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

காண். திபா 105:4-5; எசா 38:3 ஆண்டவரே, எங்களை அமைதியில் சந்திக்க வாரும். அதன்” “
முழுமையான இதயத்துடன் உம் முன் மகிழ்வோமாக.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால மூன்றாம் வாரம் செவ்வாய்

வருகைப் பல்லவி

காண். செக் 14:5,7 இதோ! ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்;
அந்நாளில் பேரொளி தோன்றும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, உம் ஒரே திருமகன் வழியாக நீர் எங்களைப் புதுப் படைப்பாக்கியுள்ளீர்; உம் இரக்கச் செயல்கள், உம் திருமகனின் வருகை ஆகியவற்றை முன்னிட்டு எங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; எங்கள் பழைய வாழ்வின் மாசுகள் அனைத்திலிருந்தும் எங்களைத் தூய்மைப்படுத்துவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

காண். 2 திமொ 4:8 தம் வருகைக்காக விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்கும் நீதியுள்ள
நடுவர் நீதியின் வெற்றி வாகையைத் தருவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங் கள்.

==========

திருவருகைக் கால மூன்றாம் வாரம் புதன்

வருகைப் பல்லவி

காண். அப் 2:3; 1 கொரி4:5 ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, வரவிருக்கும் உம் திருமகனின் பெருவிழா இவ்வாழ்வின் சிக்கல்களிலிருந்து எங்களுக்கு விடுதலை வழங்கிட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அது நிலையான கைம்மாற்றையும் எங்களுக்குத் தருவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை 1(பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

‘காண். எசா 40:10; 35:5
இதோ, நம் ஆண்டவர் ஆற்றலுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளியூட்டுவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடை வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால மூன்றாம் வாரம் வியாழன்

வருகைப் பல்லவி

‘காண். திபா 118:151-152 ஆண் டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால், தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, எங்கள் செயல்களினால் விளைந்த பாவம் உம் தகுதியற்ற அடியார்களாகிய எங்களைத் துயரத்தில் ஆழ்த்துகின்றது; எனவே உம் ஒரே திருமகனின் மீட்பு அளிக்கும் வருகை எங்களை மகிழ்விக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை 1(பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

தீத் 2:12-13
இாய நம்பிக்கையையும் மாபெரும் கடவுளின் மாட்சிமிக்க வருகையையும் எதிர்நோக்கி, நாம் நீதியுடனும் பக்தியுடனும் இவ்வுலகில் வாழ்வோமாக.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவைமீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள்.

==========

திருவருகைக் கால மூன்றாம் வாரம் வெள்ளி

வருகைப் பல்லவி

தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை வம் ஆண்டவர் இதோ! மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, உமது அருள் என்றும் எங்கள் முன் செல்லவும் எங்களைப் பின்தொடரவும் செய்வீராக; உம் ஒரே திருமகனின் வருகைக்காக இதயத்தின் பேராவலுடன் காத்திருக்கும் நாங்கள் இன்றைய வாழ்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் தேவையான உதவியைப் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை (பக். 517).

திருவிருந்துப் பல்லவி :

காண். பிலி 3:20-21 தாழ்வுக்கு உரிய நம் உடலை மாட்சிக்கு உரிய தமது உடலின் சாயலாக உருமாற்றும் மீட்பரும் ஆண்டவருமான இயேசு
கிறிஸ்துவை நாம் எதிர்நோக்குவோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறைநிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங்கள்.

==========

திருவருகைக் கால 4-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். எசா 45:8 வானங்கள் மேலிருந்து பொழியட்டும்; மேகங்கள் நீதிமானைப் பொழியட்டும்; நிலம் திறக்க மீட்பர் தோன்றட்டும்.

“உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது அருளை எங்கள் மனங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் மனிதர் ஆனதை வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்; அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மாட்சி பெற நீர் எங்களை அழைத்துச் செல்வீராக. உம்மோடு. “நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித மரியாவின் திருவயிற்றைத் தூய ஆவியார் தமது வல்லமையால் நிரப்பினார்; உமது பீடத்தின்மேல் வைக்கப்பட்டுள்ள இக்காணிக்கையையும் அவரே புனிதப்படுத்துவாராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

எசா 7:14 இதோ! கன்னி கருவுறுவார்; ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவர் பெயர் “இம்மானுவேல்” என அழைக்கப்படும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, நிலையான மீட்பின் உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: மீட்பு அளிக்கும் திருநாள் நெருங்கி வரும் இவ்வேளையில் நாங்கள் மேன்மேலும் இறைப்பற்றுடன் உம் திருமகனுடைய பிறப்பின் மறைநிகழ்வைத் தகுதியான முறையில் கொண்டாட முன்னேறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 620).

=============↑ பக்கம் 159

==========

திருவருகைக் கால வாரநாள்கள்
டிசம்பர் 17-ஆம் நாள் முதல் 24-ஆம் நாள் முடிய

உல் கீழே குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த நாளுக்கு உரிய (ஞாயிற்றுக்கிழமை தவிரப் பிற நாள்களில் கீழே குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த திருப்பலிப் பாடம் பயன்படுத்தப்படும்.

டிசம்பர் 17

வருகைப் பல்லவி

காண். எசா 49:13 வானங்கள் மகிழ்வுறட்டும்; மண்ணுலகு அக்களிக்கட்டும். ஏனெனில் நம் ஆண்டவர் வருவார்; தம் ஏழையர்பால் இரக்கம் கொள்வார்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, மனித இயல்பை உண்டாக்கியவரும் மீட்டவரும் நீரே, என்றும் கன்னியான மரியாவின் வயிற்றில் உம் வார்த்தை மனித உடல் எடுக்க விரும்பினீரே; எங்கள் வேண்டல்களைக் கனிவுடன் கண்ணோக்கி உம் ஒரே திருமகன் எங்கள் மனித இயல்பை ஏற்றதன் வழியாக அவரது இறை இயல்பில் பங்குகொள்ள எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; அதனால் இத்தூய மறை நிகழ்வின் வழியாக நாங்கள் விண்ணக உணவினால் புத்துணர்வு பெறத் தகுதி அடையச் செய்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

இதோ! எல்லா மக்களும் ஆவலுடன் விரும்பும் ஆண்டவர் வருவார்;
ஆண்டவரின் வீடு மாட்சியால் நிரம்பும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, விண்ணகக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உம் ஆவியாரால் தூண்டப்பெற்று, வரவிருக்கும் உம் கிறிஸ்துவின் திருமுன் சுடர் விட்டு எரியும் விளக்குகளாக ஒளிர நாங்கள் பேராவல் கொள்ளச் செய்வீராக. எங்கள்.

==========

டிசம்பர் 17-ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் முடிய

டிசம்பர் 18

வருகைப் பல்லவி

நம் அரசர் கிறிஸ்து வருவார்; “வர இருக்கும் செம்மறி இவரே” என்று யோவான் முன்னறிவித்தார்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, பழைய அடிமைத்தனத்தினால் விளைந்த பாவச் சுமையால் நாங்கள் அழுத்தப்படுகின்றோம்; நாங்கள் எதிர்பார்த்திருக்கும் உம் ஒரே திருமகனின் புதுமையான பிறப்பால் விடுதலை பெற அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமக்காகக் கொண்டாடப்படும் இப்பலி எங்களை உமது பெயருக்கு ஏற்றவர்களாய் மாற்றுவதாக; எமது சாகும் தன்மையைத் தமது சாகாத் தன்மையால் நலமாக்கியவருடைய நிலைப்பேறுடைமையில் பங்குபெறும் தகுதியை நாங்கள் அடைவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

மத் 1:23 அவரது பெயரை “இம்மானுவேல்” என அழைப்பார்கள். இம்மானுவேல் என்றால் “கடவுள் நம்முடன் இருக்கிறார்” என்பது பொருள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நீர் உறையும் இக்கோவிலில் உமது இரக்கத்தைப் பெற்றுக்கொள்வோமாக; வரவிருக்கும் எங்கள் மீட்பின் கொண்டாட்டங்களை நாங்கள் தகுந்த வணக்கத்துடன் எதிர்நோக்கிச் செல்வோமாக. எங்கள்.

==========

162 டிசம்பர் 17-ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் முடிய
டிசம்பர் 19

வருகைப் பல்லவி

காண். எபி 10:37 வரவிருக்கிறவர் வந்து விடுவார்; காலம் தாழ்த்தமாட்டார். நம் எல்லைகளில் இனி அச்சம் இராது. ஏனெனில் அவரே நம் மீட்பர்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, புனித கன்னியின் மகப்பேறு வழியாக உமது மாட்சியின் பேரொளியை உலகுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானீரே; அதனால் மனிதர் ஆன இவ்வியத்தகு மறைநிகழ்வை முழுமையான நம்பிக்கையோடு தொழுது, இறைப்பற்றுதலுடன் என்றும் கொண்டாட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் பீடங்களில் நாங்கள் வைக்கும் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு வலுவற்ற நாங்கள் கொண்டு வருவது உமது ஆற்றலால் புனிதம் அடைவதாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை 11 (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

லூக் 1:78,79
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்ய விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வரும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, நீர் எங்களுக்கு அளித்த கொடைகளுக்காக நன்றி கூறும் எங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; வரவிருப்பவைமீது விருப்பம் கொள்ளவும் அதனால் எங்கள் மீட்பரின் மாட்சிமிகு பிறப்பைத் தூய்மை பெற்ற மனதோடு வரவேற்கவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

==========

டிசம்பர் 17 ஆம் நாள் முதல் 24-ஆம் நாள் முடிய 163
டிசம்பர் 20

வருகைப் பல்லவி

காண். எசா 11:1; 40:5; லூக் 3:6 ஈசாய் என்னும் அடி மரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; ஆண்டவரின் மாட்சியால் உலகு அனைத்தும் நிரப்பப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.

திருக்குழும மன்றாட்டு :

நிலையான மாண்புள்ள இறைவா, விண்ணகத் தூதரின் அறிவிப்பால் மாசற்ற கன்னி சொல்லற்கரிய உமது வார்த்தையை ஏற்றுக்கொண்டார்; இறை இயல்பின் இல்லமாகி, தூய ஆவியாரின் ஒளியால் நிரப்பப்பட்ட அவரது முன்மாதிரியால் நாங்கள் உமது திருவுளத்தைப் பணிவுடன் பற்றிக்கொள்ள ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒப்பற்ற பலியைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த மறைநிகழ்வில் பங்கேற்பதால், நாங்கள் நம்பிக்கையோடு எதிர்நோக்கிக் காத்திருப்பதைப் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

லூக் 1:31 “இதோ, நீர் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பீர்; அவரது பெயரை இயேசு என அழைப்பீர்” என்று வானதூதர் மரியாவிடம் கூறினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணகக் கொடையால் புதுப்பிக்கப்பெற்றவர்களை உமது உதவியால் பாதுகாத்தருளும்; அதனால் அவர்கள் உம் மறைநிகழ்வுகளை அனுபவித்து உண்மை அமைதியில் மகிழ்வுறச் செய்வீராக. எங் கள்.

==========

டிசம்பர் 17-ஆம் நாள் முதல் 24-ஆம் நாள் முடிய
டிசம்பர் 21
காண். எசா 7:14; 8:10

வருகைப் பல்லவி

ஆட்சி புரியும் ஆண்டவர் விரைவில் வருவார். அவரது பெயர் “இம்மானுவேல் என அழைக்கப்படும். ஏனெனில் கடவுள் நம்மோடு.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உம் மக்களின் மன்றாட்டுகளை இரக்கமுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் மனித உடல் எடுத்து வரும் உம் ஒரே திருமகனின் வருகையில் மகிழ்வுறும் அவர்கள் அவர் தமது மாட்சியில் வரும்போது நிலைவாழ்வின் பரிசைப் பெற்றுக்கொள்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருளும்; இரக்கத்தால் நீர் எங்களுக்கு அளித்த இக்காணிக்கைகள் உமது ஆற்றலால் எங்கள் மீட்பின் மறைநிகழ்வாக மாறச் செய்வீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

லூக் 1:45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறு பெற்றவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உம் மறைநிகழ்வுகளின் பங்கேற்பு உம் மக்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பாய் இருப்பதாக; அதனால் முழு இறைப்பற்றுடன் உமது மாட்சிக்கு அடிபணிந்து உள்ளத்துக்கும் உடலுக்கும் உரிய மீட்பை அவர்கள் மிகுதியாகப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

==========

டிசம்பர் 17-ஆம் நாள் முதல் 24- ஆம் நாள் முடிய 165
டிசம்பர் 22

வருகைப் பல்லவி

திபா 23:7 கதவுகளே, உங் கள் நிலைகளை உயர்த்துங்கள்; நிலையான கதவுகளே, மேலெழுங் கள்; மாட்சியின் மன்னர் உள்ளே நுழைவார்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, சாவுக்கு உட்பட்ட மனிதரைக் கண்ணுற்று உம் ஒரே திருமகனின் வருகையால் அவர்களை மீட்கத் திருவுளம் கொண்ட உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: அவர் மனிதர் ஆனதைத் தாழ்ச்சிமிகு இறைப்பற்றுடன் அறிக்கையிடும் அவர்கள் மீட்பராகிய அவருடன் தோழமை கொள்ளவும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொண்டு காணிக்கைகளுடன் வணக்கத்துக்கு உரிய பீடத்துக்கு நாங்கள் கூடி வருகின்றோம்; அதனால் எங்களை உமது அருளால் தூய்மைப்படுத்தி, நாங்கள் கொண்டாடும் இம்மறைநிகழ்வுகளால் எங்களைப் புனிதப்படுத்துவீராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

லூக் 1:47,49 ஆண்டவரை என் ஆன்மா போற்றிப் பெருமைப்படுத்துகின்றது; ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட உமது அருளடையாளம் எங்களைத் திடப்படுத்துவதாக; அதனால் வரவிருக்கும் மீட்பரை, உகந்த செயல்களுடன் எதிர்கொள்ளவும் பேற்றின் பரிசுகளைப் பெறவும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==========

டிசம்பர் 17-ஆம் நாள்முதல் 24 ஆம் நாள் முடிய
டிசம்பர் 23

வருகைப் பல்லவி

காண். எசா 9:5; திபா 71:17 ஒரு குழந்தை நமக்குப் பிறப்பார். அவர் “வலிமைமிகு இறைவன் மக்கப்படுவார். உலகின் எல்லாக் குலங் களும் அவரில் ஆசி பெறும்.

திருக்குழும மன்றாட்டு :

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகன் மனிதர் ஆன பிறப்பு விழா நெருங்கி வருவதை உணர்ந்து உம்மை வேண்டுகின்றோம்: அதனால் கன்னி மரியாவிடமிருந்து மனிதராய்ப் பிறந்து எம்மிடையே குடி கொள்ளத் திருவுளமான எங்கள் ஆண்டவரும் இயேசு கிறிஸ்துவுமான வார்த்தை, உம் தகுதியற்ற அடியார்களாகிய எங்களுக்கு இரக்கத்தைத் தருவாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு இறை வழிபாட்டின் நிறைவைத் தரும் இக்காணிக்கை உமக்கு முழுமையான மகிழ்வை அளிப்பதாக; அதனால் எம் மீட்பரின் வருகையை நாங்கள் தூய்மையான மனதோடு கொண்டாடுவோமாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

திவெ 3:20 இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் அவரோடு உள்ளே சென்று அவரோடு உணவு அருந்துவேன்; அவரும் என்னோடு உணவு அருந்துவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணகக் கொடைகளால் நிறைவு பெற்ற எங்களுக்கு உமது அமைதியைக் கனிவாய் அளித்தருளும்; அதனால் பெரும் மகிழ்ச்சி தரும் உம் திருமகன் வரும்போது எரியும் விளக்குகளோடு அவரை எதிர்கொள்ளத் தகுதியுடன் காத்திருப்போமாக. எங்கள்.

==========

டிசம்பர் 17-ஆம் நாள்முதல் 14-ஆம் நாள் முடிய

டிசம்பர் 24

வருகைப் பல்லவி

காண். கலா 4:4 இதோ! காலம் நிறைவுற்றபோது கடவுள் தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே இயேசுவே, காலம் தாழ்த்தாது விரைந்து வர உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொள்வோர், உமது வருகையின் ஆறுதலால் தேற்றப்படுவார்களாக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமக்கு அளிக்கப்பெற்ற காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; இவற்றை நாங்கள் பெற்றுக்கொள்வதால் பாவத்திலிருந்து தூய்மை பெற்று உம் திருமகனுடைய வருகையின் மாட்சியைத் தூய மனதுடன் எதிர்நோக்கும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II (பக். 518).

திருவிருந்துப் பல்லவி :

லூக் 1:68 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றப்பெறுவராக; ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார். ‘

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது வியப்புக்கு உரிய இக்கொடையால் புத்துயிர் பெற்றுள்ள எங்களுக்கு வரம் அருளும்; அதனால் உம் திருமகனின் பிறப்பை வணக்கத்துடன் கொண்டாட முன்வருவதைப் போன்று அவருடைய என்றென்றுமுள்ள கொடைகளையும் மகிழ்வுடன் பெற்றுக்கொள்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

=============↑ பக்கம் 167

==========

கிறிஸ்து பிறப்புக் காலம்
டிசம்பர் 25
ஆண்டவருடைய பிறப்பு பெருவிழா

திரு விழிப்புத் திருப்பலி

இத்திருப்பலி டிசம்பர் 24-ஆம் நாள் மாலையில் அல்லது கிறிஸ்து பிறப்பின் மாலைப்புகழ் 1-க்கு முன் நிறைவேற்றப்படும்.

வருகைப் பல்லவி

காண். விப 16:6-7 இன்று அறிந்து கொள்ளுங்கள்; ஏனெனில் ஆண்டவர் வருவார்; நம்மை மீட்பார். காலையில் நீங்கள் அவருடைய மாட்சியைக் காண்பீர்கள்.

உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, ஆண்டுதோறும் எங்கள் மீட்பை எதிர்பார்த்திருக்கச் செய்வதனால் எங்களை மகிழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் ஒரே திருமகனை மீட்பராக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கின்ற நாங்கள், நடுவராக வரும் அவரை நம்பிக்கையுடன் சந்திக்கவும் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும். “கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்” எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: எந்த அளவுக்கு இப்பெரும் கொண்டாட்டங்களைச் சிறப்பான ஊழியத்துடன் எதிர்கொள்கின்றோமோ அந்த அளவுக்கு எங்கள் மீட்பின் தொடக்கம் இவற்றில் அமைந்துள்ளது என்பதை நாங்கள் உணரச் செய்வீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III (பக். 519 – 521).

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உமமுடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

காண். எசா 40:5 ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் நம் கடவுளின் மீட்பைக் காண்பர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, இவ்விண்ணக மறைநிகழ்வில் உண்டு, பருகிய நாங்கள் உம் ஒரே திருமகனின் வரவிருக்கும் பிறப்பினால் புத்துயிர் பெற எங்களுக்கு அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 622).

=============↑ பக்கம் 172

==========

ஆண்டவருடைய பிறப்பு
இரவுத் திருப்பலி

ஆண்டவருடைய பிறப்பு நாளில் ஒவ்வோர் அருள்பணியாளரும் மும்முறை தனித்தோ கூட்டுத்திருப்பலியாகவோ திருப்பலி நிறைவேற்றலாம். ஆனால் ஒவ்வொன்றும் அதற்குக் குறிக்கப்பட்ட காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்

வருகைப் பல்லவி

திபா 2:7 ஆண்டவர் என்னிடம் உரைத்தார்: “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.”

அல்லது

நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோம்; ஏனெனில் நம் மீட்பர் உலகில் பிறந்துள்ளார்; இன்று நமக்கு விண்ணகத்திலிருந்து உண்மையான அமைதி இறங்கி வந்தது.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, உண்மை ஒளியின் சுடரால் இப்புனிதமிக்க இரவை ஒளிரச் செய்தீர்; அதனால் இம்மண்ணகத்தில் அவரது ஒளியின் மறைநிகழ்வுகளை அறிந்திருக்கும் நாங்கள் விண்ணகத்திலும் அவரது மகிழ்ச்சியை அனுபவிக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும். “கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்” எனச் சொல்லும் போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இன்றைய திருநாளின் காணிக்கை உமக்கு உகந்ததாய் அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்புனிதமிக்க உறவுப் பரிமாற்றத்தின் வழியாக கிறிஸ்துவின் சாயலில் நாங்கள் காணப்படவும் எங்கள் இயல்பு அவரில் உம்மோடு இணையவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

==========

ஆண்டவருடைய பிறப்பு

தொடக்கவுரை : ஒளியாம் கிறிஸ்து.
இசையில்லாப் பாடங்கள்: ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை 1,

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவ ரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல
இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும்,
நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது,
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்,
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில், வாக்கு மனிதர் ஆனார் என்னும்
மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் பேரொளி எங்கள்
மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது.

எனவே, அவரில் நாங்கள் கடவுளைக் கண்கூடாய்க் காண் கின்றோம்;
அவர் வழியாகவே கண் காணாதவைமீதுள்ள அன்பினால் நாங்கள் ஆட்கொள்ளப்படுகின்றோம்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்,
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

யோவா 1:14
வாக்கு மனிதர் ஆனார்; அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே எங்கள் இறைவா, எங்கள் மீட்பரின் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்; இவ்வாறு மேன்மையான உறவுகளால் நாங்கள் அவரது விண்ணகத் தோழமைக்கு வந்து சேரும் தகுதி பெற்றிட எங்களுக்கு அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 622).

==========

ஆண்டவருடைய பிறப்பு
விடியல் திருப்பலி

வருகைப் பல்லவி

காண். எசா 9:1,5; லூக் 1:33 இன்று நம்மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ ‘வியப்பம் உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை’ என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது. “உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, மனித உடல் எடுத்த உம் வார்த்தையின் புதிய ஒளியால் நிரப்பப்பட்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இது எங்கள் செயலில் சுடர்விட்டு எங்கள் மனதில் நம்பிக்கை வழியாய் ஒளிர்வதாக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும். “கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்” எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகள் இன்றைய பிறப்பு விழாவின் மறைநிகழ்வுகளுக்கு ஏற்றவையாக அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனிதராகப் பிறந்த அவரே கடவுளாகவும் ஒளிர்வது போல இம்மண்ணகக் கொடைகள் விண்ணகத்துக்கு உரியவற்றை எங்களுக்கு வழங்குவனவாக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III (பக். 519 – 521).

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உமமுடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

காண். செக் 9:9 மகளே சீயோன், மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம், ஆர்ப்பரி;
இதோ! உன் அரசர் வருகிறார். அவர் தூயவர்; உலகின் மீட்பர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உம் திருமகனின் பிறப்பினை மகிழ்ச்சி நிறைந்த இறைப்பற்றுடன் நாங்கள் கொண்டாடுகின்றோம்; ஆழமான பொருளுள்ள இம் மறைநிகழ்வுகளை முழு நம்பிக்கையுடன் கண்டுணரவும் மிகுந்த அன்பு ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளவும் அருள்வீராக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் ( பக். 622).

==========

ஆண்டவருடைய பிறப்பு 177
பகல் திருப்பலி

வருகைப் பல்லவி

காண். எசா 3:5 ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல்
உள்ளது. அவரது பெயர் மாண்புறு மன்றத்தின் தூதர் என அழைக்கப்படும். “உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, மனிதத்தன்மையின் மாண்பினை வியத்தகு முறையில் படைத்து, அதனினும் வியத்தகு முறையில் சீர்படுத்தினீர்; எங்களது மனித இயல்பில் பங்குகொள்ள அருள்கூர்ந்த அவரது இறை இயல்பில், நாங்கள் பங்கு பெற அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும். “கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்” எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இன்றைய பெருவிழாவின் காணிக்கையிலிருந்து வெளிப்படும் உமது மன்னிப்பு, எம்மை உம்மோடு ஒப்புரவாக்கி, முழுமையான இறைவழிபாட்டுக்கு எங்களை இட்டுச் செல்வதாக; எனவே இக்காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் விளங்கச் செய்வீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III (பக். 519 – 521).

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உமமுடைய புனிதர் அனைவருடனும்…” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

‘காண். திபா 97:3
உலகின் எல்லைகள் அனைத்தும் நம் கடவுளின் மீட்பைக் காணும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இரக்கமுள்ள இறைவா, இன்று உலகின் மீட்பர் பிறந்துள்ளார்; அதனால் எங்கள் இறைப் பிறப்புக்கு ஊற்றாக அவர் இருப்பது போல எங்களுக்கு அழியா வாழ்வை அளிப்பவராகவும் இருப்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 622).

=============↑ பக்கம் 177

==========

ஆண்டவருடைய பிறப்பு விழாவின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிற்றுக்கிழமை
அல்லது அது இல்லை எனில் டிசம்பர் 30

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்

வருகைப் பல்லவி

லூக் 2:16 இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையம்
தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, எங்களுக்குத் திருக்குடும்பத்தின் சிறந்த எடுத்துக்காட்டை அளிக்கத் திருவுள மான உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: குடும்பப் பண்புகளிலும் அன்பின் பிணைப்புகளிலும் நாங்கள் அதைப் பின்பற்றி, உமது இல்லத்தின் நிலையான பரிசை மகிழ்வுடன் பெறச் செய்வீராக. உம்மோடு. இவ்விழாவை ஞாயிறு அன்று கொண்டாடினால் “நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் கடவுளின் கன்னித் தாய், புனித யோசேப்பு ஆகியோருடைய பரிந்துரையின் உதவியால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, II (பக். 519 – 521).

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உமமுடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

பாரூ 3:38 நம் கடவுள் மண்ணுலகில் தோன்றினார்; மனிதர் நடுவே குடிகொள் “”

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும் அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அதன் நிலையான தோழமையைப் பெறுவார்களாக. எங்கள்.

=============↑ பக்கம் 178

===============
டிசம்பர் 29

ஆண்டவருடைய பிறப்பு விழாவின் எண்கிழமையில் 5-ஆம் நாள்

வருகைப் பல்லவி

யோவா 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக்
கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார். “உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

கட்புலனாகாதவரும் எல்லாம் வல்லவருமான இறைவா, உமது ஒளியின் வருகையால் உலகின் இருளை அகற்றினீரே; அமைதி தவழும் முகத்துடன் எம்மைக் கண்ணோக்க வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுடைய பிறப்பின் மாட்சியைத் தகுந்த முறையில் முழக்கமிட்டுப் புகழ்வோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிமிகு பரிமாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உமமையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, II (பக். 519 – 521).

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உமமுடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

லூக் 1:78
நம் கடவுளின் இரக்கப் பெருக்கத்தால் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வந்தது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: புனிதமான இம்மறைநிகழ்வுகளின் ஆற்றலால் எங்கள் வாழ்வு என்றும் உறுதிபெறுவதாக. எங்கள்.

==========

டிசம்பர் 30

ஆண்டவருடைய பிறப்பு விழாவின் எண்கிழமையில் 6-ஆம் நாள்

ஆண்டவருடைய பிறப்பு விழாவின் எண்கிழமையில் ஞாயிற்றுக்கிழமை
வரவில்லை எனில், இந்நாளில் இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்ப விழா கொண்டாடப்படும்

வருகைப் பல்லவி

சாஞா 18:14-15 எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்து விட்ட வேளையில், ஆண்டவரே, எல்லாம் வல்ல உம் சொல்
விண்ணகத்திலுள்ள அரியணையை விட்டு எழுந்து வந்தது. “உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பழைய அடிமைநிலையினால் விளைந்த பாவச் சுமையால் அழுத்தப்பட்டுள்ள எங்களை உம் ஒரே திருமகன் மனிதர் ஆன பிறப்பு நிகழ்வு விடுவிப்பதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடுகின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை 1, II, III (பக். 519 – 521).

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

யோவா 1:16 அவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இறைவா, உமது திருவிருந்தில் நாங்கள் பங்கேற்பதால் நீர் எங்களைத் தொடுகின்றீர்; இவ்வாறு அதனுடைய ஆற்றலின் விளைவை எங்கள் இதயங்களில் செயல்படச் செய்து அதே கொடையினால் உமது அருள் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==========

டிசம்பர் 31

ஆண்டவருடைய பிறப்பு விழாவின் எண்கிழமையில் 7-ஆம் நாள்

வருகைப் பல்லவி

காண். எசா 3:5 ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் உள்ளது.
அவரது பெயர் மாண்புறு மன்றத்தின் தூதர் என அழைக்கப்படும். “உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் பிறப்பில் முழுமையான மறைநெறியின் தொடக்கத்தையும் நிறைவையும் நிலைநிறுத்தத் திருவுளமான உம்மை வேண்டுகின்றோம்: மனிதர் அனைவருடைய மீட்பின் முழுமையும் அடங்கியிருக்கின்ற அவரது உரிமைச் சொத்தில் நாங்களும் பங்குகொள்ள அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III (பக். 519 – 521).

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய உமமுடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

1 யோவா 4:9 அவர் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு, கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, பல்வேறு உதவிகளால் வழிநடத்தப்படும் உம் மக்கள் கூட்டம் உமது பரிவிரக்கத்தின் உதவிகளை இக்காலத்திலும் வருங்காலத்திலும் பெறுவதாக; இவ்வாறு கடந்து செல்லும் இவ்வுலகப் பொருள்கள் தரும் தேவையான ஆறுதலால் ஊட்டம் பெறும் அக்கூட்டம் மிகுந்த நம்பிக்கையோடு நிலையானவற்றை அடைய முயற்சி செய்வதாக. எங்கள்.

=============↑ பக்கம் 181

==========

ஜனவரி 1 ஆண்டவருடைய பிறப்பு விழாவின் 8-ஆம் நாள்

கடவுளின் தாய் புனித மரியா

பெருவிழா

வருகைப் பல்லவி

வாழ்க, புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்றும் ஆளும் அரசரைப் பெற்றெடுத்தவர் நீரே.

அல்லது


காண். எசா 9:1,5; லூக் 1:33 இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ ‘வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை’ என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, புனித மரியாவின் வளமையான கன்னிமையால் மனிதக் குலத்துக்கு நிலையான மீட்பின் பரிசுகளை வழங்கினீரே; அவரது பரிந்துரையை நாங்கள் உணரவும் அவர் வழியாக வாழ்வின் ஊற்றாகிய உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நல்லவை அனைத்தையும் கனிவுடன் தொடங்கி நிறைவு காணச் செய்கின்றீர்; உம் புனித அன்னையின் பெருவிழாவில் மகிழ்ச்சி அடைந்துள்ள நாங்கள் உமது அருளின் தொடக்கத்தில் மாட்சி அடைவது போல அதன் நிறைவிலும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பீராக. எங்கள்.

தொடக்கவுரை: புனித கன்னி மரியாவின் தாய்மை. இசை யில்லாப் பாடம்: புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1 (தாய்மையின் பெருவிழாவில்) பக். 546,

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்ட வரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவதும்
எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் தாய்மையின் பெருவிழாவில்
நாங்கள் உம்மைப் போற்றிப் புகழ்ந்து மாட்சிப்படுத்துவதும் மெய்யாகவே தகுதி யும் நீதியும் ஆகும்,
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆ கும்.
தூய ஆவி நிழலிட்டதால், அந்த அன்னை உம்முடைய ஒரே திருமகனைக் கருத்தாங்கி,
தமது கன்னிமையின் மாட்சியில் நிலைத்து நின்று
முடிவில்லா ஒளியான எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உலகுக்கு அளித்தார்.

அவர் வழியாகவே உமது மேன்மையை வானதூதர் புகழ்கின்றனர்;
தலைமை தாங்குவோர் உமமை வழிபடுகின்றனர்;
அதிகாரம் செலுத்துவோர் உம்திருமுன் நடுங்குகின்றனர்;
வானங்களும் அவற்றிலுள்ள ஆற்றல்களும் சேராபீன்களும் ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்:
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ் மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது: தூயவர்.

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணக அருளடையாளங்களை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: என்றும் கன்னியான உம் திருமகனின் தாயும் திரு அவையின் அன்னையுமான மரியாவை அறிக்கையிடுவதில் மகிழ்வுறும் நாங்கள் நிலைவாழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல இவ்வருளடையாளங்கள் எம்மை வழிநடத்துவனவாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 623). பின்வரும் நாள்களில், வார நாள் திருப்பலி நிறைவேற்றப்படும்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் பயன்படுத்தப்படும் (பக். 193).

=============↑ பக்கம் 184

==========

ஆண்டவருடைய பிறப்பு விழாவுக்குப்பின் வரும் 2-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

சாஞா 18:14-15 எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளை யில், ஆண்டவரே, எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையை விட்டு எழுந்து வந்தது.
“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நம்பிக்கை கொண்டுள்ள ஆன்மாக்களின் பேரொளியாகிய நீர், உலகை உமது மாட்சியால் கனிவுடன் நிரப்பத் திருவுளம் கொண்டீரே; உமது ஒளியின் சுடரால் எல்லா மக்களுக்கும் உம்மை வெளிப்படுத்துவீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பிறப்பு விழாவில் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; இவை எங்களுக்கு உண்மையின் வழியை வெளிப்படுத்தி விண்ணக வாழ்வை உறுதிப்படுத்துவனவாக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III (பக். 519 – 521).

திருவிருந்துப் பல்லவி :

காண். யோவா 1:12
அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே எங்கள் இறைவா, இம்மறைநிகழ்வின் செயலால் எங்கள் தீய பழக்கங்களை அகற்றப் பணிவுடன் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நேர்மையான விருப்பங்கள் நிறைவேறுவனவாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 622).

==========

ஜனவரி 6
ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா


திருக்காட்சிப் பெருவிழா கடன் திருநாளாக எங்கு கொண்டாடப்படவில்லையோ அங்கு ஜனவரி 2-லிருந்து 8-க்குள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இதற்கு உரிய நாளாகக் கடைப்பிடிக்கப்படும்.

திருவிழிப்புத் திருப்பலி

திருக்காட்சியின் மாலைப்புகழ் 1-க்கு முன்போ பின்போ பெருவிழாவுக்கு முந்திய மாலையில் இத்திருப்பலி பயன்படுத்தப்படும்.


வருகைப் பல்லவி காண். பாரூ 5:5 எருசலேமே, எழுந்திரு; கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை உன் மக்கள் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளதைப் பார்.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது மாண்பின் பேரொளி எங்கள் இதயங்களுக்கு ஒளியூட்ட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகின் இருளைக் கடக்கும் வலிமை பெற்று நிலையான மாட்சியின் நாட்டுக்கு வந்து சேர்வோமாக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனுடைய திருக்காட்சி, பிற இனத்தாரின் முதற்கனிகள் ஆகியவற்றை முன்னிட்டு ஒப்புக்கொடுக்கப்படும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருள வேண்டுகின்றோம்: அதனால் உமக்குப் புகழ்ச்சி சாற்றப்பட்டு எங்களுக்கு நிலையான மீட்பு கிடைப்பதாக. எங்கள்.

ஆண்டவருடைய திருக்காட்சியின் தொடக்கவுரை (பக். 522).

திருவிருந்துப் பல்லவி :

காண். திவெ 21:23 கடவுளின் மாட்சி புனித நகரமாம் எருசலேமுக்கு ஒளி; மக்கள்
இனத்தார் அதன் ஒளியில் நடப்பர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, புனித உணவால் புத்துணர்வு பெற்றுள்ள நாங்கள் உமது இரக்கத்தை வேண்டுகின்றோம்: உமது நீதியின் விண்மீன் எங்கள் உள்ளங்களில் என்றும் தோன்றுவதால் உமமை அறிக்கையிடுவது எங்கள் செல்வமாய் இருப்பதாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 623).

==========

பகல் திருப்பலி

வருகைப் பல்லவி

காண். மலா 3:1; 1 குறி 28:12 இதோ, பேரரசராம் ஆண்டவர் வருகிறார்; அரசும் ஆற்றலும்
ஆட்சியும் அவரது கையிலே. “உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, விண்மீன் வழிநடத்த உம் ஒரே திருமகனை இன்று பிற இனத்தாருக்கு வெளிப்படுத்திய நீர் கனிவுடன் வரம் அருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம்மை ஏற்கெனவே நம்பிக்கையால் அறிந்துள்ள நாங்கள் உமது மாட்சியின் தோற்றத்தைக் கண்டுகளிக்கும்வரை வழிநடத்தப்படுவோமாக. உம்மோடு. எங்கு நடைமுறை இருக்கின்றதோ, அங்கு தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாய்பாட்டுக்கு ஏற்ப (பக். 126 2) நற்செய்திக்குப் பிறகு நடப்பு ஆண்டின் மாறும் திருவிழாக்கள் அறிவிக்கப்படலாம்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்க உம்மை வேண்டுகின்றோம்: பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் இப்பொழுது ஒப்புக்கொடுக்கப்படவில்லை; எனினும் இக்காணிக்கைகள் வழியாக இயேசு கிறிஸ்து அறிக்கையிடப்படுகின்றார், பலியிடப்படுகின்றார், உட்கொள்ளப்படுகின்றார் என்பதை நாங்கள் உணரச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தொடக்கவுரை: கிறிஸ்து, பிற இனத்தாருக்கு ஒளி.
இசையில்லாப் பாடம்: ஆண்டவருடைய திருக்காட்சியின் தொடக்கவுரை (பக். 522).

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்தவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில்
எமது மீட் பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர்;
சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது
அவருக்கு உரிய சாகாத் தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான் படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து,
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் …” எனும் மன்றாட்டைச் சொல்லவும்.

திருவிருந்துப் பல்லவி :

காண். மத் 2:2 கிழக்கில் அவரது விண்மீனைக் கண்டோம்; ஆண்டவரை வணங்கக் காணிக்கைகளுடன் வந்திருக்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, எங்கும், எப்பொழுதும் விண்ணக ஒளியாய் நீர் எங்கள் முன் செல்ல உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பங்கேற்க வேண்டும் என நீர் விரும்பும் மறைநிகழ்வைத் தூய்மையான உள்ளுணர்வுடன் கண்டுகொள்ளவும் தகுதியான ஆவலுடன் அறிந்துகொள்ளவும் செய்வீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 623).

==========

கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள்கள்

ஜனவரி 2 முதல் – ஆண்டவருடைய திருமுழுக்கு விழாவுக்கு முந்திய சனிக்கிழமைவரை

குறிப்பிடப்பட்டுள்ளது போல், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருக்குழும மன்றாட்டோடு அந்தந்த நாளுக்கு உரிய திருப்பலி பயன்படுத்தப்படும்.

திங்கள்

வருகைப் பல்லவி

புனிதமாக்கப்பட்ட நாள் நம்மை ஒளிர்வித்தது; மக்கள் இனத்தாரே, வாருங்கள்; ஆண்டவரை வணங்குங்கள். ஏனெனில் பேரொளி மண்ணின் மீது இறங்கி வந்துள்ளது.

திருக்குழும மன்றாட்டு :

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் ஆண்டவரே, உம் மக்களின் நம்பிக்கைக்கு அசைக்கமுடியாத உறுதியை அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மோடு நிலையான மாட்சியில் இருக்கும் உம் ஒரே திருமகன் உண்மையாகவே எங்கள் மனித உடல் எடுத்துக் கன்னித் தாயிடமிருந்து பிறந்ததை அறிக்கையிடுவதால் அவர்கள் இன்றைய இன்னல்களிலிருந்து விடுதலை பெற்று நிலையான மகிழ்வில் சேர்க்கப்படுவார்களாக. உம்மோடு.

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப்பின் இறைவா, உம் வார்த்தையின் முடிவற்ற தன்மை விண்ணக முற்றத்தை அழகுபடுத்த உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு கன்னி மரியா வழியாக எங்களது மனித உடலின் வலுவின்மையை ஏற்றுக்கொண்டு உண்மையின் சுடராய் எங்களில் தோன்றிய அவர் உலகின் மீட்புக்காக முழுமையான ஆற்றலோடு முன்செல்வாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிக்கு உரிய பரிமாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==========

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519521); திருக்காட்சியின் தொடக்கவுரை (பக். 5 2 2) அல்லது திருக்காட்சிப் பெருவிழாவுக்குப்பின் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 521

திருவிருந்துப் பல்லவி :

யோவா 1:14 தந்தையின் அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய ஒரே மகனின்
மாட்சியை நாங்கள் கண்டோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: புனிதமான இம்மறைநிகழ்வுகளின் ஆற்றலால் எங்கள் வாழ்வு என்றும் உறுதிபெறுவதாக. எங்கள்.

==========

திருப்பிறப்புக் கால வாரநாள்கள்
செவ்வாய்

வருகைப் பல்லவி

திடகா 117:26-27 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் ஆண்டவரே
கடவுள்; அவர் நம்மீது ஒளி வீசினார்.

திருக்குழும மன்றாட்டு :

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் இறைவா, புனித கன்னியின் பேறுபெற்ற மகப்பேற்றினால் உம் திருமகனின் பிறப்பை மனித இனத்தின் பாவக் கறை தீண்டாதிருக்கச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இப்புதுப் படைப்பினால் ஆட்கொள்ளப்பட்ட நாங்கள் எங்களைத் தொற்றிக்கொண்டிருக்கும் பழைய பாவப் பழக்கங்களிலிருந்து விடுதலை பெறுவோமாக. உம்மோடு.

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப்பின் இறைவா, உம் ஒரே திருமகன் எங்களது மனித உடலின் தன்மையில் தோன்றினார்; இவ்வாறு தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை நாங்கள் கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடுகின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

காட்சிப் பெருவிழாவுக்கு முன் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 5 21; திருக்காட்சியின் தொடக்கவுரை (பக். 522) அல்லது திருக்காட்சி – பெருவிழாவுக்குப்பின் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 521)

திருவிருந்துப் பல்லவி :

எபே 2:4; உரோ 8:3 தமது மிகுந்த இரக்கத்தினால் கடவுள் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்; பாவ ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் மகனை அனுப்பினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இறைவா, உமது திருவிருந்தில் நாங்கள் பங்கேற்பதால் நீர் எங்களைத் தொடுகின்றீர்; இவ்வாறு அதனுடைய ஆற்றலின் விளைவை எங்கள் இதயங்களில் செயல்படச் செய்து அதே கொடையினால் உமது அருள் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==========

திருப்பிறப்புக் கால வாரநாள்கள்

புதன்

வருகைப் பல்லவி காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்;
எசா 9:1 சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி
உதித்துள்ளது.

திருக்குழும மன்றாட்டு :

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்குக் கனிவாய் இரங்கியருளும்; அதனால் உலகின் மீட்புக்காகப் புறப்பட்ட விண்ணகப் புத்தொளி எப்பொழுதும் எங்கள் இதயங்களைப் புதுப்பிப்பதாக. உம்மோடு.

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப்பின் இறைவா, எல்லா மக்களையும் ஒளிர்விப்பவரே, முடிவில்லா அமைதியில் மகிழ உம் மக்களுக்கு அருள் தாரும்; எங்கள் முன்னோர்களின் மனங்களில் நீர் வீசிய பேரொளியை எங்கள் இதயங்களிலும் பொழிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக. எங்கள்.

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 5 21; திருக்காட்சியின் தொடக்கவுரை (பக். 52 2) அல்லது திருக்காட்சிப் பெருவிழாவுக்குப்பின் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 521).

திருவிருந்துப் பல்லவி :

1 யோவா 1:2 தந்தையோடு இருந்த வாழ்வு வெளிப்படுத்தப்பட்டது; அது நமக்குத்
தோன்றியது. திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு ஆண்டவரே, பல்வேறு உதவிகளால் வழிநடத்தப்படும் உம் மக்கள் கூட்டம் உமது பரிவிரக்கத்தின் உதவிகளை இக்காலத்திலும் வருங்காலத்திலும் பெறுவதாக; இவ்வாறு கடந்து செல்லும் இவ்வுலகப் பொருள்கள் தரும் தேவையான ஆறுதலால் ஊட்டம் பெறும் அக்கூட்டம் மிகுந்த நம்பிக்கையோடு நிலையானவற்றை அடைய முயற்சி செய்வதாக எங்கள்.

==========

198 திருப்பிறப்புக் கால வார நாள்கள் :

வியாழன்

வருகைப் பல்லவி

காண். யோவா 1:1 தொடக்கத்திலும் கால ங் களுக்கு முன்னும் கடவுள் வாக்காக
இருந்தார்; அவரே உலகின் மீட்பராகப் பிறக்கத் திருவுள மானார்.

திருக்குழும மன்றாட்டு :

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் இறைவா, உம் ஒரே திருமகனின் பிறப்பினால் உம் மக்களுக்கு வியத்தகு முறையில் மீட்பின் பயனை அளிக்கத் தொடங்கியுள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியார்கள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்து தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாட்சியின் பரிசைப் பெற்றிட அவரின் வழிநடத்துதலால் வந்து சேர்வார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப்பின் இறைவா, உம் திருமகன் வழியாக எல்லா மக்களிலும் உமது நிலையான ஒளியை ஏற்றினீரே; உம் மக்களின் உள்ளத்தில் மீட்பரின் ஒளி பெருகுவதால் அவரது முடிவில்லா மாட்சிக்கு அவர்கள் வந்து சேர்வார்களாக.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிமிகு பரிமாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 21); திருக்காட்சியின் தொடக்கவுரை (பக். 53 2) அல்லது திருக்காட்சி – பெருவிழாவுக்குப்பின் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 521).

திருவிருந்துப் பல்லவி :

யோவா 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும்
அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: புனிதமான இம்மறை நிகழ்வுகளின் ஆற்றலால் எங்கள் வாழ்வு என்றும் உறுதிபெறுவதாக. எங்கள்.

==========

திருப்பிறப்புக் கால வாரநாள்கள்

வெள்ளி

வருகைப் பல்லவி

திபா 111:4 இதயத்தில் நேர்மையுள்ளவர்களுக்கு இருளில் ஒளி தோன்றிய து ;
அருளும் இரக்கமும் நீதியும் உள்ள வர் ஆண்டவர்.

திருக்குழும மன்றாட்டு :

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டோரைக் கனிவுடன் ஒளிர்விக்க உம்மை வேண்டுகின்றோம்: அவர்களின் இதயங்களை உமது மாட்சியின் பேரொளியால் என்றும் பற்றியெரியச் செய்தருளும்; அதனால் அவர்கள் தங்கள் மீட்பரை இடைவிடாமல் ஏற்று உண்மையாகவே பற்றிக்கொள்வார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப்பின் எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் உம்மிடம் மன்றாடுவதை எங்களுக்குக் கனிவாய் அளித்தருள உம்மை வேண்டுகின்றோம்: விண்மீனின் வழிகாட்டுதலால் அறிவிக்கப்பட்ட உலக மீட்பரின் பிறப்பு எங்கள் மனங்களுக்கு என்றும் வெளிப்படுத்தப்பட்டுப் பயன் அளிப்பதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடுகின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முன் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – – 4). திருக்காட்சியின் தொடக்கவுரை (பக். 522) அல்லது திருக்காட்சிப் “பருவிழாவுக்குப்பின் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 521).

திருவிருந்துப் பல்லவி :

1யோவா 4:9 அவர் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இறைவா, உமது திருவிருந்தில் நாங்கள் பங்கேற்பதால் நீர் எங்களைத் தொடுகின்றீர்; இவ்வாறு அதனுடைய ஆற்றலின் விளைவை எங்கள் இதயங்களில் செயல்படச் செய்து அதே கொடையினால் உமது அருள் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==========

திருப்பிறப்புக், கால வாரநாள்கள்

சனி

வருகைப் பல்லவி

கலா 4:4-5 நாம் சொந்த மக்களின் உரிமையைப் பெறும்படி கடவுள் தம் மகனைப்
பெண்ணிடம் பிறக்குமாறு அனுப்பினார்.

திருக்குழும மன்றாட்டு :

திருக்காட்சிப் பெருவிழாவுக்குமுன் என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகனுடைய வருகையின் புத்தொளி சுடர்வீசிட நீர் திருவுள மானீரே; கன்னியின் மகப்பேறு வழியாக எங்கள் மனித உடலின் சாயலில் அவர் பங்குபெற்றதால் தகுதி அடைந்துள்ள நாங்கள் அவருடைய அருளாட்சியிலும் பங்குபெறத் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடு கின்றோம்.

திருக்காட்சிப் பெருவிழாவுக்குப்பின் என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகன் வழியாக எங்களை உம் புதுப் படைப்புகளாக்கிய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது அருளினால் அவருடைய சாயலில் நாங்கள் காணப்படவும் அவரில் எங்கள் இயல்பு உம்மோடு இணைந்திருக்கவும் கனிவாய் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக. எங்கள்.

கொட்சிப் பெருவிழாவுக்கு முன் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – – 4 திருக்காட்சியின் தொடக்கவுரை (பக். 522) அல்லது திருக்காட்சி ப பெருவிழாவுக்குப்பின் ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை (பக். 519 – 521).

திருவிருந்துப் பல்லவி :

யோவா 1:16 அவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள்
பெற்றுள்ளோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, பல்வேறு உதவிகளால் வழிநடத்தப்படும் உம் மக்கள் கூட்டம் உமது பரிவிரக்கத்தின் உதவிகளை இக்காலத்திலும் வருங்காலத்திலும் பெறுவதாக; இவ்வாறு கடந்து செல்லும் இவ்வுலகப் பொருள்கள் தரும் தேவையான ஆறுதலால் ஊட்டம் பெறும் அக்கூட்டம் மிகுந்த நம்பிக்கையோடு நிலையானவற்றை அடைய முயற்சி செய்வதாக. எங்கள்.

=============↑ பக்கம் 202

==========

ஜனவரி 6-க்குப்பின் வரும் ஞாயிறு

ஆண்டவருடைய திருமுழுக்கு

திருக்காட்சிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ள இடங்களில், அந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 7 அல்லது 8-இல் வருமானால், அடுத்து வரும் திங்கள்கிழமை அன்று ஆண்டவரின் திருமுழுக்கு விழா கொண்டாடப்படும்.

வருகைப் பல்லவி

காண். மத் 3:16-17 ஆண்டவர் திருமுழுக்குப் பெற்றவுடனே வானம் திறக்கப்பட்டது; புறா வடிவில் ஆவியார் அவர் மீது தங்கினார்; என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று தந்தையின் குரல் ஒலித்தது.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்துவின் மீது தூய ஆவி இறங்கி வர, அவரை உம் அன்பார்ந்த மைந்தர் எனச் சிறந்த முறையில் அறிக்கையிட்டீரே; தண்ணீராலும் தூய ஆவியாலும் புதுப் பிறப்பு அடைந்துள்ள மக்களை உமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட நீர் அவர்கள் உமக்கு ஏற்புடையவர்களாக என்றும் நிலைத்திருக்க அருள்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, உம் ஒரே திருமகன் எங்களது மனித உடலின் தன்மையில் தோன்றினார்; இவ்வாறு தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை நாங்கள் கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அன்புத் திருமகனுடைய வெளிப்பாட்டைக் கொண்டாடும் நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அவர் மனமிரங்கி உலகின் பாவங்களைக் கழுவத் திருவுளம் கொண்டதால் உம் நம்பிக்கையாளரின் காணிக்கை அவரது பலியாக மாறுவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தொடக்கவுரை: ஆண்டவருடைய திருமுழுக்கு.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

வியத்தகு மறைநிகழ்வுகளால் யோர்தான் ஆற்றில்
புதிய முழுக்கினை நீர் குறித்துக் காட்டினீர்;
அதனால் விண்ணிலிருந்து வந்த குரல் வழியாக
உம்முடைய வார்த்தை மனிதரிடையே குடி கொண்டு இருப்பதை நாங்கள் நம்பச் செய்தீர்;

மேலும் தூய ஆவியார் புறா வடிவில் இறங்கியதன் வழியாக
உம் ஊழியர் கிறிஸ்துவை மகிழ்ச்சியின் எண்ணெயால் பூசி
அவரை ஏழைகளுக்கு நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பியதை அறியச் செய்தீர்.

ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி :

யோவா 1:32, 34 இதோ! நான் கண்டேன்; சான்று பகர்ந்தேன்; ஏனெனில் இவரே
இறைமகன் என்று யோவான் இவரைப் பற்றிக் கூறினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுக்கு நம்பிக்கையோடு செவிமடுக்கும் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக உண்மையில் அழைக்கப்பட்டு அதற்கு ஏற்ப வாழ்வோமாக. எங்கள்.

இந்த ஞாயிற்றுக்குப்பின் வரும் திங்கள் முதல் தவக் காலத்துக்குமுன் வரும் செவ்வாய்வரை ஆண்டின் பொதுக் காலம் நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் வார நாள் திருப்பலிகளுக்காகக் கீழே தரப்பட்டுள்ள பாடங்கள் பயன்படுத்தப்படும் (பக். 449மு)

=============↑ பக்கம் 206

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy