கிறித்து பிறப்புப் பாடல்கள்

கிறிஸ்து பிறப்புப் பாடல்கள்

01. அப்பத்தின் வீடென்னும் பெத்தலையில்

ஆயன் பிறந்த நாள்தனில்

அப்பமும் இரசமும் நான் கொணர்ந்தேன்

ஆண்டவன் உடலாய் மாறிடுமே  – அப்பத்தின்

1. கையில் கிடைத்த மணிகளை கொணர்ந்த இடையர்கள் போலானேன்

தடை பல கடந்து பொன்பொருள் கொடுத்த ஞானியர் நானாவேன்

வானவர் செய்தி நான் கேட்டேன் வாழ்வினில் அமைதி நான் கொள்வேன்

விண்மீன் என்னை வழிநடத்தும் பிறப்பாய் பிறர்க்கு ஒளி கொடுப்பீர்

2. பெத்லகேம் பிறந்து ஜெருசலேம் நுழைந்து பின்னாளில் மடிந்திடுவார்

பிறந்ததன் பயனை இறந்ததால் காட்டிய பரமனை நான் தொடர்வேன்

வானவர் செய்தி நான் கேட்டேன் வாழ்வினில் அமைதி நான் கொள்வேன்

விண்மீன் என்னை வழிநடத்தும் பிறப்பாய் பிறர்க்கு ஒளி கொடுப்பீர்

02. ஆண்டவர் சன்னிதி வாருங்களே நல்

ஆனந்தமுடனே பாடுங்களே

இயேசுவின் பிறப்பில் மகிழுங்களே – 2

இந்த இகமதில் நாளும் முழங்குங்களே

வாருங்களே வாருங்களே – 2

1. உள்ளங்கள் உறவுகள் மகிழும்

இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால்

அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால்

ஆண்டவர் வழியினில் நடந்திடலாம்

குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால்

இயேசுவை அவரில் கண்டிடலாம் -2

இறைபணி தொடர இறையாட்சி மலர

இணைந்திடுவோம் நாம் இறைவனிலே

2. சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை

இறைவன் இயேசு வருகையிலே

நீதியுமுண்டு சமத்துவமுண்டு

இறைவன் வாழும் சமூகத்திலே

அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால்

இனிய உலகம் படைத்திடலாம்

குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால்

புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம்

03. ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்

உன்னுடலைச் சுவைத்திட போதாதய்யா

என் இயேசுவே என் தெய்வமே

ஏழையின் உணவாய் வந்தவரே (2)

வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா (2)

1. எளியவர் உள்ளங்கள் அழைத்திடும் வேளை

எரிந்திடும் தீபம் நீதானய்யா – என்றும்

அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம்

கேட்டிட எழுவதும் நீதானய்யா – எங்கள்

துயரத்தில் ஆறுதல் ஆனவரே

சுமைகளைத் தாங்கிட வந்தவரே உணவாய் வந்தனையோ

வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா (2)

2. துணை ஏதுமின்றி வாடிடும் நேரம்

அருட்கரம் தருவதும் நீதானய்யா

நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போதும்

அருகினில் இருப்பதும் நீதானய்யா – எங்கள்

வெறுமையில் உறவாய் இருந்திடுவாய்

பெருமைகள் போக்க உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய்

வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா (2)

04. இடையர்கள் தந்த காணிக்கை போல

இருப்பதை நானும் எடுத்து வந்தேன்

கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்

கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)

இயேசு பாலனே ஏற்றிடுமே

நேச ராஜனே ஏற்றிடுமே (2)

1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க

அடிமையின் தன்மையை எடுத்தவனே

உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து

மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2)

இயேசு பாலனே ஏற்றிடுமே

நேச ராஜனே ஏற்றிடுமே (2)

2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து

நிம்மதி தந்திட வந்தவனே

வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல

மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) –

இயேசு பாலனே ஏற்றிடுமே

நேச ராஜனே ஏற்றிடுமே (2)

 05. இதோ மாபெரும் நற்செய்தி –  இறைவன் மனிதரானார்

இறைகுலமே எழுந்திடுக இறை பலி செலுத்திடவே

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் – 2

பூமியில் அமைதி உண்டாகட்டும் தேவனின் வார்த்தை என்றாகட்டும்

1. பாலனின் முகம் காண ஞானிகள் வந்தனரே

பாதை காட்டும் விண்மீன் வழியில் தேவ குழந்தையைக் கண்டனரே

நாளும் இறைவழி நாம் நடந்தால்

நாளெல்லாம் இறை முகம் காண்போம்

அன்பை அணிந்து அமைதி அருளும் 

Happy Christmas – 2

2. போகும் திசையெல்லாம் யேசுவின் புகழ் சொல்வோம்

அன்பை விதைத்து அவனியெல்லாம்

அவரின் சீடர்கள் நாம் என்போம்

சாதி பேதம் களைந்திடுவோம்

சான்று பகன்றே வாழ்ந்திடுவோம்

அன்பை அணிந்து அமைதி அருளும்

Happy Christmas – 2

06. இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்

இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2)

இறைவாக்கினர்கள் சொன்னபடி

பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்

போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம்

1. மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்

மாடுகள் அடையும் தொழுவத்திலே -2

மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே

Happy Christmas Happy Christmas Happy Happy Christmas – 2

2. புவியில் நன்மனம் கொண்டவர்கள்

நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே

அமைதியின் வேந்தன் அவனியிலே -2

அழகிய குழந்தையாய் உதித்தாரே

Happy Christmas Happy Christmas Happy Happy Christmas – 2

07. இறை வார்த்தையான கடவுள் இன்று

நம்மிடையே குடிகொண்டார்

நிறை வாழ்வு வழங்க இறை நிலை துறந்து

குழந்தையாய் பிறந்துள்ளார்         (2)

1. வாருங்கள் வாருங்கள் இறை மக்களே

மீட்பராம் யேசுவை பாடிடுவோம்

வாருங்கள் வாருங்கள் இறை மக்களே

மரியாளின் மைந்தனை பணிந்திடுவோம்

ஆ……ஆ…..

2. உலகில் உள்ள படைப்பு எல்லாம்

இறைவனால் உண்டானது

உயிர்கள் தழைக்க வாழ்வும் ஒளியும்

இயேசுவில் ஊற்றானது   (2)

இயேசுவே உம்மீது நம்பிக்கை கொண்டு

உள்ளத்தில் ஏற்றுக் கொள்வேன்

கடவுளின் மகனாவேன் நான் கடவுளின் மகளாவேன்

3. மாட்சிமை நிறைந்த கடவுளின் பிரசன்னம்

யாருமே கண்டதில்லை

அப்பா தந்தை என உரிமையில் அழைக்கும்

இயேசுவிற்கு இணையில்லை        (2)

இயேசுவின் வாழ்வில் உண்மையும் அருளும்

முழுமையாய் வெளிப்பட்டது

நிறை வாழ்வு மலர்ந்துள்ளது- இங்கு

குழந்தையாய் பிறந்துள்ளது

08. இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

அவரே ஆண்டவர் மெசியாவார் (2)

1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2

புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2

நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2

2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூருங்கள் -2

கடலும் அதில் வாழும் யாவையுமே

ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)

வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

09. இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

அவரே ஆண்டவராம் மெசியா – 2 (2)

1. ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்

மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2)

ஆண்டவரைப் போற்றுங்கள்

அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)

அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்

2. புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்

மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு

செயல்களைக் கூறங்கள் (2)

வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூரட்டும் -2

கடலும் அதிலுள்ள உயிரினமும் ஆரவாரம் செய்யட்டும்

10. இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

அவரே ஆண்டவர் நம் மெசியா  – 2

1. வானம் ஒளிரட்டும் பூமி மகிழட்டும் – மீட்பர் பிறந்துள்ளார்

கடலில் வாழும் உயிரினம் அறியட்டும் – மீட்பர்….

மரம் செடி கொடிகள் மலர்ந்து மணக்கட்டும் – மீட்பர் ..

விரைவாய் சென்று வேந்தனை காண்போம் – மீட்பர் …

அவர் இம்மானுவேல் அவர் ஆலோசகர் வலிமைமிகு இறைவன்

அவர் இம்மானுவேல் அவர் ஆலோசகர் அமைதிதரும் அரசர்

2. நீதி பிறந்தது நேர்மை ஜெயித்தது – மீட்பர் …

இருளில் நடந்தோர் பேரொளி கண்டனர் – மீட்பர்…

கன்றும் சிங்கமும் ஒன்றாய் வாழும் – மீட்பர் ….

விரைவாய் சென்று எங்கும் சொல்வோம் – மீட்பர்

அவர் இம்மானுவேல் அவர் ஆலோசகர் வலிமைமிகு இறைவன்

அவர் இம்மானுவேல் அவர் ஆலோசகர் அமைதிதரும் அரசர்

11. இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் (2)

அவரே ஆண்டவராம் மெசியா

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

1. ஆண்டவர்க்கு புதியதொரு – பாடல் பாடுங்கள் (2)

உலகெங்கும் வாழ்வோரே – அவர் புகழைப் பாடிடுங்கள் (2)

ஆண்டவரைப் போற்றிடுங்கள் அவர் பெயரை வாழ்த்திடுங்கள் (2)

2. ஆண்டவரின் மீட்பினையே – நாளும் அறிவியுங்கள் (2)

பிற இனத்தார் அறிந்திட – அவர் மாட்சியை சொல்லிடுங்கள் (2)

அனைத்துலக மக்களுக்கும் அவர் செயலை உரைத்திடுங்கள் (2)

12. இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்

கீதங்கள் இசைக்கட்டும் நாதங்கள் முழங்கட்டும் நேசங்கள் மலரட்டும்

இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று மலர்ந்த நாள் மண்ணிலே

அன்பின் குழந்தை இயேசுவே

உந்தன் மழலை மொழி கேட்கவே

எந்தன் மனமும் தினம் ஏங்குதே

இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்

1. ஒரு விண்தெய்வம் நம்மோடு மண்மீதிலே

மழலையாய் மலர்ந்ததே

அந்த விண்வார்த்தை நம் வாழ்வில் இந்நாளிலே

விடியலாய்ப் புலர்ந்ததே

இனி வேற்றுமை மறையட்டும் எங்கும் வேதனை தீரட்டும்

வையம் மகிழும் வான்படை போற்றும்

வான தேவன் வரவில் – நல்ல

இதயம் நிறையும் உதயம் மலரும்

தேவமைந்தன் உறவில் – இன்று

2. ஒரு விண்தெய்வம் இந்நாளில் நம் இல்லத்தில்

புதையலாய்த் தவழ்ந்ததே

அந்த விடிவெள்ளி நம் வாழ்வில் ஒளியேற்றவே

புதுமையாய் ஒளிர்ந்ததே

இனி ஒற்றுமை பெருகட்டும் போர் கலகங்கள் ஓயட்டும்

வையம் மகிழும் வான்படை போற்றும்

வான தேவன் வரவில் – நல்ல

இதயம் நிறையும் உதயம் மலரும்

தேவமைந்தன் உறவில் – இன்று

13. உம்மில்லம் வந்தேன் காணிக்கை தந்தேன் தெய்வீக குழந்தைக்கு

என்னையே தந்தேன் என் வாழ்வை தந்தேன்

என் இயேசு குழந்தைக்கு – 2

1. பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை

உமக்கு நான் கொடுக்க – 2

எளிய இதயம் என்னிடம் உண்டு அதையே தருகிறேன் – 2

உம் நெஞ்ச குடிலில் நான் வாழ வேண்டும் -2

என் இயேசு குழந்தையே என் இயேசு தெய்வமே

2. பொன் தூபம் போளம் ஞானிகள் தந்தார்

என் இயேசு குழந்தைக்கு – 2

நெஞ்சை அழுத்தும் சுமைகள் யாவும் உமக்கு தருகிறேன் – 2

தாயாக நீரும் எனைக் காக்க வேன்டும் – 2

என் இயேசு குழந்தையே என் இயேசு தெய்வமே

14. உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே

ஒன்றுகூடியே வாருங்களே

உண்மை விடுதலையை நாம் சுவாசிக்கவே நம் இறைமகன்

பிறந்துள்ளார் வாருங்கள் பாடுங்கள்

விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை

மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி (2)

1. சின்ன பாலகனின் கொஞ்சும் சிரிப்பதையும் இதயம் மகிழ்ந்திடுதே

துன்ப துயரங்களும் தொல்லை கவலைகளும்

மறைந்து மாய்ந்திடுதே – வருவீர் நண்பரே -2

உண்மை விடுதலை அடைந்திடவே-2

விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை

மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி (2)

2. கண்ணில் கருணையும் மண்ணில் அமைதியும்

இதயம் அவர் தரவே

விண்ணின் தேவனவர் நம்மில் நிறைந்துவிட்டால்

புலரும் புதுவிடியல் – வருவீர் நண்பரே – 2

உண்மை விடுதலை அடைந்திடவே-2

விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை

மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி (2)

15. எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க

எனக்கென்ன கவலை என் இறைவா – இனி

அச்சமென்ப தெனக்கில்லை

வழியெங்கும் தடையில்லை தலைவா (2)

உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ

உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே

உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே

எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்கவா

1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்

வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்

உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ

உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே

உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே

எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்கவா

2. வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்

நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்

உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ

உந்தன் உறவானது உயிர்த் துணையானது

உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே

எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா

16. எனக்கெனப் பிறந்தவர் எங்கே

நான் தரும் காணிக்கை இங்கே -2

ஒரு மார்கழி இரவில் உலகாள வந்த அருளால் -2

கண் வளர்ந்திடும் பாலா – எனைக் கனிவுடன் காண்பாயா -2

ஆ ……..ஆ………ஆ…….

1. வல்ல நல் ஞானியர் எனினும்

வழி அறிந்திருந்திடவில்லை

வல்லவர் எனப் பலர் இருந்தும் – உன்னை

கண்டிடும் வரம் பெறவில்லை

என்ன தவம் யாம் செய்தோமோ

எம்மிடை நீயும் பிறந்திடவே

பணிவினை பரிசளித்தோம் – உன்

அருளெனச் சரணடைந்தோம்

ஆ…….ஆ…..ஆ….

2. நீ வரும் நாளினை நோக்கி

காத்திருந்தன தலைமுறைகள்

தீமைகள் அகன்றிடும் காலம்

வரமென வருமென இந்நாள்

காண்கின்ற திசைகளில் எல்லாம்

இன்று உன் ஒளி எழுவதை கண்டோம்

எங்கள் மகிழ்ச்சியை பரிசளித்தோம்

அகம் மலர்ந்திட அணி வகுத்தோம்

ஆ …..ஆ…..ஆ….

17. ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை

எமக்காய்ப் பிறந்த நல் இயேசுவே (2)

1. அன்பாலே உலகை நிரப்பிய அழகே

அளிக்க வந்தோம் எங்கள் இதய அன்பை (2)

ஆவியின் கனிகளைப் பொழிகின்ற தலைவா

தருகின்றோம் தனிப்பதம் பணிந்தே

2. என் நெஞ்சில் நிம்மதி ஒளிதந்த நிலவே

இன்னுயிர் கலந்த வான்முகிலே (2)

வாழ்வினை பலியாய் மலர்ப்பதம் படைத்தே -2

இறைஞ்சுகின்றோம் பரமனின் திருமுன்

3. பொன்னோடு போளமும் தூபமும் ஏந்தி

மன்னவர் மூவர் காணவந்தார் (2)

மூவுலகாளும் ஆண்டவர் உமக்கே -2

மனமுவந்தே காணிக்கை தந்தோம்

18. கடவுளே மக்களினத்தார் உம்மைப்

போற்றிப் புகழ்வார்களாக (2)

1. கடவுளே எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக 

உம்திரு முகத்தின் ஒளியை எம்மீது வீசுவீராக

அப்பொழுது உலகம் உமது வழியை (2) 

அறிந்து கொள்ளும் மீட்பை உணரும்                

2. வேற்று நாட்டினர் அக்களித்து என்றும் மகிழ்ச்சியுடன் பாடுவர் (2)

மக்களினங்களை நீர் நேர்மையில் ஆள்கின்றீர் (2)

நாடுகளை வழிநடத்துகின்றீர்  

19. கள்ளமில்லா ஒரு வெள்ளிநிலா என

உள்ளமெல்லாம் வரும் தெள்ளமுதாய்

தீராத பாசமே நறும் தேனான இயேசுவே

அன்பே பாரினில் நீயும் நானும் ஒன்றாய் வாழ்வது வாழ்க்கையே

வாரும் தேவா வாருமே

1. எங்கே நோக்கினும் தனிமையே உனை என் மனம் மறந்ததேன்

தீமையே – கண்களும் நீரினில் ஆடுதே இறைக்

கர்த்தருன் பூமுகம் தேடுதே

தேவ தேவா சிலுவை நாதா திரும்ப நாவினில் வாருமே -2

தாகம் யாவும் தீருமே தூய வாழ்வைத் தாருமே

தாயும் நீயாய் சேயும் நானாய் வாழவேண்டும் நாளுமே

2. எல்லாம் தேவனின் மகிமையே அதை

எங்ஙனம் புகழ்வது ஏழையே

என் மனம் நீ வரும் போதிலே பெரும்

நிம்மதி ஆயிரம் வாழ்விலே

வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீ இனி தேவனே – 2

வாரும் நாவில் இயேசுவே நீயும் நானும் பேசவே

ஆயன் நீயாய் தோளில் நானாய் வாழவேண்டும் நாளுமே

20. கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே

கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே

எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன்

ஆரிரோ ஆராரோ – 2

1. எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய்

ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய்

தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன்?

2. வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய்

ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய்

இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேந்ததேன்?

21. திருவிருந்து திருவிழா என் இதயம் தினம் விழா

என் இயேசு தேவன் உடலும் குருதியும்

உயிரில் கலந்திடும் விழா

1. இறை வேள்வித் தீயினிலே என்

இதயம் தூய்மை பெறும்

நிறை தியாகப் பலியினிலே வெண்

பனிபோல் மாறிவிடும் (2)

அமைதிப்புறா இது அன்பு நிலா

எந்த இரவிலும் ஒளியின் விழா

இறை அனுபவம் பகிர்வு விழா

2. இறை வருகையின் வேளையிலே

அன்பக் கனலாய் மாறுகிறேன்

சுயநலத்தின் அழிவினிலே புது

உலகமே காணுகிறேன்

இதயமில்லா ஒரு மனிதரிலா

அந்த இறைவன் பிறப்பு விழா

அது ஈந்தார் நினைவு விழா.

22. தெய்வக் குழந்தை இயேசுவே இனிய நேசப் பாலனே

உந்தன் நேசக் கரங்களில் எங்கள் அன்பின் சமர்ப்பணம்

இயேசு உமக்கே சமர்ப்பணம் நேசம் கலந்த சமர்ப்பணம்

1. ஆட்டு இடையர் தாங்கி வந்த

பாச இதயம் சமர்ப்பணம்

வேந்தர் கொணர்ந்த வெள்ளைப் போளம்

பொன்னும் மீரையும் சமர்ப்பணம்

தாசர் எம்மைத் தேடி வந்த

நேசன் உமக்கே சமர்ப்பணம்

வாழ்வில் எம்மைத் தேற்ற வந்த

மீட்பன் உமக்கே சமர்ப்பணம்

இயேசு உமக்கே சமர்ப்பணம் நேசம் கலந்த சமர்ப்பணம்

2. தூதர் அணிகள் பாடி மகிழ்ந்த

தேவ இசையும் சமர்ப்பணம்

சூசை வளனும் அன்னை மரியும்

தந்த நேசமும் சமர்ப்பணம்

வேத வரிகள் காக்க வந்த

தேவன் உமக்கே சமர்ப்பணம்

வானில் வழியைக் காட்ட வந்த

சீலன் உமக்கே சமர்ப்பணம்

இயேசு உமக்கே சமர்ப்பணம் நேசம் கலந்த சமர்ப்பணம்

23. மண்ணில் வானம் தவழ்கின்றது

விண்ணின் கீதம் ஒலிக்கின்றது

புதுமை நாளிதுவே – பெரும்

புனித நாளிதுவே

பேதங்கள் மறந்து நாதங்கள் எழுப்பி

அனுபவம் கண்டிடுவோம் – இறை

அனுபவம் கொண்டிடுவோம் – மண்ணில் ….

1. எத்தனை தினங்கள் காத்திருந்தோம் – இந்த

நித்தியன் வரவை எதிர்நோக்கி

வானின் மகிழ்ச்சியை பூமி ஏற்க

மனித உருவெடுத்தான் புனித உருக்கொடுத்தான்

2. சிற்பியும் சிற்பங்கள் ஆக்குதல் போல் – இந்த

அற்புதன் புதுமை புரிந்திடுவான்

மீட்பின் மலர்ச்சியை  நாமும் காண

புனித பலி கொடுப்போம் புதிய உருவெடுப்போம்

24. மனிதம் மலர்ந்தது புனிதம் விழைந்தது பாலன் பிறப்பினிலே

பாவம் ஒழிந்தது வாழ்வு பிறந்தது தேவன் பிறப்பினிலே -2

ஆராதிப்போம் நம் பாலகனை வாருங்கள் ஆராதிப்போம் – 2

ஆராதிப்போம் நம் பாலகனை அன்போடு ஆராதிப்போம் -2

1. வானவர் கீதம் முழக்கமிட வானவன் பிறந்த இரவிதுவே

வானவர் கீதம் முழக்கமிட நம்  வானவன் பிறந்த இரவிதுவே

 விண்ணவர் போற்றும் பாலகனை விருப்புடன் புகழ்ந்தே பாடிடுவோம் -2

ஆராதிப்போம் நம் பாலகனை வாருங்கள் ஆராதிப்போம் – 2

ஆராதிப்போம் நம் பாலகனை அன்போடு ஆராதிப்போம் -2

மனிதம் மலர்ந்தது புனிதம் விழைந்தது பாலன் பிறப்பினிலே

பாவம் ஒழிந்தது வாழ்வு பிறந்தது தேவன் பிறப்பினிலே

2. அடிமைகள் அழித்தார்  அகிலத்திலே அகமதில் மீட்ப்பை அளித்திடவே

அடிமைகள் அழித்தார்  அகிலத்திலே நம் அகமதில் மீட்ப்பை அளித்திடவே

வாருங்கள் பாலனை வணங்கிடுவோம்  வாழ்வோம் அவர் திரு பாதையிலே – 2

மனிதம் மலர்ந்தது புனிதம் விழைந்தது பாலன் பிறப்பினிலே

பாவம் ஒழிந்தது வாழ்வு பிறந்தது தேவன் பிறப்பினிலே – 2

ஆராதிப்போம் நம் பாலகனை வாருங்கள் ஆராதிப்போம் – 2

ஆராதிப்போம் நம் பாலகனை அன்போடு ஆராதிப்போம் -2

மனிதம் மலர்ந்தது புனிதம் விழைந்தது பாலன் பிறப்பினிலே

பாவம் ஒழிந்தது வாழ்வு பிறந்தது தேவன் பிறப்பினிலே

25. மனோ மகிழ்வோடே அனைவரும் வாரும்

வாரும் வாரும் பெத்லகேம் ஊருக்கு

பாருங்கள் தேவ தூதரின் ராசாவை

வாரும் வணங்குவோமே – 3 – பாலனை

1. மந்தையை விட்டேதான்

மாட்டுத் தொட்டி நோக்கி

வந்து இடையர்கள் வணங்கினர்

சந்தோஷமாக நாமும் போவோம் வாரும்

வாரும் வணங்குவோமே – 3 – பாலனை

2. அநாதி பிதாவின் அநாதிச் சுடரை

மனித வேஷமாகக் காணுவோம்

துணிகளாலே சுற்றிய பாலனை

வாரும் வணங்குவோமே – 3 – பாலனை

26. மார்கழிக் குளிரில் மாபரன் பிறந்தார் மகிழ்வோம் வாருங்கள் – 2

புத்தொளி கண்டது பூவுலகு புவியின் சிறப்பு அவர் பிறப்பு – 2

வாரீர் வாரீர் இறைகுலமே இறைவன் பிறப்பை காண வாரீர் – 2

1. அரசர்கள் வந்தனர் இடையர்கள் வணங்கினர் உமைக்கண்டு

நல்மனதோராய் நாங்களும் வந்தோம் உமைக்காண

இதய அமைதி நாளும் பெறவே

புதிய உறவை நம்மில் பெறவே

இறைவன் பிறப்பை காண வாரீர்

வாரீர் வாரீர் இறைகுலமே இறைவன் பிறப்பை காண வாரீர் – 2

2. விடியலாம் யேசுவை வணங்கிட இணைந்தே வாருங்களே

பாலனின் பிறப்பை இன்னிசை முழங்கி பாடுங்களே

பலியில் கலந்து அவரில் இணைய

புதிய உலகம் நம்மில் மலர

பிறந்த பாலனை காண வாரீர்

வாரீர் வாரீர் இறைகுலமே இறைவன் பிறப்பை காண வாரீர் – 2

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy