புனித வார திருப்பலி செபங்கள்

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு

1. கிறிஸ்து ஆண்டவர் தமது பாஸ்கா மறைநிகழ்வை நிறைவு செய்ய எருசலேமுக்குள் நுழைந்ததைத் திரு அவை இன்று நினைவுகூருகின்றது. எனவே, ஆண்டவரின் இத்தகைய நுழைவு எல்லாத் திருப்பலிகளிலும் நினைவுகூரப்படும். முக்கிய திருப்பலிக்குமுன் பவனி அல்லது சிறப்பான வருகைச் சடங்கினாலும், மற்றத் திருப்பலிகளுக்குமுன் சாதாரண வருகைச் சடங்கினாலும் இது கொண்டாடப்படும். மக்கள் பெருமளவில் பங்கேற்கும் ஒரிரு திருப்பலிகளுக்கு முன்னும் பவனி இன்றிச் சிறப்பான வருகை வழிபாட்டை நடத்தலாம். !

பவனியோ சிறப்பான வருகையோ நடைபெறாத இடங்களில் அங்கு மெசியாவின் வருகை, ஆண்டவரின் பாடுகள் ஆகியவை பற்றிய இறைவார்த்தை வழிபாட்டையும் சனிக்கிழமை அல்லது (ஞாயிற்றுக்கிழமை மாலைத்திருப்புகழையும் நேரத்திற்கு ஏற்றவாறு கொண்டாடுவது விரும்பத்தக்கது.

எருசலேமுக்குள் ஆண்டவரின் நுழைவை நினைவுகூர்தல்
முதல் வகை: பவனி

2. பொருத்தமான நேரத்தில் மக்கள் கோவிலுக்கு வெளியே ஒரு சிற்றாலயத்தில் அல்லது தகுந்த இடத்தில் கூடுவார்கள். வெளியிலிருந்து கோவிலை நோக்கிப் பவனி செல்லும் நம்பிக்கையாளர் தம் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருப்பர்.

3. அருள்பணியாளரும் திருத்தொண்டரும் திருப்பலிக்கான சிவப்பு நிறத் திருவுடையை அணிந்து மற்றப் பணியாளர்கள் புடைசூழ மக்கள் கூடியுள்ள இடத்துக்கு வருவர். அருள்பணியாளர் திருப்பலி உடைக்குப் பதிலாக ‘திருப்போர்வை’ அணியலாம். பவனி முடிந்தவுடன் அதைக் கழற்றிவிட்டுத் திருப்பலி உடையை அணிந்துகொள்வார்.

4. இதற்கிடையில் கீழ்க்கண்ட பல்லவி அல்லது மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும்.


பல்லவி: மத் 21:9

தாவிதின் மகனுக்கு ஒசன்னா! ஆண்டவர் பெயரால்
வருகிறவர் ஆ – – சி பெற்றவரே! இஸ்ரயேலின் அரசரே,
உன்னதங்களிலே ஒசன்னா!
உன்னதங்களிலே ஒசன்னா!

5. பின்னர் அருள் பணியாளரும் நம்பிக்கையாளரும் சிலுவை அடையாளம் வரையும் பொழுது, அருள்பணியாளர் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே” என சொல்கின்றார். பின்னர் அருள்பணியாளர் வழக்கம் போல மக்களை வாழ்த்துகின்ற இந்நாள் கொண்டாட்டத்தை அனைவரும் அறிந்து, அதில் ஈடுபாட்டுடன் பங்கெடுக் இவ்வார்த்தைகளால் அல்லது இவை போன்ற வார்த்தைகளால் சிற்றுரை நம்பிக்கையாளருக்கு அழைப்பு விடுக்கின்றார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தவக் காலத் தொடக்கத்திலிருந்தே, தவ முயற்சிகளாலும் பிறர் அன்புப் பணிகளாலும் நம் இதயங்களைத் தயாரித்தபின் இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம். இதனால் நம் ஆண்டவருடைய பாஸ்கா மறைநிகழ்வை, அதாவது ஆண்டவருடைய திருப்பாடுகளையும் உயிர்ப்பையும் உலகளாவிய திரு அவையோடு சேர்ந்து அறிவிக்கின்றோம். இப்பாஸ்கா மறைநிகழ்வை நிறைவேற்றவே அவர் தம் நகரான எருசலேமுக்குள் நுழைந்தார். எனவே மீட்பு அளிக்கும் இந்த நுழைவை நாம் முழு நம்பிக்கையுடனும் இறைப்பற்றுடனும் நினைவில் கொண்டு, ஆண்டவரைப் பின்செல்வோம். அவருடைய அருளினால் சிலுவையின் பங்கேற்பாளர்களாக மாறி, அவருடைய உயிர்ப்பிலும் வாழ்விலும் நாம் பங்குபெறுவோமாக.

6. சிற்றுரைக்குப் பின் அருள் பணியாளர் தம் கைகளை விரித்து, கீழுள்ள மன்றாட்டுகளுள் ஒன்றைச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இக்குருத்தோலைகளை உமது X ஆசியால் புனிதப்படுத்தியருளும்; அதனால் கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக நிலையான எருசலேமுக்குள் வந்து சேர ஆற்றல் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

அல்லது

மன்றாடுவோமாக.

இறைவா, உம்மை எதிர்நோக்கியிருப்போரின் நம்பிக்கையை வளர்த்து உம்மை வேண்டுவோரின் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும்; அதனால் வெற்றி வீரரான கிறிஸ்துவின் திருமுன் இன்று குருத்தோலைகளை ஏந்தி வருகின்ற நாங்கள் அவர் வழியாக நற்செயல்களின் பயன்களை உமக்கு அளிப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென். அருள்பணியாளர் அமைதியாகக் குருத்தோலைகள் மீது புனித நீரைத் தெளிக்கின்றார்.

7. ஆண்டவரின் நுழைவு பற்றிய நற்செய்தியை நான்கு நற்செய்திகளுள் ஒன்றிலிருந்து திருத்தொண்டரோ – அவர் இல்லையெனில் – அருள்பணியாளரோ பறைசாற்றுகின்றார். தேவைக்கு ஏற்பத் தூபம் பயன்படுத்தப்படலாம்.

முதல் ஆண்டு

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 21:1-11

இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, “நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும், அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ‘இவை ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார் என்றார். மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின்மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியின்மேல் அமர்ந்து வருகிறார்” என்று இறைவாக்கினர். உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஒட்டிக் கொண்டுவந்து, அவற்றின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஒசன்னா ! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர். உன்னதத்தில் ஒசன்னா” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

இரண்டாம் ஆண்டு :

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 11:1-10

இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, “உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள். அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டிவைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பி விடுவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டு வாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக்குட்டியைக் கட்டிவைத்திருப்பதைக் கண்டு, அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில், அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், “என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலா வயல்வெளிகளில் வெட்டிய இலை தழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ”ஒசன்னா! ஆண்டவா பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு ஆசி பெற்றதே! உன்னதத்தில் ஒசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 12:12-16

அக்காலத்தில்
திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஒசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவரும் இஸ்ரயேலின் அரசருமானவரும் ஆசி பெற்றவர்” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். “மகளே சீயோன், அஞ்சாதே! இதோ உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல் ஏறி வருகிறார் என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார். அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. அவரைப் பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மூன்றாம் ஆண்டு

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19:28-40

அக்காலத்தில்
இயேசு முன்பாகவே எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், “எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்: அதில் நுழைந்ததும், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள் என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், “கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இது ஆண்டவருக்குத் தேவை” என்றார்கள். பின்பு அதை இயேசுவிடம் ஒட்டி வந்தார்கள். அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏறச் செய்தார்கள். அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச் சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட அனைத்து வகை செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்:

” ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் ஆசி பெற்றவர்!
விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!” என்றனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, “போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும் என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, “இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

8. நற்செய்திக்குப்பின் சுருக்கமான மறையுரை ஆற்றலாம். பவனியைத் தொடங்க அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் அல்லது பொதுநிலைப் பணியாளர் கமல் அல்லது இவை போன்ற வார்த்தைகளால் அழைப்பு விடுக்கின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்து மக்கள் திரளைப் போன்று நாமும் அமைதியுடன் புறப்படுவோம்.

அல்லது

அமைதியுடன் புறப்படுவோமாக.

அனைவரும் பதிலுரைக்கின்றனர்:

கிறிஸ்துவின் பெயரால். ஆமென்.

9. திருப்பலி கொண்டாடப்படும் கோவிலை நோக்கிப் பவனி வழக்கம் போலத் தொடங்குகின்றது. தூபம் பயன்படுத்தினால் புகையும் கலத்துடன் தூபபப
அத்தனால் புகையும் கலத்துடன் தூபப் பணியாளர் முன்செல்ல, பாயும் திரிகளைத் தாங்கும் இரு பணியாளர்களிடையே அந்தந்த இடத்தின் வழக்கத்துக்கு ஏற்பக் குருத்தோலைகளால் அணிசெய்யப்பட்ட சிலுவையைத் தாங்கிய பிடத் துணைவரோ பிற பணியாளரோ முன் செல்கின்றனர். அவர்களை அடுத்து நிறு
அவர்களை அடுத்து நற்செய்தி வாசக நூலைத் தாங்கிய திருத்தொண்டர், பிற பணியாளர்கள், அருள்பணியாளர் ஆகியோருக்குப்பின் குருத்தோலை ஏந்திய நம்பிக்கையாளர் அனைவரும் பின்தொடர்கின்றனர்.

பவனியின்போது, பாடகர் குழுவும் மக்களும் கீழ்க்கண்ட அல்லது கிறிஸ்து அர°°° புகழ்ந்தேத்தும் வேறு பொருத்தமான பாடல்களைப் பாடுகின்றனர்.

பல்லவி – 1

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக்கிளைகளைப்
பிடித்தவராய் உன்னதங் க ளி லே
ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே.

தேவைக்கு ஏற்ப, இப்பல்லவியைத் திருப்பாடலின் அடிகளுக்கு இடையே பாடலாம்.

திருப்பாடல் 23

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;
ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. பல்லவி


பல்லவி ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்;
பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்;
வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். பல்லவி

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவரே! இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்; மாட்சிமிகு மன்னர் இவரே. பல்லவி

பல்லவி – 2

எபிரேயர்களின் சிறுவர் குழாம் வழியில் மேலுடைகள்
விரித்தவராய் உன்னதங்களிலே
ஒசன்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆ – – – – சி பெற்றவர்
என் று முழங்கி ஆர்ப்பரித்தார்.

தேவைக்கு ஏற்ப, இப்பல்லவியைத் திருப்பாடலின் அடிகளுக்கு இடையே பாடலாம்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்:
அக்களிப்புடன் கடவுளுக்குக் குரலெழுப்பி ஆர்ப்பரியுங்கள்.
ஏனெனில் உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தின் மாவேந்தர் அவரே. பல்லவி

மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்;
அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்தளித்தார்;
அது அவர் அன்புகூரும் யாக்கோபின் மாட்சி ஆகும்.
ஆரவார ஒலியிடையே ஏறிச் செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பல்லவி

பாடுங்கள், கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
ஏனெனில் கடவுளே அனைத்துலகின் வேந்தர்; ஞானத்தோடு பாடுங்கள். பல்லவி

கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்;
அவர் தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.
மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்;
ஏனெனில் மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளுக்கு உரியவர்;
கடவுளே அனைத்துக்கும் மேலானவர். பல்லவி

கிறிஸ்து அரசருக்குப் பாடல்

பாடல் குழு:

கிறிஸ்து அரசே!
மீட்பரே! மாட்சி, வணக் கம், புகழ் உமக் கே;
எழிலார் சிறுவர் திரள் உமக் கு
அன்புடன் பாடினர்: ஒ சன் னா!

எல்.: கிறிஸ்து அரசே . . .

பாடல் குழு:

இஸ்ரயேலின் அரசர் நீர்,
தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆ – – சி பெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.

எல். : கிறிஸ்து அரசே! . …

பாடல் குழு:

வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ்க;
அழிவுறும் மனிதரும் படைப்பனைத்தும்
யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.

எல். : கிறிஸ்து அரசே! ..

பாடல் குழு:

எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்
வேண்டலும் காணிக்கையும் பாடலும்
கொண்டு உம்மிடம் இதோ வருகின்றோம். T .

எல். : கிறிஸ்து அரசே ! …


பாடல் குழு:
பாடுகள் படுமுன் உமக்கவர் தம்
வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே;
ஆட்சி செய்திடும் உமக்கின்றே
யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.

எல். : கிறிஸ்து அரசே! . . .

பாடல் குழு:
அவர்தம் பக்தியை ஏற்றீரே,
நலமார் அரசே, கனிவுடை அரசே,
நல்லன எல்லாம் ஏற்கும் நீர்
எங்கள் பக்தியும் ஏற்பீரே.

எல். : கிறிஸ்து அரசே ….

10. பவனி கோவிலுக்குள் நுழைகையில் கீழுள்ள பதிலுரைப் பாடலையோ ஆண்டவரின் நுழைவைப் பற்றிய வேறு பாடலையோ பாடலாம்.

முதல்: ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேயச் சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்

பதில்: * குருத்து மடல்களை ஏந்தி நின்று
“உன்னதங்களிலே ஓசன்னா!’
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.

முதல்: எருசலேம் நகருக்கு இயேசு வருவதைக் கேட்ட
மக்களெல்லாம் அவரை எதிர் கொண்டழைத்தனரே.

பதில்: * குருத்து மடல்களை . . .

11. அருள் பணியாளர் பீடத்தை அடைந்ததும் அதற்கு வணக்கம் செலுத்தியபின், கலவை என்பர் காயம் காட்டலாம், பின்னர் தம் இருக்கைக்குச் சென்று திருப்போர்வை! அணிந்திருந்தால் அதை அகற்றிவிட்டு திருப்பலி உடை அணிகின்றார். திருப்பலியில் தொடக்கத் திருச்சடங்குகளை, தேவைக்கு ஏற்ப, ஆண்டவரே, இரக்கமாயிரும்” தவிர்க்க விட்டு, திருப்பலியின் திருக்குழும மன்றாட்டைச் சொல்கின்றார். அதன்பின் வமச் திருப்பலி தொடர்கின்றது.

2-ஆம் வகை: சிறப்பு வருகை

12. கோவிலுக்கு வெளியே பவனி நடத்த முடியாதெனில், அந்நாளின் முக்கிய 2-பவிக்குமுன் கோவிலுக்கு உள்ளேயே சிறப்பு வருகையை நடத்தி ஆண்டவரின் நுழைவைக் கொண்டாடலாம்.

13. நம்பிக்கையாளர் கோவில் வாயில்முன் அல்லது கோவிலுக்குள் குருத்தோலைகளைக் கைகளில் ஏந்திக் கூடி நிற்கின்றனர். அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் நம்பிக்கையாளரின் பிரதிநிதிகள் சிலரும் திருப்பீட முற்றத்துக்கு வெளியே பெரும்பான்மையோர் பார்க்கக்கூடிய பொருத்தமான இடத்திற்கு வருகின்றனர்.

14. அருள் பணியாளர் மேற்கூறிய இடத்துக்கு வரும்போது, “தாவீதின் மகனுக்கு ஒசன்னா என்னும் பல்லவி அல்லது வேறு பொருத்தமான பாடல் பாடப்படும். பின் குருத்தோலைகளைப் புனிதப்படுத்துதலும், ஆண்டவர் எருசலேமுக்குள் நுழைந்ததைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றலும் (எண். 5முதல் 7 வரை குறிப்பிட்டுள்ளவாறு) நடைபெறும். நற்செய்திக்குப்பின் அருள் பணியாளரும் பிற பணியாளர்களும் நம்பிக்கையாளரின் பிரதிநிதிகளும் சிறப்பான விதத்தில் கோவிலின் வழியாகத் திருப்பீட முற்றத்துக்குப் பவனியாகச் செல்கின்றனர். அப்பொழுது “ஆண்டவர் புனித நகரத்தில் என்னும் பதிலுரைப் பாடல் (எண் 10) அல்லது பொருத்தமான வேறு பாடல் பாடப்படும்.

15. பீடத்தை அடைந்ததும், அருள்பணியாளர் அதற்கு வணக்கம் செலுத்திவிட்டு, தமது இருக்கைக்குச் செல்கின்றார். திருப்பலியின் தொடக்கத் திருச்சடங்குகளை, தேவைக்கு ஏற்ப – “ஆண்டவரே இரக்கமாயிரும் தவிர்த்துவிட்டு – திருக்குழும மன்றாட்டைச் சொல்கின்றார். அதன்பின் திருப்பலி வழக்கம் போலத் தொடர்ந்து நடைபெறும்.

3-ஆம் வகை: சாதாரண வருகை

16. இந்த ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு வருகை நடைபெறாத மற்றத்திருப்பலிகளிலெல்லாம் சாதாரண வருகையை நடத்துவதன் வழியாக, ஆண்டவருடைய எருசலேம் நுழைவு நினைவுகூரப்படும்.

11. அருள்பணியாளர் பீடத்துக்கு வரும்போது வருகைப் பல்லவி திருப்பாடலுடன் (எண் 18) பாடப்படும் அல்லது அதே கருத்துள்ள வேறு பாடலைப் பாடலாம். அருள்பணியாளர் பீடததை அடைந்தபின் அதை வணங்கி, தமது இருக்கைக்குச் சென்று, இறைமக்களை வாழ்த்துகின்றார். அதன்பின் திருப்பலி வழக்கம் போலத் தொடர்கின்றது.

வருகைப் பாடல் பாட முடியாத மற்றத் திருப்பலிகளில் அருள்பணியாளர் பீடத்தை அடைந்ததும், அதை வணங்கிய பின் இறைமக்களை வாழ்த்துகின்றார். பின் வருகைப் பல்லவியை வாசித்து வழக்கம் போலத் திருப்பலியைத் தொடங்குகின்றார்.


18. வருகைப் பல்லவி காண், யோவா 12:1,12-13; திபா 23:3-10

பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள் இருக்கையில்
ஆண்டவர் எருசலேம் நகருக்குள் வருகையில்
சிறுவர் அவரை எதிர்கொண்டனரே;
கைகளில் குருத்தோலை தாங்கி, அவர்கள்
பெருங்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனரே:

* உன்னதங்களிலே ஒசன்னா!
இரக்கப் பெருக்குடன் வருகின்ற நீர்,
ஆசி பெற்றவரே!

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவரே இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்:

* உன்னதங்களிலே ஒசன்னா!
இரக்கப் பெருக்குடன் வருகின்ற நீர், ஆசி பெற்றவரே!

திருப்பலி

19. பவனி அல்லது சிறப்பு வருகைக்குப்பின் அருள்பணியாளர் திருக்குழும மன்றாட்டைச் சொல்லித் திருப்பலியைத் தொடர்கின்றார்.

20 திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, தாழ்மையின் எடுத்துக்காட்டை மனித இனம் பின்பற்ற, எங்கள் மீட்பரை மனித உடல் எடுக்கவும் சிலுவையை ஏற்றுக்கொள்ளவும் செய்தீரே; அதனால் நாங்கள் அவரது பொறுமையைக் கற்றுக்கொண்டு அவரது உயிர்ப்பில் பங்கேற்கத் தகுதி பெறுமாறு எங்களுக்குக் கனிவாய் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

வாசகங்கள் :

முதல் ஆண்டு (2017, 2020, 2023, 2026) வாசகங்கள் 
இரண்டாம் ஆண்டு: (2018, 2021, 2024, 2027) வாசகங்கள்
 
மூன்றாம் ஆண்டு: (2019, 2022 2025, 2028) வாசகங்கள் 

21. எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் ஆண்டவருடைய பாடுகளின் வரலாறு வாசிக்கப்படும். திருத்தொண்டர் அல்லது – அவர் இல்லை எனில் – அருள்பணியாளர் அதை வாசிக்கின்றார். வாசகர்களும் அதை வாசிக்கலாம்; ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கூடியமட்டும் அருள்பணியாளரே வாசிக்க வேண்டும்.

பாடுகளின் வரலாற்றைப் பாடுமுன், திருத்தொண்டர்கள் மட்டும் மற்றத் திருப்பலிகளில் நற்செய்திக்குமுன் செய்வது போல் அருள்பணியாளரிடம் ஆசி பெறுவார்கள். மற்ற வாசகர்கள் இவ்வாறு செய்வதில்லை.

22. பாடுகளின் வரலாற்றுக்குப்பின் தேவைக்கு ஏற்பச் சுருக்கமான மறையுரை : பெறலாம். சிறிது நேரம் அமைதியும் இடம் பெறலாம். “நம்பிக்கை அறிக்கையும்” “பொது மன்றாட்டும்” சொல்லப்படும்.

23. காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பாடுகளால் நீர் எம்மீது கொண்டுள்ள இரக்கம் நெருங்கி வருவதாக; எங்கள் செயல்களால் தகுதியற்றவர்கள் ஆயினும் இந்த ஒரே பலியின் ஆற்றலால் உமது இரக்கத்தை முன்கூட்டியே நாங்கள் கண்டுணர்வோமாக. எங்கள்.


24. தொடக்கவுரை: ஆண்டவருடைய பாடுகள்

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

மாசற்ற கிறிஸ்து பாவிகளுக்காகப் பாடுபடவும்
தீயோரின் மீட்புக்காக அநீதியாகத் தீர்ப்பிடப்படவும் திருவுளமானார்.
‘ அவரது இறப்பு எங்கள் பாவங்களைப் போக்கியது;
அவரது உயிர்த்தெழுதல் எங்களை உமக்கு ஏற்புடையவர்கள் ஆக்கியது.

ஆகவே நாங்கள் வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
உம்மைப் புகழ்ந்து போற்றி, அக்களித்துக் கொண்டாடி,
ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.

25. திருவிருந்துப் பல்லவி மத் 26:42 தந்தையே, நான் குடித்தால் அன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படி ஆகட்டும்.

26. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நம்புவதை உம் திருமகனின் இறப்பினால் எதிர்நோக்கியிருக்கச் செய்த நீர் நாங்கள் நாடுவதை அவரது உயிர்ப்பினால் வந்தடையச் செய்வீராக. எங்கள்.

27. மக்கள்மீது மன்றாட்டு ஆண்டவரே,
உம்முடைய இந்தக் குடும்பத்துக்காக எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து துன்புறுத்துவோருக்குத் தம்மைக் கையளிக்கவும் சிலுவையின் கொடுமையைத் தாங்கிக்கொள்ளவும் தயங்கவில்லை; நீர் இக்குடும்பத்தைக் கண்ணோக்கி அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

=====================

புனித வாரம் – திங்கள்

வருகைப் பல்லவி

காண். திபா 34:1-2; 139:8 ‘ஆண்டவரே, எனக்குத் தீங்கிழைப்போருக்கு எதிராக வழக்காடும்; என் மீது போர் தொடுப்போரோடு போர் புரியும். கேடயமும் படைக்கலமும் எடுத்து வாரும்; எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்; ஆண்டவரே, நீரே என் மீட்பின் ஆற்றல்.

‘திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் வலுவின்மையினால் நாங்கள் தவறி வீழ்கின்றோம்; உம் ஒரே திருமகனுடைய பாடுகளின் ஆற்றலினால் நாங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்திட அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் கொண்டுவரும் புனிதக் காணிக்கைகளை இரக்கமுடன் கண்ணோக்கியருளும்; நாங்கள் பெற்ற தண்டனைத் தீர்ப்பு நீங்குவதற்காக நீர் செய்துள்ள உம் இரக்கச் செயல் முடிவில்லா வாழ்வின் பயனை எங்களுக்கு அளிப்பதாக. எங்கள். ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை II (பக். 528).

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 101:3 உமது முகத்தை என்னிடமிருந்து மறைக்காதீர்! நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் கூவி அழைக்கும் நாளில் விரைவாய் எனக்குச் செவிசாயும்!

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, தூய மறைநிகழ்வுகளால் நீர் சந்தித்துப் புனிதப்படுத்திய மக்களின் இதயங்களை என்றுமுள்ள உமது அருள் காவலால் காத்திட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது பரிவிரக்கத்தால் பெற்றுக்கொண்ட நிலையான மீட்பின் உதவிகளை உமது ஆதரவால் அவர்கள் காத்துக்கொள்வார்களாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, மனத்தாழ்மையுடையோருக்கு உமது பாதுகாப்புக் கிடைக்கவும் உம்மை நம்பினோரை உமது இரக்கத்தால் என்றும் காக்கவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா விழாவை அவர்கள் கொண்டாட உடல் ஒறுத்தலால் மட்டும் அல்லாமல், அதற்கும் மேலாக உள்ளத் தூய்மையும் கொண்டிருப்பார்களாக. எங்கள்.

=======================

புனித வாரம் – செவ்வாய்

வருகைப் பல்லவி

காண். திபா 26:12 ஆண்டவரே, என்னைத் துன்புறுத்துவோரின் விருப்பத்துக்கு என்னைக் கையளித்து விடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சி சொல்வோரும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, ஆண்டவருடைய பாடுகளின் மறைநிகழ்வுகளை நாங்கள் கொண்டாடச் செய்தருளும்; இவ்வாறு நாங்கள் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் தகுதி பெற அருள்வீராக. உம்மோடு. காணிக்கைமீது மன்றாட்டு ஆண்டவரே, உமது குடும்பத்தின் பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனிதக் கொடைகளில் எங்களைப் பங்குபெறச் செய்யும் நீர் அவற்றின் நிறைவுக்கும் நாங்கள் வந்து சேரச் செய்தருள்வீராக. எங்கள்.

ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை I (பக். 528).

திருவிருந்துப் பல்லவி

உரோ 8:32 தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்தார் கடவுள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது இரக்கத்தை இறைஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் இம்மை வாழ்வில் இந்த அருளடையாளத்தால் எங்களுக்கு உணவூட்ட விரும்பிய நீர் நாங்கள் முடிவில்லா வாழ்வில் பங்கேற்கச் செய்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

இறைவா, உமக்குப் பணிந்து வாழும் மக்களை எல்லாப் பழைய தவறுகளிலிருந்தும் உமது இரக்கம் தூய்மைப்படுத்துவதாக; புனிதமான புதிய வாழ்வுக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவதாக. எங்கள்.

=======================

புனித வாரம் – புதன்

வருகைப் பல்லவி

காண். பிலி 2:10,8,11 இயேசுவின் பெயருக்கு விண்ண வர், மண் ண வர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; ஏனெனில் ஆண்டவர் சாவை ஏற்கும் அளவுக்கு, அது வும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். அதனால் இயேசு கிறிஸ்து ஆண்டவர் தந்தையாம் கடவுளின் மாட்சியில் உள்ளார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, எங்களுக்காக உம் திருமகன் சிலுவைச் சுமையை ஏற்றுக்கொள்ளத் திருவுளம் கொண்டீரே; அதனால் எதிரியின் ஆதிக்கத்தை எங்களிடமிருந்து அகற்றி உம் அடியார்களாகிய நாங்கள் உயிர்ப்பின் அருளை அடையச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகனுடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள் அதன் புனிதப் பயன்களைப் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை II (பக். 528)

திருவிருந்துப் பல்லவி

மத் 20:28 மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் உள்ளத்து உணர்வுகளை வலுப்படுத்தியருளும்; இவ்வாறு வணக்கத்துக்கு உரிய மறை நிகழ்வுகள் குறித்துக்காட்டும் உம் திருமகனுடைய இம்மைச் சாவால் எங்களுக்கு நீர் முடிவில்லா வாழ்வு தந்துள்ளீர் என நம்புவோமாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)

ஆண்டவரே, பாஸ்கா அருளடையாளங்களை இடைவிடாது பெற்றுக்கொள்ளவும் வரவிருக்கும் கொடைகளை விரும்பி எதிர்நோக்கவும் உம் நம்பிக்கையாளருக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் தங்களுக்குப் புதுப் பிறப்பு அளித்த மறைநிகழ்வுகளில் அவர்கள் நிலைத்திருந்து இச்செயல்களால் புது வாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுவார்களாக. எங்கள்.

====================

புனித வாரம் – வியாழன்
குருத்துவம் மற்றும் புனித எண்ணை புனிப்படுத்தும் திருப்பலி

1. திரு அவையின் மிகப் பழமையான மரபுப்படி இந்நாளில் மக்கள் பங்கேற்பு இல்லாத எல்லாத் திருப்பலிகளும் தடைசெய்யப்படுகின்றன.
கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலி

2. காலையில் நிறைவேற்றப்பட வேண்டிய திருப்பலியில் ஆயரின் உரோமைத் திருச்சடங்கு நூலில் உள்ளவாறு ஆயர் நோயாளிகளின் எண்ணெயையும் கிறிஸ்தவப் புகுமுக நிலையினரின் எண்ணெயையும் புனிதப்படுத்தி, கிறிஸ்மா எண்ணெயை அர்ச்சிக்கின்றார்.

3. இந்நாளில் ஆயரோடு அருள்பணியாளர்களும் இறைமக்களும் கூடிவருவது கடினம் எனில், கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலி முன் கூட்டியே வேறொரு நாளில் நிறைவேற்றப்படலாம். ஆனால் அது பாஸ்கா விழாவுக்கு அண்மையில் இருக்க வேண்டும்.

4. ஆயர் தம் அருள்பணியாளர் குழாத்தோடு நிறைவேற்றும் இக்கூட்டுத்திருப்பலி அருள்பணியாளர் குழாம் தம் ஆயரோடு கொண்டுள்ள ஒன்றிப்பைக் காட்டுவதாக உள்ளது. எனவே இயன்றவரை அருள்பணியாளர்கள் அனைவரும் இதில் பங்குகொண்டு அப்ப, இரச வடிவங்களில் நற்கருணை உட்கொள்வது சாலச் சிறந்தது. மறைமாவட்ட அருள்பணியாளர் குழாத்தின் ஒன்றிப்பை எடுத்துக்காட்ட ஆயருடன் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர்கள் மறைமாவட்டத்தின் பல பகுதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கலாம்.

5. பின்பற்றப்படும் மரபுப்படி, நோயாளிகளின் எண்ணெயைப் புனிதப்படுத்துதல் நற்கருணை மன்றாட்டு முடியும் முன்னும், கிறிஸ்தவப் புகுமுக நிலையினரின் எண்ணெயைப் புனிதப்படுத்துதலும் கிறிஸ்மா எண்ணெயை அர்ச்சித்தலும் திருவிருந்துக்குப் பின்னும் நடைபெறும். இருப்பினும் அருள்பணி சார்ந்த காரணங்களுக்காக புனிதப்படுத்தும் சடங்குகள் அனைத்தும் வார்த்தை வழிபாட்டுக்குப்பின் நடைபெறலாம்.

6. வருகைப் பல்லவி

திவெ 1:6 இயேசு கிறிஸ்து நம் கடவுளும் தந்தையுமானவருக்கு நம்மை ஆட்சி உரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

7. திருக்குழும மன்றாட்டு இறைவா,

உம் ஒரே திருமகனைத் தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்து, கிறிஸ்துவாகவும் ஆண்டவராகவும் ஏற்படுத்தினீர்; நாங்களும் அதே அருள்பொழிவில் பங்குபெற்று மீட்பின் சாட்சிகளாய் இவ்வுலகில் திகழ்ந்திடக் கனிவுடன் அருள்புரிவீராக. உம்மோடு.

8. நற்செய்தி வாசகத்துக்குப்பின் ஆயர் மறையுரை ஆற்றுகின்றார். வாசகங்களின் அடிப்படையில் மக்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் குருத்துவத்தின் அருள்பொழிவு பற்றிப் பேசுகின்றார். அருள்பணியாளர்கள் தங்களுடைய பணியில் உண்மை உள்ளவர்களாய் இருக்க அறிவுரை கூறுகின்றார். அவர்கள் தங்களுடைய அருள்பணியாளர் வாக்குறுதிகளை அனைவர் முன்பாகப் புதுப்பிக்க அழைப்பு விடுக்கின்றார்.

அருள்பணியாளர் வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்

மறையுரைக்குப்பின் ஆயர் கீழ்க்கண்டவாறு அல்லது இவை போன்ற சொற்களில் அருள்பணியாளர்களை நோக்கிக் கூறுகின்றார்:

அன்புமிக்க சகோதரர்களே, ஆண்டவராகிய கிறிஸ்து திருத்தூதர்களுக்கும் நமக்கும் தமது பணிக் குருத்துவத்தை அளித்த நாளின் ஆண்டு நினைவைக் கொண்டாடும் இவ்வேளையில், நீங்கள் முன்னொரு நாள் கொடுத்த வாக்குறுதிகளை உங்கள் ஆயர் முன்பாகவும் புனித இறைமக்கள் முன்னிலையிலும் புதுப்பிக்க விரும்புகின்றீர்களா? அருள்பணியாளர்கள் எல்லாரும் ஒன்றாக: விரும்புகின்றேன். நீங்கள் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட நாளன்று, கிறிஸ்துவின் அன்பினால் தூண்டப்பெற்று, உங்களையே துறப்பதாலும் அவருடைய திரு அவைக்காக நீங்கள் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட புனிதக் கடமைகளின் வாக்குறுதிகளை இன்று உறுதிப்படுத்துவதாலும் நம் ஆண்டவர் இயேசுவோடு இன்னும் அதிகமாக ஒன்றித்து இருக்கவும் அவரைப் போன்று வாழவும் விரும்புகின்றீர்களா?

அருள்பணியாளர்கள்: விரும்புகின்றேன்.

நீங்கள் செல்வத்தை நாடாமல் நம்பிக்கையாளருடைய மீட்பின்மேல் கொண்டுள்ள தாகத்தால் மட்டும் தூண்டப்பெற்று, புனிதத் திருப்பலி மற்றும் திருவழிபாட்டுச் செயல்களின் வழியாகக் கடவுளுடைய மறை நிகழ்வுகளின் நம்பிக்கையுள்ள கண்காணிப்பாளராக இருக்கவும் தலைவரும் ஆயருமான கிறிஸ்துவைப் பின்பற்றி, பயிற்றுவிக்கும் திருப்பணியைப் பற்றுறுதியுடன் நிறைவேற்றவும் விரும்புகின்றீர்களா?

அருள்பணியாளர்கள்: விரும்புகின்றேன்.

பின் ஆயர் இறைமக்கள் பக்கம் திரும்பிக் கூறுகின்றார்:

அன்புமிக்க மக்களே, உங்கள் அருள்பணியாளர்கள் மீது கடவுள் தம் நலன்களை நிறைவாகப் பொழியவும் அதனால் தலைமைக் குருவாகிய கிறிஸ்துவின் நம்பிக்கையுள்ள பணியாளர்களாய்த் திகழ்ந்து, மீட்பின் ஊற்றாகிய அவரிடம் உங்களை வழிநடத்திச் சேர்க்கவும் இவர்களுக்காக மன்றாடுங்கள்.

மக்கள்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்;

கிறிஸ்துவே, கனிவாய்ச் செவிசாய்த்தருளும். எளியவனாகிய என்னிடம் ஒப்படைக்கப்பெற்ற திருத்தூதுப் பணிக்9 நான் உண்மை உள்ளவனாய் இருக்கவும் குருவும் நல்லாயனும் போதகரும் அனைவரின் ஊழியருமான கிறிஸ்துவின் உயிருள்ள, மிக நிறையும் சாயலாக நான் நாளுக்கு நாள் உங்கள் நடுவில் திகழவும் எனக்க” மன்றாடுங்கள்.

மக்கள்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்;

கிறிஸ்துவே, கனிவாய்ச் செவிசாய்த்தருளும்.

ஆண்டவர் நம் அனைவரையும் தமது அன்பினால் காப்பாராக. ஆயர்களும் மந்தையுமான நம் எல்லாரையும் அவரே நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக. எல்: ஆமென்.

10. “நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படுவதில்லை.

11. காணிக்கைமீது மன்றாட்டு ஆண்டவரே,

இப்பலியின் ஆற்றல் எங்கள் பழைய பாவ நிலையைக் கனிவுடன் போக்கிட உம்மை வேண்டுகின்றோம்: அது எங்களில் புத்துணர்வையும் மீட்பையும் வளர்ப்பதாக. எங்கள்.

12. தொடக்கவுரை: கிறிஸ்துவின் குருத்துவமும் அருள்பணியாளர்களின் பணியும்.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நீர் உம் ஒரே திருமகனைத் தூய ஆவியாரின் அருள்பொழிவால்
புதிய, நிலையான உடன்படிக்கையின்
தலைமைக் குருவாக நியமித்தீர்;
திரு அவையில் அவருடைய ஒரே குருத்துவம் தொடரச்
சொல்லற்கரிய முறையில் நீர் ஏற்பாடு செய்யத் திருவுளம் கொண்டீர்.

ஏனெனில் அவர் தமக்கு உரிமையாக்கிக்கொண்ட மக்களை
அரச குருத்துவத்தால் அணிசெய்தார்;
அது மட்டும் அன்றி, அவர்கள் மீது தம் கைகளை வைத்து,
தமது புனிதப் பணியின் பங்கேற்பாளர்கள் ஆவதற்காக
அவர்களைத் தம் சகோதர அன்பினால் தேர்ந்துகொண்டார்.

அவர்கள் அவர் பெயரால், மனித மீட்பின் பலியைப் புதுப்பிக்கின்றார்கள்;
உம்முடைய பிள்ளைகளுக்குப் பாஸ்கா விருந்தைத் தயாரிக்கின்றார்கள்;
உம்முடைய புனித மக்களை அன்பினால் வழிநடத்துகின்றார்கள்;
வார்த்தையால் ஊட்டம் அளித்து,
அருளடையாளங்களால் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கின்றார்கள்.

அவர்கள் உமக்காகவும்
தங்கள் சகோதரர் சகோதரிகளின் மீட்புக்காகவும்
தங்கள் உயிரைக் கையளித்து,
அதே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்க முயலுகின்றார்கள்.
இடைவிடாமல் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும்
உமக்குச் சான்று பகர்கின்றார்கள்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும்
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழுரைத்து,
அக்களிப்புடன் சொல்வதாவது: தூயவர்.

13. திருவிருந்துப் பல்லவி

திபா 88:2 ஆண்டவரின் இரக்கங்களை நான் என்றும் பாடு வேன்; — உண்மையைத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

14. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம்முடைய அருளடையாளங்களால் நீர் புத்துயிர் ஊட்டும் இவர்கள் கிறிஸ்துவின் நறு மணமாய்ச் செயல்படத் தகுதி பெறுவார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

15. ஆண்டவருடைய இரவு விருந்தின் மாலைத் திருப்பலிக் கொண்டாட்டத்துக்கு முன்னதாகவோ மிகப் பொருத்தம் எனக் காணப்படுகின்ற வேறொரு நேரத்திலோ ஒவ்வொரு தனிப்பட்ட பங்கும் புனித எண்ணெய்களைப் பெற்றுக்கொள்ளுதல் இடம் பெறலாம்.

=================

பாஸ்காவின் மூன்று புனித நாட்கள்

1. மூன்று புனித நாள்களில் நம் மீட்பின் மாபெரும் மறைநிகழ்வுகளை – ஆண்டவர் பாடு பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த நினைவுக்கொண்டாட்டங்களை – மனதில் கொண்டு, திரு அவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றது.

பாஸ்கா நோன்பு புனிதமாய் இருக்கட்டும். இது ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளிக்கிழமை அன்று எங்கும் கொண்டாடப்பட வேண்டும். வசதி உள்ள இடங்களில் இது ஆண்டவருடைய உயிர்ப்பின் மகிழ்வுக்குத் தகுதியான உள்ளத்துடன் தயாரிக்கும் விதத்தில் புனித சனிக்கிழமைவரை தொடரப்படலாம்.

2. மூன்று புனித நாள்களுக்கு உரிய கொண்டாட்டத்துக்குப் போதிய எண்ணிக்கையில் பொது நிலைப் பணியாளர்கள் தேவை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது கவனத்துடன் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

மக்கள், பணியாளர்கள், பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் ஆகியோரின் பாடல் இநநாள்களின் கொண்டாட்டத்தில் சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில் பாடங்கள் பாடப்படும்பொழுது அவை தமக்கு உரிய சிறப்பைப் பெறுகின்றன.

எனவே அருள்நெறியாளர்கள் தங்களால் இயன்றவரையில் கொண்டாட்டங்களின் பொருள், அமைப்புமுறை பற்றியும் கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் செயல்முறை, பயனுள்ள பங்கேற்பு ஆகியன பற்றியும் அவர்களுக்கு விளக்கம் தருவது கடமை ஆகும்.

3. மூன்று புனித நாள்களின் கொண்டாட்டங்கள் மறைமாவட்டத் தலைமைக் வல்களிலும் பங்குக் கோவில்களிலும் நம்பிக்கையாளரின் போது மான வருகை,
பணியாளர்களின் தகுந்த எண்ணிக்கை, சில பகுதிகளையாவது பாடக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றோடு தகுந்த மேன்மையுடன் நிறைவேற்றக்கூடிய கோவில்களிலும் நிகழ்த்தப்படுகின்றன.

இதன் விளைவாகச் சிறு குழுக்கள், சபைகள், பல வகையான தனிக் குழுக்கள் தகுந்த முறையில் இத்தூய கொண்டாட்டங்களைச் சிறப்பிக்க இக்கோவில்களில் ஒன்றுகூடுவது விரும்பத்தக்கது.

=================

ஆண்டவருடைய இரவு விருந்து

மாலைத் திருப்பலி

1. ஆண்டவருடைய இரவு விருந்துத் திருப்பலி மாலை வேளையில் வசதியான நேரத்தில் இறைமக்கள் அனைவருடைய முழுமையான பங்கேற்புடன் கொண்டாடப்படும். அதில் அருட்பணியாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தத்தம் பணிகளை நிறைவேற்றுவார்கள்.

2. இன்று கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலியில் ஏற்கெனவே கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி இருந்தாலும் அல்லது நம்பிக்கையாளர் நலனுக்காக வேறொரு திருப்பலி கொண்டாட வேண்டியிருந்தாலும் அருள் பணியாளர்கள் அனைவரும் மீண்டும் ‘கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம்.

3. அருள் பணி நலனைக் கருதி, கோவில்களிலோ சிற்றாலயங்களிலோ மாலையில் (அவசரத் தேவையானால்) மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். ஆனால் மாலைத் திருப்பலியில் பங்கேற்க இயலாத நம்பிக்கையாளருக்காக மட்டும் காலையில் திருப்பலி நிறைவேற்ற அனுமதி தரலாம். எனினும், இத்தகைய கொண்டாட்டங்கள் தனிப்பட்ட ஒரு சிலரின் அல்லது தனிப்பட்ட சிறிய குழுக்களின் வசதிக்காக அமையாமலும் மாலையில் நடக்கும் திருப்பலிக்கு ஊறு விளைவிக்காமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. திருப்பலியில் மட்டும் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கலாம். நோயாளிகளுக்கு இந்நாளில் எந்த நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.

5. இந்நாளின் இயல்புக்கு ஏற்றவாறு பீடம் மலர்களால் எளிமையாக அணிசெய்யப்படலாம். நற்கருணைப் பேழை முழுவதும் வெறுமையாய் இருக்க வேண்டும். ஆனால் இன்றும் மறு நாளும் அருள்பணியாளர்களுக்கும் மக்களுக்கும் போதிய அளவு அப்பங்கள் இதே திருப்பலியில் அர்ச்சிக்கப்பட வேண்டும்.

6. வருகைப் பல்லவி

காண். கலா 6:14
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை பாராட்ட வேண்டும்; அவரிலேதான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு; அவர் வழியாகவே நாம் மீட்கப்பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.

7. “உன்னதங்களிலே” பாடப்படும்; அப்பொழுது மணிகள் ஒலிக்கும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பில் “உன்னதங்களிலே” பாடும்வரை மணிகள் ஒலிக்காது. ஆனால் தல் ஆயா, உவக்கு ஏற்ப, மாற்று விதிகளைத் தரலாம். அதே சமயத்தில் இசைப் பெட்டியும் பிற இசைக் கருவிகளும் பாடலைத் தொடரத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம்.

8. திருக்குழும மன்றாட்டு

றைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்கும் வேளையில் நிலைத்து நிற்கும் அன்பின் புதிய பலியையும் திருவிருந்தையும் தமது திரு அவைக்கு அளித்தார்; அதனால் இப்புனிதமிக்க திரு உணவில் அடிக்கடி பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்விலிருந்து அன்பின் முழுமையையும் வாழ்வின் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.

வாசகங்கள் : 

9. நற்செய்திப் பறைசாற்றலுக்குப்பின் அருள்பணியாளர் மறையுரை நிகழ்த்துகின்றார். இத்திருப்பலியில் நினைவுகூரப்படுகின்ற ஆற்றல்மிகு மறைநிகழ்வுகள் – அதாவது தூய நற்கருணை, அருள்பணியாளர் திருநிலை, சகோதர அன்பு பற்றிய ஆண்டவருடைய கட்டளை – பற்றி விளக்குகின்றார்.

காலடிகளைக் கழுவுதல்

10. மறையுரை முடிந்தபின், அருள்பணி நலனை முன்னிட்டுக் காலடிகளைக் கழுவும் சடங்கை நடத்தலாம்.

11. இறைமக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோரை வசதியான இடத்தில் தயார் செய்யப்பட்ட இருக்கைகளுக்குப் பணியாளர்கள் அழைத்து வருகின்றார்கள். பின்னர் அருள்பணியாளர் (தேவையானால், திருப்பலி மேலுடையை அகற்றிவிட்டு) அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று, பணியாளர் துணையோடு காலடிகளின் மீது தண்ணீர் ஊற்றித் துடைக்கின்றார்.

12. இதற்கிடையில் பின்வரும் பாடல்களோ வேறு பொருத்தமான பாடல்களோ பாடப்படும்.

பல்லவி 1 காண். யோவா 13:4,5,15

ஆண்டவர் பந்தியிலிருந்து எழுந்த பின்னர்
குவளை ஒன்றில் தண்ணீர் எடுத்து,
சீடர்களின் காலடிகளைக் கழுவத் தொடங்கினார்.
இந்த முன்மாதிரியைச் சீடர்களுக்கு விட்டுச் சென்றார்.

பல்லவி 2 காண். யோவா 13:12,13,15

இயேசு தம் சீடர்களோடு இரவு விருந்து அருந்தியபின்
அவர்களுடைய காலடிகளைக் கழுவி, அவர்களிடம் கூறினார்:
ஆண்டவரும் போதகருமான நான் உங்களுக்குச் செய்தது
என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?
நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு
நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன்.

பல்லவி 3 யோவா 13:6,7,8

ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?
அதற்கு இயேசு: “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்
என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார்.

முன் மொழி: எனவே சீமோன் பேதுருவிடம் அவர் வந்தபோது
பேதுரு அவரை நோக்கிக் கூறினார்:
– “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?”

முன்மொழி: “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது,பின்னரே புரிந்து கொள்வாய்.”
– “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?”

பல்லவி 4 காண். யோவா: 13:14

ஆண்டவரும் போதகருமான நானே உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் மற்றவருடைய காலடிகளைக் கழுவக்
கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

பல்லவி 5 யோவா: 13:35

நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்.

முன்மொழி: இயேசு தம் சீடருக்குக் கூறினார்:
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்.

பல்லவி 6 யோவா: 13:34

புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்:
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போலவே
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்கிறார் ஆண்டவர்.

பல்லவி 7 1 கொரி 13:13

உங்களிடம் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு
இம்மூன்றும் நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

முன்மொழி: இப்போது நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு
இம்மூன்றும் நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
– உங்களிடம் நம்பிக்கை.

13. காலடிகளைக் கழுவிய பின் அருள் பணியாளர் தம் கைகளைக் கழுவித் துடைக்கின்றார். மேலுடையை மீண்டும் அணிந்துகொண்டு தமது இருக்கைக்கு வருகின்றார். அங்கிருந்து பொது மன்றாட்டை வழிநடத்துகின்றார்.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படுவதில்லை.

நற்கருணை வழிபாடு

14. நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் அப்ப, இரசத்துடன் ஏழை மக்களுக்குப் பயன்படும் காணிக்கைகளைக் கொண்டுவரும் இறைமக்களின் பவனி இடம் பெறலாம்.

பவனியின்போது, கீழுள்ள அல்லது வேறு பொருத்தமான பாடல் பாடப்படும்.

பல்லவி:
உண்மையான அன்பு எங்குள்ளதோ
அங்கே கடவுள் இருக்கின்றார்.

முன்மொழி: கிறிஸ்துவின் அன்பு நம்மை
ஒன்றாய்ச் சேர்த்ததுவே.
அகமகிழ்வோம், அவரில் அக்களிப்போம்;
அஞ்சுவோம்; வாழும் கடவுளை அன்பு செய்வோம்;
உண்மை உள்ளத்தோடு நாம் அன்பு செய்வோம்.

பல்லவி:
உண்மையான அன்பு எங்குள்ளதோ
அங்கே கடவுள் இருக்கின்றார்.

முன்மொழி:
எனவே, நாம் அனைவரும்
ஒன்றாய்க் கூடுவோம்;
நமது மனதில் பிளவுபடாமல் இருக்க
விழிப்பாய் இருப்போம்.
தீய சச்சரவுகள் ஒழிக; பிணக்குகள் மறைக!
இறைவன் கிறிஸ்து நம்மிடையே இருந்திடுக.

பல்லவி:
உண்மையான அன்பு எங்குள்ளதோ
அங்கே கடவுள் இருக்கின்றார்.

முன்மொழி:
நாங்களும் ஒன்றாய்ப் புனிதருடன், கிறிஸ்து இறைவா,
மாட்சிமிகு உமது முகத்தைக் காண்போம்.
அளவில்லா மாண்புடைய மகிழ்வு
என்றென்றும் நிலைத்திருப்பதாக. ஆமென்.

15. காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

16. தொடக்கவுரை: கிறிஸ்துவின் பலியும் அருளடையாளமும்.

தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை 1 (பக்.544 ).

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

என்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர்
நிலையான பலிமுறையை ஏற்படுத்தினார்;
மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக
முதன்முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து,
தம் நினைவாக நாங்களும் பலி செலுத்த வேண்டுமென்று கற்பித்தார்.
எங்களுக்காகப் பலியான அவருடைய
திரு உடலை உண்ணும்போதெல்லாம் நாங்கள் வலிமை பெறுகின்றோம்.
அவர் எங்களுக்காகச் சிந்திய திரு இரத்தத்தைப் பருகும்போதெல்லாம்
நாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

17. உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது அதற்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும். . .”, “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய. …”, “அவர் தாம் பாடுபடுவதற்கு. ..” என்னும் மூன்று மன்றாட்டுகள் சொல்லப்படும்.

18. அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C: கனிவுமிக்க தந்தையே, இக்கொடைகளையும் எங்கள் காணிக்கைகளையும் புனித, மாசற்ற பலிப்பொருள்களையும்
அவர் தம் கைகளைக் குவித்துச் சொல்கின்றார்:

நீர் ஏற்று

அப்பத்தின்மீதும் திருக்கிண்ணத்தின்மீதும் ஒரு முறை சிலுவை அடையாளம் வரைந்து சொல்கின்றார்:

* ஆசி வழங்கிட உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

உமது புனித கத்தோலிக்கத் திரு அவைக்காக
இவற்றை நாங்கள் முதலில் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்;
உலகெங்கும் அதற்கு அமைதியும் பாதுகாப்பும் ஒற்றுமையும் அளித்து அதனை வழிநடத்தியருளும்.
உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . க்காகவும்
எங்கள் ஆயர் (பெயர்)* . . . க்காகவும்
* உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை எண் 149-இல் குறிப்பிட்டுள்ள்வது இணையுதவி ஆயர் அல்லது துணை ஆயரின் பெயர்களையும் இங்குச் சொல்லலாம்”
திருத்தூதர் வழிவரும் உண்மையான கத்தோலிக்க நம்பிக்கையைக் கடைப்பிடிப்போர் அனைவருக்காகவும்
இக்காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கின்றோம்.

19. வாழ்வோர் நினைவு

C1: ஆண்டவரே, உம் அடியார்களாகிய (பெயர்) . . . , (பெயர்) …
ஆகியோரையும் நினைவுகூர்ந்தருளும்.

அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, யார் யாருக்காக மன்றாட விரும்புகின்றாரோ அவர்களுக்காகச் சிறிது நேரம் வேண்டுகின்றார். பின்னர் தம் கைகளை விரித்துக் தொடர்கின்றார்:

மேலும் இங்கே கூடியிருக்கும் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
உம்மீது இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இறைப்பற்றையும் நீர் அறிவீர்.
இவர்களுக்காக நாங்கள் இவற்றை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
இவர்களும் தமக்காகவும் தம்மவருக்காகவும்
இப்புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றார்கள்.
தங்களுடைய ஆன்மாக்களின் மீட்புக்காகவும்
தாங்கள் எதிர்நோக்கியிருக்கும் நலவாழ்வுக்காகவும் பாதுகாப்புக்காகவும்
என்றும் வாழ்பவரும் உயிருள்ளவரும் உண்மையுள்ளவருமான கடவுளாகிய உமக்கு
இவர்கள் தங்கள் பொருத்தனைகளைச் செலுத்துகின்றார்கள்.

20. புனிதர் நினைவு:

C2. உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள்
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எங்களுக்காகக் கையளிக்கப்பட்ட
தூய்மைமிகு நாளைக் கொண்டாடுகின்றோம்.
முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய
அதே இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவையும்
அதே கன்னியின் கணவரான புனித யோசேப்பையும்
திருத்தூதர்களும் மறைச்சாட்சியருமான பேதுரு, பவுல், அந்திரேயா,
(யாக்கோபு, யோவான், தோமா, யாக்கோபு, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு,
சீமோன், ததேயு: லீனஸ், கிளீட்டஸ், கிளமெண்ட், சிக்ஸ்துஸ்,
கொர்னேலியுஸ், சிப்பிரியான், லாரன்ஸ், கிரிசோகொனுஸ்,
ஜான், பால், கோஸ்மாஸ், தமியான்) ஆகியோரையும் வணக்கத்துடன் நினைவுகூருகின்றோம்.
இவர்களுடைய பேறு பயன்களாலும் வேண்டல்களாலும்
நாங்கள் யாவற்றிலும் உமது உதவி பெற்றுக் காக்கப்படுமாறு அருள்புரியும்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

C: ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும்
உமது குடும்பம் முழுவதும் இக்காணிக்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
தம் உடலையும் இரத்தத்தையும் தம் சீடர்களுக்குக் கையளித்து,
அவற்றின் மறைபொருளைக் கொண்டாடுமாறு பணித்த இந்த நாளில்
இக்காணிக்கையை மன நிறைவோடு ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்:
எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியைத் தந்தருளும்.

மேலும் நிலையான அழிவிலிருந்து எங்களைக் காத்து,
உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட மந்தையில் சேர்த்தருளும்.
அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

22. பலிப்பொருள்கள் மீது அவர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: இறைவா, இக்காணிக்கையைப் புனிதப்படுத்தி,
உமக்கு உரிமையுடையதாகவும் தகுதியுடையதாகவும்
உமக்கு ஏற்புடையதாகவும் உகந்ததாகவும் இருக்கச் செய்தருளும்.
இவ்வாறு உம் அன்புத் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய
இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் இது மாறுவதாக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

23. பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

அவர் எங்கள் மீட்புக்காகவும் அனைவருடைய மீட்புக்காகவும் தாம் பாடுபடுவதற்கு முந்திய நாள், அதாவது இன்று,
அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்கு மேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:
வணக்கத்துக்கு உரிய தம் திருக் கைகளில் அப்பத்தை எடுத்து,
அவர் தம் கண்களை உயர்த்துகின்றார்.
வான்நோக்கிக் கண்களை உயர்த்தி,
எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையுமாகிய உமக்கு நன்றி செலுத்தி,
ஆசி வழங்கி, அப்பத்தைப் பிட்டுத் தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.


அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின்
அதைத் திரு அப்பத் தட்டின் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

34.அதன்பின் அவர் தொடர்கின்றார்:

அவ்வண்ணமே, இரவு விருந்து அருந்தியபின்,
அவர் திருக்கிண்ணத்தை எடுத்துப் பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொல்கின்றார்:
எழில்மிகு இக்கிண்ணத்தை வணக்கத்துக்கு உரிய தம் திருக் கைகளில் எடுத்து,
மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி,
தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்:
இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

அவர் திருக்கிண்ணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின், அதைத் திருமேனித துகிலமீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

25. அதன் பின் அவர் சொல்கின்றார்:

C: நம்பிக்கையின் மறைபொருள்.

மக்கள் ஆர்ப்பரித்துத் தொடர்கின்றார்கள்:

ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.
உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

அல்லது

ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
நீர் வரும்வரை உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது

உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உம் சிலுவையினாலும் உயிர்ப்பினாலும்
எங்களுக்கு விடுதலை அளித்தவர் நீரே.

26. அதன்பின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC:ஆகவே ஆண்டவரே,
உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்துவின்
புனிதமிக்க பாடுகளையும் இறந்தோரிடமிருந்து அவர் உயிர்த்தெழுந்ததையும்
அவரது மாட்சிக்கு உரிய விண்ணேற்றத்தையும் உம் ஊழியர்களும்
உம் புனித மக்களுமாகிய நாங்கள் நினைவுகூருகின்றோம்.
நீர் எங்களுக்கு வழங்கியுள்ள கொடைகளிலிருந்து
நிலைவாழ்வு தரும் புனித அப்பத்தையும்
முடிவில்லா மீட்பு அளிக்கும் திருக்கிண்ணத்தையும்
தூய, புனித, மாசற்ற பலிப்பொருளாக
மாண்புக்கு உரிய உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்.

27. இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும்.
நீதிமானாகிய உம் ஊழியன் ஆபேலின் காணிக்கைகளையும்
எங்கள் நம்பிக்கையின் தந்தை ஆபிரகாமின் பலியையும்
உம்முடைய தலைமைக் குரு மெல்கிசேதேக்
உமக்கு அளித்த காணிக்கைகளையும்
நீர் உளம் கனிந்து ஏற்றுக்கொண்டது போல,
இவற்றையும் புனிதப் பலியாகவும் மாசற்ற பலிப்பொருளாகவும் ஏற்றுக்கொள்ளும்.

28. அவர் தம் கைகளைக் குவித்து, சிறிது குனிந்து தொடர்கின்றார்:

எல்லாம் வல்ல இறைவா,
உம்முடைய வானதூதர் தம் திருக் கைகளால் இப்பலிப்பொருள்களை
மாண்புக்கு உரிய உமது விண்ணகத் திருப்பீடத்துக்கு
எடுத்துச் செல்ல வேண்டும் என உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்.
இத்திருப் பீடத்திலிருந்து உம்முடைய திருமகனின்
புனிதமிக்க உடலையும் இரத்தத்தையும் பெறுகின்ற நாங்கள் அனைவரும்,

அவர் நிமிர்ந்து நின்று, தம்மீது சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

29. இறந்தோர் நினைவு அவர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C3: ஆண்டவரே, நம்பிக்கையின் அடையாளத்தோடு
எங்களுக்கு முன் சென்று அமைதியில் துயில்கொள்ளும் (பெயர்) … , (பெயர்) …
ஆகிய உம் அடியார்களையும் நினைவுகூர்ந்தருளும்.

அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, யார் யாருக்காக மன்றாட விரும்புகின்றாரோ
அவர்களுக்காகச் சிறிது நேரம் வேண்டுகின்றார். பின்னர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

ஆண்டவரே, இவர்களுக்கும் கிறிஸ்துவில் இளைப்பாறும் அனைவருக்கும்
ஆறுதலும் ஒளியும் அமைதியும் நிறைந்த இடத்தை
ஈந்திட வேண்டும் என இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

30. அவர் வலக் கையால் தம் நெஞ்சைத் தட்டிச் சொல்கின்றார்:

C4: பாவிகளாகிய உம் அடியார்கள் நாங்களும்
அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:
உமது பேரிரக்கத்தை எதிர்நோக்கி இருக்கின்றோம்.
உம்முடைய திருத்தூதர்களும் மறைச்சாட்சியருமாகிய திருமுழுக்கு யோவான்,
ஸ்தேவான், மத்தியா, பர்னபா, (இஞ்ஞாசியார், அலெக்சாண்டர்,
மார்சலீனுஸ், பீட்டர், பெலிசிட்டி, பெர்பேத்துவா, ஆகத்தா,
லூசி, ஆக்னஸ், செசிலியா, அனஸ்தாசியா) ஆகியோருடனும்
உம் புனிதர் அனைவருடனும் எங்களுக்கும் பங்களித்தருளும்.

எங்கள் தகுதியை முன்னிட்டு அன்று,
மாறாக உமது மிகுதியான மன்னிப்பால்
அப்புனிதர்களோடு நாங்களும் தோழமை கொள்ள
அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

31. மேலும் அவர் தொடர்கின்றார்

C: இவர் வழியாகவே, ஆண்டவரே,
நீர் இவற்றை எல்லாம் எப்போதும் நல்லவையாக்கி,
புனிதப்படுத்தி, உய்வித்து, ஆசி அளித்து எங்களுக்கு வழங்குகின்றீர்.

32. அவர் திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் எடுத்து, இரண்டையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு சொல்கின்றார்:

இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும்
என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்:
ஆமென்.

33. வீடுகளில் நற்கருணை வாங்கவிருக்கும் நோயாளிகளுக்காக, திருத்தொண்டருக்கு அல்லது பீடத்துணைவருக்கு அல்லது பிற சிறப்புரிமைத் திருப்பணியாளருக்குப் பொருத்தமான நேரத்தில் அருள் பணியாளர் திருப்பீடத்திலிருந்து நற்கருணையை ஒப்படைக்கின்றார்.

34. திருவிருந்துப் பல்லவி

1 கொரி 11:24-25 “இவ்வுடல் உங்களுக்காகக் கையளிக்கப்படும்;
புதிய உடன்படிக்கையின் இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இதைச்
செய்யுங்கள்” என்கிறார் ஆண்டவர்.

35. நற்கருணை வழங்கிய பின், மறு நாளுக்கான திரு அப்பத்தைக் கொண்ட நற்கருணைக் கலம் பீடத்தின்மீது வைக்கப்படும். அருள்பணியாளர் நின்றுகொண்டு திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்கின்றார்.


36. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிவீராக; உம் திருமகனின் இரவு விருந்தினால் இவ்வுலகில் ஊட்டம் பெறும் நாங்கள் என்றென்றும் நிறைவு அடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம்

37. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொன்ன பிறகு அருள்பணியாளர் பீடத்துக்கு முன் நின்று தூபக் கலத்தில் சாம்பிராணியிட்டுப் புனிதப்படுத்தி, முழங்காலிட்டு, தூய்மைமிகு நற்கருணைக்கு மும்முறை தூபம் காட்டுகின்றார். பின் வெண் தோள் துகில் அணி எழுந்து, நற்கருணைக் கலத்தைக் கையில் எடுத்து, அதை அத்துகிலின் இருமுனைகள் மூடிக்கொள்கின்றார்.

38. எரியும் திரிகளுடனும் தூபத்துடனும் தூய்மைமிகு நற்கருனை கொண்டு செல்லப்படும். கோவிலின் ஒரு பகுதியில் இதற்கென்று தயார் செய்யப்பட்டுள்ள மாற்று இடத்துக்கோ, தகுதியான விதத்தில் அணிசெய்யப்பட்டுள்ள வேறொரு சிற்றாலயத்துக்கோ கோவிலின் வழியாக நற்கருணை கொண்டு செல்லப்படுகின்றது. எரியும் திரிகளோடு உள்ள மற்ற இரு பணியாளர்கள் நடுவில் திருச்சிலுவை ஏந்திய பொது நிலைப் பணியாளர் முன்னின்று வழிநடத்துகின்ற யொளர் முன்னின்று வழிநடத்துகின்றார். எரியும் திரிகளைக் கொண்டிருப்போர் பின்தொடர்வர். புகையும் தூபக் கலத்தை ஏந்தி நிற்பவர் தூய்மைமிகு நற்கருணையைக் கொண்டு செல்லும் அருள்பணியாளர் முன் செல்வார். அவ்வேளையில் “பாடுவாய் என் நாவே” ( இறுதி இரு பத்திகள் தவிர) அல்லது வேறு நற்கருணைப் பாடல் ‘பாடப்படுகின்றது.

39. நற்ருணை வைக்கப்படும் இடத்தைப் பவனி அடைந்ததும் அருள்பணியாளர் – தேவையானால் திருத்தொண்டரின் உதவியுடன் – நற்கருணைப் பேழைக்குள் நற்கருணைக் கலத்தை வைக்கின்றார். அதன் கதவு திறந்திருக்கும். பின் அவர் தூபக் கலத்துக்குள் சாம்பிராணி இடுகின்றார். முழங்காலிட்டு தூய்மைமிகு நற்கருணைக்குத் தூபம் இடுகின்றார். அப்பொழுது “மாண்புயர் அல்லது வேறு நற்கருணைப் பாடல் பாடப்படும். பிறகு திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளரே நற்கருணைப் பேழையின் கதவை மூடுகின்றார்.

40. சிறிது நேரம் அமைதியாக வழிபட்ட பிறகு அருள்பணியாளரும் பணியாளரும் முழங்காலிட்டு வணங்கியபின், திருப்பொருள் அறைக்குச் செல்கின்றனர்.

41. பின் பொருத்தமான நேரத்தில் பீடம் வெறுமையாக்கப்பட்டு, கூடு மானால், சிலுவைகள் எல்லாம் கோவிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகளைத் திரையிட்டு மறைப்பது பொருத்தம் ஆகும்.

42. ஆண்டவருடைய இரவு விருந்துத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள் மாலைத் திருப்புகழ் சொல்வதில்லை.

43. அந்தந்த இடத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இரவு நேரத்தில் பொருத்தமான மற அள்வு குறித்து தூய்மைமிகு நற்கருணை முன் ஆராதனையைத் தொடர நம்பிக்கையாளர் அழைக்கப்படுகின்றனர். ஆனால் நள்ளிரவுக்குப்பின் எந்தவித ஆடம்பரமும் இன்றி ஆராதனை நடைபெற வேண்டும்.

44. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆண்டவருடைய திருப்பாடுகளின் கொண்ட அதே கோவிலில் இடம்பெறவில்லை எனில் திருப்பலி வழக்கம் போல் நிறைவடைகின்றது தூயமைமிகு நற்கருணை, நற்கருணைப் பேழையில் வைக்கப்படுகின்றது.

===========================

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி

1. மிகப் பழமையான மரபுப் படி , திரு அவை இன்றும் நாளையும் ஒப்புரவு, ‘நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைத் தவிர மற்ற அருளடையாளங்களை ‘எச் சூழலிலும் கொண்டாடுவதில்லை.

2. இந்நாளில் ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டத்தின் போது மட்டும்தான் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும். இக்கொண்டாட்டத்தில் பங்குபெற இயலாது நோயாளிகளுக்கு இந்நாளின் எந்நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.

3. சிலுவை, திரிகள், பீடத் துகில் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் முழுவதும் வெறுமையாக இருக்கும்.

ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம்

4. இன்று பிற்பகலில் குறிப்பாக மூன்று மணி அளவில் பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் அருள் பணி நலன் கருதித் தேவைக்கு ஏற்ப, இதற்குப் பிந்திய நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

5. திருப்பலிக்கு உரிய சிவப்பு நிற உடைகள் அணிந்து அருள் பணியாளரும் திருத்தொண்டர் இருந்தால், அவரும் அமைதியுடன் பீடத்தின் முன் வந்து, பீடத்துக்கு வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுவார்கள் அல்லது பொருத்தமானால் முழங்கால் பணிந்து சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவார்கள்; மற்ற அனைவரும் முழங்காலில் இருப்பர்.

6. பின் அருள்பணியாளர் பணியாளர்களுடன் தமது இருக்கைக்குச் செல்கின்றார். அங்கு அருள் பணியாளர் மக்களை நோக்கி நின்று, தம் கைகளை விரித்துக் கீழுள்ள மன்றாட்டுகளுள் ஒன்றை மன்றாடு வோமாக எனும் அழைப்புச் சொல்லைத் தவிர்த்துவிட்டுச் சொல்கின்றார்:

மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகன் கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தி, உம் அடியார்களுக்காகப் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்படுத்தினார்; உமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நிலையான பாதுகாப்பால் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.அல்லது

இறைவா, பழைய பாவத்தின் விளைவாக எல்லாத் தலைமுறைக்கும் தொடர்ந்த சாவை எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய கிறிஸ்துவின் பாடுகளால் அழித்தீர்; இவ்வுலக மனிதரின் சாயலை இயற்கையின் நியதியால் பெற்றுள்ளது போல நாங்கள் அவருக்கு ஏற்றவர்களாய் இருப்பதால் விண்ணகத்தின் சாயலை உமது அருளின் புனிதத்தால் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


முதல் பகுதி
இறைவாக்கு வழிபாடு


7. பின்னர் அனைவரும் அமர்ந்திருக்க, எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து (52:13-53:12) முதல் வாசகமும் அதற்கு உரிய திருப்பாடலும் வாசிக்கப்படும்.

8. எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து (4:14-15; 5:7-9) இரண்டாம் வாசகம் தொடரும். பிறகு நற்செய்திக்கு முன் வசனம் பாடப்படும்.

9. பிறகு முந்திய ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது போல், யோவான் எழுதியபடி ஆண்டவருடைய பாடுகளின் வரலாறு (18:1-19:42) வாசிக்கப்படும்.

புனித வெள்ளி வாசகங்கள்

10. ஆண்டவருடைய பாடுகளின் வாசகத்துக்குப் பிறகு அருள்பணியாளர் சுருக்கமாக மறையுரை ஆற்றுகின்றார். அதன் இறுதியில் சிறிது நேரம் அமைதியாக மன்றாட அருள்பணியாளர் மக்களை அழைக்கலாம்.

பொது மன்றாட்டு

11. இறைவாக்கு வழிபாடு பொது மன்றாட்டுடன் முடிவடையும். அது நடைபெறும் முறையாவது : திருத்தொண்டர் அல்லது – அவர் இல்லை எனில் – ஒரு பொது நிலைப் பணியாளர் வாசக மேடையில் நின்றுகொண்டு, பின்வரும் மன்றாட்டின் கருததை அறிவிக்கின்றார். அனைவரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடுகின்றனர். பின் அருள் பணியாளர் தம் இருக்கையில் அல்லது தேவையானால் பீடத்துக்கு அருகில் நின்றுகொண்டு, தம் கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்கின்றார்.

இம்மன்றாட்டின் முழு நேரமும் அல்லது ஒரு பகுதியின்போது மக்கள் முழங்காலில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.

12. அருள் பணியாளரின் மன்றாட்டுக்குமுன், மரபுப்படி, இறைமக்களுக்கு? திருத்தொண்டா: முழங்காலிடுவோம் – “எழுந்திருங்கள் எனும் அழைப்பு விடுக்கலாம்: எல்லாரும் முழங்காலிடும்போது சிறிது நேரம் அமைதியாக மன்றாடுகின்றனர்.

13. அருள்பணியாளரின் மன்றாட்டைத் தொடங்கத் தேவையான மற்றக் கருத்துகளை் ஆயர் பேரவைகள் வழங்கலாம்.

1. புனிதத் திரு அவைக்காக

மன்றாட்டு எளிமையான இராகத்தில் பாடப்படுகின்றது; அல்லது அழைப்புகள் “முழங்காலிடுவோம்” – “எழுந்திருங்கள்” எனச் சொல்லும்பொழுது அவை ஆடம்பரமாகப் பாடப்படும்,

அன்பு மிக்க சகோதர சகோதரிகளே, இறைவனின் புனிதத்
திரு அவைக்காக மன் றாடுவோம்:

நம் இறைவனும் ஆண்டவருமானவர்
உலகெங்கும் திரு அவைக்கு அமைதியும் ஒற்றுமையும் பாதுகாப்பும்
அளித்துக் காக்க வேண்டும் எனவும், நாம் கலக்கம் இன்றி, அ மை தியான
வாழ்வு நடத்தி எல்லாம் வல்ல இறைத் தந்தையை மாட்சிப்படுத்த
நமக்கு அருள்புரிய வேண்டும் என வும் மன் றா டுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
கிறிஸ்துவில் உமது மாட்சியை மக்கள் இனங்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்;
உம்முடைய இரக்கத்தின் செயல்களை நீர் பாதுகாப்பதால்
உலகெங்கும் பரவியிருக்கும் திரு அவை,
உறுதியான நம்பிக்கையுடன் உமது பெயரை
அறிக்கையிடுவதில் நிலைத்திருக்கச் செய்வீராக. எங் கள்.

பதில்: ஆமென்.


II. திருத்தந்தைக்காக

நம் புனிதத் திருத்தந்தை பெயர்) …. க்காக மன்றாடுவோம்: தலைமை ஆயர்
நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனும் ஆண்டவருமானவர்
எவ்வகைத் தீங்கும் இன்றி அவரைப் பேணிக்காப்பாராக. அதனால் அவர்
இறைவனின் புனித மக்களை வழிநடத்தித் தம்முடைய புனிதத் திரு அவையை
வளம் பெறச் செய்ய வேண்டும் எ ன மன் றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உமது திட்டப்படியே அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன;
அதனால் உமது அதிகாரத்தால் ஆளப்படும்
கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டலைப் பரிவிரக்கத்துடன் கண்ணோக்கியருளும்:
திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் நம்பிக்கையில் வளரும்படி
அவரைப் பரிவுடன் காத்தருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

III. திருநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளருள் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்காக

நம் ஆயர்(பெயர்)*… க்காகவும், திரு அவையில் உள்ள எல்லா ஆயர்கள்,
* உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை எண் 149-இல் குறிப்பிட்டுள்ளவாறு இணையுதவி ஆயா அல்லது துணை ஆயரின் பெயர்களையும் இங்குச் சொல்லலாம்
அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், நம்பிக்கையாளர் ஆகிய
அனைவருக்காகவும் மன்றாடுவோமாக:

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய ஆவியாரால் திரு அவை முழுவதும் அர்ச்சிக்கப்பெற்று, ஆளப்படுகின்றது; உம்முடைய திருநிலைப் பணியாளர்கள் அனைவருக்காகவும் நாங்கள் செய்யும் வேண்டலைக் கேட்டருளும்: அதனால் எல்லா நிலையினரும் உமது அருள்கொடையால் உமக்கு உண்மையுடன் ஊழியம் புரிவார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.

IV. கிறிஸ்தவப் புகுமுக நிலையினருக்காக

கிறிஸ்தவப் புகுமுகநிலையினருக்காகவும் மன்றாடுவோம்: அதனால்
நம் இறைவனும் ஆண்டவருமானவர் தமது இரக்கத்தைப் பொழிந்து
அவர்களுடைய இதயங்களின் செவிகளைத் திறந்து விடுவாராக;
இவ்வாறு அவர்கள், புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால், தங்கள்
பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு அடைந்து, நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவோடு ஒன்றிணைய வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
புதிய மக்களைச் சேர்த்துத் திரு அவை என்றும் வளம் பெறச் செய்கின்றீர்;
கிறிஸ்தவப் புகுமுகநிலையினரிடம் நம்பிக்கையும் அறிவும் வளரச் செய்தருளும்:
அதனால் அவர்கள் திருமுழுக்குத் தண்ணீரால் புதுப் பிறப்பு அடைந்து,
தேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின்
திருக்கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.

V கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக

கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள்
அனைவருக்காகவும் மன்றாடுவோம்: நம் இறைவனும் ஆண்டவருமானவர்
அவர்களை உண்மையின் பாதையில் வழிநடத்தித் தமது ஒரே திரு அவையில்
கூட்டிச் சேர்த்துக் காத்தருள வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
சிதறுண்டவர்களை ஒன்றுசேர்ப்பவரும்
ஒருங்கிணைந்தவற்றைப் பேணிக் காப்பவரும் நீரே;
உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்:
இவ்வாறு ஒரே திருமுழுக்கினால் தூய்மைப்படுத்திய அவர்களை
நம்பிக்கையின் முழுமையால் இணைத்து,
அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்ப்பீராக. எங்கள். பதில்: ஆமென்.

VI. யூத மக்களுக்காக

யூத மக்களுக்காகவும் மன்றாடுவோம்: முற்காலத்தில் அவர்களோடு
பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர், த ம து பெயரின் மீதுள்ள
அன்பிலும் தமது உடன்படிக்கைமீதுள்ள நம்பிக்கையிலும் அவர்களை
வளர்ச்சி அடையச் செய்தருள வேண்டும் என மன்றாடுவோம்”

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
ஆபிரகாமுக்கும் அவர்தம் வழிமரபினருக்கும்
நீர் உம் வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்;
அதனால் முதன்முதலாக நீர் தேர்ந்து கொண்ட இம்மக்கள்
உமது மீட்பின் நிறைவைப் பெற்றுக்கொள்ள
உமது திரு அவையின் வேண்டலுக்குக் கனிவாய்ச் செவிசாய்ப்பீராக. எங்கள்,

பதில்: ஆமென்.

VII. கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காக

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்:
தூய ஆவியாரின் ஒளியைப் பெற்று,
அவர்களும் மீட்புப் பாதைக்கு வந்துசேர வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத மக்கள்
உம் திருமுன் நேர்மையான இதயத்தோடு நடந்து,
உண்மையைக் கண்டடைவார்களாக.
நாங்களும் ஒருவர் மற்றவர் மீது எப்போதும் அன்பு கொள்வதாலும்
உமது வாழ்வின் மறையுண்மையை
மேன்மேலும் புரிந்து கொள்வதில் ஆவல் கொள்வதாலும்
உமது அன்பை இவ்வுலகில் மிகத் தெளிவாகக் காட்டும்
சாட்சிகளாய் விளங்கச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

VIII. கடவுளை நம்பாதவர்களுக்காக

கடவுளைக் கண்டறிய முடியாது என்பவர்களுக்காகவும் மன்றாடுவோம்.
அவர்கள் நேர்மையான இதயத்தோடு நன்னெறியில் வாழ்ந்து,
கடவுளைக் கண்டடையுமாறு மன் றா டு வோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
மனிதர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவும்,
உம்மைக் கண்டடைவதால் அமைதி பெறவுமே நீர் அவர்களைப் படைத்தீர்;
அதனால் இவ்வுலகில் ஏற்படும் எல்லாவிதத்
தீங்கு விளைவிக்கும் இடையூறுகளுக்கு நடுவிலும்
அவர்கள் அனைவரும் உமது பரிவிரக்கத்தின் அறிகுறிகளையும்,
உம்மை நம்புவோர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையும் கண்டுணர்வார்களாக;
இவ்வாறு உம்மையே தங்களின் ஒரே மெய்யான கடவுள் எனவும்
மக்களின் தந்தை எனவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளச் செய்வீராக.

எங்கள். பதில்: ஆமென்.

IX. நாடுகளை ஆள்வோருக்காக

நாடுகளை ஆளும் அனைவருக்காகவும் மன்றாடுவோம்: நம் இறைவனும்
ஆண்டவருமானவர் தமது திருவுளப்படி உண்மையான அமைதியும்
உரி மை வாழ்வும் அவர்கள் பெறும்பொருட்டு, அவர்களுடைய மனங்களையும்
இதயங்களையும் வழிநடத்த வேண்டும் என மன் றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
மனிதரின் இதயங்களும் அவர்களின் உரிமைகளும் உம் கையில் உள்ளன;
உலகெங்கும் மக்களின் வளமான வாழ்வும் அமைதியின் உறுதிப்பாடும்
சமய உரிமையும் உமது கொடையால் நிலைபெறுமாறு
எங்களை ஆள்வோரைக் கனிவுடன் கண்ணோக்குவீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

X. துன்புறுவோருக்காக

அன்பு மிக்க சகோதர சகோதரிகளே,

துன்புறும் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளிடம் மன்றாடுவோம்:
தவறுகள் அனைத்திலிருந்தும் உலகைத் தூய்மைப்படுத்தவும் பிணிகள் நீங்கி,
பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும்,
வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், ப ய ணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும்,
நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர்கள்
மீட்புப் பெறவும் வேண்டும் எ ன மன் றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
துயருறுவோருக்கு ஆறுதலும், வருந்துவோருக்குத் திடனும் நீரே;
எத்தகைய துன்ப வேளையிலும் உம்மை நோக்கிக் கூவி அழைப்போரின் வேண்டல்கள்
உம் திருமுன் வருவனவாக: அதனால் தங்கள் தேவைகளில்
நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு அவர்கள் எல்லாரும் மகிழ்வார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.

இரண்டாம் பகுதி திருச்சிலுவை ஆராதனை

14. பொது மன்றாட்டு முடிந்தபின், திருச்சிலுவைச் சிறப்பு ஆராதனை நடைபெறும். திருச்சிலுவையைக் காட்ட இரு வகைகள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் பொருத்தமான ஒன்றை, மக்களின் அருள் பணி நலனுக்கு ஏற்றவாறு தேர்ந்து கொள்ளலாம்.

திருச்சிலுவையை உயர்த்திக் காட்டுதல்

முதல் வகை

15. பணியாளர்களோடு அல்லது தகுதியான மற்றொரு பணியாளரோடு திருத்தொண்டர் திருப்பொருள் அறைக்குச் செல்கின்றார். அங்கிருந்து எரியும் திரிகள் ஏந்திய இரு பணியாளர்களோடு அவர் ஊதா நிறத் துகிலால் மூடப்பட்ட சிலுவையை ஏந்தி, கோவில் வழியாகத் திருப்பீட முற்றத்தின் நடுப்பகுதிக்குப் பவனியாக வருகின்றார்.

பீடத்தின் முன் மக்களை நோக்கி நிற்கும் அருள்பணியாளர் சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றி, அதை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, “திருச்சிலுவை மரம் இதோ எனும் பாடலைத் தொடங்குகின்றார். பின்வரும் சொற்களைத் திருத்தொண்டர் அல்லது தேவையானால் பாடகர் குழு அவருடன் பாடுகின்றார்கள். மக்கள் எல்லாரும், “வருவீர் ஆராதிப்போம் எனப் பதிலுரைக்கின்றார்கள். பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் சிலுவையைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்க, அனைவரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றார்கள்.

திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு.

பதில்: வருவீர் ஆராதிப்போம்.

பின் அருள்பணியாளர் சிலுவையின் வலக் கையில் உள்ள துகிலை அகற்றி, மீண்டும் ” -யாத்திப் பிடித்துக்கொண்டு, “திருச்சிலுவை மரம் இதோ” எனப் பாடுகின்றார். மற்ற அனைத்தும் முன்பு போல நடைபெறும்.

இறுதியாக, அருள்பணியாளர் சிலுவையின் துகிலை முற்றிலும் அகற்றிவிட்டு, சிலுவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, “திருச்சிலுவை மரம் இதோ” என மூன்றாம் (முறை பாடுகின்றார். மற்றவை முன்பு போல நடைபெறும்.

மற்றொரு வகை

16. பணியாளர்களோடு அல்லது தகுதியான பணியாளர் ஒருவரோடு அருள்பணியாளரோ திருத்தொண்டரோ கோவிலின் தலைவாயிலுக்குச் செல்கின்றார். அங்கே மூடப்படாத சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். பணியாளர்கள் எரியும் திரிகளைப் பிடித்துக் கொள்கின்றனர். அங்கிருந்து பவனி கோவில் வழியாகப் பீடத்துக்கு வருகின்றது. வாயில் அருகே, கோவிலின் நடுவில், திருப்பீட முற்றத்துக்குமுன் ஆகிய மூன்று இடங் களில் சிலுவை தாங்குவோர் நின்று சிலுவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, “திருச்சிலுவை மரம் இதோ” எனப் பாட, இதற்குப் பதிலுரையாக எல்லாரும், “வருவீர் ஆராதிப்போம்” எனப் பாடுகின்றனர். முன்பு கூறியபடி ஒவ்வொரு பதிலுரைக்குப் பின்னும் எல்லாரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றனர்.

திருச்சிலுவை ஆராதனை

17. பின்பு, எரியும் திரிகள் தாங்கிய இரு பணியாளர்களோடு கூடிவர, அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் சிலுவையைத் திருப்பீட முற்றத்தின் வாயிலுக்கு அல்லது வேறு வசதியான இடத்துக்குக் கொண்டு செல்கின்றார். அதை அங்கே கிடத்துகின்றார் அல்லது பணியாளர்கள் பிடித்துக்கொள்ளக் கொடுக்கின்றார். சிலுவையின் இரு புறமும் திரிகள் வைக்கப்படும்.

18. சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருப்பலி உடையையும் காலணிகளையும் கழற்றிவிட்டு, தலைமை ஏற்கும் அருள்பணியாளர் மட்டும் சிலுவைக்கு ஆராதனை செலுத்த முதலில் வருகின்றார். பின் திருப்பணியாளர், பொதுநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளர் ஆகியோர் பவனியாக வந்து சிலுவைக்கு ஆராதனை செலுத்திச் செல்கின்றனர். முழங்காலிட்டுப் பணிநதோ, இடத்துக்கு ஏற்ப வேறு வகையிலோ – எ.கா.: சிலுவையை முத்தி செய்தல்.

19. ஒரே ஒரு சிலுவைதான் ஆராதனைக்கு வைக்கப்படும். பெருங்கூட்டத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே ஆராதனை செலுத்த முடியாதெனில், திருப்பணியாளர்களும் நம்பிக்கையாளர்களுள் ஒரு சிலரும் ஆராதனை செய்தபின் அருள்பணியாளர் சிலுவையை எடுத்துப் பீடத்தின் முன்பாக நடுவில் நின்றுகொண்டு, சில வார்த்தைகள் சொல்ல அனைவரையும் ஆராதனை செய்ய அழைக்கின்றார். அவர் சிலுவையைச் சிறிது நேரம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்க, எல்லாரும் அமைதியாக ஆராதனை செலுத்துகின்றன”

20. திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, “ஆண்டவரே! யாம்”, எனும் பல்லவி, முறைப்பாடுகள், “நம்பிக்கை தரும் சிலுவையே” எனும் பாடல் அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப்படும். அப்போது ஆராதனை செலுத்தி முடித்தவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பர்.


திருச்சிலுவை வழிபாட்டின்போது பாடல்கள்

1, 2: முன்மொழி
ஆண்டவரே, யாம் உமது திருச்சிலுவையினை வணங்குகின்றோம்; உமது புனித உயிர்ப்பையும் புகழ்கின்றோம், மாட்சிப்படுத்துகின்றோம்; ஏனெனில் ஆண்டவரே, இம்மரத்தின் வழியாக இவ்வுலகம் அனைத்துக்கும் மகிழ்ச்சி வந்ததே!

காண். திபா 66:2
கடவுள் நம்மீது இரங்குவாராக! நமக்கு ஆசி வழங்குவாராக!
அவரது முகம் நம்மீது ஒளி வீசுவதாக நம்மீது இரங்குவதாக

1, 2: முன்மொழி மீண்டும் பாடப்படும்: ஆண்டவரே, யாம்.

முறைப்பாடுகள்

பாடகர் குழுவின் ஒரு பகுதியினர் பாடவேண்டியதை 1 எனவும், மற்றொரு பகுதியினர் பாடவேண்டியதை 2 எனவும், இரு பகுதியினரும் சேர்ந்து பாடவேண்டியதை 1, 2 எனவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. சில வாக்கியங்கள் இரு பாடகர்களாலும் பாடப்படலாம்.

1,2: என் மக்கள் இனமே, நான் உனக்கு என்ன செய்தேன், சொல்;
எதிலே உனக்குத் துயர் தந்தேன்?
எனக்குப் பதில் நீ கூறிடுவாய்.

1: எகிப்து நாட்டிலிருந்து உன்னை மீட்டுக்கொண்டு வந்தேனே;
அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தயாரித்தாய்.

1: Hagios 0 Theos (ஹாகியோஸ் ஒ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himals (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.

1,2: நாற்பது ஆண்டுகள் நான் உன்னைப் பாலைநிலத்தில் வழிநடத்தி
உனக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் கொண்டுவந்தேனே:
அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தயாரித்தாய்.

1: Hagios 0 Theos (ஹாகியோஸ் ஓ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himas (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.
இதற்குமேல் நான் உனக்கு என்ன செய்திருக்க வேண்டும்?
எதனைச் செய்யத் தவறிவிட்டேன்?
நான் தேர்ந்தெடுத்த அழகுமிகு திராட்சைச் செடியாக நட்டேனே:
எனக்கு நீ மிகக் கசப்பாய்த் திகழ்ந்தாயே;
தாகம் தீர்க்க நீ எனக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தாயே;
உன்றன் மீட்பர் விலாவினை நீ ஈட்டிகொண்டு துளைத்தாயே!

1: Higios 0 Theos (ஹாகியோஸ் ஒ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himas (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.

பாடகர்கள்
உன்னை முன்னிட்டு நான் எகிப்தை அதன் தலைச்சன் பிள்ளைகளோடு சாட்டையால் அடித்தேனே;
நீயோ என்னைச் சாட்டையால் வதைக்கக் கையளித்தாய்.

1,2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே, நான் உனக்கு என்ன செய்தேன், சொல்;
எதிலே உனக்குத் துயர் தந்தேன்? எனக்குப் பதில் நீ கூறிடுவ”

பாடகர்கள்
பாரவோனைச் செங்கடலில் ஆழ்த்தி, எகிப்தினின்று உன்னை விடுவித்தேன்;
நீயோ என்னைத் தலைமைக் குருக்களிடத்தில் கையளித்தாய்!

1, 2: மீண்டும் பாடுவர்:

என் மக்கள் இனமே.

பாடகர்கள்:
நானே உனக்கு முன்பாகக் கடலைத் திறந்தேன்;
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினால் திறந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
மேகத் தூணில் உனக்குமுன் நான் சென்றேனே;
நீயோ பிலாத்தின் முற்றத்துக்கு என்னை இழுத்துச் சென்றாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
பாலைநிலத்தில் மன்னாவால் நான் உன்னை உண்பித்தேனே;
நீயோ என் கன்னத்தில் அறைந்து என்னைச் சாட்டையால் அடித்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
உன் தாகத்தைத் தணிக்க, நலம் தரும் நீரைப் பாறையினின்று உனக்குத் தந்தேனே;
நீயோ கசப்பும் புளிப்பும் கலந்த பானத்தை எனக்குத் தந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
கானான் அரசரை உனக்காக நான் அடித்து நொறுக்கினேனே;
நீயோ நாணல் தடி கொண்டு எனது தலையில் அடித்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
அரசர்க்கு உரிய செங்கோலை உனக்கு நான் தந்தேனே;
நீயோ என் தலைக்கு முள்முடியைத் தந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
உன்னை மிகுந்த ஆற்றலோடு சிறந்த நிலைக்கு உயர்த்தினேனே;
நீயோ என்னைச் சிலுவையெனும் தூக்குமரத்தில் தொங்க வைத்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.
பாடல்
எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
மாட்சிமிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்;
உலக மீட்பர் பலியாகி வென்ற வகையைக் கூறியே,
சிலுவை அடையாளத்தைப் புகழ்ந்து, வெற்றி முழக்கம் செய்திடுவாய்.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
முதல் பெற்றோரின் குற்றத் தீங்கைக் கண்டு நொந்த இறைவனார்
மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
வஞ்சகன் செய் சூழ்ச்சி அனைத்தையும் சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்
பகைவன் செய்த கேட்டினின்று நன்மை விளையச் செய்யவும்
வேண்டுமென்று நமது மீட்பின் ஒழுங்கில் குறித்து இருந்தது.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
எனவே புனிதக் கால நிறைவில் இறைத்தந்தை மைந்தனை
விண்ணில் நின்று அனுப்பலானார்; அன்னை கன்னி வயிற்றினில்,
உடல் எடுத்துப் பிறந்தாரே மண்ணகத்தைப் படைத்தவர்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ

பாடகர்கள்
இடுக்கமான தீவனத் தொட்டியிலே கிடந்து குழந்தை அழுகின்றார்;
அவரது உடலைத் துகிலில் பொதிந்து சுற்றிவைத்துக் கன்னித்தாய்,
அவர்தம் கையும் காலும் கச்சையாலே பிணைக்கின்றார்.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
முப்பதாண்டு முடிந்த பின்னர் உடலின் வாழ்வு நிறைவுற
மீட்பர் தாமாய் உளம் கனிந்து பாடுபடத் தம்மையளித்தார்;
சிலுவை மரத்தில் பலியாகிடவே செம்மறி உயர்த்தப்படலானார்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
கசந்த காடி அருந்திச் சோர்ந்து, முட்கள், ஈட்டி, ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே,
விண்ணும் மண்ணும், கடலும் உலகும் அதனால் தூய்மை ஆயின.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
வளர்ந்த மரமே, உன் கிளை தாழ்த்தி, விறைத்த உடலைத் தளர்த்துவாய்;
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி, மென்மையாகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின் வருத்தம் தணித்துத் தாங்குவாய்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
மரமே, நீயே உலகின் விலையைத் தாங்கத் தகுதியாயினை
செம்மறியின் குருதி உன்மேல் பாய்ந்து தோய்ந்ததாதலால்
புயலில் தவிக்கும் உலகிற்கெல்லாம் புகலிடம் நீ, படகும் நீ!

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?


இறுதி அடி யை ஒருபோதும் விடலாகாது:

தூய மூவொரு கடவுளுக்கு முடிவில்லா மாட்சியே!
தந்தையும் மகனும் தூய ஆவியாரும் சரிசமப் புகழ் பெறுகவே;
அவர்தம் அன்பின் அருளாலே நம்மைக் காத்து மீட்கின்றார். ஆமென்.

குறிப்பிட்ட இடம் அல்லது சிறப்பான மரபுகள் இவற்றுக்கு ஏற்ப, அருள்பணி நலனுக்குப் பொருத்தமானதாக இருந்தால் உரோமைப் படிக்கீதத்தில் காணப்படுவதுபோன்ற “”மைந்தனார் சிலுவை” (Stabat Mater) என்னும் பாடலோ புனித கன்னி மரியாவின் இரக்கத்தை நினைவுபடுத்தும் வேறு பொருத்தமான பாடலோ பாடப்படலாம்.

21. ஆராதனை முடிவுற்றபின் திருத்தொண்டர் அல்லது பணியாளர் ஒருவர் திருச் சிலுவையைப் பீடத்தில் வைக்கும் பொருட்டு எடுத்துச் செல்கின்றார். பீடத்தைச் சுற்றியோ பீடத்தின் மேலோ திருச்சிலுவை அருகிலோ எரியும் திரிகள் வைக்கப்படுகின்றன.


மூன்றாம் பகுதி திருவிருந்து

23. பீடத்தின் மீது ஒரு துகில் விரிக்கப்படுகின்றது. திருமேனித் துகிலும் திருப்பலி நூலும் வைக்கப்படுகின்றன. பின் திருத்தொண்டர் அல்லது – அவர் இல்லை எனில் – அருள்பணியாளர் தாமே தோள் துகில் அணிந்து, தூயமைமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்துக்குக் குறுகிய வழியாகக் கொண்டு வருகின்றார். அப்பொழுது அனைவரும் அமைதியாக நின்றுகொண்டிருப்பர். இரு பணியாளர்கள் எரியும் திரிகளை நற்கருணையோடு கொண்டுவந்து விளக்குத் தண்டுகளைப் பீடத்தின் அருகிலோ அதன்மீதோ வைக்கின்றனர்.

திருத்தொண்டர் இருந்தால், அவர் தூய்மைமிகு நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்து, நற்கருணைக் கலத்தைத் திறக்கின்றார். அருள்பணியாளர் பீடத்துக்கு வந்து தாழ்ந்து பணிந்து வணங்குகின்றார்.

23. பின் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, தெளிவான குரலில் சொல்கின்றார்:

மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு,
இறைப் படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:

அருள் பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார். அனைவரும் தொடர்கின்றனர்:

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

24. அருள்பணியாளர் மட்டும் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

ஆண்டவரே! தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எ
ங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள் உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்,
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று,
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
மக்கள் ஆர்ப்பரித்து மன்றாட்டை நிறைவு செய்கின்றனர்.

ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.

35. பின் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து அமைந்த குரலில் சொல்கின்றார்:

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே,
நான் உட்கொள்ளும் உம் திரு உடலும் திரு இரத்தமும்
என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல்,
உமது பரிவிரக்கத்தால் என் மனதுக்கும் உடலுக்கும்
பாதுகாப்பாகவும் நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பனவாக.

36. முழங்காலிட்டு வணங்கிய பின், அவர் திரு அப்பம் ஒன்றைக் கையில் எடுக்க
நற்கருணைக் கலத்தின் மீது சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, மக்களை நோக் தெளிவான குரலில் சொல்கின்றார்:

இதோ, இறைவனின் செம்மறி,
இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்.
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.

மக்களோடு சேர்ந்து ஒரு முறை சொல்கின்றார்:

ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்;
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்; என் ஆன்மா நலம் அடையும்.

27. அருள்பணியாளர் பலிப்பீடத்தின் பக்கம் திரும்பி நின்றுகொண்டு, அமைந்த குரலில் சொல்கின்றார்:

கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காப்பதாக.

28. பின் அவர் மக்களுக்கு நற்கருணை வழங்குவார். அப்பொழுது திபா 21 அல்லது பொருத்தமான வேறொரு பாடல் பாடப்படலாம்.

29. நற்கருணை வழங்கிய பின், திருத்தொண்டர் அல்லது வேறொரு பொருத்தமான திருப்பணியாளர் நற்கருணைக் கலத்தைக் கோவிலுக்கு வெளியே தகுதியான இடத்துக்குக் கொண்டு போய் வைப்பார் அல்லது – வேறு வழி இல்லை எனில் – அது நற்கருணைப் பேழையில் வைக்கப்படுகின்றது.

30. பின் அருள்பணியாளர் “மன்றாடுவோமாக” எனச் சொல்கின்றார். தேவைக்கு ஏற்பச் சிறிது நேரம் அமைதியாக மன்றாடியபின், அவர் திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கிறிஸ்துவின் பாடுகளினாலும் புனித இறப்பினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர்; உமது இரக்கத்தால் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இம்மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக முடிவில்லா இறைப்பற்றுடன் வாழ்வோமாக. எங்கள்.

பதில்: ஆமென்.


31. பிரியாவிடை கூறத் திருத்தொண்டர், அல்லது – அவர் இல்லை எனில் – அருள் பணியாளரே “இறை ஆசிக்காகத் தலை வணங்குவோமாக” என அழைப்பு விடுக்கின்றார்.

பின் அருள்பணியாளர் மக்களை நோக்கி நின்றவாறு, அவர்கள்மீது தம் கைகளை விரித்து, பின்வரும் மன்றாட்டைச் சொல்கின்றார்:

ஆண்டவரே,
தங்களது உயிர்ப்பின் நம்பிக்கையில்
உம் திருமகனின் சாவை நினைவுகூர்ந்துள்ள உம் மக்கள் மீது
உமது ஆசி நிறைவாய் இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்:
அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக; அவர்கள் ஆறுதல் அடைவார்களாக;
புனித நம்பிக்கை வளர்வதாக;
நிலையான மீட்பு உறுதி பெறுவதாக. எங்கள்.

பதில்: ஆமென்.


32. எல்லாரும் சிலுவைக்கு முழங்காலிட்டு ஆராதனை செலுத்தியபின் அமைதியாகக் கலைந்து செல்கின்றனர்.

33. கொண்டாட்டத்துக்குப் பிறகு பீடம் வெறுமையாக்கப்படுகின்றது; ஆனால் இரண்டு அல்லது நான்கு மெழுகுதிரித் தண்டுகளோடு பீடத்தின்மேல் சிலுவை இருக்கும்.

34. இச்சிறப்புத் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மாலைத் திருப்புகழைச் சொல்வதில்லை.

======================

புனித சனிக்கிழமை

1. புனித சனிக்கிழமை அன்று திரு அவை ஆண்டவருடைய கல்லறை அருகில் அவருடைய பாடுகள், இறப்பு ஆகியவற்றையும் அவர் பாதாளத்தில் இறங்கனதையும் சிந்தித்துக் கொண்டும் அவரது
உயிர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டும் காத்திருக்கின்றது. பீடம் வெறுமையாக இருக்கின்றது.

2. பாஸ்கா மகிழ்ச்சிக்கான நேரம் வரும்வரை – அதாவது உயிர்ப்பின் இரவாகிய சிறப்புத் திருவிழிப்பவரை – வெறுமையாய் இருக்கும் பீடத்தில் திரு அவை திருப்பலி ஒப்புக் கொடுப்பதில்லை. இப்பாஸ்கா மகிழ்ச்சி ஐம்பது நாள்கள் தொடரும்.

3. திருப்பயண உணவாக மட்டுமே இன்று நற்கருணை வழங்கப்படலாம்.

==========================
புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு


1. மிகத் தொன்மையான மரபுப்படி இவ்விரவு ஆண்டவருக்காகத் திருவிழிப்புக் கொண்டாடும் இரவாக இருந்து வந்துள்ளது (விப 12:42). அன்று நற்செய்தியின் அறிவுரைப்படி (லூக் 12:35-37) எரியும் விளக்குகளைக் கைகளில் ஏந்தி நம்பிக்கையாளர் ஆண்டவர் எப்பொழுது வருவார் எனக் காத்திருப்போரைப் போன்று இருப்பார்கள். இவ்வாறு, அவர் வந்ததும், அவர்கள் விழித்திருக்கக் கண்டு அவர்களைத் தம் பந்தியில் அமர்த்துவார்.

‘இத்திருவிழிப்பைக் கொண்டாடும் முறையாவது:

முதல் பகுதி: திரு ஒளி வழிபாடும் பாஸ்கா புகழுரையும்;

இரண்டாம் பகுதி: வார்ததை வழிபாடு – ஆண்டவராகிய கடவுள் தொடக்கத்திலிருந்தே தம் மக்களுக்குப் புரிந்துள்ள அரும்பெரும் செயல்களைப் புனிதத் திரு அவை சிந்தித்து, அவரது வார்த்தையிலும் வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொள்ள முனைகின்றது;

மூன்றாம் பகுதி: திருமுழுக்கு வழிபாடு. விடியல் நெருங்கி வர, திரு அவையின் புது உறுப்பினர் திருமுழுக்கினால் புதுப் பிறப்பு அடைவர்;

நான்காம் பகுதி: நற்கருணை வழிபாடு. ஆண்டவர் தம் இறப்பினாலும் உயிர்பினாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்தில், அவர் மீண்டும் வரும்வரை பங்குகொள்ளத் திரு அவை அழைக்கப்படுகின்றது.

3. பாஸ்கா திருவிழிப்பு முழுவதும் இரவிலேயே கொண்டாடப்பட வேண்டும்; எனவே அதை இரவுக்குமுன் தொடங்கக் கூடாது; ஞாயிறு விடியுமுன் முடிக்க வேண்டும்.

4. திருவிழிப்புத் திருப்பலியை நள்ளிரவுக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும், அது ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு திருப்பலி ஆகும்.

5. இவ்விரவுத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள், பகலில் நடைபெறும் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டாகவோ இவ்விரவுத் திருப்பலியை நிறைவேற்றிய அருள்பணியாளர் பகலில் தனியாகவோ கூட்டாகவோ இரண்டாவது திருப்பலி நிறைவேற்றலாம். பாஸ்கா திருவிழிப்புக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வாசகத் திருப்புகழ்மாலையில் பங்குபெறுவதில்லை.

6. அருள் பணியாளரும் திருத்தொண்டரும் திருப்பலிக்கான வெண்ணிறத திருவுடைகளை அணிவர்.

7. திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வகை செய்ய வேண்டும். கோவிலில் உள்ள விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கும்.

முதல் பகுதி திருவிழிப்பின் சிறப்புத் தொடக்கம் அல்லது திரு ஒளி வழிபாடு

தீயையும் பாஸ்கா திரியையும் புனிதப்படுத்துதல்

8. கோவிலுக்கு வெளியே வசதியான இடத்தில் தீ தயாராய் இருக்கும். இறைமக்கள் அங்கே கூடியிருப்பார்கள். அருள்பணியாளர் பிற பணியாளர்களோடு அங்கு . பணியாளர் ஒருவர் பாஸ்கா திரியைக் கொண்டு வருவார். அங்குப் பவனிக்க , சிலுவையையும் எரியும் திரிகளையும் கொண்டு வருவதில்லை.

கோவிலுக்கு வெளியே தீயைப் பற்றவைக்க முடியாதெனில், கீழே எண் 13-இல் உள்ளபடி திருச்சடங்கை நடத்தலாம்.

9. ”தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே என்று அருள் பணியாளர் சொல்கின்றபொழுது, அவரும் நம்பிக்கையாளரும் தங்கள்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்கின்றனர். அருள்பணியாளர் கூடியுள்ள இறைமக்களை வழக்கம் போல் வாழ்த்தி, கீழுள்ளவாறு அல்லது இது போன்று சுருக்கமாகத் திருவிழிப்பைப் பற்றி அறிவுரை கூறுவார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து சென்ற புனிதமிக்க இவ்விரவில்
திரு அவை உலகெங்கும் பரந்து வாழும் தன் மக்களை
விழித்திருக்கவும் மன்றாடவும் ஒன்றுகூடுமாறு அழைக்கின்றது.
இவ்வாறு இறைவார்த்தையைக் கேட்டும்
அவருடைய மறைநிகழ்வுகளைக் கொண்டாடியும்
அவருடைய பாஸ்காவை நாம் நினைவுகூர்ந்தால்,
சாவின் மீது அவர் கொண்ட வெற்றியில் நாமும் பங்குபெறுவோம்,
அவரோடு இறைவனில் வாழ்வோம் என்னும் எதிர்நோக்கைக் கொண்டிருப்போம்.

10. பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத்தீயின் மீது ஆசி வழங்கிச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக. இறைவா,
உம் திருமகன் வழியாக,
நம்பிக்கையாளர் மீது உமது மாட்சியின் பேரொளி சுடர்ந்திடச் செய்தீரே;
இப்புதுத் தீயைப் 4 புனிதப்படுத்தியருளும்;
இவ்வாறு இப்பாஸ்கா திருவிழா வழியாக
விண்ணகத்தின் மீது கொண்ட ஆவலால் நாங்கள் பற்றியெரிவோமாக;
அதனால் தூய்மையான உள்ளத்தோடு
முடிவில்லா மாட்சியின் விழாவுக்கு வந்து சேரும் வலிமை பெறுவோம்” எங்கள்.

பதில்: ஆமென்.

11. புதுத் தீயைப் புனிதப்படுத்தியபின் பணியாளர்களுள் ஒருவர் பாஸ்கா திரியை அருள்பணியாளரிடம் கொண்டுவர, அருள்பணியாளர் எழுத்தாணி கொண்டு அதில் சிலுவை அடையாளம் வரைகின்றார்; பின், சிலுவைக்கு மேல் “ஆல்பா என்னும் கிரேக்க எழுத்துக்கு இணையான ‘அ’ எனும் தமிழ் எழுத்தையும் சிலுவைக்குக் கீழே “ஒமேகா” என்னும் கிரேக்க எழுத்துக்கு இணையான ‘ன’ எனும் தமிழ் எழுத்தையும் எழுதுகின்றார். சிலுவையின் நான் கு பக்கங்களிலும், நிகழும் ஆண்டின் நான்கு எண்களையும் குறிக்கின்றார். அப்பொழுது அவர் சொல்கின்றார்:

asas1. கிறிஸ்து நேற்றும் இன்றும் (சிலுவையின் நேர் கோட்டை வரைகின்றார்)
2. முதலும் முடிவும் (குருக்குக் கோட்டை வரைகின்றார்)
3. அகரமும் (நேர் கோட்டுக்கு மேல் ‘அ’ என்னும் எழுத்தை எழுதுகிறார்)
4. னகரமும் (நேர்க்கோட்டுக்குக் கீழே ‘ன’ எனும் எழுத்தை எழுதுகின்றார்);
5. நேரங்கள் அவருடையன (நிகழும் ஆண்டின் முதல் எண்ணைச் சிலுவையின் இடப் பக்க மேற்பகுதியில் குறிக்கின்றார்);
6. காலங்களும் அவருடையன (நிகழும் ஆண்டின் இரண்டாம் எண்ணைச் சிலுவையின் வலப் பக்க மேற்பகுதியில் குறிக்கின்றார்);
7. மாட்சியும் ஆட்சியும் அவருக்கே ( நிகழும் ஆண்டின் மூன்றாம் எண்ணைச் ‘சிலுவையின் இடப் பக்கக் கீழ்ப்பகுதியில் குறிக்கின்றார்);
8. என்றென்றும் எக்காலமுமே, ஆமென். (நிகழும் ஆண்டின் நான்காம் எண்ணைச் சிலுவையின் வலப் பக்கக் கீழ்ப்பகுதியில் குறிக்கின்றார்).

12 சிலுவை அடையாளத்தையும் எழுத்து, எண் குறிகளையும் இவ்வாறு பாஸ்கா தாயின்மீது வரைந்தபின், அதில் ஐந்து சாம்பிராணி மணிகளைச் சிலுவை வடிவில் பதிக்கலாம். அப்பொழுது அவர் சொல்கின்றார்:

1. தம்முடைய தூய 1
2. மாட்சிக்கு உரிய காயங்களால் 
3. ஆண்டவராகிய கிறிஸ்து 425
4. நம்மைக் கண்காணித்துப் 
5. பேணிக் காப்பாராக. ஆமென். 3

13. பெரும் இடையூறுகளால் தீயைப் பற்றவைக்க இயலாது எனில் தீயைப் புனிதப்படுத்தும் திருச்சடங்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வழக்கம் போல மக்கள் கோவிலில் கூடியிருக்க, அருள்பணியாளரும் பிற பணியாளரும் பாஸ்கா திரியுடன் கோவிலின் வாயிலுக்கு வருவார்கள். மக்கள் இயன்றவரை அருள்பணியாளரை நோக்கித் திரும்பி நிற்பார்கள்.

எண் 9-இல் குறிப்பிட்டுள்ளபடி அருள்பணியாளர் மக்களை வாழ்த்தி, அறிவுரை கூறுகின்றார்: பின் மேல் காணும் 10 – 13-களில் உள்ளவாறு தீயானது புனிதப்படுத்தப்படு மெழுகுதிரி தயாரிக்கப்படுகின்றது.

14. அருள்பணியாளர் புதுத் தீயிலிருந்து பாஸ்கா திரியைப் பற்றவைத்துச் சொல்கின்றார்:

மாட்சியுடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளி
இதயத்திலும் மனதிலும் இருள் அகற்றுவதாக.

மேற்சொன்னவற்றைப் பொறுத்தவரையில் மக்களின் பண்பாட்டுக்கு ஏற்ப ஆயர் பேரவைகள் மிகப் பொருத்தமான வேறு திருச்சடங்குகளைப் பயன்படுத்தப் பணிக்கலாம்.

15. திரி ஏற்றப்பட்டவுடன், பணியாளர்களுள் ஒருவர் எரிந்து கொண்டிருக்கும் தீக் கங்குகளைத் தீயிலிருந்து எடுத்துத் தூபக் கலத்தில் இடுகின்றார். அருள்பணியாளர் வழக்கம் போல அதனுள் சாம்பிராணி இடுகின்றார். திருத்தொண்டர் அல்லது – அவர் இல்லை எனில் – தகுதியான வேறொரு பணியாளர் பாஸ்கா திரியை எடுத்துக் கொள்கின்றார். பவனி தொடங்குகின்றது. தூபக் கலத்தை ஏந்தி இருப்பவர் பாஸ்கா திரியை ஏந்திச் செல்லும் திருத்தொண்டரின் அல்லது வேறொரு பணியாளரின்முன் புகையும் தூபக் கலத்துடன் செல்கின்றார். அவர்களை அருள் பணியாளர் ஏற்றப்படாத திரிகளை வைத்திருக்கும் பணியாளர்களுடனும் மக்களுடனும் பின்தொடர்கின்றார். பின் திருத்தொண்டர், கோவில் வாயிலில் நின்று பாஸ்கா திரியை எடுத்து உயர்த்திப் பிடித்துக்கொண்டு பாடுகின்றார்:

கிறிஸ் து வின் ஒளி இதோ!


எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:
இறைவ னுக் கு நன் றி.

அருள்பணியாளர் தமது மெழுகுதிரியைப் பாஸ்கா திரியிலிருந்து பற்றவைக்கின்றார்.

16. கோவிலின் நடுப் பகுதிக்கு வந்து நின்று, மெழுகுதிரியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மீண்டும் பாடுகின்றார்:

கிறிஸ் து வின் ஒளி இதோ!

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:
இறைவ னுக் கு நன் றி.

அனைவரும் தத்தம் திரிகளைப் பாஸ்கா திரியிலிருந்து பற்றவைத்துக்கொண்டு பவனியாகச் செல்கின்றனர்.

17. திருத்தொண்டர் பீடத்தின் முன் வந்ததும், மக்களை நோக்கித் திரும்பி நின்றுகொண்டு மெழுகுதிரியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு மூன்றாம் முறையாகப் பாடுகின்றார்:

கிறிஸ் து வின் ஒளி இதோ!

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:
இறைவ னுக் கு நன் றி.

பின் திருத்தொண்டர் வாசகமேடையின் அருகில் அல்லது திருப்பீட முற்றத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பெரிய விளக்குத் தண்டின்மீது பாஸ்கா திரியை வைக்கின்றார்.

பீடத்தின் மேலுள்ள மெழுகுதிரிகள் தவிர, கோவில் விளக்குகள் எரியவிடப்படுகின்றன.

பாஸ்கா புகழுரை

18. பீடத்தை அடைந்ததும் அருள் பணியாளர் தம் இருக்கைக்குச் சென்று தம் கையி. உள்ள மெழுகுதிரியைப் பணியாளரிடம் கொடுத்து விட்டு, பின்பு தாபர் பயன் படுத்தினால், திருப்பலியில் நற்செய்திக்குமுன் செய்வது போல, தூபக் கலத்து, சாம்பிராணி இட்டு அதற்கு ஆசி வழங்குகின்றார்; திருத்தொண்டர், “தந்தையே, உம் ஆசி வழங்கும்” எனக் கூறி அருள்பணியாளரிடம் ஆசி வேண்டுகின்றார்; அருள்பணியாளர் தாழ்ந்த குரலில் பின்வருமாறு சொல்லி ஆசி வழங்குகின்றார்:

தமது பாஸ்காவின் புகழுரையைத் தகுதியுடனும் முறையாகவும் நீர் அறிவிக்குமாறு, ஆண்டவர் உம் இதயத்திலும் உதடுகளிலும் இருப்பாராக. தந்தை, மகன், * தூய ஆவியாரின் பெயராலே.

திருத்தொண்டர் பதிலுரைக்கின்றார்: ஆமென்.

திருத்தொண்டர் அல்லாதவர் பாஸ்கா புகழுரையைப் பாடினால், இந்த ஆசியுரை விடப்படும்.

19. திருத்தொண்டர் திருப்பலி நூலுக்கும் பாஸ்கா திரிக்கும் தூபம் இட்டு, வாசக மேடையில் நின்றுகொண்டு பாஸ்கா புகழுரையைப் பாடுகின்றார்; அப்பொழுது அனைவரும் எரியும் திரிகளைத் தம் கைகளில் ஏந்தி நிற்பர்.

தேவையானால், திருத்தொண்டர் இல்லாதபோது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரோ கூட்டுத்திருப்பலித் திருப்பணியாளருள் ஒருவரோ பாஸ்கா புகழுரையைப் பாடலாம். பொதுநிலையினருள் பாடகர் ஒருவர் பாஸ்கா புகழுரையைப் பாடலாம்; அப்படியெனில் “எனவே, இத்திருவிளக்கின்” எனும் சொற்களிலிருந்து “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” எனும் வாழ்த்துரைவரை உள்ள பகுதியை விட்டுவிட வேண்டும்.

பாஸ்கா புகழுரையின் குறுகிய பாடத்தையும் பாடலாம் (பக். 346 – 348).

பாஸ்கா புகழுரை: நீண்ட பாடம்

பாஸ்கா புகழுரை: நீண்ட பாடம்

விண்ணகத் தூதர் அணி மகிழ்வதாக;
இப்புனித நிகழ்வில் பெருமகிழ்ச்சி பொங்குவதாக;
மாபெரும் மன்னரது வெற்றிக்காக
எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெரும் சுடர்களால் ஒளிவீசப்பெற்று இவ்வுலகம் பெருமகிழ்ச்சி கொள்வதாக:
முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி,
தன்னைச் சூழ்ந்த இருள் அனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.
இப்பெரும் சுடர்களால் அழகுபெற்று
அன்னையாம் திரு அவையும் களிகூர்வதாக.
எனவே மக்கள் அனைவரின் பேரொலியால்
இக்கோவில் எதிரொலித்து முழங்குவதாக.


(எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்
சூழ்ந்து நிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
உங்களை வேண்டுகின்றேன். என்னுடன் சேர்ந்து,
எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தை இறைஞ்சுவீர்களாக.
தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் சேர்த்திட
அருள்கூர்ந்த இறைவன்தாமே திருவிளக்கின் பேரொளியை என் மீது வீசி
இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடும் முழு மனதோடும் வாயாரப் பாடிப் புகழ்வது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்.

ஆதாமினால் வந்த கடனைக்
கிறிஸ்துவே என்றுமுள்ள தந்தைக்கு நமது பெயரால் செலுத்தி,
பாவத்துக்கு உரிய கடன்சீட்டைத்
தாம் சிந்திய திரு இரத்தத்தால் அழித்துவிட்டார்.

ஏனெனில் பாஸ்கா விழா இதுவே:
இதில் மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்;
அவரது இரத்தத்தால் நம்பிக்கையாளரின் கதவு நிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.

முற்காலத்தில் எம் முன்னோரான இஸ்ரயேல் மக்களை
நீர் எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் கால் நனையாமல்
செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.

‘நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்
பாவத்தின் இருளை அகற்றிய இரவு இதுவே.

பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும்
இந்த இரவேதான்.

சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும்
இந்த இரவிலேதான்.

ஏனெனில் இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்,
பிறந்ததால் எப்பயனும் இல்லையே.

நீர் எம்மீது அருள்கூர்ந்து காட்டிய பரிவிரக்கம்
எத்துணை வியப்புக்கு உரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த
அளவில்லா அன்புப் பெருக்கே!

ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக்
கிறிஸ்துவின் சாவு திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைந்ததால்
பேறுபெற்ற குற்றமே!

ஒ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!
பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த
காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!

இரவு பகல் போல் ஒளிபெறும்; நாள் மகிழ்வுற இரவும் ஒளிதரும்
என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.

ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி
தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;
தவறினோருக்கு மாசின்மையையும்
துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;
பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது;
மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.

ஆகவே தூய தந்தையே, அருள்பொழியும் இவ்விரவில்
நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்;
தேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்
புனிதத் திரு அவை தன் பணியாளரின் கையால்
மிகச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.

இறைவனின் மாட்சிக்காகச் செந்தழலாய்ச் சுடர்விட்டெரியும்
இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்:
இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,
தன் ஒளியிலிருந்து பங்கு கொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை;
ஏனெனில் தாய்த் தேனீ தந்த மெழுகு உருகுவதால்
உயர்மதிப்புள்ள தீ வளர்க்கப்படுகின்றது.

விண்ணுக்கு உரியவை மண்ணுக்கு உரியவையோடும்
கடவுளுக்கு உரியவை மனிதருக்கு உரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பேறுபெற்ற இந்த இரவிலேதான்

எனவே ஆண்டவரே, உம்மை வேண்டுகின்றோம்:
உமது பெயரின் மாட்சிக்காக நேர்ந்தளிக்கப்பட்ட இந்த மெழுகுதிரி,
இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.

இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்து கொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஒருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்;
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின் மீது அமைதியுடன் ஒளி வீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

பதில்: ஆமென்.

பாஸ்கா புகழுரை: குறுகிய பாடம்

விண்ணகத் தூதர் அணி மகிழ்வதாக;
இப்புனித நிகழ்வில் பெருமகிழ்ச்சி பொங்குவதாக;
மாபெரும் மன்னரது வெற்றிக்காக
எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெரும் சுடர்களால் ஒளிவீசப்பெற்று
இவ்வுலகம் பெருமகிழ்ச்சி கொள்வதாக:
முடிவில்லா மன்னரது பேரொளியால்
உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த
இருள் அனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.
இப்பெரும் சுடர்களால் அழகுபெற்று
அன்னையாம் திரு அவையும் களிகூர்வதாக.
எனவே மக்கள் அனைவரின் பேரொலியால்
இக்கோவில் எதிரொலித்து முழங்குவதாக.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடும் முழு மனதோடும் வாயாரப் பாடிப் புகழ்வது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்.

ஆதாமினால் வந்த கடனைக்
கிறிஸ்துவே என்றுமுள்ள தந்தைக்கு நமது பெயரால் செலுத்தி,
பாவத்துக்கு உரிய கடன்சீட்டைத்
தாம் சிந்திய திரு இரத்தத்தால் அழித்துவிட்டார்.

ஏனெனில் பாஸ்கா விழா இதுவே:
இதில் மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்;
அவரது இரத்தத்தால் நம்பிக்கையாளரின் கதவு நிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.

முற்காலத்தில் எம் முன்னோரான இஸ்ரயேல் மக்களை
நீர் எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் கால் நனையாமல்
செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.

‘நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்
பாவத்தின் இருளை அகற்றிய இரவு இதுவே.

பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும்
இந்த இரவேதான்.

சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும்
இந்த இரவிலேதான்.

ஏனெனில் இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்,
பிறந்ததால் எப்பயனும் இல்லையே.

நீர் எம்மீது அருள்கூர்ந்து காட்டிய பரிவிரக்கம்
எத்துணை வியப்புக்கு உரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த
அளவில்லா அன்புப் பெருக்கே!

ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக்
கிறிஸ்துவின் சாவு திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைந்ததால்
பேறுபெற்ற குற்றமே!

ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி
தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;
தவறினோருக்கு மாசின்மையையும்
துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;
பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது;
மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.

ஆகவே தூய தந்தையே, அருள்பொழியும் இவ்விரவில்
நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்;
தேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்
புனிதத் திரு அவை தன் பணியாளரின் கையால்
மிகச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.

விண்ணுக்கு உரியவை மண்ணுக்கு உரியவையோடும்
கடவுளுக்கு உரியவை மனிதருக்கு உரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பேறுபெற்ற இந்த இரவிலேதான்

எனவே ஆண்டவரே, உம்மை வேண்டுகின்றோம்:
உமது பெயரின் மாட்சிக்காக நேர்ந்தளிக்கப்பட்ட இந்த மெழுகுதிரி,
இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.

இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்து கொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஒருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்;
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின் மீது அமைதியுடன் ஒளி வீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

பதில்: ஆமென்.


இரண்டாம் பகுதி
வார்த்தை வழிபாடு


20. திருவிழிப்புகளுக்கெல்லாம் அன்னையாகிய இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம், நற்செய்தி என) இரண்டும் ஆக மொத்தம் ஒன்பது வாசகங்கள் இடம்பெறுகின்றன. நீண்ட நேரம் நிகழும் திருவிழிப் பின் தன்மையை வெளிப்படுத்தும் வண்ணம், இயன்றவரை வாசகங்கள் அனைத்தும் வாசிக்கப்பட வேண்டும்.

21 மத்திய அருள் பணிச் சூழலை முன்னிட்டுப் பழைய ஏற்பாட்டு வாசதங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்; ஆனால் இறைவாக்கு வாசகம் இத்திருவிழிப்பின் மிக இன்றியமையாப் பகுதி என் பதை எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டும். பழைய எம்பாட்டிலிருந்து (திருச்சட்டம், இறைவாக்குப் பகுதிகளிலிருந்து) அவற்றுக்கு உரிய பதிலுரைத் திருப்பாடல்களும் பாடப்பட வேண்டும்; மூன்று வாசகங்களாவது வாசிக்கப்பட வேண்டும். விடுதலைப் பயணம் 14-ஆம் பிரிவிலிருந்து எடுக்கப்படும் வாசகத்தையும் அதற்கு உரிய சிறு பாடலையும் ஒருபோதும் விட்டுவிடலாகாது.

22. அனைவரும் மெழுகுதிரிகளை அணைத்துவிட்டு அமர்ந்திருப்பர். வாசகங்களைத் தொடங்கும் முன் அருள் பணியாளர் கீழுள்ளவாறு அல்லது இது போன்று மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
இத்திருவிழிப்பைச் சிறப்புடன் தொடங்கியுள்ள நாம்,
அமைதியான இதயத்தோடு இப்போது இறைவார்த்தையைக் கேட்போமாக:
கடந்த காலங்களில் கடவுள் தம் மக்களை எவ்வாறு மீட்டார் என்றும்,
இறுதியாகத் தம் திருமகனை நமக்கு மீட்பராக அனுப்பினார் என்றும் சிந்திப்போமாக.
மேலும் விடுதலை அளிக்கும் இந்தப் பாஸ்கா நிகழ்வினால்
மீட்பின் நிறைவுக்கு நம் இறைவன் நம்மை இட்டுச்செல்வாராக.

உயிர்ப்பு விழா திருப்பலி வாசகங்கள்

23. பின் வாசகங்கள் தொடரும். வாசகர் வாசகமேடைக்குச் சென்று முதல் வாசகத்தை அறிக்கையிடுவார். அடுத்து, திருப்பாடல் முதல்வர் அல்லது பாடகர் ஒருவர் திருப்பாடலைப் பாட, மக்கள் பதிலுரையைப் பாடுவார்கள். அது முடிந்தபின் எல்லாரும் எழுந்து நிற்க, அருள்பணியாளர் “மன்றாடுவோமாக” எனச் சொல்லி அழைப்பார்; அனைவரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடிய பின், அருள் பணியாளர் அவ்வாசகத்துக்கு உரிய மன்றாட்டைச் சொல்லுவார். பதிலுரைத் திருப்பாடலுக்குப் பதிலாக, சிறிது நேர அமைதி மன்றாட்டு இடம் பெறலாம். அப்படியானால், “மன்றாடுவோமாக” எனும் அழைப்புக்குப்பின் அமைதி தேவை இல்லை.


வாசகங்களுக்குப்பின் மன்றாட்டுகள்

24. முதல் வாசகத்துக்குப்பின் (படைப்பு: தொநூ 1:1-2:2 அல்லது 1:1, 26-31 அ: சி. 103 அல்லது 32).

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உம்முடைய செயல்கள் அனைத்தையும்
நீர் வியப்புக்கு உரிய வகையில் சீர்படுத்துகின்றீர்;
தொடக்கத்தில் நீர் உலகத்தைப் படைத்தது மாபெரும் செயலே;
இறுதி நாள்களில் எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியானார் என்பது
அதைவிட மாபெரும் செயல் ஆகும்:
மீட்பு அடைந்த உம் மக்கள் இதைக் கண்டுணரச் செய்வீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக
உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

அல்லது (மனிதப் படைப்பு)

இறைவா,
மனிதரை வியத்தகு முறையில் படைத்தீர்,
அதனினும் வியத்தகு முறையில் மீட்டருளினீர்;
நாங்கள் மெய்யறிவுடன் பாவ நாட்டங்களை உறுதியாய் எதிர்த்து நின்று
முடிவில்லா மகிழ்ச்சிக்கு வந்து சேரும் தகுதி பெற அருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


25. இரண்டாம் வாசகத்துக்குப்பின் (ஆபிரகாமின் பலி: தொநூ 22:1-18 அல்லது 1- 2, 9 அ, 10-13, 15-18; திபா 15).

மன்றாடுவோமாக.

இறைவா, நம்பிக்கையாளரின் உன்னதத் தந்தையே,
உமது வாக்குறுதியால் நீர் சொந்த மக்களாக்கிக் கொண்டவர்களை
உலகம் முழுவதிலும் பெருகச் செய்தீர்;
உம் ஊழியராகிய ஆபிரகாம்
அனைத்துலக மக்களின் தந்தையாவார் எனும் உமது உறுதிமொழியை
நீர் வாக்களித்தபடி பாஸ்கா மறைபொருளின் வழியாக நிறைவேற்றினார்:
உம் மக்கள் உமது அழைப்பின் அருளைப் பெற்றுக்கொள் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.


26. மூன்றாம் வாசகத்துக்குப்பின் (செங்கடலைக் கடத்தல்: விப 14:15-15:1; சிறு பாடல் விப 15).

மன்றாடுவோமாக.

இறைவா, நீர் முற்காலத்தில் ஆற்றிய அருஞ்செயல்கள்
எங்கள் காலத்திலும் தொடர்வதை உணர்கின்றோம்:
உமது வலக் கையின் ஆற்றலால்
ஓர் இனத்தாரைப் பார்வோனின் கொடுமையிலிருந்து விடுவித்தீர்;
அவ்வாறே புதுப் பிறப்பு அளிக்கும் நீரினால்
பிற இனத்தாருக்கு மீட்பு அளித்து வருகின்றீர்;
எனவே உலக மாந்தர் அனைவரும்
உமது அருளினால் ஆபிரகாமின் மக்களாகி,
இஸ்ரயேல் இனத்தாருக்கு உரிய மேன்மையின் முழுமையை அடையச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

அல்லது

இறைவா, முற்காலத்தில் நிறைவேற்றிய அருஞ்செயல்களைப்
புதிய உடன்படிக்கையின் ஒளியால் தெளிவுபடுத்தினீர்:
இவ்வாறு திருமுழுக்கு நீரின் சாயலாகச் செங்கடல் விளங்கவும்
அடிமைத்தளையிலிருந்து மீட்கப்பெற்ற மக்கள்
கிறிஸ்தவ மக்களின் முன்னடையாளமாகத் திகழவும் செய்தீர்;
இஸ்ரயேல் மக்கள் பெற்ற சிறப்பு உரிமையை
எல்லா மக்கள் இனத்தாரும் நம்பிக்கையால் பெற்றுக்கொண்டு
உம் தூய ஆவியார் வழியாகப் புதுப் பிறப்பு அடையச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

27. நான்காம் வாசகத்துக்குப்பின் (புதிய எருசலேம்: எசா 54:5-14; திபா 29).

மன்றாடுவோமாக. என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உமது பெயரின் மாட்சிக்காக,
எங்கள் மூதாதையரது நம்பிக்கையின் பொருட்டு நீர் வாக்களித்ததையும்
உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட
உமது வாக்குறுதியின் மக்களுடைய எண்ணிக்கையையும்
நீர் பெருகச் செய்தருளும்;
அதனால் எங்கள் முற்காலப் புனிதர்கள்
ஐயமின்றி எதிர்பார்த்திருந்தவை அனைத்தும்
எங்களில் நிறைவேறி வருவதை நாங்கள் கண்டுணரச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

அல்லது விடப்பட்ட வாசகங்களுக்குப் பின்வருபவற்றிலிருந்து வேறு மன்றாட்டு பயன்படுத்தப்படலாம்.

28. ஐந்தாம் வாசகத்துக்குப்பின் (அனைவருக்கும் கொடையாக அருளப்படும். எசா 55:1-11; சிறுபாடல் எசா 12).

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உலகின் ஒரே எதிர்நோக்கு நீரே.
இக்காலத்தில் நாங்கள் கொண்டாடும் மறைநிகழ்வுகளை
உம் இறைவாக்கினர்களின் வழியாக முன்னறிவித்தீர்;
இன்றைய காலங்களின் மறைநிகழ்வையும் வெளிப்படுத்தினீர்;
உமது தூண்டுதலால் அன்றி
உம் நம்பிக்கையாளரின் எந்த விதமான நற்பண்பும் வளம் பெறாது என்பதால்,
உம் மக்களில் இறை ஆவல்களைக் கனிவுடன் பெருகச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

29. ஆறாம் வாசகத்துக்குப்பின் (ஞானத்தின் ஊற்று: பாரூ 3:9-15, 31-4:4; திபா 18).

மன்றாடுவோமாக.

இறைவா, உமது திரு அவையை என்றும் வளரச் செய்கின்றீர்;
திருமுழுக்குத் தண்ணீரால் கழுவப்பெறும் மக்களை
நீர் இடையறாது பராமரித்துக் காத்தருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

ஏழாம் வாசகத்துக்குப்பின் (புதிய இதயமும் புதிய ஆவியும்: எசே 36:16-28; திபா 41-42).

மன்றாடுவோமாக.

இறைவா, என்றும் மாறாத ஆற்றலும் நிலையான ஒளியுமானவரே,
வியத்தகு அருளடையாளமாகிய திரு அவை முழுவதையும் கனிவுடன் கண்ணோக்கியருளும்:
முடிவில்லா ஏற்பாட்டின்படி மனிதரை மீட்கும் அதன் பணி
அமைதியுடன் நிறைவேறச் செய்தருளும்;
வீழ்ச்சியுற்றவை எழுச்சி அடைவதையும்
பழமையானவை புதுப்பிக்கப்பெறுவதையும்
கிறிஸ்துவில் தொடங்கிய அனைத்தும்
அவர் வழியாகவே முழுமை அடைவதையும் உலகம் கண்டுணர்வதாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது

இறைவா, பாஸ்கா மறையுண்மையைக் கொண்டாட
இரு உடன்படிக்கை நூல்களிலிருந்தும் எங்களுக்குக் கற்பிக்கின்றீர்;
உமது இரக்கத்தைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவியருளும்;
இவ்வாறு இக்காலத்தில் உம் அருள்கொடைகளை அறிந்துகொள்ளும் நாங்கள்
வரவிருக்கும் கொடைகளை உறுதியாய் எதிர்பார்த்திருக்கச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

31. பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்கு உரிய பதிலுரைத்திருப்பாடலும் மன்றாட்டும் முடிந்தபின், பீடத்தில் திரிகள் பற்ற வைக்கப்படும். அருள்பணியாளர் “உன்னதங்களிலே எனும் பாடலைத் தொடங்க, எல்லாரும் தொடர்ந்து பாடுவர். அப்பொழுது அந்தந்த இடத்தின் வழக்கப்படி மணிகள் ஒலிக்கும்.

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உன்ன தங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டா கு க.

33. பாடல் முடிந்தபின், அருள்பணியாளர் வழக்கம் போலத் திருக்குழும மன்றாட்டைச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

இறைவா, புனிதமிக்க இந்த இரவை
ஆண்டவருடைய உயிர்ப்பின் மாட்சியால் ஒளிர்விக்கின்றீர்;
உமது திரு அவையில் அனைவரும்
உம் சொந்த மக்கள் எனும் மனப்பாங்கைத் தூண்டி எழுப்பியருளும்:
அதனால் நாங்கள் உடலிலும் மனதிலும் புதுப்பிக்கப்பெற்று
உமக்குத் தூய்மையான ஊழியம் புரிவோமாக. உம்மோடு.

பதில்: ஆமென்.

33. பின்பு வாசகர் திருத்தூதரின் திருமுகத்திலிருந்து வாசிக்கின்றார்.

34. திருமுக வாசகத்துக்குப்பின் அனைவரும் எழுந்து நிற்க, அருள் பணியாளர் ஆடம்பரமாக “அல்லேலூயா” எனப் பாடுகின்றார்; ஒவ்வொரு முறையும் குரலை உயர்த்தி மும்முறை பாடுகின்றார். மக்கள் எல்லாரும் அதைத் திரும்பப் பாடுகின்றார்கள். தேவையானால் திருப்பாடல் முதல்வரே “அல்லேலூயா பாடலைத் தொடங்கலாம்.

அதன்பின் திருப்பாடல் முதல்வர் அல்லது பாடகர் ஒருவர் திபா 117-ஐப் பாட, எல்லாரும் “அல்லேலூயா” எனப் பதிலுரைத்துப் பாடுகின்றனர்.


அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,

சரணம்

1. (1,2) ஆண் ட வருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்:
என்றென்றும் உள்ளது அ வ ரது இ ரக் கம். “என் றென்றும் உள்ளது
அவரது இரக்கம்” என்று இஸ்ரயேல் இனத்தவர் சாற் றுவார்களாக.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்:
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
“என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்” என்று இஸ்ரயேல் இனத்தவர் சாற்றுவார்களாக.
(16-17) ஆண்டவரது வலக்கரம் என்னை நிலைநிறுத்தியது;
ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது.
இறந்தொழியேன், உயிர்வாழ்வேன்: ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்.

(22-23)வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று:
ஆண்டவர் செயலிது; நம் கண்களுக்கு வியப்பாய் உள்ளது.

அருள்பணியாளர் வழக்கம் போலத் தூபக் கலத்தில் சாம்பிராணி இடுகின்றார்.
திருத்தொண்டருக்கு ஆசி வழங்குகின்றார்.

35.எரியும் திரிகளை நற்செய்திக்குப் பயன்படுத்துவதில்லை. தூபம் காட

36. நற்செய்திக்குப்பின் மறையுரையைச் சுருக்கமாக ஆற்றலாம். மறையுரையை விட்டுவிடக்கூடாது.


மூன்றாம் பகுதி

திருமுழுக்கு வழிபாடு

37. மறையுரைக்குப்பின் திருமுழுக்கு வழிபாடு தொடரும். இறைமக்கள் எல்லாரும் எளிதாகப் பார்க்கக்கூடிய இடத்தில் திருமுழுக்குத் தொட்டி இருந்தால், அருள்பணியாளர் பணியாளரோடு அங்குச் செல்கின்றார்; இல்லை எனில், தண்ணீர் நிறைந்த பாத்திரம் ஒன்று திருப்பீட முற்றத்தில் வைக்கப்படும். 38. திருமுழுக்குப் பெறவேண்டியவர்கள் இருந்தால், அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களை ஞானப் பெற்றோர் திருக்கூட்டத்தின் முன் நிறுத்துவர் அல்லது சிறு குழந்தைகளின் பெற்றோரும் அவர்களின் ஞானப் பெற்றோரும் அவர்களை எடுத்து வருவர்.

39. திருமுழுக்குத் தொட்டி அல்லது திருமுழுக்கு இடம் நோக்கிய பவனி பின்வருமாறு நடைபெறும். பணியாளர் ஒருவர் பாஸ்கா திரியுடன் முன் செல்ல, திருமுழுக்குப் பெறுபவரும் அவர்களுடைய ஞானப் பெற்றோரும் பிற பணியாளர்களும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்கின்றனர். பவனியின்போது புனிதர் மன்றாட்டுமாலை பாடப்படும். மன்றாட்டுமாலை முடிவில் அருள்பணியாளர் அறிவுரை கூறுகின்றார்.

40. திருமுழுக்கு வழிபாடு திருப்பீட முற்றத்தில் நடைபெறும் எனில், அருள்பணியாளர் உடனே பின்வருமாறு அல்லது இது போன்ற வார்த்தைகளால் தொடக்க அறிவுரை கூறுவார்:

திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்

அன்புமிக்கவர்களே, நம் சகோதரர் சகோதரிகளுக்குப் புனித எதிர்நோக்கு உண்டாக
நமது ஒருமித்த வேண்டலினால் துணை புரிவோமாக.
அதனால் புதுப் பிறப்பு அளிக்கும் ஊற்றை நோக்கிச் செல்லும் இவர்களுக்கு
எல்லாம் வல்ல தந்தை இரக்கத்துடன் தமது உதவி அனைத்தையும் அளிப்பாராக.

திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லை எனினும், திருமுழுக்குத் தொட்டியைப் புனிதப்படுத்த வேண்டியிருந்தால்:


அன்பு மிக்கவர்களே, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் அருள் இந்தத் தொட்டியின் மீது இறங்கியருள் மன்றாடுவோமாக: இதிலிருந்து புதுப் பிறப்பு அடைவோர் கிறிஸ்துவில் உரிமைப் பேறு பெற்ற மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவார்களாக.

41. இரு பாடகர் மன்றாட்டுமாலையைப் பாட (பாஸ்கா காலம் ஆனதால்) அனைவரும் எழுந்து நின்று பதில் பாடுவர்.

திருமுழுக்குத் தொட்டிக்கு நீண்ட பவனியாகப் போக வேண்டுமானால், பவனியின் போது மன்றாட்டுமாலை பாடப்படும்; அப்படியானால், திருமுழுக்குப் பெறவேண்டியவர் பவனி தொடங்கும் முன் அழைக்கப்படுவர். பவனியில் முதலாவது பாஸ்கா திரி கொண்டு போகப்படும்; பின் திருமுழுக்குப் பெறுவோர் ஞானப் பெற்றோருடன் செல்ல, பணியாளரும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்வர். நீரைப் புனிதப் படுத்தும் முன் அறிவுரை வழங்கப்படும்.

43. திருமுழுக்குப் பெறுவோர் இல்லையென்றாலோ திருமுழுக்குத் தொட்டி புனிதப் படுத்தல் இல்லையென்றாலோ, மன்றாட்டுமாலையை விட்டுவிட்டு உடனே தண்ணா புனிதப்படுத்தப்படும் (எண் 54).

43. புனிதர் சிலரின் பெயர்களை, சிறப்பாகக் கோவிலின் பாதுகாவலர், ஒரு தலத்தின் பாதுகாவலர், திருமுழுக்குப் பெறுவோரின் பெயர் கொண்ட புனிதர் ஆகியோர் பெயர்களை மன்றாட்டு மாலையில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்மாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்

ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.

புனித மரியே, இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனிதத் திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோசேப்பே, புனித பேதுருவே, புனித பவுலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித அந்திரேயாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மகதலா மரியாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித ஸ்தேவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித லாரன்ஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பெர்பேத்துவா, புனித பெலிசிட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஆக்னஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித கிரகோரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அகுஸ்தினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அத்தனாசியுஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பேசிலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மார்ட்டினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பெனடிக்டே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பிரான்சிஸே, புனித தோமினிக்கே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித பிரான்சிஸ் சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித வியான்னி மரிய ஜானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித சியன்னா கத்தரீனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அவிலா தெரேசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

கனிவு கூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
தீமை அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
பாவம் அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
உமது மனித உடலேற்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
உமது இறப்பினாலே, உயிர்ப்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
தூய ஆவியாரின் வருகையினாலேஎங்களை மீட்டருளும் ஆண்டவரே.

பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் மன்றாட்டைக் கேட் ட ரு ளும்.

(திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்):
தேர்ந்து கொள்ளப்பெற்ற இவர்கள் திருமுழுக்கின் அருளினால்
புதுப் பிறப்பு அடையச் செய்தருள வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்):
உம் மக்களுக்குப் புதுப் பிறப்பு அளிக்கும் இந்த நீரூற்றை
உமது அருளினால் புனிதமாக்க வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம் –
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகின்றோம் –
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ் துவே, எங்களுக்குச் செவி சாய்த் தருளும்.
கிறிஸ் துவே, க னி வாய்ச் செவி சாய்த் தருளும்.

திருமுழுக்குப் பெறுவோர் அங்கு இருந்தால், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, திருமுழுக்கின் ஊற்று உமக்கு ஈன்றெடுக்கும் மக்களைப் புதிய மக்களாக மீண்டும் படைக்க உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களில் நீர் உடனிருப்பீராக; மனிதரை உம் பிள்ளைகளாக்கும் ஆவியாரை அனுப்புவீராக: இவ்வாறு எளியவராகிய நாங்கள் செய்யவேண்டிய திருப்பணி உமது ஆற்றலால் நிறை பயன் தருவதாக. எங்கள்.

பதில்: ஆமென்.


திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

44. பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்லி திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குகின்றார்:

இறைவா, அருளடையாளங்கள் வியத்தகு முறையில் பயனளிக்கக்
கண்ணுக்குப் புலப்படாத வலிமையால் செயலாற்றுகின்றீர்:
திருமுழுக்கின் அருளைக் குறித்துக்காட்டப்
“இப்புப் பொருளாகிய தண்ணீரைப் பல வகையில் தயார் செய்தீர்;
இறைவா, தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலை அளிக்குமாறு
உலகின் தொடக்கத்திலேயே உமது ஆவியார் அதன் மீது அசைவாடிக்கொண்டிருந்தார்;

இறைவா, பெரும் வெள்ளத்தினைப் புதுப் பிறப்பின் அடையாள மாக்கி,
மறைபொருளாகிய அதே தண்ணீரால் குற்றங்கள் முடிவுறவும்
நற்பண்புகள் தொடங்கவும் செய்தீர்;
இறைவா, பார்வோனின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற
ஆபிரகாமின் மக்கள் செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்து,
திருமுழுக்குப் பெற்ற மக்களுக்கு முன்னடையாளமாக இருக்கச் செய்தீர்;
இறைவா, உம் திருமகன் யோர்தான் நீரில் யோவானால் திருமுழுக்குப் பெற்று,
தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டார்;
சிலுவையில் அவர் தொங்கியபொழுது,
தமது விலாவிலிருந்து இரத்தத்தோடு தண்ணீரையும் வழிந்தோடச் செய்தார்;
தமது உயிர்ப்புக்குப்பின் “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாருக்கும் கற்பித்து
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்
அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுங்கள்’ என்று
சீடர்களுக்குக் கட்டளையிட்டார்;
உமது திரு அவையைக் கண்ணோக்கி,
அதற்குத் திருமுழுக்கின் ஊற்றினைத் திறந்தருளும்;
இந்தத் தண்ணீர் உம் ஒரே திருமகனின் அருளைத்
தூய ஆவியாரினின்று பெற்றுக்கொள்ளச் செய்தருளும்;
இவ்வாறு உமது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்
திருமுழுக்கு அருளடையாளத்தினால் பழைய பாவ அழுக்கெல்லாம் கழுவப்பெற்று,
தண்ணீராலும் தூய ஆவியாராலும் புதுப் பிறப்பு அடைந்து எழும் தகுதி பெறுவார்களாக.

அருள்பணியாளர் தேவைக்கு ஏற்பப் பாஸ்கா திரியை ஒரு முறை அல்லது மும்முறை தண்ணீரில் இறக்கிச் சொல்வதாவது:

ஆண்டவரே, இந்தத் தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதிலும்
தூய ஆவியாரின் ஆற்றல் உம் திருமகன் வழியாக இறங்க உம்மை வேண்டுகின்றோம்.

திரியைத் தண்ணீரில் வைத்துப் பிடித்துக்கொண்டு சொல்வதாவது:

இவ்வாறு திருமுழுக்கினால் கிறிஸ்துவுடன் இறந்து
அடக்கம் செய்யப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வுக்கு உயிர்த்தெழுவார்களாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.


47. பின் தண்ணீரிலிருந்து திரி அகற்றப்படும். அப்பொழுது மக்கள் கீழுள்ளவா ஆர்ப்பரிக்கின்றனர்:

நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள், என்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

48. திருமுழுக்குத் தண்ணீரைப் புனிதப்படுத்தியதை அடுத்து, மக்களின் ஆர்ப்பரிப்புக்குப் பிறகு, அருள்பணியாளர் நின்றுகொண்டு வயதுவந்தோரிடமும் குழந்தைகளின் பெற்றோர் அல்லது ஞானப் பெற்றோரிடமும் சாத்தானை விட்டுவிடும் அறிக்கையை வெளிப்படுத்தும் பொருட்டு உரோமைத் திருச்சடங்கு நூலில் உள்ள சடங்குமுறைகளுக்கு ஏற்பக் குறிக்கப்பட்ட கேள்விகளைக் கேட்கின்றார்.

வயதுவந்தோரைத் திருமுழுக்குக்காகத் தயார் செய்யும் எண்ணெயால் பூசுதல் முன்னரே நடைபெறவில்லை எனில், உடன் தயாரிப்புச் சடங்காக இது இந்நேரத்தில் நடைபெறும்.

49. பின் அருள் பணியாளர் நம்பிக்கை பற்றி வயது வந்தோரிடம் தனித்தனியாக வினவுகின்றார். குழந்தைகள் திருமுழுக்குப் பெற இருந்தால், குறிப்பிட்ட சடங்குமுறைகளின்படி அருள்பணியாளர் பெற்றோரிடமும் ஞானப் பெற்றோரிடமும் நம்பிக்கை அறிக்கைக்கான மூன்று கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்கின்றார்.

இவ்விரவில் பலர் திருமுழுக்குப் பெறவேண்டி இருந்தால், இச்சடங்கைப் பின்வருமாறு நடத்தலாம். திருமுழுக்குப் பெறுவோர், அவருடைய பெற்றோர், ஞானப் பெற்றோர் ஆகியோரின் பதிலுரைக்குப் பிறகு, அருள்பணியாளர் அங்கு இருப்போர் அனைவரிடமும் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும்படி வினவுகின்றார்.

50. கேள்விகள் கேட்டபின், தேர்ந்தெடுக்கப்பட்ட வயதுவந்தோருக்கும் குழந்தைகளுக்கும் அருள்பணியாளர் திருமுழுக்கு வழங்குகின்றார்.

51. திருமுழுக்குக்குப் பிறகு அருள்பணியாளர் குழந்தைகளைக் கிறிஸ்மா எண்ணெயால் அருள்பொழிவு செய்கின்றார். வயது வந்தோராயினும் குழந்தைகளாயினும் அவர்கள் ஒவ்வாருவருக்கும் வெண்ணாடை அணிவிக்கின்றார். பின் அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் பாஸ்கா திரியைப் பணியாளரின் கையிலிருந்து பெறுகின்றார். புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்களின் மெழுகுதிரிகள் அதிலிருந்து ஏற்றப்படுகின்றன. குழந்தைகளுக்கான ‘எப்பேத்தா’ சடங்கு விட்டுவிடப்படும்.

52. திருமுழுக்குச் சடங்குகள் அனைத்தும் திருப்பீட முற்றத்தில் நடைபெறாதபொழுது ஏற்கெனவே வரையறுக்கப்பட்டது போலப் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்கள் : ஞானப் பெற்றோர் அல்லது பெற்றோர் எரியும் மெழுகுதிரிகளோடு திருபீட முற்றம் நோக்கிப் பவனியாகத் திரும்பிச் செல்வர். பவனியின்போது “கோவிலின் வலப்புறமிருந்து எனும் திருமுழுக்குப் பாடல் அல்லது தகுந்ததொரு பாடல் பாடப்படும் (எண் 56).

53 வயதுவந்தோர் திருமுழுக்குப் பெற்றிருந்தால் ஆயர் அல்லது ஆயர் இல்லாத””” திருமுழுக்கு வழங்கிய அருள்பணியாளர் ஆயர் திருச்சடங்கு நூலில் அல்லது – திருச்சடங்கு நூலில் குறிப்பிட்டுள்ளவாறு உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை வழங்குவார்.
சடங்கு நூலில் அல்லது உரோமைத் பபட முற்றத்தில் அவர்களுக்கு உடனே உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை வழங்குவார்.

54. திருமுழுக்கு அளித்தலோ திருமுழுக்குத் தொட்டியைப் புனிதப்படுத்தலோ நடைபெறவில்லை எனில், அருள்பணியாளர் நம்பிக்கையாளரைத் தண்ணீருக்கு ஆசி வழங்கும் சடங்குக்கு இட்டுச் சென்று சொல்கின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
நம் திருமுழுக்கின் நினைவாக
நம்மீது தெளிக்கப்படும் படைப்புப் பொருளான இத்தண்ணீருக்குக்
கனிவுடன் ஆசி வழங்க நம் இறைவனாகிய ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியாருக்கு
உண்மையுள்ளவர்களாக இருக்க அவர் நம்மைப் புதுப்பிப்பாராக.

சிறிது நேரம் அமைதியாக மன்றாடியபின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்து:

ஆண்டவரே எங்கள் இறைவா,
இப்புனிதமிக்க இரவில் கண்விழித்துக் காத்திருக்கும் உம் மக்களுடன்
கனிவாய்த் தங்கியருளும். வியத்தகு முறையில் எங்களைப் படைத்தீர் எனவும்
அதிலும் வியத்தகு முறையில் எங்களை மீட்டருளினீர் எனவும்
நினைவுகூரும் எங்களுக்காக இத்தண்ணீர் மீது உமது ஆசியைக் கனிவுடன் பொழிந்தருளும்.
ஏனெனில் நிலத்தை வளப்படுத்தவும்
எங்கள் உடலுக்குப் புத்துணர்வும் தூய்மையும் தரவும் இத்தண்ணீரைப் படைத்தீர்;
உமது இரக்கத்தின் கருவியாகவும் இத்தண்ணீரை அமைத்தீர்;

எவ்வாறெனில், தண்ணீரின் வழியாக
உம் மக்களின் அடிமைத்தளையை அகற்றினீர்;
பாலைநிலத்தில் அவர்களது தாகத்தைத் தணித்தீர்.
அதன் வழியாக மனித இனத்தோடு நீர் செய்ய இருந்த
புதிய உடன்படிக்கையை இறைவாக்கினர் முன்னறிவித்தனர்;
இறுதியாக, யோர்தானில் கிறிஸ்து புனிதமாக்கிய தண்ணீரின் வழியாகப்
பாவக் கறை படிந்த எங்கள் மனித இயல்பைப்
புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால் கழுவிப் புதுப்பித்தீர்.
ஆகவே நாங்கள் பெற்றுக்கொண்ட
திருமுழுக்கின் நினைவாக இத்தண்ணீர் இருப்பதாக.
பாஸ்கா பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற எங்கள் சகோதரர் சகோதரிகளோடு
நாங்களும் ஒன்றுசேர்ந்து பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்தருளும். எங்கள்.

பதில்: ஆமென்.


திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்

55. திருமுழுக்கு (உறுதிப்பூசுதல் ஆகிய) சடங்குகள் முடிந்தபின் அல்லது – அவை இல்லை எனில் – தண்ணீருக்கு ஆசி வழங்கிய பின், பின்வரும் வாக்குறுதிகள் திருமுழுக்குப் பெற்றவரோடு சேர்ந்து புதுப்பிக்கப்படாதிருந்தால், அனைவரும் எழுந்து நின்று, எரியும் திரிகளைப் பிடித்துக்கொண்டு, தம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கின்றனர் (காண். எண். 49).

அருள்பணியாளர் கீழுள்ளவாறு அல்லது இது போன்று சிற்றுரை ஆற்றுகின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
பாஸ்கா மறைநிகழ்வு வழியாக நாம் புது வாழ்வு பெற்றுக்
கிறிஸ்துவோடு வாழுமாறு புனிதத் திருமுழுக்கில்
நாம் அவரோடு அடக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
ஆகவே தவக் காலச் செயல்பாடுகள் முடிவடைந்திருக்கும் இவ்வேளையில்
சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டுவிடுவதாகவும்
புனிதக் கத்தோலிக்கத் திரு அவையில் இறைவனுக்கு ஊழியம் புரிவதாகவும்
முன்பு திருமுழுக்கின்போது நாம் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது புதுப்பிப்போம்.
எனவே,

அ.ப. : சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப.: அவன் செயல்களை எல்லாம் விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. அவன் ஆரவாரங்களை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அல்லது

அ.ப.: கடவுளின் பிள்ளைகளுக்கு உரிய உரிமையுடன் வாழ நீங்கள் பாவத்தை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. : பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தாதிருக்க, நீங்கள் தீயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. : பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.

தேவையானால் இந்த இரண்டாம் பாடத்தை ஆயர் பேரவை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். பின் அருள்பணியாளர் தொடர்கின்றார்:

அ.ப. : விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.

அ.ப. : அவருடைய ஒரே மகனும், கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, பாடு பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றவருமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.

அ.ப. : தூய ஆவியாரையும் புனிதக் கத்தோலிக்கத் திரு அவையையும் புனிதர்களுடைய சமூக உறவையும் பாவ மன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும் நிலைவாழ்வையும் நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.

அருள்பணியாளர் முடிவுரையாகச் சொல்கின்றார்:

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும், தண்ணீராலும் தூய ஆவியாராலும் நமக்குப் புதுப் பிறப்பு அளித்துப் பாவ மன்னிப்பு வழங்கியவரும் எல்லாம் வல்ல தந்தையுமாகிய கடவுளே தமது அருளால் நாம் நிலைவாழ்வு பெறும் பொருட்டு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நம்மைப் பாதுகாப்பாராக.

பதில்: ஆமென்.

06. அருள் பணியாளர் மக்கள் மீது புனிதப்படுத்தப்பட்ட நீரைத் தெளிக்கின்றார்; அப்போது அனைவரும் பாடுகின்றனர்:

கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயா;
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது திருமுழுக்குப் பண்பு உள்ள வேறு பாடல் பாடலாம்.

57. அதே வேளையில் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்கள் நம்பிக்கையாளர் மத்தியில் தங்கள் இடங்களுக்குச் செல்கின்றனர்.

திருமுழுக்குத் தண்ணீரைத் திருப்பீட முற்றத்தில் புனிதப்படுத்தினால், அதைத் திருத்தொண்டரும் பணியாளர்களும் வணக்கத்தோடு திருமுழுக்குத் தொட்டிக்கு எடுத்துச் செல்கின்றனர்.

திருமுழுக்குத் தொட்டி புனிதப்படுத்தப்படவில்லை எனில், புனித நீர் வசதியான இடத்தில் வைக்கப்படும்.

58. புனிதப்படுத்தப்பட்ட நீரைத் தெளித்தபின் அருள்பணியாளர் த. சென்று, பொது மன்றாட்டை நடத்துகின்றார். இதில்
முறையாகப் பங்குபெறுவர். நம்பிக்கை அறிக்கை சொல்வதில்லை.


நற்கருணை வழிபாடு

59. அருள் பணியாளர் பீடத்துக்கு வந்து வழக்கம் போல நற்கருணை வழிபாட்டைத் தொடங்குகின்றார்.

60. புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்கள் அல்லது அவர்கள் குழந்தைகளாயின், பெற்றோர் அல்லது ஞானப் பெற்றோர் அப்பமும் இரசமும் காணிக்கைப் பவனியில் கொண்டு வருவது சிறந்தது.

61. காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்கள் ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளோடு
இவர்களுடைய மன்றாட்டுகளையும் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்:
பாஸ்கா மறைநிகழ்வுகளால் தொடங்கப்பெற்றவை
உமது செயலாற்றலால் எங்களுக்கு நிலைவாழ்வின் அருமருந்தாய் அமைவனவாக. எங்கள்.

62. பாஸ்காவின் தொடக்கவுரை 1: பாஸ்கா மறைநிகழ்வு (இச்சிறப்பான இரவில்), பக். 529.

63. திருமுழுக்குப் பெற்றவர்கள், அவர்களுடைய ஞானப் பெற்றோர் ஆகியோரை நற்கருணை மன்றாட்டில் நினைவுகூர்தல், திருப்பலி நூலிலும் உரோமைத்திருச்சடங்கு நூலிலும் ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டிலும் குறிப்பிட்டுள்ள வாய்பாட்டின்படி இடம்பெறும்.

64. புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்களுக்கு, “இதோ, இறைவனின் செம்மறி” என்பதற்குமுன், முதல் நற்கருணை பெறுதல் பற்றியும் புகுமுகச் சடங்குகளின் நிறைவும் கிறிஸ்தவ வாழ்வின் முழுமையும் மையமும் ஆகிய இம்மறைபொருளின் மாண்பு பற்றியும் சுருக்கமாக அருள்பணியாளர் அறிவுரை வழங்கலாம்.

65 புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்கள் தங்களது ஞானப் பெற்றோர், பெற்றோர், கத்தோலிக்க வாழ்க்கைத் துணைவர், வேதியர் ஆகியோரோடு இணைந்து இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்வது விரும்பத்தக்கது. மறைமாவட்ட ஆயரின் அனுமதியோடு சூழ்நிலைக்கு ஏற்ப, எல்லா நம்பிக்கையாளரும் இரு வடிவங்களிலும் தூய நற்கருணை பெற அனுமதிப்பது முறை ஆகும்.

66. திருவிருந்துப் பல்லவி

1 கொரி 5:7-8 நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு
கொண்டாடு வோமாக. அல்லேலூயா.

திருப்பாடல் 117-ஐப் பாடுவது பொருத்தம் ஆகும்.

67. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு பாஸ்கா அருளடையாளங்களால் நிறைவு பெற்ற நாங்கள் உமது பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

68. சிறப்பு ஆசி

எல்லாம் வல்ல இறைவன், இன்றைய பாஸ்கா பெருவிழாவின் கொண்டாட்டத்தால் உங்களுக்கு ஆசி வழங்கி பாவத்தின் தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் இரக்கத்துடன் காப்பாராக.

பதில்: ஆமென்.

அவருடைய ஒரே திருமகனின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு உங்களைத் தகுதி பெறச் செய்த இறைவன், அழியா வாழ்வின் கொடைகளால் உங்களை நிரப்புவாராக.

பதில்: ஆமென்.

ஆண்டவருடைய பாடுகளின் நாள்களுக்குப்பின் பாஸ்கா விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் நீங்கள் முடி வற்ற விண்ணகப் பாஸ்கா விழாவுக்கு அக்களிப்புடன் அவரது அருளால் வந்து சேர்வீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி என்றும் தங்குவதாக.

இறுதி ஆசிக்கான வாய்பாடு வயதுவந்தோர் அல்லது குழந்தைகள் திருமுழுக்குச்
சடங்கிலிருந்தும் சூழ்நிலைக்கு ஏற்பப் பயன்படுத்தப்படலாம்.

69. திருத்தொண்டர் அல்லது – அவர் இல்லை எனில் – அருள்பணியாளரே பின்வரும் வார்த்தைகளைப் பாடி அல்லது சொல்லி மக்களை அனுப்பி வைக்கின்றார்:

சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது


அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.
எல்.’ இறைவனுக்கு நன்றி, அல்லேலூயா, அல்லேலூயா.


பாஸ்கா எண்கிழமை முழுவதும் இது கடைப்பிடிக்கப்படும்.

70. பாஸ்கா காலத்தில் நடைபெறும் சிறப்புத் திருவழிபாட்டுக் போது பாஸ்கா திரி ஏற்றப்படும்.

=========================

பகல் திருப்பலி

71. வருகைப் பல்லவி

காண், திடகா 138:18,5-6 உயிர்த்தெழுந்தேன், உம்மோடு இன்றும் இருக்கிறேன், அல்லேலூயா. உமது கையை என்மீது வைத்தீர், அல்லேலூயா. உமது அறிவு வியப்பாய் உள்ளது, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது

லூக் 24:34; காண். திவெ 1:6 மெய்யாகவே ஆண்டவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா. மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் அவருக்கே உரியன, அல்லேலூயா, அல்லேலூயா.

“உன்னதங்களிலே” சொல்லப்படும்.

73. திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்முடைய ஒரே திருமகன் வழியாகச் சாவை வென்று
நிலைவாழ்வின் கதவை எங்களுக்கு இந்நாளில் மீண்டும் திறந்து வைத்தீர்;
அதனால் ஆண்டவருடைய உயிர்ப்பைப் பெருவிழாவாகக் கொண்டாடும் நாங்கள்,
உம்முடைய ஆவியாரால் புதுப்பிக்கப்பெற்று
ஒளிமிக்க வாழ்வுக்கு உயிர்த்தெழ அருள்புரிவீராக. உம்மோடு.

“நம்பிக்கை அறிக்கை” சொல்லப்படும்.

73. காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பாஸ்கா மகிழ்ச்சியில் அக்களிப்புறும் நாங்கள்
இப்பலிப்பொருள்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்;
இவற்றால் உமது திரு அவை வியத்தகு முறையில் புதுப் பிறப்பு அடைந்து
வளம் பெறுவதாக. எங்கள்.

74. தொடக்கவுரை: பாஸ்கா மறைநிகழ்வு.

இசையில்லாப் பாடம்: பாஸ்காவின் தொடக்கவுரை 1 (இச்சிறப்பான நாளில்), பக். 529.

மு. மொ.:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ.:இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில்:ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ::நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில்:அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்ட வரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும்,
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்கா வாகிய கிறிஸ்து பலியான
(இச்சிறப்பான நாளில்), உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உலகின் பாவங்களைப் போக்கும் மெய்யான
செம்மறி அவரே. எங்களது சாவைத் தமது சாவால் அழித்தவரும்
தமது உயிர்ப்பினால் எங்கள் வாழ்வைப் புதுப்பித்தவரும் அவரே.

ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க அனைத்துலக மாந்தர்
அனைவரும் அக்களிக்கின்றனர்; அவ்வாறே ஆற்றல்மிக்கோரும்
அதிகாரம்கொண்ட தூதர்களும், உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.


‘உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது, இந்நாளுக்கு உரிய “உம்முடைய புனிதர் அனைவருடனும் . . . எனும் மன்றாட்டும் “ஆகவே, ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய …” எனும் மன்றாட்டும் சொல்லப்படும்.

75. திருவிருந்துப் பல்லவி

1கொரி 5:7-8 நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார், அல்லேலூயா. ஆகையால் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு கொண்டாடுவோமாக. அல்லேலூயா, அல்லேலூயா.

76. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உமது திரு அவையை என்றும் கனிவுடன் காத்தருளும்;
இவ்வாறு பாஸ்கா மறைநிகழ்வுகளால் அது புதுப்பிக்கப்பெற்று
உயிர்ப்பின் பேரொளிக்கு வந்து சேர்வதாக. எங்கள்.

77. திருப்பலி முடிவில் மக்களுக்கு ஆசி வழங்க அருள்பணியாளர் பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலிக்கான சிறப்பு ஆசி வாய்பாடடை தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தலாம் (பக். 372).

78. மக்களை அனுப்பக் கீழே உள்ளவாறு பாடலாம் (மேலே உள்ள படி. எண் 69) அல்லது சொல்லலாம்:

அ.ப. : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.

அல்லது

அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:

இறைவனுக்கு நன்றி. அல்லேலூயா, அல்லேலூயா.

=============↑ பக்கம் 375

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy