புனிதர்கள் பாடல்கள்

புனிதர்கள் பாடல்கள்

புனித சூசையப்பர்

01. எங்கள் காவலாம் சூசைத் தந்தையின்

மங்களங்கள் எங்கும் சொல்லி இங்கு பாடுவோம் (2)

செங்கை அதிலே தங்க புஷ்பம் தங்கக் கோலை ஏந்திடும் (2)

1. கன்னித் தாயாரின் பத்தா நீ அல்லோ

உன்னதமா பேறும் மாட்சி உற்ற பாக்யனே (2)

சென்னி மகுட முடி புனைந்த மன்னர் கோத்ர மாதவா -2

2. தந்தை என்றுன்னை வந்து பாடினோம்

உந்தன் மைந்தர் சொந்தமென்று இன்று காத்திடாய் (2)

அந்தி காலை வந்த வேளை வந்து உதவி தந்திடாய் – 2

புனித அந்தோணியார்

01. எண்ணிலா அற்புதம் செய்த பதுவையாரே

விண்ணிலே வீற்றிருக்கும்; எங்கள் அந்தோனியாரே

புண்ணிய வாழ்வில் புதுமைகள் செய்பவரே -2

மண்ணிலே எம் வாழ்வை உயர்த்துமையா  -2

அற்புதர் வாழ்க வாழ்க எங்கள் அந்தோனியார் வாழ்க வாழ்க -2

1. பொருள் பல கொண்டு பிறந்திட்டாலும்

எளிமையாய் வாழ்ந்தவரே

அருள் பல பெற்று வாழ்ந்திடவே

அற்புதர் பாதம் நாடி வந்தோம்

சொற் பல உலகில் இருந்திட்டாலும்

உண்மையை மொழிந்தவரே

பற்பல துன்பங்கள் விலகிடவே

புனிதனே உம்மை தேடி வந்தோம்

அற்புதர் வாழ்க வாழ்க எங்கள் அந்தோனியார் வாழ்க வாழ்க -2

2. திருப்புகழ் விளங்கும் இத்திருத்தலத்தில்

தினம் தினம் விழாக்கோலம்

ஒருமுறை உனதெழில் முகம் பார்த்தால்

எங்கள் வாழ்வினில் அருள் பெருகும்

பாடியே வருகின்ற பக்தர்களை

அணைக்கும் உன் திருக்கோலம்

பாடியே எங்கணும் பரவிடுவோம்

புனிதனே உந்தன் புகழாரம்

அற்புதர் வாழ்க வாழ்க எங்கள் அந்தோனியார் வாழ்க வாழ்க -2

03. பாதுவா நகரிலே உதித்தீர் முனிவரே

பாமாலை சூடினோம் கனிவாய் ஏற்பீரே

1. புதுமை பலவும் புரிந்து மக்கள் குறையை தீர்ப்பீரே

புகழ்ந்து பாடுவோம் உம்புதுமை சேர்ந்து பாடுவோம்

நாங்கள் நம்பி நாடிவந்தோம் துன்பம் விலகவே

நலம் புரிவீரே துயர் துடைப்பீரே

2. கற்பில் சிறந்த கருணை நிறைந்த அன்பின் சீலரே

கனிவாய் ஏற்பீர் எமது நேச மன்றாட்டுதனையே

தேடி வந்தோம் அற்புதரே நாங்கள் உம்மையே

தேற்றி எம்மையே காத்திடுவீரே

3. திருமகனை கரத்தில் ஏற்கும் பெரும் வரம் பெற்றீர்

திருத்தணியின் மீதினிலே திருவுளம் கொண்டீர்

தினமும் கருணை வேண்டுகின்றோம் சின்ன இதயத்தில்

திவ்விய பாலனை வேண்டி அருள்தாரீர்

04. புதுமைகள் கோடி புரிந்தவரே

பதுவை நகரின் இறை உருவே

புனித அந்தோனி முனிவரை நாம்

பொன்னடி வந்தோம் காத்திடுவாய்

புதுமைகள் கோடி புரிந்தவரே

1. புண்ணிய பாதையில் சென்றவரே

புல்லரின் போக்கினை வென்றவரே – 2

நன்மையும் கொண்டிடும் போதகரே – 2

நீசனாம் பேயினை வெல்பவரே – 2

2. குழந்தையாம் யேசுவை கையினிலே

ஏந்திட பாக்கியம் கொண்டவரே   – 2

மழலைகள் எங்களின் வேண்டுதல்கள் – 2;

முழுமையாய் நிறைவுறச் செய்திடுவீர் – 2

04. வணக்கம் வணக்கம் கோடியற்புதரே

வணக்கம் வணக்கம் அந்தோனியாரே!

1. கோடியற்புதரென்று ஒருதரம் சொன்னால்

ஓடிமறைந்திடும் துன்பமெல்லாம்

தஞ்சமென்றண்டினோம் தயவுடன் காரும்

அஞ்சலென்றே அன்பின் அருள்கூரும்

2. காற்றிடைக் கலமெனக் கலங்கிடும் வாழ்வில்

கலங்கரை விளக்கமே கரைசேரும்

இல்லறம் துறவறம் இருதுறத்தாரும்

நல்லறம் புரிந்திட வரம் தாரும்

3. தூய நல்லோடு நேர்மை சேர் வாய்மை

ஆயநற்கலை கல்வி துணை வேண்டும்

ஆலயமணியில் நின் அழைப்பினைக் கேட்போம்

ஆவலோடண்டினோம் அரவணைப்பீர்

புனித மார்கிரேட்

01. அன்பின் வடிவம் நீயம்மா அருளின் உருவம் நீயம்மா -2

தாயின் பாசம் முழுமை நீ போஸ்கோ வாழ்வின் நெறியும் நீ

அம்மா மார்கிரேட் -2 உம்மை வாழ்த்திப் பாடுவோம்

அம்மா மார்கிரேட் -2 உந்தன் வழியில் வாழுவோம்

1. ஏழ்மையில் பிறந்து வந்தாய் ஏழையாய் வாழ்ந்து சென்றாய் -2

வறுமையில் வளமை கண்டாய் வாழ்க்கையில் இனிமை சேர்த்தாய் -2

தாயாய் நீயும் பாசம் பொழிந்தாய் சேயாய் அவரில் நேசம் வளர்த்தாய்

2. குடும்பத்தில் அமைதி தந்தாய் குறைகளை மறையச் செய்தாய் -2

உழைப்பினை உணரச் செய்தாய் உண்மையில் வாழச்சொன்னாய் -2

இளைஞர் வாழ்வில் ஒளியாய் வந்தாய்

இறைவன் அன்பை பகிர்ந்து தந்தாய் – அம்மா மார்கிரேட்

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy