இறந்தோர் பாடல்கள்

இறந்தோர் பாடல்கள்

01. இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்

இறைவா உம்மிடம் வந்தடைக

1. நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்

நிதம் அவர் நினைவு நிலைத்திடுக (2)

தீயவை யாவும் விலகிடுக – 2 – அவர்

தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக

2. விண்ணக சீயோன் நகரினிலே நிதம்

மண்ணால் உம் புகழ் அவர் இசைக்க (2)

புனிதர் வான தூதருடன் – 2 – உம்மை

புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக

02. உன்னடி சரணடைந்தேன் – இறைவா

உன்னடி சரணடைந்தேன்

1. மலரும் நீயே மணமும் நீயே – 2

விரியும் இதழ் நீயே – இறைவா

விரியும் இதழ் நீயே

2. எரியும் தணலில் எழும் புகை நீயே – 2

கமழும் மணம் நீயே – இறைவா

கமழும் மணம் நீயே

3. ஒளியும் நீயே வழியும் நீயே – 2

வாழ்வின் பொருள் நீயே – இறைவா

வாழ்வின் பொருள் நீயே

03. சென்று வா கிறிஸ்தவனே – உலகை

வென்று விட்டாய் நீ விசுவாசத்தால்

1. உற்றார் உறவினர் நண்பரெல்லாம்

சுற்றி நின்று வழியனுப்ப

உற்ற துன்பத்தில் ஆறுதலாய்

உதவும் திருச்சபை அருகிருக்க

2. இறைவனின் புனிதரே துணை வருவீர்

தேவனின் தூதரே வந்தழைப்பீர்

அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்

ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்

3. படைத்த தந்தை உனை ஏற்பார்

மீட்ட திருமகன் உனைக் காப்பார்

அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார்

அனைத்துப் புனிதரும் உனைச் சேர்வார்

4. நித்திய அமைதியில் சேர்ந்திடுவாய்

நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய்

ஆண்டவர் எமையும் அழைக்குங் கால்

அவரோ டுன்னையும் சந்திப்போம்

04. திருப்பாதம் நம்பி வந்தேன்

கிருபை நிறை இயேசுவே – 2

உமதன்பைக் கண்டடைந்தேன்

தேவ சமுகத்திலே – 2

1. இளைப்பாறுதல் தரும் தேவா

களைத்தோரைத் தேற்றிடுமே – 2

சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்

சுகமாய் அங்கு தங்கிடுவேன் – 2

2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்

இன்னல் துன்ப நேரத்திலும் – 2

கருத்தாய் விசாரித்து என்றும்

கனிவோடென்னை நோக்கிடுமே – 2

3. என்னைக் கைவிடாதிரும் நாதா

என்ன நிந்தை நேரிடினும் – 2

உமக்காக யாவும் சகிப்பேன்

உமது பெலன் ஈந்திடுமே – 2

4. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே

உண்மையாய் வெட்கம் அடையேன் – 2

உமது முகப் பிரகாசம்

தினமும் என்னில் வீசிடுதே –

05. மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா

விண்ணில் தேவன் இன்பம் தருவார்

அன்று உன்னை அழைத்த தேவன்

இன்று உன்னை அழைக்கின்றார்

1. இன்று உறவு நாளை பிரிவு

மனிதன் வாழும் ஏட்டிலே

என்றும் அழியா உறவு உண்டு

இறைவன் வாழும் வீட்டிலே

2. படைப்பின் இறைவன் படைப்பைக் காண

கடைக்கண் ஒன்றை காட்டினான்

பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு

படைத்தவனில் மூழ்கினான்

06. மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது

மனமிரங்கி ஆண்டவரே இன்ப சாந்தி தாரும் -2

1. விரிந்த திரு கைகால்கள் விலாவில் இருந்தோடும்

விலையில்லா உதிரத்தால் அவர்களை விண் சேரும் – 2

2. எரிகின்ற நெருப்பினிலே புழுப்போல வாடி

எள்ளளவும் சுகமின்றி ஆறுதலைத் தேடி

புரிந்த சிறு பாவங்களுக்குப் பரிகாரம் செய்து

புலம்பி அழும் அவர்களுக்கு அருள்மாரி பெய்து -2

07. முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா

உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கிறேன் இயேசய்யா (2)

1. நானே உயிர்தரும் ஊற்று என்ற

வார்த்தையின் பொருள் என்னவோ (2)

உம் ஊற்றில் பருகும் எனக்கென்றும்

இறப்பில்லையோ இருள் இல்லையோ தாகம் இல்லையோ

2. நானே உயிர்தரும் உணவு என்ற

வார்த்தையின் பொருள் என்னவோ (2)

உம் உடலை உண்ணும் எனக்கென்றும்

பசியில்லையோ துயர் இல்லையோ இறப்பில்லையோ

08. யாருக்கு நிம்மதி வேண்டும்

யார் துயர் தீர்த்திட வேண்டும்;

இறைவனில் நம்பிக்கை வேண்டும்

இருந்தால் உனை வந்து சேரும்

மனமே அறிவாய்

1. இறைவனின் வார்த்தை உயிருள்ளது

என்ன நிகழ்தாலும் உன்னை வாழ்விப்பது

கடலை இரண்டென பிரித்தின்று

மலை குன்றினை நடத்திடச் செய்குவது

கடும் புயல் காற்று என்றாலும்

நிலைத்துவிடும் இறை வார்த்தை

இறை வார்த்தையை நம்பி வாழ்ந்துவிடு

2. கல்லறை இருந்த மனிதனையும்

ஒரு சொல்லால் உயிருடன் அழைத்தன்று

தொல்லையுறும் பல நோயருக்கு

இறை சொல்லே நலமேயூட்டியது

உடலில் உயிர் பிரிந்தாலும்

உடனே அது வந்து சேரும்

இறைவார்த்தையை நம்பி வாழ்ந்துவிடு

09. வாழ்வோர் இறந்தோர் நலம்பெற இறைவா

வாழ்த்தி வைத்தோம் காணிக்கையை

1. நிலத்தில் விழுந்த கோதுமை மணி

நிறைந்த பலனைத் தந்திடவே – 2

மடிந்து மண்ணில் மறைந்தால் தான்

மக்கள் பலரின் உணவாகும்

2. மண்ணில் புதைந்த இறைமகனும்

மகிமை கொண்டே உயிர்த்து வந்தார்

இறந்த அவரின் அடியாரும்

இனிதே மகிமை அடைந்திடுவார்

10. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு விசுவாசக் கண்ணால் காண்கிறோம்

நம்பிதா அழைக்கும் பொழுது நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே மோட்ச்சக் கரையில் நாம் சந்திப்போம் – 2

1. அந்தவான் கரையில் நாம் நின்று விண்ணோர் கீதங்களைப் பாடுவோம்

துக்கம் யாதும் அற்று மகிழ்ந்து கர்த்தரின் ஆறுதல் அடைவோம் – இன்பராய்

2. என் உற்றார் போய் விட்டார் முன்னங்கே ஆயின் நான் மீளவும் சந்திப்பேன்

அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே ஓய்வற்ற பேரின்பம் கொள்ளுவேன் – இன்பராய்

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy