பஜனைப் பாடல்கள்

பஜனைப் பாடல்கள்

01. அலைந்திடும் உள்ளம் அமைதியைக் காண்பது

இயேசுவின் திருவடி சரணாலயம்

அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்

இயேசுவின் திருவடி சரணாலயம்

சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் -2

1. உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம்

இயேசுவின் திருவடி சரணாலயம் – 2

உலகினில் என்றும் நிலையான செல்வம்

இயேசுவின் திருவடி சரணாலயம் – 2

சரணாலயம் சரணாலயம்

இயேசுவின் திருவடி சரணாலயம் -2

2. வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது

இயேசுவின் திருவடி சரணாலயம் – 2

மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும்

இயேசுவின் திருவடி சரணாலயம் – 2

சரணாலயம் சரணாலயம்

இயேசுவின் திருவடி சரணாலயம் -2

02. அன்பு செய்ய வரம் வேண்டும் இறைவா – 2 (2)

நன்மை செய்ய நான் நினைக்க நகைத்து எனை வெறுப்பவரை…

உதவி செய்ய நான் நினைக்க உதைத்து எனை வதைப்பவரை …

உறவு கொள்ள நான் நினைக்க ஊறு செய்ய நினைப்பவரை …

துன்ப துயர் நான் சுமக்க துணை தராது அகல்பவரை …

கண்கலங்கி நான் துடிக்க காணார்போல் செல்பவரை …

அமைதி வழி நான் திறக்க அதை அடைக்க முனைபவரை…

03. இனியொரு பொழுதும் உனைப் பிரியாத

உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்

– உயர்விலும் தாழ்விலும் வாழ்விலும் வீழ்விலும்

– மகிழ்விலும் துயரிலும் வாழ்வின் எந்நிலையிலும்

– ஒளியிலும் இருளிலும் வாழ்வின் எந்நிலையிலும்

04. எல்லாக் காலத்திலும் எல்லா வேளையிலும்

தேவா உம்மை நான் துதிப்பேன்

1. தந்தையும் நீயே தாயும் நீயே சொந்தமும் நீயே

எந்தன் பாக்கியமும் நீயே

2. ஆதியும் நீயே அந்தமும் நீயே ஜோதியும் நீயே

எந்தன் பாக்கியமும் நீயே

3. அன்பனும் நீயே நண்பனும் நீயே அனைத்தும் நீயே

எந்தன் பாக்கியமும் நீயே

4. வளமும் நீயே நலமும் நீயே வாழ்வும் நீயே

எந்தன் பாக்கியமும் நீயே

5. ஒளியும் நீயே வழியும் நீயே உண்மையும் நீயே

எந்தன் பாக்கியமும் நீயே

05. சுந்தர ஜோதி வந்தருளாயா

எந்தன் நெஞ்சிலே எழுந்தருளாயா

தந்தையும் தாயும் நீ, தலைவனும் துணையும் நீ

வேந்தனும் விருந்தும் நீ, வேந்தனும் குருவும் நீ

1. ஈசன் எமக்குத்தந்த சிறந்ததோர் வரமும் நீ

இயேசுவின் மாட்சியெல்லாம் இயம்பிடும் சாட்சியும் நீ

நேசமோருருவாகி நின்றிடும் தெய்வமும் நீ

ஆசையைத் தீர்க்கின்ற அமுத பார்க்கடலும் நீ

2. கோயிலாய் உள்ளத்தைக் கொண்டிடும் தெய்வமும் நீ

மேவிய மனவிருளை விலக்கும் பரம்சுடர் நீ

பாவமா மாசகற்றும் பாவன தீர்த்தமும் நீ

நாவுபோல் காட்சி தந்த நலம் திகழ் ஞானமும் நீ

06. புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு இயேசுவை

புகழ்ந்திடு காலையிலே

புகழ்ந்திடு பகலினிலே

புகழ்ந்திடு மாலையிலே

புகழ்ந்திடு இரவினிலே

புகழ்ந்திடு பொழுதெல்லாம்

புகழ்ந்திடு வாழ்வெல்லாம்

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy