திருப்பலி பாடல்கள்

திருப்பலி பாடல்கள்

01. ஆ… அல்லேலூயா – 4 அல்லேலூயா – 4

மெல்லிசைக் கருவிகள் மீட்டிடுவோம்

மேளமும் தாளமும் முழங்கிடுவோம்

நல்லவர் ஆண்டவர் என்றுரைப்போம்

நாளுமே அவரைப் போற்றிடுவோம்

02. ஆண்டவரே இரக்கம் வையும் – 2

பாவம் செய்தேன் பாவியானேன்

பாவ மன்னிப்பு வேண்டுகிறேன்

திருந்த நினைத்தும் தவறுகள் செய்தேன்

வருந்தி நான் உனை வேண்டுகிறேன்

என் கரங்களைப் பிடித்து பாவத்திலிருந்து

தூக்கிவிடும் இறைவா  (2)

நான் பாவி நான் பாவி நான் பாவி

03. ஆண்டவரே ஈசோப்புல்லினால்

என் மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்

நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனிதனிலும்

வெண்மையாவேன்

இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என் மேல் இரக்கம் கொள்வீர்

தந்தையும் மகனும் தூய ஆவியாரும்

துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக

தொடக்கத்தில்  இருந்தது போல

இன்றும் என்றும் என்றென்றுமாகவும் – ஆமென்

04. கோவிலின் வலப்புறமிருந்து

தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயா;

அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ

அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்:

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.

ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்

அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே

தந்தையும் மகனும் தூயஆவியாரும்

மாட்சியும் புகழும் ஒன்றாய் பெறுக

தொடக்கத்தில் இருந்ததுபோல்

இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்

05. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.

2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்

3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.

4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்

5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.

6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் – ஆமென்

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy