ஒப்புரவுப் பாடல்கள்

ஒப்புரவுப் பாடல்கள்

01. அப்பா நான் தவறு செய்தேன்

உன் அன்பை உதறிச் சென்றேன்

நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்

என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2)

1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்

உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்

உன்னைப் பிரிந்து நொந்தேன் (2)

2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்

ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2)

02. என் இயேசுவே என்னை மன்னியும் – 2 (3)

உன் குரல் எனத் தெரிந்தும் கேட்காமல் நான் திரிந்தேன்…

உன் முகத்தைக் கண்ட பின்னும்

பேசாமல் திரும்பிக்கொண்டேன்…

1. உன் அருள் எனில் இருந்தும் உணராமல் நான் வாழ்ந்தேன்…

உன் வழியை அறிந்திருந்தும் நடவாமல் மாறிச் சென்றேன்…

2. உதவி செய்ய வாய்ப்பிருந்தும் உதவாமல் உதறிச் சென்றேன்…

உண்மை வாழ்வில் தெளிவிருந்தும்

உலகப்போக்கில் நானலைந்தேன்…

03. என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய் – 2(2)

1. செந்நீர் வேர்வை சொரிந்தவரே என் …

2. புண்படக் கசையால் துடித்தவரே என் …

3. முள்முடி சூடிய மன்னவரே என் …

4. துன்பச் சிலுவை சுமந்தவரே என் …

5. தன்னுயிர் தியாகம் புரிந்தவரே என் …

6. மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தவரே என் …

7. நற்கருணை வாழ் நல்லவரே என் …

04. உம் இரத்தத்தால் எம்மைக் கழுவும்

– உலகின் பாவம் போக்கும் இயேசுவே

– மனிதனாய் மண்ணில் பிறந்த இயேசுவே

– வியர்வையாய்த் திரு இரத்தம் சிந்திய இயேசுவே

– கசையால் அடிபட்டு நொந்த இயேசுவே

– முள்முடி தலையில் தாங்கிய இயேசுவே

– என் பாவச் சிலுவையைச் சுமந்த இயேசுவே

– எனக்காக சிலுவையில் அறையுண்ட இயேசுவே

– சிலுவையில் தொங்கியே மரித்த இயேசுவே

– மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த இயேசுவே

– பாவியைத் தேடி மன்னிக்கும் இயேசுவே

05. கனிவு காட்டுமையா எந்தன் கவலை தீருமையா – 2

கருணை கூருமையா எங்கள் கறைகள் நீக்குமையா

எங்கள் கறைகள் நீக்குமையா – இயேசையா -4 (2)

1. கள்ளம் கபடு சூது நினைப்பேன் காரிருள் நீக்குமையா -2

உள்ளம் உருகி உனை நான் அழைத்தேன் -2

உன் கரம் நீட்டுமையா-2 – இயேசையா -4 (2)

2. இறை உன்னை பிரிந்தேன் இதயம் நொந்தழுதேன்

இரக்கம் காட்டுமையா (2)

மறையினை மறந்தேன் மனதையும் இழந்தேன் -2

மன்னிப்பு தாருமையா -2 – இயேசையா -4 (2)

3. அனலிடை துடித்த புழுப்போலானேன் அன்பு கூருமையா-2

கானலைக் கண்ட மான் போலானேன் -2

மயக்கம் தீருமையா -2 – இயேசையா -4 (2)

06. நம்பி வந்தேன் இயேசுவே என்னைக் குணப்படுத்தும் (4)

வாழ்வும் வழியும் வளமும் நலமும் நீரே என்னும் உண்மையை

எனது நலமே எண்ணி வாழ்ந்து பாவம் செய்தேன் இரங்குவீர்

உள்ளத்தாலும் உடலினாலும் உடைந்து போனேன் பாருமே

தான் வாழ பிறரைக்ககெடுத்த பாவி என்னை மன்னியும்

1. மனிதரிடையே உம்மைக்காணும் பார்வை எனக்குத் தாருமே

இரக்கம் காட்டி இரக்கம் அடையும் இதயம் எனக்கு அருளுமே

வாழ்வுக்கான உந்தன் வாக்கை கேட்கும் செவியைத் தாருமே

உண்மை உழைப்பில் உயர்ந்து வாழும்

உணர்வு என்னில் ஊட்டுமே

எனக்குத் தீமை செய்தபேரை மன்னித்து மறக்க உதவுமே

07. நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே -2

1. விழுந்து விட்டேன் – மனம் உடைந்துவிட்டேன்

என்னைத் தேற்றும் இயேசுவே (2).

2. கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்

மன அமைதி தாருமே (2)

3. புரியவில்லை பாதை தெரியவில்லை

பாதை காட்டும் இயேசுவே (2)

4. சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்

என்னைத் தேற்றும் இயேசுவே (2)

5. நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்

எந்தன் தாகம் தீருமே (2)

08. மன்றாடிப் புலம்புகின்றோம் – இயேசுவே

மன்னிக்க வேண்டுகிறோம் (2)

1. அன்பான தேவன் உன் வழி மறந்தோம்

அன்றாட வாழ்வில் பாவங்கள் புரிந்தோம் (2)

2. அருளின் கடலே உம்மையே மறந்தோம்

ஆயிரம் பிழைகள் உளமாறப் புரிந்தோம் (2)

3. ஐயா உன் பொன்மொழி அடிமைகள் மறந்தோம்

பொய்மொழி புகழும் உண்மைகள் புரிந்தோம் (2)

09. மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா

மன்னிப்பு மன்னிப்பு தாருமே இறைவா

மன்னிப்பு தாருமே இறைவா (2)

1. ஆண்டவர் ஆன்மாவை விரும்புகின்றார்

மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார்

அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் – நேரில்

வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார்

ஆண்டவர் ஞானத்திற் கினிமையுண்டு

கண்டிக்கக் காலத்தைக் கடத்துகின்றார்

கண்டித்துக் கருணைச் சொல் கூறுகின்றார் – பாவி

திருந்திட அருள்கொடை வழங்குகின்றார்

2. குற்றங்கள் இல்லையே என்று சொன்னால்

நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம்

குற்றங்கள் அனைத்தையும் எடுத்துவைத்தால் – தேவன்

குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்

பாவத்தை வெறுத்துத் தள்ளிடுவோம்

ஆபத்தை விலக்கிச் சென்றிடுவோம்

ஆன்மாவை அவரிடம் காட்டிடுவோம் – அதன்

அவலங்கள் கழுவிட வேண்டிடுவோம்

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy