முதல் நற்கருணை விழாத் திருப்பலி

முதல் நற்கருணை விழாத் திருப்பலி

முன்னுரை

           கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, மனிதர் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்வாழ மட்டுமன்று, உறவு வாழ்விற்கும் அடித்தளமிடுகிறது உணவு. உயிர் வாழவும், உறவில் வளரவும் உணவு தேவைப்படுவது போல், நாம் அருளுயிரைப் பெற்று இறை உறவிலும், மனித உறவிலும் செழித்து வளர, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்த ஒப்பற்ற உணவே நற்கருணை. “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்” என்கிறார் இயேசு.

           ஆம், நற்கருணை விருந்தில் நாம் பங்கேற்கின்ற போது, நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஆழப்படுத்துகின்றது. நமக்கும் பிற மனிதருக்கும் உள்ள உறவுகள் வளர்ச்சி அடைகின்றன, உறுதியடைகின்றன. இதனோடு நம்முடைய ஆன்மாவிற்கும் உறுதி கிடைக்கின்றது. நம்முடைய ஆன்மாவினால் தான் நாமும் உறுதிப் பெறுகின்றோம். இத்தகைய உறவு வாழ்வில் வளர, நற்கருணைத் திருவிருந்தில் முதல் முறையாக இன்று பங்கேற்கின்ற எங்களது மகன் செல்வன் அலுள் செல்வனுக்காக இத்திருப்பலியில் செபிக்க அவனை ஆசீர்வதிக்க அழைக்கின்றோம். உங்களது பிரசன்னம் எங்களுக்கு நம் மீட்பரையே பிரசன்னப்படுத்துகின்றது. உங்களை எம்குடும்பத்தார் சார்பிலே வரவேற்கின்றேன். குருக்கள் பவனியாக வர, நாம் அனைவரும் எழுந்து நின்று மகிழ்வுடன் இறைவனைப் புகழ்ந்து பாடுவோம்.

குத்துவிளக்கு ஏற்றல்

           நற்கருணை ஓர் அன்பு விருந்து. அதில் பங்கேற்கும் நாம் ஒரே உள்ளமும் ஒரே உயிரும் உள்ளவர்களாய் வாழவேண்டும். சமுதாயத்தில் அன்பின் தீபமாக ஒளிரவேண்டும். ஓளியாம் கிறிஸ்துவில் ஒன்றுபட்ட நாம், உலகின் ஒளியாய் விளங்க வேண்டும் என்பதைக் குறிக்கவும், அருள்செல்வன் உள்ளத்தில் என்றுமே அணையாத தீபமாக ஆண்டவரே சுடர்வீச வேண்டும் என்பதை விரும்பியும், இப்போது குத்து விளக்கு ஏற்றப்படுகிறது.

இறைவாக்கு வழிபாடு

அஞ்சலி

           வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிகொண்டார். நாம் அழிந்து போகும் உணவினால் மட்டுமல்லாமல், அழியாத இறை வார்த்தையினாலும் உயிர் வாழ்கிறோம். இறைவன் தமது வார்த்தையின் வழியாக நம்மோடு வாழ்கிறார், நம்மோடு பேசுகிறார். எனவே, இறை வார்த்தை வழியாக நம் நடுவே பிரசன்னமாகும் இறைவனுக்குத் தீப, தூப, மலர்களால் அஞசலி செலுத்துவோம்.

தயவுசெய்து எழுந்து நிற்க!

முதல் வாசகம் (விப 16:2-4, 12-15)

முன்னுரை:

           பசியால் வாடிய இஸ்ரயேல் மக்களுக்கு வானத்திலிருந்து மன்னா என்ற உணவால் உயிரளித்தார் இறைவன். இறைவனின் அன்பை,  தனிப்பெரும் கருணையை இந்த உணவு அன்று வெளிப்படுத்தியது. இன்று நற்கருணை உணவால் தன்னையே தந்து நம்மையும் பராமரிக்கின்றார். இச்சிந்தனையோடு முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

முதல் வாசகம்

விடுதலைப்பயண நூலில் இருந்து வாசகம் 16:2-4, 12-15

அந்நாள்களில்

2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.3 இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கிஇ ″ ″ இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்துஇ அப்பம் உண்டு நிறைவடைந்துஇ எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்றனர்.

4 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி ″ ″ இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.

12 இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம்இ மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று சொல்″ ″ என்றார்.

13 மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.14 பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான தட்டையான மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.

15 இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டுஇ ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில் அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி ″ ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே: என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

இரண்டாம் வாசகம் (1கொரி 10:16-17)

           நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான உடல். அதை உண்ணும் நாம் இயேசுவோடு ஒன்றிணைக்கப்படுகிறோம், அவரில் ஓருடலாகிறோம். நாம் பலராயினும் சகோதர அன்பில் நிலைத்து வாழ அழைக்கப்படுகிறோம். தூய பவுல் விடுக்கும் இந்த அறைகூவலுக்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:16-17

சகோதரர் சகோதரிகளே,

           கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமேஇ அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமேஇ அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா!

 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

நற்செய்தி (யோ 06: 51 – 58)

           அக்காலத்தில்

 ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.’ 

‘நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?’ என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.  இயேசு அவர்களிடம்இ ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.  எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.  எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்இ நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.  விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ‘

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

விசுவாசத்தைப் புதுப்பித்தல்

           நற்கருணை, விசுவாசத்தின் அருள் அடையாளம். விசுவாசத்தினாலேயே நாம் நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை ஏற்றுக்கொள்கிறோம். அதை வாழ்வளிக்கும் உணவாகக் காண்கிறோம். நற்கருணைத் திருவிருந்தில் பங்கு பெற வேண்டுமாயின் நமக்கு விசுவாசம் தேவை. எனவே, நாம் நமது விசுவாசத்தை இப்போது புதுப்பித்துக்; கொள்வோம். குரு கேட்கும் கேள்விக்கு ‘நம்புகின்றேன்’ எனப் ஒருமையில் பதில் கூறுவோம். (மெழுகுதிரியை ஏற்றிக் கொள்ளுங்கள்)

குரு: விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை நம்புகின்றீரா?

           பதில்: நம்புகின்றேன்

குரு: அவருடைய ஒரே மகனும், கன்கிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீரா?

பதில்: நம்புகின்றேன்

குரு: தூய ஆவியையும், தூய கத்தோலிக்க திருச்சபையையும், தூயவாகளின் சமூக உறவையும், பாவ மன்னிபையும், உடலின் உயிர்ப்பையும், முடிவில்லாத வாழ்வையும் நம்புகின்றீரா?

பதில்: நம்புகின்றேன்

குரு: இதுவே நம்முடைய நம்பிக்கை. இதுவே நாம் சார்ந்துள்ள திருஅவையின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையிலே நாளும் உறுதிப்பட வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன்.

மன்றாட்டுக்கள்:

1.        நல்லவரே இறைவா! பயணம் செய்யும் திருஅவையை ஆசீர்வதியும். திருஅவையின் பொறுப்பாளர்கள் தாங்களும் தங்களது நம்பிக்கையில் உறுதிப் பெற்று, உறுப்பினர்களையும் உறுதிப்படுத்தும் அருள்பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.        நலன்களின் நாயகனே இறைவா! வளமான பாதத்தை ஆசீர்வதியும். எல்லா வளங்களையும் பாதுகாத்து, பராமரித்து, அடுத்த தலைமுறையினருக்கு நிறைவாய் விட்டுச் செல்லும் விழிப்புணர்வு பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.        உறவின் உன்னதரே இறைவா! ஒன்று கூடியுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் உறவுக்கு உண்மையான மதிப்பு கொடுத்து, கூடினோம் கலைந்தோம் என்றில்லாது, தொடர்ந்த நல்ல உறவிலே ஒன்றுபட்டு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.        நற்கருணையின் தெய்வமே இறைவா! உம்மை அருள்செல்வனுக்கு பகிர்ந்து கொடுத்துள்ள இந்நாளிலே, இவனும் தன் வாழ்வில் தான் பெற்ற வரங்களால், கனிகளால் பிறர் வாழ்வு பெற தன்னை முழுவதுமாய் கையளித்து வாழும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.        உணவான உத்தமரே இறைவா! உம்மை பெற்றுவரும் பாக்கியம் பெற்ற மக்கள் நாங்கள் எல்லாரும் மற்றவர்களுக்கு முக்மாதிரிகையாய் இருந்து உம்மை உலகுக்கு வழங்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்கருணை உட்கொண்ட பின் செபம்

           அன்புள்ள இயேசுவே! ஃ நீர் என் உள்ளத்தில் வந்துள்ளீர். ஃநான் உம்மை ஆராதிக்கிறேன், ஃ வாழ்த்திப் போற்றுகின்றேன். ஃ என்னில் நீர் குடிகொண்டிருப்பாராக,ஃ உமக்கு நன்றி கூறுகிறேன். ஃ நீர் என்னை ஆசீர்வதியும் ஃ உம் அருள் வரங்களால் ஃஎன்னை நிரப்பும், ஃ என் பெற்றோர்களையும் ஃஉறவினர்களையும், ஃ நண்பர்களையும், என் பங்கிலுள்ள அனைவரையும் ஃ ஆசீர்வதியும். ஃ சிறப்பாக ஃஏழைகள், அனாதைகள், ஃகைவிடப்பட்டோர்கள் ஃ ஆகியோர் மீது இரக்கமாயிரும். ஃ

           இனிய இயேசுவே! ஃ உம் ஆவியின் வல்லமையால் ஃ என்னை நிரப் ஃபும். ஃஎன்னைப் புதுப்படைப்பாக மாற்றியருளும். ஃ நான் உமது மனநிலையைப் பெற்றுஃ உம்மைப்போல் வாழ அருள்தாரும். ஃ இனி நான் ஃஎன் சிந்தனை,ஃ சொல், செயல் அனைத்திலும், ஃ உம்மையே வெளிப்படுத்தவும், ஃ எல்லா வேளையிலும் ஃஇறையாட்சியின் கருவியாகச் செயல்படவும் ஃவரம் தாரும். ஃஎனது குடும்பத்திலும், தெருவிலும், ஃ பள்ளியிலும், பங்கிலும் ஃ அனைவரோடும் ஃ அன்புறவும் தோழமையும் கொண்டு வாழஃ வரமருளும். ஃ வறியவர்கள் மீது பரிவு காட்டி,ஃ என்னிடத்தில் உள்ளதைஃ அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள உள்ளத்தைத் தாரும். ஃ நான் எப்போதும் ஃ உம்முடைய விருப்பத்தையே நிறைவேற்ற ஃஆற்றலை அளித்தருளும். ஃ ஆமென்.

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy